“தினமலர்” திடீர் “உல்டா பல்டி” – பாஜக மேலிடம் தலையீடு காரணமா …????

.

.

நேற்றைய தினமலர் நாளிதழில் முதல் பக்கத்தில்
எட்டு காலத்தில், தலைப்புச் செய்தியாக திமுக தேர்தல்
அறிக்கையை “சபாஷ்” என்று போட்டு வரவேற்றிருந்தது
தினமலர் நாளிதழ் –

http://www.dinamalar.com/news_detail.asp?id=1498656
(படம் கீழே )

 

dinamalar-1

 

ஆனால் – இன்று திடீரென்று கீழே ஆசிரியர் பெயருடன்
ஒரு அறிவிப்பு வெளியிட்டு, நேற்றைய செய்திக்கு நேர் எதிராக –
திமுக தேர்தல் அறிக்கையை குறை கூறி செய்தி வெளியிட்டு
உள்ளது ( படம் கீழே..)

http://www.dinamalar.com/news_detail.asp?id=1499587

தினமலரின் இந்த “பல்டி”க்கு காரணம் –
பாஜக மேலிட தலையீடா…?

dinamalar-2

 

இன்றைய செய்தியின் முழு விவரம் –

————

தி.மு.க. தேர்தல் அறிக்கை எப்படி?

நேற்றைய ‘தினமலர்’ நாளிதழில், தி.மு.க., தேர்தல் அறிக்கை
பற்றிய செய்தி முதல் பக்கத்தில் வெளியாகி இருந்தது.
பிரிஜ், வாஷிங் மிஷின் இலவசம் என, தேர்தல் அறிக்கையில்
ஏதாவது இலவசம் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு
பத்திரிகையாளர்கள் மத்தியில் இருந்தது. ஆனால், அப்படி,
தமிழகத்தின் நிதி நிலையை சீர்குலைக்கும் அளவிற்கு இலவசம்
ஒன்றும் இல்லை. அதனால், ‘சபாஷ்’ என்ற தலைப்பில் செய்தியை வெளியிட்டு இருந்தோம்.

இலவசங்களை நம்பி தேர்தல் களத்தில் இறங்காமல்,
தி.மு.க., துணிச்சலாக தேர்தலை சந்திப்பது பாராட்டத்தக்கது.
இருப்பினும், இந்த அறிக்கையில் ஏதேனும் புதுமை இருக்கிறதா
என்றால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த அறிக்கையின் கடைசி பகுதி, ‘தேர்ந்தெடுக்கப்பட்ட
முத்துக்கள்’ என தலைப்பிடப்பட்டு இருந்தது. அதில்,
அறிக்கையில் உள்ளவற்றில், 121 முக்கிய அம்சங்கள்
இடம்பெற்று இருந்தன.

அவற்றில்,

45 அறிவிப்புகள் வரவேற்கத்தக்கதாகவும்,
35 அறிவிப்புகள் தேவையற்றதாகவும்,
40 அறிவிப்புகள் பழைய திட்டங்களாகவும்,
கண்துடைப்பு வேலையாகவும் எங்கள் ஆசிரியர் குழு கருதியது.

இந்த கருத்துருவாக்கத்தில், தமிழகத்தின் நலன் தான்
அளவுகோலாக எடுத்துக் கொள்ளப்பட்டது.
வெறுப்பு அல்லது
ஜாதி அடிப்படையிலான அரசியல் கண்ணோட்டத்தோடு
வெளியிடப்பட்ட அறிவிப்புகளையும், பொருளாதார ரீதியாக
கைகொடுக்காது என்ற அறிவிப்புகளையும் தேவையற்றவையாக
கருதினோம்.

இந்த தேர்தல் அறிக்கையை பற்றி அதிகம் பேசப்படும் அம்சங்கள்;

1. மதுவிலக்கு
2. இலவச நவீன ரக அலைபேசி/மாணவர்களுக்கு 3ஜி, 4ஜி
இணைய வசதி
3. ஆவின் பால் விலை 7 ரூபாய் வரை குறைப்பு

‘வைத்தால் குடுமி, அடித்தால் மொட்டை’ என்ற மன முதிர்ச்சி
இல்லாத பாணியில், தற்போது, மதுவை பற்றிய தர்க்கமும்,
அணுகுமுறையும் உள்ளது.

