தேர்தலில் தோற்கடித்து விடுவார்களா … அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் பகைத்துக் கொண்டால் …?

.

.

எப்போதும் ஆழமாக சிந்தித்து எழுதுபவர் திரு.ஜெயமோகன்…
அவரது கருத்துக்களோடு உடன்படாதவர்களுக்கு கூட –
யோசிக்க நிறைய விஷயங்கள் இருக்கும்
அவரது கட்டுரைகளில்….!

நிறைய எழுதுகிறார்….
அவரது உழைப்பு எனக்கு பிரமிப்பைத் தருகிறது…
அவர் எழுதுவதை படிப்பதற்கே நமக்கு நேரம் பற்றாதபோது,
எப்படித்தான் தொடர்ச்சியாக அவரால் இவ்வளவு எழுத
முடிகிறதோ என்று ஆச்சரியமாக இருக்கிறது…

அண்மையில் ” ஜனநாயக சோதனைச்சாலையில் ”
என்கிற தலைப்பில் சில விஷயங்களை தொடர்ந்து
எழுதி வருகிறார். நமது வலைத்தளத்து நண்பர்களுடன்
விவாதிக்க பொருத்தமான சில தலைப்புகள் அவற்றில்
இருக்கின்றன. இந்த தளத்து நண்பர்கள் பலருக்கு அவற்றை
படிக்க வாய்ப்பு கிட்டியிருக்காது. எனவே, இடையில் –
நமக்கு நேரமும், வாய்ப்பும் கிடைக்கும்போது,
சில முக்கியமான கட்டுரைகளை இங்கே பதித்து,
நண்பர்களுடன் கருத்து பரிமாற்றம்
செய்துகொள்ள விரும்புகிறேன்.

இன்று ஒரு முக்கியமான தலைப்பில் விவாதம் –

அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் பகைத்துக்
கொண்டால், தேர்தலில் தோற்கடித்து விடுவார்களா …?

” பாத்திரத்தின் களிம்பு ” என்கிற தலைப்பில் திரு.ஜெயமோகன்
எழுதிய கட்டுரையிலிருந்து –

———————-

பொதுவாகவே கங்கைக்கரை மாநிலங்கள் ஆரம்பக் கல்வியில்
மிகவும் பின்தங்கியவை. 12 ஆண்டுகளுக்கு முன், ஹரியானா
முதல்வராக இருந்த ஓம்பிரகாஷ் சௌதாலா, ஆசிரியர்
நியமனத்தில் பெருமளவில் ஊழல் செய்து தவறானவர்களை ஆசிரியர்களாக ஆக்கினார். அதற்காக அவர் சிறை செல்ல
நேரிட்டது. இதைவிடப் பிற்பட்ட நிலை பீஹாரில் இருக்கிறது.
ஆரம்பக் கல்வி என்பதே பீஹாரில் ஒரு மோசடி
என்று ஆய்வாளர்கள் எழுதி இருக்கிறார்கள்.

ஆச்சரியம் தரும் விஷயம் என்னவென்றால், சுதந்திரம்
கிடைத்ததும் மிகச்சிறந்த அரசியல்வாதிகளான ஆச்சாரிய
கிருபாளனி, ஜெயப்ரகாஷ் நாராயணன் போன்றவர்களால்
வழிநடத்தப்பட்ட அரசியல் கொண்டது பீஹார்.

நாற்பதுகளில் ஏற்பட்ட பஞ்சம் அதற்கு ஒரு பின்னடைவாக
இருந்தாலும் சுதந்திரத்திற்கு பின் பீஹார், இந்தியாவின் மிக வெற்றிகரமாக ஒரு மாநிலமாக மாறிக் கொண்டிருந்தது.
ஏனென்றால், கனிமவளம் கொண்டது அது.
கங்கை ஓடுவதனால் நீர்வளம் நிறைந்தது. மிகப்பெரிய
அளவில் மக்கள் வளம் கொண்டது.

ஆனால், சாதி அரசியலால் பீஹார் வீழ்ச்சி அடையத்
தொடங்கியது. பெரும்பான்மையினர் அரசியலைக் கைப்பற்றுவது ஜனநாயகத்தில் இயல்பானது. ஆனால், அது பீஹாரில்
பெரிய அழிவை உருவாக்கியது.