மதுவிலக்கை ஆதரிப்பது அரசியல் கட்சிகளுக்கு
ஒரு பேஷனாகிவிட்டது.

மது விற்பனை அரசின் வேலை அல்ல என்பதில்,
‘தினமலர்’ உறுதியாக இருந்துள்ளது.
அதே நேரத்தில், மது என்பது காலம் காலமாக இருக்கும் ஒன்று,
தனிநபர் விருப்பத்திற்கு உட்பட்டது, அதை தடை செய்வதற்கு
அரசுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை என்பதிலும்,
‘தினமலர்’ உறுதியாக உள்ளது. உலகெங்கும் சாதாரணமாக
அணுகப்படும்

மதுவை தடை செய்வதன் மூலம், தடை செய்யக் கோருவதன்
மூலம், கட்சிகள் தமிழனை கொச்சைப்படுத்துகின்றன. தமிழருக்கு
நாகரிகமாக நடந்துகொள்ளத் தெரியாது, சம நிலையற்றவர்கள்,
மன முதிர்ச்சி இல்லாதவர்கள் என்பனவற்றை சொல்லாமல்
சொல்லும் செயல்.

இலவச நவீன ரக அலைபேசிகளும், மாணவர்களுக்கான இலவச
இணைய வசதியும், தகவல் தொழில்நுட்பமும், அலைபேசிகளும்
நம் சமுதாயத்தின் ஆணிவேர் வரை சென்றடைந்துள்ள இந்த
காலகட்டத்தில்

வெறும் பண விரயமே ஒழிய வேறேதும் இல்லை.

ஆவின் பால் விலையை குறைப்பதென்றாகிவிட்டது,
அதில், 7 ரூபாய் என்ன கணக்கென்று தெரியவில்லை.
இது அமலுக்கு வந்தால், ஆண்டுக்கு 600 கோடி ரூபாய் வரை
செலவாகும். எப்படி சமாளிப்பர்? ஆவின் கதி என்னாகும்?

காத்திருந்து பார்ப்போம். அதுவரை, இந்த அறிக்கையில்,
தமிழகத்தை நவீன யுகத்திற்கு அழைத்துச் செல்வதற்கு
ஒன்றுமில்லை என்பதே எங்கள் கருத்து.

கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு
துணை ஆசிரியர், தினமலர்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

25 Responses to “தினமலர்” திடீர் “உல்டா பல்டி” – பாஜக மேலிடம் தலையீடு காரணமா …????

 1. selvarajan சொல்கிறார்:

  // இந்தியக் கண்ணாடியால் காணும் இலங்கைத் தமிழர் போராட்டம்! http://www.tamilwin.com/articles/01/101084#tab_comments // … அய்யா … நேரமிருந்தால் — இதைபடித்து பார்க்கவும் … !

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   நீங்கள் சொல்லும் செய்தியை அங்கே காணோம்….
   எடுத்து விட்டார்கள் போலிருக்கிறது …?

   உங்களிடம் copy இருக்கிறதா ?
   இருந்தால் தயவுசெய்து அனுப்புங்களேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • selvarajan சொல்கிறார்:

    அய்யா … தங்களின் ” மின்னஞ்சலுக்கு ” அனுப்பியுள்ளேன் — பார்க்கவும் , !

 2. Tamilian சொல்கிறார்:

  In fact some of the write offs shown in the manifesto are only for its sake. Where are the funds after introducing prohibition?

 3. Rajaraman சொல்கிறார்:

  Whatever happened in Tamilnadu, is BJP causes for this. What a peak of Stupidity ????

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப ராஜாராமன்,

   அரசியல் புரியாதவர்களுக்கும்,
   பாஜக அன்பர்களுக்கும் –
   இது ” Stupidity ” யாகத் தான் தெரியும்.

   கமலாலயத்தில் போய் கேளுங்கள்… புரியும்…!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

  • today.and.me சொல்கிறார்:

   //Whatever happened in Tamilnadu// என்ன நடந்தாலும் என்பதற்குப் பதில் தமிழகத்தில் எதுவும் நடக்கவில்லையென்றால் – அப்போது பாஜகதான் காரணம் என்று எடுத்துக்கொள்ளலாமா?