அங்கே பெரிய எண்ணிக்கையில் உள்ள யாதவர்கள், ஜாட்டுகள்
என்னும் இருபெரும் ஜாதியினரால் அங்குள்ள அரசியல்
கையடக்கப்பட்டது. கிராமங்கள் அனைத்தும் அவர்கள்
கட்டுப்பாட்டுக்கு சென்றன. அனைத்து வளர்ச்சித் திட்டங்களையும் அவர்கள் முடக்கினர். அதன்பிறகு அங்கே எந்த முன்னேற்றமும் நிகழ்வில்லை.

தமிழ்நாட்டில், செங்கல் சூளைகளிலும், திருப்பூரில், நெசவு
ஆலைகளிலும் வேலைக்கு வரும் பல்லாயிரக்கணக்கான
வட இந்தியர்கள் பீஹார் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
ஈரோடு பகுதிகளில் விவசாய வேலைக்கு கூட பீஹாரிலிருந்து
மக்கள் கொண்டு வரப்படுகிறார்கள்.

குஜராத்தில் விவசாய நிலங்கள் அனைத்தையுமே பீஹாரில்
இருந்து வரும் கூலித்தொழிலாளர்கள் தான் செய்கிறார்கள்.
ஏன் லடாக்கில் ரத்தம் உறையும் கடுங்குளிரில் சாலை போடும் வேலையே பீஹாரிகள் தான் செய்கிறார்கள். இந்தியா முழுக்க மிகக்குறைவான ஊதியத்திற்கு பீஹாரிகள் கூலிகளாகச்
செல்கிறார்கள். சொந்த நாட்டின் அகதிகள் அவர்கள்.

நிதிஷ்குமார் பாரதிய ஜனதாவுடன் அமைத்த முதல் ஆட்சி என்பது
பீஹார் பேரழிவின் விளிம்பில் நிற்கும்போது உருவான ஒரு சிறிய மாற்றம். மிகுந்த நல்லெண்ணத்துடன் பல சீர்திருத்த முயற்சிகளை
நிதிஷ் மேற்கொண்டார். முதலில் கிராமங்கள் முழுக்க இருந்த
கட்டைப் பஞ்சாயத்து முறையை ஒழித்து சட்டத்தின் ஆட்சியை
அவர் கொண்டு வந்தார்.

நான் தொண்ணுாறுகளில் பீஹாரில் பயணம் செய்யும்போது
பல ஊர்களில் சாலைகளில் அந்த கிராமத்துப் பண்ணையார்களே செக்போஸ்டுகளை நிறுவி, அவ்வழியே செல்லும்
வாகனத்திலிருந்து தன் சொந்தச் செலவுக்கு கட்டாய வசூல்
செய்வதை கண்டிருக்கிறேன். ஏதேனும் ஓர் ஆலயத்துக்கான
நிதி வசூல் என்று ரசீதும் அளிப்பார்கள். எந்த காவல் துறையாலும்
அதை தடுக்க இயலவில்லை.

பீஹாரில் சட்டம் – ஒழுங்கை திருப்பிக் கொண்டு வந்தது,
நிதிஷ்குமாரின் மிகப்பெரிய சாதனை. கிராமத்துச் சந்தைகளை கட்டுப்படுத்தி வென்று வந்த குற்றவாளிகள் அகற்றப்பட்டனர்.
பீஹாரில் ஓரளவுக்கு வளர்ச்சி உருவாகியது. அடுத்த கட்டமாக
ஆரம்பக் கல்வியை மேம்படுத்த நிதிஷ் முயன்றார். முப்பதாயிரம் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களை, மூன்று படிகளாக நியமித்தார்.

அவர்களை நியமிக்கும் பொறுப்பு கிராமப் பஞ்சாயத்துகளுக்கும்,
கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டது.
அவ்வாறு கிராம பஞ்சாயத்துகளுக்கு அவ்வுரிமை வழங்கப்பட்டது, மிகப்பெரிய பிழை என்று தெரிய வந்தது.

இதழாளர்கள் சிலர் சேர்ந்து, பீஹாரின் இந்தப் புதிய ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களில் மிகக் கணிசமானவர்கள் ஆரம்பப்பள்ளியே
முடிக்காதவர்கள் என்றும், அவர்கள் அளித்த கல்விச்சான்றிதழ்கள் அனைத்தும் போலியானவை என்றும் வெளிக்கொணர்ந்தனர்.

சான்றிதழ்களை பரிசோதிக்க வேண்டிய அதிகாரிகள் பணம்
பெற்றுக் கொண்டு அவர்களை வேலைக்கு சேர்த்திருந்தார்கள்.
எழுதப் படிக்கக் கூட தெரியாதவர்கள் ஆரம்பப்பள்ளி
ஆசிரியர்களாகி சம்பளம் பெற்றார்கள். அவர்கள் பள்ளிக்கு
செல்லவோ பாடங்களை நடத்தவோ இல்லை. பீஹாரின்
கல்வி முறை தரை மட்டத்திலிருந்து மேலும் கீழே சென்றது.