   ஏனென்றால் தமிழக மீனவர்கள் (இந்திய மீனவர்கள் இல்லை) இலங்கையில் சிறைப்பட்டிருப்பது முதல் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டதெல்லாம் மத்திய அரசால், இது தமிழகம் என்பதாலேயே தண்ணிதெளித்துவிடப்பட்டிருக்கிறதே. அவையெல்லாம் நடக்காததற்குக் காரணம் பாஜக என்று எடுத்துக்கொள்ளலாமா?

 4. LVISS சொல்கிறார்:

  Please explain how BJP comes into this issue –The daily has offered an explanation –For the moment accept it and leave it at that —

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப எல்விஸ்,

   நான் எந்த உண்மையை எடுத்துச் சொன்னாலும்,
   அது பாஜகவை பாதிப்பதாக இருந்தால் –
   நீங்கள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை.

   so – if you can’t accept, better “leave it at that”….

   வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • LVISS சொல்கிறார்:

    Mr Kamaiji You dont consider AIADMK for any crticism –This is what you said elsewhere , if I am not wrong — On a lighter vein ,if that is so ,why not change the name of the blog to Karisanam AIADMK -Inru Alla Enrum Marathu — But there is a limit to which you can involve a particular party in every possible issue —
    Incidentally you keep talking about the fishermen issue- An interview of Mr. Arulanandam in the latest issue of Tughlak gives the correct picture about the issue – —

    • today.and.me சொல்கிறார்:

     நண்ப எல்விஸ்,
     பரவாயில்லையே. பிரதமர் தேர்தலில் பாஜகவுக்கும் மோடிஜிக்கும் ஆதரவாகவும் காங்கிரஸ் மமோசிங், சோனியாஜிக்குக்கும் எதிராகவும் கருத்துகளை இதே விமரிசனம் வைத்தபோது தங்களுக்கு உவப்பாக இருந்ததே. இப்போது

     பாஜக தான் உண்மையான சுனாமி, காங்கிரஸ் சும்மா பினாமி என்று ஒவ்வொரு நிகழ்வுகளாக உறுதிப்பட்டு வருவது தெரிந்ததும்,

     அதாவது பாஜகவைப் பற்றிப் பேசினால், அல்ல அல்ல பேசப்போவதாகக் கோடிகாட்டினாலே விமரிசனம் கரிசனமாகிவிடுகிறதே? எப்படி?

     மற்றபடி பிளாக்கர் அவர் பிளாக்கில் எதை வேண்டுமானாலும் எழுதிவிட்டுபோகட்டும். அட்லீஸ்ட் நீங்கள் அடுத்தவர் இடத்தில் வந்து அவர்கள் மேல் எச்சில்துப்புவதை விட்டுவிட்டு, உங்களால் முடிந்தவரை கரிசனத்தை ஆரம்பிக்கலாமே, ஆனால் பாவம் பாருங்கள் – உங்களால் இன்று அல்ல, என்றுமே முடியாது – என்பதுதான் உண்மை.

    • ராகவேந்திரா சொல்கிறார்:

     திரு.எல்விஸ் அவர்களே,

     தமிழில் ஒரு பின்னூட்டம் போடக்கூட முடியாத
     உங்களுக்கு இந்த அட்வைஸ் பண்ண என்ன தகுதி இருக்கிறது ?
     உங்களுக்காக பாஜகவை ஆதரித்து எழுத வேண்டுமென்று
     காவிரிமைந்தன் சாருக்கு என்ன அவசியம் ?
     காவிரிமைந்தன் அவர்கள் வெளிப்படையாகவே சொன்னார் –
     அதிமுக அவரது priority அல்ல என்று. ஆனால் நீங்கள் பாஜக ஆசாமி
     என்று ஒப்புக்கொள்ளாமலே, பாஜகவை தொடும்போதெல்லாம்
     ஓடி வந்து விடுவது ஏன் ? பாஜகவின் மீது அவ்வளவு
     கரிசனம் இருந்தால் நீங்களே ஒரு ப்ளாக் ஆரம்பித்து மோடிஜியின்
     புகழ் பாடி எழுதுங்கள். நாங்களும் அவசியம் வருகை தருகிறோம்.
     சும்மா சும்மா அடுத்தவர் வீட்டில் போய் வாந்தி எடுக்காதீர்கள்.
     வாந்தி எடுப்பதை உங்கள் வீட்டிலேயே வைத்துக் கொள்ளுங்கள்.
     பாஜக ஒரு தமிழர் விரோத, தமிழ்நாடு விரோத கட்சி. நீங்கள் அதை ஆராதித்தால், நீங்களும் தமிழ்நாட்டின் விரோதிக்கு ஆதரவு தருகிறீர்கள் என்று தான் அர்த்தம்.

     • நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

      கா.மை அவர்கள் தினமலரைத் தினமும் படிப்பதால், அது எப்படித் தன் நிறத்தை மாற்றுகிறது என்பதை அறிந்துள்ளார். அது பாஜக சார்பாக எழுத ஆரம்பித்துப் பல வருடங்களாகிவிட்டன. அவ்வப்போது அதிமுக சார்பாக முன்பு எழுதும். தினமலருக்கு திமுக வெறுப்பு பல காலமாக உண்டு. ஜெ காலத்துக்குப்பின்பு, அதிமுக திமுக என்று அவ்வப்போது ஜால்ராவை மாற்றும்.

      காமை குறிப்பிட்டிருப்பது, இரண்டு நாட்களில் வெவ்வேறு மாதிரி கட்டுரை எழுதுவது. இதற்கு பாஜக அழுத்தம் இல்லாமல் வேறு என்ன இருக்க முடியும்?

      ‘சபாஷ்’ தலைப்பைப் பார்த்த உடனேயே எனக்கு அதிசயமாக இருந்தது. இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து திமுகவை தினமலர் பாராட்டாது. அவர்கள் திமுக அந்தக் காலத்தில் கலைக்கப்பட்டபோது முதல் பக்கத்தில் “சட்டி சுட்டதடா கை விட்டதடா’ என்று கொட்டை எழுத்துக்களில் போட்டவர்களாயிற்றே.. இந்த ‘சபாஷ்’ கட்டுரையே ஸ்பான்ஸர்டு கட்டுரை என்று நான் நினைத்தேன்.

      பளிச் என்று தெரிவதை கா மை கட்டுரையாக்கிவிட்டார்.

 5. today.and.me சொல்கிறார்:

  இன்றைய இரவை சிரிப்புடன் கழிக்க உதவிய ரெட்பிக்ஸ்க்கு நன்றி.

  http://players.brightcove.net/4810871791001/4yCNoVj6l_default/index.html?videoId=4840599404001

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப டுடேஅண்ட்மீ,

   பிரணமாதம்.
   சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி விட்டது.
   தயாரித்தவர் யாராக இருந்தாலும்,
   அற்புதமான நகைச்சுவை உணர்வோடு தயாரித்திருக்கிறார்.
   அவருக்கு நமது உளமார்ந்த பாராட்டுகள்.
   இதனை மற்றவர்களும் பார்த்து மகிழவேண்டும் என்று நினைத்த
   உங்களது “பரந்த” மனதிற்கு நன்றிகள் பல.

   இது இருக்க வேண்டிய இடமே வேறு.
   எல்லாரும் பார்த்து மகிழ, ” உரிய ” இடத்தில் அமர்த்தி இருக்கிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 6. R.Gopalakrishnan சொல்கிறார்:

  Mr.KM I have a vague memory about a boy drowned in the pond of Annamalai University (Udaya-
  Kumar). But his father was made to dis own his own son by MK. It was a very hot topic in those
  days in print media. Can you throw some light on that. Sorry, this is unconnected to the
  present topic. This is very long ago.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப கோபாலகிருஷ்ணன்,