ஆனால், இந்த ஊழல் வெளிப்பட்டு, அதிகாரப்பூர்வமாக
ஆவணங்கள் வெளிக்கொணரப்பட்டு, ஆதாரப்பூர்வமாக நிறுவப்பட்ட
பிறகும் கூட நிதிஷ் அரசால் எதுவுமே செய்ய முடியவில்லை.
இந்த ஆசிரியர்களில் கணிசமானவர்கள் அதற்குள் பணிநிரந்தரம்
பெற்று விட்டிருந்தனர்.
அவர்கள் ஆசிரியர் சங்கங்களில் உறுப்பினர்களாகி விட்டிருந்தனர். அவர்களுக்காக ஆசிரியர் சங்கங்கள் தெருவில் இறங்கி போராடவும் தயாராக இருந்தன.

அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் பகைத்துக் கொள்ள நிதிஷ் விரும்பவில்லை. அவர்கள் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அவர்கள் பலவகையிலும் தக்க வைக்கப்பட்டனர்.
அடுத்த தேர்தலில் நிதிஷ் வென்று ஆட்சிக்கு வர இவர்
நடவடிக்கை எடுக்காமல் இருந்ததே முக்கியமான காரணமாக
அமைந்தது என்பார்கள்.

ஏன் ஆசிரியர்களுக்கு இந்த அதிகாரம் இருக்கிறது?
அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் இந்தியாவின் தேர்தல்
முறையை மறைமுகமாக கட்டுப்படுத்தும் ஆற்றல்
கொண்டவர்கள்.

govt.emp.strike-2

சென்ற முறை ஜெயலலிதா அரசு, அரசு ஊழியர்கள் மேல்,
ஆசிரியர்கள் மேல் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தபோது
ஒரு ஆசிரியர் என்னிடம் சொன்னார்,

“வரும் தேர்தலில்
ஜெயலலிதாவை தோற்கடிப்போம்.
மக்கள் ஜெயலலிதாவை
ஆட்சிக்கு கொண்டுவர நினைத்தாலும்
எங்களால் தோற்கடிக்க முடியும்.”

நான் வியப்புடன், “எப்படி?” என்று கேட்டேன்.
மக்கள் வாக்களிக்க வராத பல்லாயிரம் வாக்குச் சாவடிகள்
தமிழகத்தில் உள்ளன. அவை முழுக்க முழுக்கத் தேர்தல்
அதிகாரிகளாகச் செல்லும் ஆசிரியர்களின் கட்டுப்பாட்டில்
உள்ளன. அவற்றை அவர்கள் என்ன வேண்டுமானாலும்
செய்ய முடியும் என்றார் அவர்.

எப்படி வெவ்வேறு தேர்தல்களை தாங்கள் முடிவு செய்தோம்
என்று அவர் விளக்கியபோது ஒருகணம்
உறைந்து போய்விட்டேன்.

இந்தியா முழுக்க எல்லா அரசுகளும் ஆசிரியர்களையும்,
அரசு ஊழியர்களையும் பார்த்து அஞ்சுகின்றன. ஒவ்வொரு
முறையும் தேர்தல் நெருங்கும் போது, ஊதிய உயர்வோ
பிற சலுகைகளோ கேட்டு அவர்கள் போராடுவதையும்,
அதற்கு அரசு அடிபணிவதையும் நாம் பார்த்துக்
கொண்டிருக்கிறோம்.

ஒரு மாஃபியா போல இந்திய ஜனநாயகத்தை பிணைக்
கைதிகளாக வைத்திருக்கிறார்கள் இவர்கள். வாக்கு எந்திரம்
வந்த பிறகு இவர்களுடைய அதிகாரம் பெருமளவுக்கு
மட்டுப்பட்டிருக்கிறது என்றாலும் இன்றும் கூட ஓரளவுக்கு
தேர்தல்களை விரும்பியபடி மாற்றும் வல்லமை
இவர்களுக்கு இருக்கிறது.

இந்த மறைமுக அதிகாரத்தை இவர்களிடமிருந்து எப்படி
அகற்றுவதென்பது எல்லா அரசுகளும் எண்ணிக்
கொண்டிருக்கும் செயல்தான்.