   பல ஆண்டுகளுக்கு முன்னர் சிதம்பரத்தில் நிகழ்ந்த
   இந்த கொலைபாதக செயலை,
   என்னால் அரைகுறையாகத்தான் நினைவில் கொண்டு வர
   முடிகிறது. எனவே, நண்பர்கள் செல்வராஜன் அல்லது டுடேஅண்ட்மீ
   உங்களுக்கு உதவுவார்கள் என்று நம்புகிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • selvarajan சொல்கிறார்:

    அய்யா.. ! வாழ்க்கையில் மறக்க முடியாத வேதனையான விஷயத்தை — ஒவ்வொரு நாளும் ஒருவரின் உருவத்தை படத்திலோ — சுவரோட்டியிலோ — பத்திரிக்கைகளிலோ — தொலைக்காட்சிகளிலோ பார்க்கும் போதுஏற்படுகிற வெறுப்பும் — மன அழுத்தமும் சொல்லி மாளாது … தனது ” அற்ப மகிழ்ச்சிக்காக ” உயிரை பலிவாங்கிய உன்மத்தரை காணும்போதெல்லாம் — ஏற்படுவதை மாற்றவே முடியவில்லை … அது 1971 – ம் வருடம் ஜூலை மாதம் என்று நினைவு — அப்போது தி.மு.க. — ” பீக்கில் ” இருந்த நேரம் — மாணவர்களில் அதிகமானோர் விரும்பி ஏற்றுக்கொண்ட ஒரு கட்சி — அரசியல் என்றாலே ” அண்ணாமலை பல்கலைக்கு ” ஒரு தனி இடம் எப்போதும் உண்டு — மிக பெரிய ஜாம்பவான்கள் பயின்ற ஒரு பாரம்பரியம் மிக்கது என்பதை யாரும் மறுக்க முடியாது — அந்த இடத்தில் பள்ளிக்கல்வியே முடிக்காத ஒருவருக்கு ” கௌரவ டாக்டர் ” பட்டம் என்றெல்லாம் எந்த பாகுபாடும் யாரு பார்க்காத வேளையில் — ஒரு கருநாகம் உள்ளே புகுந்து கொத்தி — விஷத்தை கக்கியது வேதனையானது …. 1971 க்கு முந்தைய பட்டமளிப்பு விழாவில் ஏற்பட்ட சிறு சலசலப்பினால் — இந்த விழாவில் அவ்வாறு நிகழாமல் இருக்க நுழை வாயிலில் ” பாஸ் ” உள்ளவர்கள் மட்டும் அனுமதி என்கிற கட்டுப்பாடு விதிக்க பட்டு — பரிசோதிக்க பட்டு உள்ளே விடும் போது தான் — வந்தது வினை ….. குறிப்பிட்ட நாளில் காலையில் பட்டமளிப்பு விழா என்று ஆரம்பித்து — கௌரவ பட்டம் பெறுபவரும் வந்து விருந்தினர் மாளிகையில் இருக்கும் போது — உள்ளூர் கட்சியை சேர்ந்தவர்கள் கார்களில் பாஸ் இல்லாமல் வந்ததை மாணவர்கள் தட்டிக்கேட்க — சண்டை வலுத்து கைக்கலப்பாகி விட்டது — உடனே மாணவர்கள் கொதித்து போய்அங்கே சுற்றி திறந்த கால்நடைகளுக்கும் — நாய்களுக்கும் கழுத்தில் ” டாக்டர் ” என்று எழுதிய அட்டைகளை தொங்கவிட்டும் — எருமைகளின் மேல் வண்ணத்தால் எழுதியும் தங்களின் வெறுப்பை காட்டியது — ” மேற்படியாருக்கு ” செய்தி சென்றவுடன் — பட்டமளிப்பு விழாவின் நேரம் மாற்றி அறிவிக்க பட்டது — அதனால் மாணவர்கள் களைந்து சென்று விடுதிகளில் சாப்பிட்டு — ஓய்வுஎடுக்கும் வேளையில் — முன்னரே சென்ற செய்தியின் அடிப்படையில் — காவல்துறை குவிக்க பட்டு — மாணவர்கள் வளைக்க