ஆனால், அது மக்களின் தொடர் முயற்சியால் மட்டும் தான்
முடியும். தேர்தல் அதிகாரிகள் சாதகமாக செயல்பட்டால் தேர்தல் வாக்களிப்புகளை பலவகையிலும் மாற்றி அமைக்க முடியும்
என்ற நிலை இன்றும் நீடிக்கிறது.

ஒவ்வொரு தேர்தல் மையங்களிலும் அரசியல் கட்சிகளுக்கு
அப்பாற்பட்டு மக்களும் ஏதேனும் ஒரு வகையில் கண்காணிக்கத்
தொடங்க வேண்டும். முறைகேடுகள் நிகழுமென்றால் அவற்றை செய்தியாக்கவும் புகாரளிக்கவும் தயங்கக்கூடாது.

தொலை துாரத்தில் அதிகம் மக்கள் செல்லாத பழங்குடி
மக்கள் வாழும் பகுதிகளில் அமைந்துள்ள வாக்கு சாவடிகளை கண்காணிக்க மக்கள் கண்காணிப்பகங்கள் அமைய வேண்டும். இல்லையேல் வரிப்பணத்தை ஊதியமாக பெற்றுக் கொண்டு
அதற்குரிய எந்த நியாயமான பங்களிப்பையும் சமுதாயத்துக்கு வழங்காமல் இருக்கும் அரசு ஊழியர்களின் கைகளில் அரசாங்கம் பாவையாக ஆகிவிடும்

இந்தியா போன்ற பெரும் தேசத்திற்கு அரசு ஊழியர்கள் மிக அவசியமானவர்கள்; அவர்களின்றி இந்த சிக்கலான விரிந்த
நிலப்பரப்பை ஆள முடியாது. இந்தியா முழுக்க பரவியிருக்கும்
ஒரே கல்வியும், ஒரே வகைப் பயிற்சியும் கொண்ட
அரசூழியர்களின் அமைப்பு வெள்ளையர்களால் உருவாக்கப்பட்டது.
அதுவே இந்தியாவை ஒன்றாகக் கட்டி நிறுத்துகிறது.
இந்தியா என்னும் உடம்பின் நரம்புவலை அவர்களே.

ஆகவே, அவர்களுக்கு தவிர்க்க முடியாமல் ஓர் அதிகாரம்
கை வருகிறது. அதை வெள்ளையர் காலம் முதலே
ஊழலுக்காகத்தான் அவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
வெள்ளையர்கள் அவர்கள் தங்களை ஆதரிப்பதற்கு
அளித்த கப்பம் அது.

சுதந்திரத்திற்குப்பின் அவர்களை இந்திய ஜனநாயக அரசுகள்
கட்டுப்படுத்த முடியாமல் போனது அவர்களுக்கு தேர்தலில்
இருக்கும் பங்களிப்பால்தான்.

இந்தியாவின் மிகப்பெரிய ஊழல்வாதிகள் அரசியல்வாதிகள்
அல்ல; இந்த அரசு ஊழியர்கள் தான். ஒட்டு மொத்தமாக
இந்தியாவின் வரிப்பணத்தை இவர்கள் தான் சுருட்டி
அழிக்கிறார்கள். எந்த ஒரு அரசு, அரசு ஊழியர்களுக்கு
எதிரானதாக இருக்கிறதோ அதுவே மக்களுக்கு சாதகமான
அரசாக இருக்க முடியும் என்பதே இந்தியாவின்
நடைமுறை உண்மை.

—————————————————-

பின் குறிப்பு –

எவ்வளவோ கண்காணிப்பு முறைகள் அறிமுகப்படுத்தப்பட்ட,
இன்றைய நடைமுறைகளில் கூட – தேர்தல் முடிவுகளை
மாற்றும் அளவிற்கு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் –
வசதியும், வாய்ப்பும், வலிமையும் – கொண்டவர்களா …?

அவர்களை பகைத்துக் கொள்ளும் அரசை,
மக்களே விரும்பினாலும் கூட
அவர்களால் தோற்கடித்து விட முடியுமா…?

திரு.ஜெயமோகன் கூறும் செய்திகள் பற்றி, நண்பர்களின்
கருத்துக்களை பின்னூட்டங்களின் மூலம்
தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

நானும் என் கருத்துக்களோடு இடையிடையே
வருகிறேன்……

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

21 Responses to தேர்தலில் தோற்கடித்து விடுவார்களா … அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் பகைத்துக் கொண்டால் …?

 1. செந்தில் - கோவை. சொல்கிறார்:

  முன்பு ஒரு முறை ஜெ. சொன்னது போல், அரசு வருமானத்தில் சம்பளத்திற்குதான் அதிக அளவு செலவாகிறது.
  மற்ற தனியார் துறை தொழிலாளர்களின் சம்பளத்தை ஒப்பிடும்பொழுது , அரசு ஊழியர்களுக்கு ஒய்வூதியம் கொடுப்பதிலும் எனக்கு உடன்பாடில்லை, .

  • Tamilian சொல்கிறார்:

   ஓய்வூதியம் என்பது ரூ நீட்டிக்க பட்ட ஊதியம் ,அடிப்படை உரிமை என்று உச்ச நீதி மன்றம் கூறியுள்ளது. இங்கிலாந்து போல எல்லோருக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட்ட வேண்டும்.

 2. சாமியார் சொல்கிறார்:

  ஜெ.மோ சொல்வது வட-வட கிழக்கு மாநிலங்களுக்கு வேண்டுமானால் பொறுந்தாலாம். சென்னையில் படிக்காத ஆள்கூட நல்ல விழிப்புணர்வுடன் இருப்பதை உணர்கிறேன். தமிழக கிராமங்களில் வயதானவர்கள் கூட முக அடையாளங்களை (face reading) வைத்து அதிகாரிகளை மிகச்சரியாக எடைபோடுவார்கள் (சண்டையும் கூட). பழங்குடியினர் வாழும் கிராமங்களில் நிலை தெரியவில்லை. ஆசிரியர்கள் திமுகாவினை ஆதரிப்பதில் முனைப்புடன் இருப்பது ஆதிமுகாவின் அலட்சிய போக்கே காரணம். நன்றாக படித்த-கல்வி-அறிவு-விழிப்புணர்வு பெற்ற சமுதாயமே இதற்கு தீர்வு.

  • Tamilian சொல்கிறார்:

   2006ம் ஆண்டில் அதிமுக வராமல் போனதற்கு அரு ஊழியர்கள் ஒரு காரணம் என்ற சந்தேகம் எனக்கு உண்டு.
   இப்போது சிசிடிவியும் இருப்பதால் அவர்களால் குளறுபடிகள் செய்ய முடியும் என்று தோன்றவில்லை. இல்லையென்றால் 2011,2014 தேர்தலிலும் தி மு க வென்றிருக்கும். அவர்கள் எந்த அளவுக்கு தேவையோ அந்த அளவுக்கு அமர்த்தப்பட்ட வேண்டும். மேலை நாடுகளுடன் ஒப்பிட்டால் இங்கே 1/6 பங்கே அவர்கள் இருக்கிறார்கள். ஊழியர்களின் அராஜகத்தை அடக்கியதால் அவர்கள் அதிமுகவிற்கு எதிரிகளாக உள்ளனர்.

  • Tamilian சொல்கிறார்:

   DMK is the reason for extra ordinary corruption of Government employees. They formed partnership with DMK and loot us.

 3. NS RAMAN சொல்கிறார்:

  It is not possible to change of results by manipulations in the age of EVM and web camera surveillance. Pl do remember booth agents also representing political parties. That’s why in the post T N Sheshan era parties focusing on voters by money distribution instead of booth capturing.

  TN teachers and govt staff soft corner towards DMK due to implementation of equal pay with central govt in fifth pay commission.

  But recently TNPSC appointments done in a transparent manner by this government will create a support of new comers to ADMK.

  It is nothing wrong in paying good salary to govt machinery’s but ensure the merit and quality in place.

 4. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  காங்கிரஸ் அழுத்தம் கொடுத்ததா அல்லது ப.சி கெஞ்சினாரா தெரியாது. தேர்தல் ஊழியர்களை வைத்துத்தான் தோற்ற ப.சி வெற்றி பெற்றமாதிரி வாக்கு எண்ணிக்கை மாற்றி எழுதப்பட்டது. (அதைத் தட்டிக்கேட்டு நீதிமன்றத்தை aggressiveஆக அணுகாமல் அப்போது வெளியே கசிந்த செய்திகளின்படி 50 கோ வாங்கிக்கொண்டு அமைதியாகிவிட்டதால்தான் க…ணப்..னுக்கு இந்தத் தேர்தலில் சீட் இல்லை). அரசு அலுவலர்களின் இந்தத் திறமை தெரிந்துதான் 3 லட்சம் அரசு ஊழியர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று கருணானிதி தேர்தல் அறிவிக்கையில் சொல்கிறார். ஆசிரியர்களில் ஒரு பகுதியினரும், அரசு அலுவலர்களில் ஒரு பகுதியினரும் தவிர மற்ற எல்லோரும் நம் நாட்டின் ஊழலுக்கும் புரையோடிப்போன லஞ்சத்திற்கும் முக்கியக் காரணமானவர்கள். அவர்கள் தேர்தல் சமயத்தில் அவர்களது நிறத்தைக் காண்பிக்க முடியும். அதுவும்தவிர, அரசு உதவிகள், நலத் திட்டங்கள் போன்ற எதற்கும் ஊறு விளைவிக்கவும் முடியும். அதனால்தான் they exploit.