பட்டு — சகட்டு மேனிக்கு அடித்து நொறுக்க பட்டபோது — உயிர் பிழைத்தால் போது என்று மாணவர்களும் — மாணவிகளும் — ஓடும் போது — வழியில் சாலைக்கு இருபக்கமும் ஏரிபோல உள்ள நீர் குளங்களை கடந்து இந்த வழியிலாவது தப்பி விடுவோம் என்று முயன்றார்கள் — பின் தொடர்ந்த காவலார்கள் கண் – மண் தெரியாமல் அடித்தை வாங்கிக்கொண்டு குளத்தில் குதித்து நீச்சல் தெரிந்தவர்கள் நீச்சலடித்து தப்பினார்கள் — ஆனால் ” உதயகுமார் ” பின் மண்டை தாக்கப்பட்டு — குளத்தில் விழுந்து — நீச்சலடிக்க முடியாத நிலைமை ஏற்பட்டிருக்க வேண்டும் — களேபாரங்கள் — முடிந்து — துணைவேந்தரின் அறிவிப்பின் படி மாணவர்கள் உடனடியாக விடுதிகளை காலி செய்து — விடுமுறையும் உடனே அமுல் படுத்த பட்டது — ” மேற்படியாளர் ” வெற்றிக்களிப்பில் — எந்த இடையூறும் என்றி — கட்சியினர் வாழ்த்து கோஷம் இட — தலையில் குல்லாவும் — பட்டமளிப்பின் போது அணியும் அங்கியுடனும் பட்டத்தை பெற்று — புளங்காங்கிதம் அடைந்து விடை பெற்று சென்று விட்டார் — அதன் பிறகு உதயகுமாரின் பிணம் மிதங்க ஆரம்பித்தவுடன் — யார் என்று தெரியாமல் குழம்பி — பின் அடையாளம் கண்டு — செய்தி சென்று — அவனது குடும்பத்தினர் வந்து தன் பிள்ளை தான் என்று அடையாளம் காட்டி ” அழுது புலம்பியது ” இன்றும் என் கண் முன்னே தோன்றுகிறது — ஆனால் அதே தந்தை — அடித்தார் பாருங்கள் ” அந்தர்பல்டி ” அடுத்தநாள் — இறந்தவன் ” என் மகன் உதயகுமார் ” இல்லை என்று — அதில் தான் அடங்கியுள்ளது — { அப்போ ” உதயகுமார் எங்கே ..? ” என்கிற கேள்விக்கு இன்றுவரை விடையளிக்க ஒருவரையும் காணோம் } …. உலகமகா கில்லாடி பேர்வழியின் — துர் செயல் — தன் பதவிக்காகவும் — அற்ப கௌரவ பகட்டுக்கும் — பட்டத்திற்கும் எதையும் செய்ய துணியும் ” கோழை மற்றும் கயவாளி ” வேறு எங்குமே காண முடியாது —- இதில்மாபெரும் சோகம் என்னவென்றால் — உதயகுமார் என்னுடன் படித்த கடலூர் கலைகல்லூரியின் பி.யூ .சி . வகுப்பு தோழன் …. ஆனால் அண்ணாமலை பல்கலையில் நான் வேறு துறையிலும் — அவன் வேறு துறையிலும் படித்தவர்கள் — அதுமட்டுமல்ல கல்லூரிக்கு புகை வண்டியில் பயணம் செய்தவர்கள் — அவன் புதிதாக வாங்கி கையில் கட்டியிருந்த ” Camy gold watch ” ஒரு முக்கியமான அடையாளமாக அவனுக்கு இருந்தது — இந்தபதிவு எனக்கு நினைவில் இருந்தவரை மட்டுமே — இதில் சில மாறுபட்டு இருக்கவும் வாய்ப்பு உள்ளது — எது எப்படியோ — தீராத வடுக்களுடன் — இருக்கும் என்னை மீண்டும் நினைவு கூற வைத்த திரு .கா.மை. அய்யா .. அவர்களுக்கு கண்ணீருடன் — நன்றி — !!!