 5. Tamilian சொல்கிறார்:

  அவர்கள் இந்த கழக ஆட்சியில் புற்று நோய் போல வளர்ந்து விட்டனர். ஆனால் போக்குவரத்து அலுவலகம் டிரைவிங் லைசென்ஸ் ,தாசில்தார் அலுவலகம் வாரிசு சான்றிதழ் கிடைப்பது , பத்திர பதிவு அலுவலகத்தில் ec
  வாங்குவது ,பத்திரங்கள் பதிவது போன்ற காரியங்கள் கையூட்டு இல்லாமல் நடக்கின்றன. ஆனால் நாம் நேரில் செல்ல வேண்டும். லஞ்சம் நம் விருப்பம் இல்லாமல் வாங்க முடியாது. இனி வீட்டு பிளான் செய்ய CMDA அணுகி பார்க்க வேண்டும். அதில் சிறிது எல்லை மீறல்கள் இருந்தால் லஞ்சம் கொடுக்காமல் காரியம் நடக்காது. ஆகவே சட்ட படி நடக்க வேண்டும்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   அரசு ஊழியர்கள்+ஆசிரியர்களால், தேர்தல் முடிவுகளை
   மாற்றி அமைக்க முடியுமா …?

   எனது கருத்து –

   – அனத்து ஊழியர்களும் அரசுக்கு எதிரான மனோபாவம்
   கொண்டவர்கள் அல்ல…

   ஆனால், கலைஞர் மிகவும் கெட்டிக்காரத்தனமாக
   தான் பதவிக்கு வரும்போதெல்லாம், அவர்களுக்கு
   பெரும் அளவில் சலுகைகளை அள்ளிக்கொடுத்து
   வருவதாக அவர்களை நம்ப வைத்திருக்கிறார் –
   இப்போதும் தேர்தல் அறிக்கையின் மூலம் நம்ப வைக்கிறார்…
   இது ஓரளவிற்கு நிஜமும் கூட.

   ஆனால், அவர் இதைச்செய்தது முற்றிலும் சுயநலம் காரணமாக.
   திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம், அரசு அலுவலகங்களில்
   கரை வேட்டிகளின் நடமாட்டம், ஆதிக்கத்தை காணலாம்….
   கட்சி சார்பில், பல காரியங்களை செய்து கொள்ள,
   கட்சி பிரமுகர்கள் (வட்டம், மாவட்டம்) பல வழிகளிலும்,
   அரசு எந்திரத்தை பயன்படுத்தி பலன் பெற இது உதவியது.
   (இதன் பலனை, ஒரு பெரும் அரசு ஊழியர்களின் கூட்டமும்
   அனுபவித்து வந்தது…)
   அதிமுக அரசு, அரசு ஊழியர்களுக்கு எதிராக இந்த தடவை
   ஒன்றும் செய்யவில்லை என்றாலும், திமுக வந்தால்
   தங்களுக்கு வசதிகள் பெருகும் என்கிற நினைப்பு தொழிற்சங்க
   நிர்வாகிகளிடம் நிறையவே இருக்கிறது.

   இந்த மனப்பான்மை, சமயம், சந்தர்ப்பம் கிடைக்கும்போது –
   அதிமுக அரசுக்கு எதிராக செயல்படக்கூடிய சூழலை
   உண்டுபண்ணுகிறது.

   ஆனால், வாக்குபதிவு எந்திரங்கள் இயங்கும் முறை,
   கண்காணிப்பு காமிராக்கள், மணிக்கு மணி ஓட்டுப்பதிவு
   விவரங்களை தெரிவிக்கும் முறை, பலகட்ட மேற்பார்வை,
   கண்காணிப்பு முறைகள் – ஆகியவை காரணமாக,
   அத்தகைய மனப்பான்மை கொண்டோர் செயல்பட
   வாய்ப்பு கிடைப்பது குறைவே. ரிமோட் ஏரியாக்களில்
   இது நடக்க வாய்ப்பு இருக்கவே செய்கிறது.