    • today.and.me சொல்கிறார்:

     மனம் கனக்கிறது உங்கள் பின்னூட்டத்தைப் பார்க்கும்போது.

     இப்பேற்பட்டவர்கள் இன்னும் நம்பி,தூக்கிப்பிடிக்கும் தமிழ் மக்களை நினைத்தால் ஆத்திரமாகவும் வருகிறது,இப்படியுமா முட்டாள் தமிழர்கள் இருப்பார்கள்? இன்னமும் மேற்படியார் நிற்கும் தொகுதிகளில் சில லட்சம் வாக்குகள் விழத்தானே செய்கின்றன. அப்படியானால் இப்படிப்பட்டவர்களை ஆதரிக்கும் மக்கள் மாக்களாக இல்லாமல் பின் எப்படி இருக்கமுடியும்?

     தமிழர்கள் நினைத்திருந்தால், சூடு சுரணையோடு இருந்திருந்தால், தங்கள் மகனுக்கு இதுபோல் நேர்ந்திருந்தால், தன் சகோதரனுக்கு இதுபோல் நேர்ந்திருந்தால், தன் தகப்பனுக்கு இதுபோல் நேர்ந்திருந்தால் என்று யோசித்திருந்தார்களானால் அடுத்து வந்த தேர்தல்களில் டெபாசிட் மட்டுமல்ல, அவருடைய ஒரு ஓட்டு தவிர வேறு எதுவும் விழுந்திருக்கக்கூடாது.

     மொத்தத்தில் சமூகத்தில் பெரும்பான்மையோடு சரியான கருணாநிதித்தனத்தோடு தான் இருக்கிறார்கள், இருக்கவிரும்புகிறார்கள் என்பது தெளிவாகிறது.

     என்றாலும், இவை எல்லாம் ஒரு நாள் மாறிவிடும் என்று நம்புகிறேன்.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     நண்பர்கள் செல்வராஜன், டுடேஅண்ட்மீ, நெல்லைத்தமிழன் –

     மிக கொடூரமான சரித்திர பின்னணி அத்தனையும் இன்று
     மக்களால் மறக்கப்பட்டு விட்டது அல்லது மக்களிடமிருந்து
     மறைக்கப்பட்டு விட்டது.

     நீங்கள் சொல்லும் சம்பவங்கள் நிகழ்ந்த காலங்களில் நான்
     தமிழ்நாட்டில் இல்லை. இருந்தாலும், ஓரளவு விஷயங்கள்
     அறிந்திருந்தேன். ஆனால், முழுவதுமாக, இப்போது
     நீங்கள் சொல்வது போல் அத்தனை விவரமாக அல்ல.

     நடுத்தர வயதினரும், முதியவர்களும் இந்த சம்பவங்களை
     எல்லாம் மறந்திருப்பார்கள். இளைய சமுதாயத்திற்கு
     இவற்றை பற்றி சுத்தமாக தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை…

     இப்போது, 93 வயது தள்ளாடும் பருவத்திலும்
     தமிழ்ச் சமுதாயத்துக்காக தளராமல் உழைக்கப் புறப்பட்டு
     விட்டார் என்று தேர்தல் சுற்றுப்பயண தயாரிப்புகள் கூறுகின்றன.

     இந்த பழைய கொடுமைகள் எல்லாம் மக்களுக்கு
     நினைவுபடுத்தப்பட வேண்டும். இன்னமும் கொஞ்சம்
     விவரங்கள் சேகரிக்க முடியுமா …?
     இந்த தளத்திலேயே பதிப்பிக்கலாம்.
     உங்கள் ஆர்வத்திற்கும், முயற்சிகளுக்கும் என்
     உளமார்ந்த நன்றி.

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

     • today.and.me சொல்கிறார்:

      கா.மை.ஜி,

      இதெல்லாம்
      அட்ராசிட்டி,
      அரகன்சி,
      டைரனிக்கல் கிங்ஷிப்,
      நான் – நானே – நான் மட்டுமே என்னும் அத்யோன்னத அகம்பாவம்
      போன்றவை
      ஆண்களால் நிகழ்த்தப்பட்டால்
      லிஸ்ட்ல சேராதா?