   இதை தடுக்க ஒரே வழி வாக்கு பதிவு நிகழும்
   இடங்களில் (பூத்) இருக்கும், கட்சி/வேட்பாளர்களின்
   பிரதிநிதிகள், கடைசியாக வாக்குப்பதிவு முடிந்து “சீல்”
   வைக்கப்படும் வரை
   அந்த இடத்தை விட்டு அகலாமல் இருப்பது தான்.
   (சாதாரணமாக, மதியத்திற்கு மேல், ஓட்டுப்பதிவில்
   விருவிருப்பு குறைய ஆரம்பித்தபிறகு, பூத் கமிட்டி ஆட்கள்
   ரிலாக்ஸ் செய்து கொள்ள – வெளியே போய் விடுவது சகஜம்…)

   ஜனநாயகம் வெற்றி பெற வேண்டுமானால் –
   எல்லாருமே விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது
   அவசியம்….!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 6. CHANDRA சொல்கிறார்:

  The deavidian rule is certainly
  Responsible for the deterioration of moral social values
  And the tamilnadu govt servants
  Fully exploited the situation
  The dmk electionmanifesto
  Promises nine month maternity
  Leave for tamilnadu govt servants
  Whose money these govt servants swindle
  Only our taxpaywrs money
  Why should the dmk govt
  Pay nine months salary to a staff
  Two months leave is ok
  The avaricious govt servants
  And the corrupt govt…………..

  • Tamilian சொல்கிறார்:

   It follows the dictum” arasan evvazhi makkal avvazhi”. The people ruling before 1967 were good ,honest administrators and they wanted to do something really good for the people as the leaders were freedom fighters. The people from Dravidian parties had a differentbackground. They captured power by good speeches and with the help of Rajaji who helped them to garner anti congress votes by uniting them. But for him, that alliance would not have come about and people also would not have voted them to power. MGR factor was another contributing factor. The government employees took the cu from this politicos who are out to make money. But even now we have some honest government servants but they are less. In my opinion in the present voting set up it will not be possible for them to meddle with votes as they did in 2006 & 2009.

 7. gopalasamy சொல்கிறார்:

  simply I believe Jeyamohan. Because I have no idea about remote booth centres.

 8. thirumbi சொல்கிறார்:

  Subject: எல்லா அரசு வேலை ஆட்களுக்கும் லஞ்சம் கிடைப்பது இல்லை. நீங்கள் லஞ்சம் வாங்காத ஆள் என்றால் கவனமாக படி பரப்பு உண்மையை .

  எல்லா அரசு வேலை ஆட்களுக்கும் லஞ்சம் கிடைப்பது இல்லை. நீங்கள் லஞ்சம் வாங்காத ஆள் என்றால்
  கவனமாக படி பரப்பு உண்மையை .

  தள்ளாமையால் தன் நிலை அறியா தலைவன் , தண்ணியால் தன் நிலை அறியா தலைவன் கூறுகிறார்கள் மது விலக்கு அமல் படுத்தப்படும் .
  அரசாங்க ஊழியர்களே உங்களுக்கு தெரிய வேண்டும் டாஸ்மாக் பணம் அரசாங்கம் வாங்கிய 2 லட்சம் கோடி கடனுக்கு வட்டி கட்ட போதும். வட்டி கட்டினால் மேலும் கடன் கிடைக்கும் . டாஸ்மாக் மூடப்பட்டு விட்டால் வட்டி கட்ட முடியாது . வட்டி கட்டவிட்டால் ரிசர்வ் வங்கி ஒவ்ர் டிராப்ட் கொடுக்காது. ஒவ்ர் டிராப்ட் இல்லை என்றால் சம்பளம் கிடையாது. கிம்பளம் இல்லையென்றால் வீட்டில் சாப்பாடு கிடையாது. உங்களுக்கு தெரியும் எவ்வளவு ஆட்கள் அரசாங்கம் பணம் கொடுக்காமல் டிலே ஆகி அழிந்து விட்டார்கள்.

  ரிசேர்வ் வங்கி ஸ்டைலாக ஆங்கிலத்தில் சொல்லிவிடுவார்கள் உங்கள் அரசாங்கஅக்கௌண்டில் பணம் இல்லை. od எக்ஸ்சீட்ஸ் தி லிமிட் , மன்னிக்கவும்.
  தலைமை செயலகம் போலீஸ் ias ips போன்றோர் சம்பளம் எடுத்து கொண்டு விடுவார்கள். உங்களை நடு தெருவில் விட்டுவிடுவார்கள் . எத்தனையோ மாநிலங்களில் பணம் மாத கணக்கா கொடுக்கபடுவதில்லை. . தமிழ் நாட்டிலும் உங்களுக்கு அந்த நிலை வரவேண்டுமா.

  ஆகவே அறிவை பகுக்காமல் முழுசாக உபயோக படுத்தி
  தன் நிலை அறியா தலைவன்
  தன் நிலை மறந்த தலைவன்
  போன்றோர் தேர்தலில் டெபொசிட் காலி செய்ய உழைப்போம் நாம் நமது குடும்பம் வாழ வேண்டும் முதலில்

 9. LVISS சொல்கிறார்:

  In the EVM system this may be difficult —

 10. A.K. Srinivasan சொல்கிறார்:

  thirumbi in karuthukkal migavum nermyyanathu. Pala perukku puriyatha onrai vithiyasamagavum
  thelivagavum kooriullar, varaverkkathakkathu. Tamizhan ellavatrrilum mudanamaianavan.yenavethan ithilumkodikatti parakkiran . Vendum vendam enbathu thanimanithan karuthu. Velaineram kuraithu kadaikalai kuraithale seerpattuvidum. Matravai
  ellaam yemattruvelai.

 11. stanley சொல்கிறார்:

  jeyamohan ariyamal solkirar

 12. selvarajan சொல்கிறார்:

  // காவிரி பிரச்சனையை தீர்க்காமல் அதை வைத்து அரசியல் செய்யும் திமுக, அதிமுக: அமித் ஷா பொளேர்
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/admk-dmk-not-keen-solving-cauvery-issue-amit-shah-251194.html? // … உலகமகா காமெடியன் .. ? ” ஆட்சிக்கு பா.ஜ.க. வந்து இரண்டு ஆண்டுகளாக ” காவிரி மேலாண்மை வாரியம் ” அமைக்க துப்பில்லை — இவர் இப்போது கூறுகிறார் அமைப்பது பற்றி சிந்தித்துக்கொண்டு இருக்கிறார்களாம் — இது எப்படி இருக்கு .. ! இவரும் சந்திக்க முடியாத முதல்வர் என்றும் — // அணுக முடியாத முதல்வர்!
  மத்திய அரசின் ‘உதய்’ திட்டம் தொடர்பாக, மத்திய அரசு மீது தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளதே என்ற கேள்விக்கு, அமித் ஷாவுடன் இருந்த மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் பியுஷ் கோயல் பதில் அளித்தார்.அவர் கூறியதாவது:
  தமிழகம் தவிர, அனைத்து மாநிலங்களும் உதய் திட்டத்தை செயல்படுத்தி, பயன்பெற்று வருகின்றன.// என்றும் செய்தி வந்துள்ளது … ! இவர்களின் கருத்தும் — ” பொளேர் ” — என்று எழுதும் கேடு – கெட்ட செய்தி தாளும் … இரண்டுமே எதில் சேர்த்தி .. ?

 13. ravi சொல்கிறார்:

  அரசு ஊழியர்களின் பலம் , வோட்டு போடுபவர்களின் பட்டியலை சரி பார்ப்பதில் தான் உள்ளது .. அங்கே வைத்து விடுவார்கள் ஆப்பு .. சிறு கிராமங்களில் இதை செய்வது கடினம்.. உள்ளூரில் சாத்தி விடுவார்கள்.. ஆனால், பெரு நகரங்களில் இது சுலபம்.. ஒரு கட்சிக்கு பலமான தொகுதிகளில் -> பெயர் சரியாக இல்லை, வீட்டில் யாரும் இல்லை , என்று காரணம் சொல்லி பெயர் நீக்குவதன் மூலம் எளிதாக வோட்டுகளை சிதறடிக்கலாம்..
  உள்ளாட்சி தேர்தலில் கொஞ்சம் அட்டகாசம் செய்வார்கள் ( இங்கே மாநில தேர்தல் ஆணையம் தான் மேற்பார்வை செய்யும் ). பாராளமன்ற மற்றும் சட்டசபை தேர்தல் முழுக்க மத்திய தேர்தல் ஆணையம் தான் பார்த்து கொள்ளும் .. ஆகவே வோட்டு சாவடியில் ஒன்றும் பெரிதாக செய்ய முடியாது ..
  அரசு ஊழியர்களின் பலம் ஒட்டு போடுபவர்களின் பட்டியலை சரிபார்பதில் உள்ளது.. அவ்வளவே..

 14. ravi சொல்கிறார்:

  even with all protection .. this can happen..

  http://tinyurl.com/zg5cgo2

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.