      இங்கே ஒரு குரூப் உடனே வருவாங்களே….
      அப்டியெல்லாம் இல்லைன்னு..
      •••••••

      இங்கே பதிப்பிக்கூடிய வகையிலான கெட்டவார்த்தைகளைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

 7. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  ‘நான் தாளவாடியில் 7வது (1977) படித்துக்கொண்டிருந்தபோது (மலைமேல் உள்ளது. சத்தியமங்கலம் அருகாமை நகர், கோவை மாவட்டம்) கருணானிதி கோவையில் பொதுக்கூட்டம் நடத்தினார். அதற்காக எங்கள் பள்ளியில் யார் யார் கோவை செல்ல விருப்பமோ அவர்களுக்கெல்லாம் விடுமுறை அளித்தார்கள். அப்போது, இந்த உதயகுமார் விஷயத்தில் கருணானிதியில் கூட்டத்திற்கு எதிர்ப்பு இருந்தது. பார்க்கலாம்.. யார் இந்த விஷயத்தை விளக்குகிறார்கள் என்று…

 8. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  சம்பந்தமில்லாத ஒரு பதிவு. 1971ல் (அல்லது 68ல்) ஒரு பத்திரிகையாளர் ராசாத்தி அம்மாளையும், அவருக்குப் பிறந்த கனிமொழியின் பிறப்பு சான்றிதழில் மு.கருணானிதி என்று போட்டிருப்பதையும் பத்திரிகையில் வெளியிட்டதற்காக, இது உண்மையில்லை. பொய்ச்செய்தி. ராசாத்தி என்று யாரையும் தெரியாது. கனிமொழிக்கும் தனக்கும் சம்பந்தமில்லை. இந்தச் செய்தி தன் புகழுக்குக் களங்கத்தை உண்டாக்கிவிட்டது என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து பத்திரிகை செய்தி ஆசிரியருக்கு 6 மாதம் சிறைத்தண்டனை கருணானிதி வாங்கிக்கொடுத்தார். அதைப் பற்றி யாராவது தோண்டி விஷயத்தை வெளிக்கொணர இயலுமா?

  • today.and.me சொல்கிறார்:

   தங்கள் பணியில் வெற்றிசிறக்க வாழ்த்துகளும் நன்றிகளும் உரித்தாகுக :
   திரு. ஹரிஷங்கர். வழக்குரைஞர்

   // கனியின் பிறப்பைக் கண்டு பிடித்து, எழுதி, தலீவரால் சிறைக்கு அனுப்பப்பட்ட ஜவகரிஸ்ட் பத்திரிகை ஆசிரியர் என்.கே.டி.சுப்பிரமணியமும், அவரது குடும்பமும் 1969 க்கு பின் எங்கே…??
   தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக இன்று அனுப்ப உள்ளேன்….
   அவரது குடும்பத்தைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்ய உள்ளேன்…..// – ஏப்ரல் 10, 2016

   //கனி பிறப்பு பற்றிய என் பதிவுக்கு அண்ணா.. நீங்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில கேட்ட பல விசயங்கள கருணா அழிச்சிருப்பாரேன்னு ஒரு நட்பு கவலை….
   நீதிமன்றம் மற்றும் சிறை ஆவணங்கள் அழிக்க முடியாது…
   கனியின் வேட்புமனு தாக்கல் செய்த விபரங்கள் ஏற்கனவே என் வசம்…
   இவை எல்லாவற்றிலும் மேலாக இந்திய சாட்சியச் சட்டம் பிரிவு 90 சொல்வது தொல்லாவணம்… அதாவது ancient document….
   ஒரு ஆவணம் 30 வருடங்களைக் கடந்து விட்டால் யாரும் அதை நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை… அது தன்னைத் தானே நிரூபிக்கும்….
   வெற்றி எனதே…
   எனக்கு ஏதேனும் விபத்தோ, துர்மரணமோ நேர்ந்தால் திருக்குவளை முத்துவேலன் கருணாநிதி என்கிற தட்சிணாமூர்த்தி மற்றும் அவரது வகையறாக்கள் மட்டுமே காரணம்…..
   விரைவில் ஆவணங்கள்….// ஏப்ரல் 12, 2016.

   • R.Gopalakrishnan சொல்கிறார்:

    Thanks Mr.Selvarajan and Mr.KM for such a long and detailed information. Now,every thing of the said incident came to my memory. I was a fresh graduate during that period
    and searching for a job Thanks once again..

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.