திருவாளர் அமீத் ஷா வின் “சென்னை ஜோக்ஸ்” ……!!!

.

.

மறதி சிலருக்கு சாபம்…சிலருக்கு வரம்….!!!
அரசியல்வாதிகளுக்கோ –
மக்களின் மறதி ஒரு வரப்பிரசாதம்…!!!

கீழே உள்ள இடுகையை முதலில் படியுங்களேன்.
இடுகையின் கடைசியில் விவரம் சொல்கிறேன்….!

———————-

சில பேரைப் பார்த்தால் வில்லன் மாதிரி இருக்கும்.
சில பேரைப் பார்த்தால் காமெடியன் போல் இருக்கும்.
சில பேரைப் பார்த்தால் ஹீரோ மாதிரி இருக்கும்.

ஆனால் உண்மையில் – “பெர்சனாலிடி” என்பது அவரவர்
செய்கைகளைப் பொறுத்தே அமையும்.

amitji-2

போன வருடம் இதே நாட்களில் –
திருவாளர் அமீத் ஷா குஜராத்தில் மோடிஜியின்
வலது கரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தபோது –
சிபிஐ யால் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வந்த நேரத்தில் –
நாட்டு மக்கள் அவரை வில்லனாக நினைத்தார்கள்….!
பாராளுமன்ற தேர்தல் முடிந்து, உத்திர பிரதேச ரிசல்ட் வெளிவந்தவுடன் அவர் “ஹீரோ” வாகத் தெரிந்தார்.

மஹாராஷ்டிரா, ஹரியானா தேர்தல்கள் முடிவடைந்தபோது, சிலர் அவரை ‘ஹீரோ’ வாகவும்,
சிலர் ‘வில்லனாக’ வும் பார்த்தார்கள்.

முந்தாநாள் சனிக்கிழமை அமீத் ஷா அவர்கள் சென்னை
வந்து சென்ற பிறகு ஒரு நல்ல “ஜோக்” காளராகத் தெரிகிறார்.

amitji-1

சென்னையில் அமீத் ஷா அவர்கள் பேசியதில் சில –

– அடுத்து வரும் 2016 சட்டமன்ற தேர்தலில், தமிழ்நாட்டில்
குறைந்த பட்சம் 122 இடங்களில் ஜெயித்து, பாஜக ஆட்சியமைக்கும்.
கூட்டணி இருந்தாலும் சரி, இல்லா விட்டாலும் சரி,
பாஜக வைச் சேர்ந்தவர் தான் முதலமைச்சர்.

– தேர்தலுக்கு முன்னரே, முதலமைச்சர் வேட்பாளரை அறிவித்து
விடுவோம். முதலமைச்சர் பேரைச் சொல்லி விட்டுத்தான்
ஓட்டுக் கேட்கவே போவோம்… ( அதற்குள்ளாக, விஜய்காந்த் பாஜக வில் சேர்ந்து விடுவார் என்கிற நம்பிக்கையா….?)

(அன்புமணி வேறு வந்து சந்தித்து “முக்கிய பிரச்சினைகளை” அமீத் ஷாவுடன் “விவாதித்து” விட்டுப் போனார்…..?)

( தமிழக பாஜக விலேயே வேறு ஏகப்பட்ட முதலமைச்சர்
வேட்பாளர்கள் இருக்கிறார்கள்….)

– டாக்டர் சுப்ரமண்யன் சுவாமி பாஜக உறுப்பினர் தான்.
ஒரு தலைவரும் கூட. ஆனால் அவர் அறிவிப்பவை கட்சியின் கருத்துக்கள் ஆகாது….!!

– கட்சியின் கொள்கைகளும், நிலைப்பாடுகளும், பாஜக செய்தித்
தொடர்பாளர்கள் மூலமாகவோ, மாநில தலைவர் மூலமாகவோ மட்டுமே அறிவிக்கப்படும்…..!!!

தமிழ் நாட்டில் உடனடியாக ‘மிஸ்டு கால்’ மூலமாக
60 லட்சம் பேர்கள் பாஜக உறுப்பினர்களாக சேர்க்கப்படுவார்கள்.
தமிழ்நாட்டின் மிகப்பெரிய கட்சியாக பாஜக உருவெடுக்கும்….

( அதே மேடையில் ஒரு கோடி பேர்களை உறுப்பினர்களாக்குவோம் என்று பெரிய அளவில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. டாக்டர் இசை அக்காவும் அதையே மேடையில் சொன்னார்….! )

-தமிழ் நாட்டின் முக்கிய பிரமுகர்கள் பாஜக வில்
இணைவார்கள்..

(திருவாளர்கள் கங்கை அமரன், நெப்போலியன், திருமதி காயத்ரி ரகுராம் ஆகிய “முக்கிய பிரமுகர்கள்” அமீத்ஜீ க்கு சால்வை போர்த்தி பாஜகவில் இணைந்தார்கள்….. )

– பாஜக ஆளும் மாநிலங்களில் வேலை இல்லாதோர்
திண்டாட்டம் ஒரு சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது…..!!! ??

– முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் இந்துக்கள் தான் என்று கூறிய
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தின் கருத்துக்கள்
பற்றி நான் ஒன்றும் சொல்ல மாட்டேன். ஆனால் ஒன்று மட்டும்
சொல்வேன் – ஆர்.எஸ்.எஸ் ஒரு தேசீய சிந்தனை உள்ள
அமைப்பு.

– பெட்ரோல் விலையை பதவியேற்ற ஆறு மாதங்களுக்குள் 10 முறைகள் குறைத்தது மோடி அரசின் மிகப்பெரிய சாதனை…!!!

– தமிழக மீனவர் பிரச்சினையில் பாஜக மிகப்பெரிய அக்கரை
கொண்டிருக்கிறது. அதைத் தீர்த்து வைக்க அனைத்து
முயற்சிகளும் மோடிஜி அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளன…..

அமீத் ஷா அவர்கள் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வந்து போனால் –
நன்றாக இருக்கும். மக்கள் ‘சந்தோஷ’ மாக இருப்பார்கள்…!!!

———————————————-

மேலேயுள்ள இடுகை 2014 டிசம்பரில் பாஜக தலைவர்
சென்னை வந்தபோது எழுதப்பட்டது.

( https://vimarisanam.wordpress.com/2014/12/22/)

நேற்றைய “டெல்லி-திருச்சி-டெல்லி – தனி விமானத்தில்
தலைவர் – எந்த தொழிலதிபர் ஏற்பாடு …?”

=இடுகையை எழுதியபோது,
இந்த பழைய இடுகையைப் பற்றி என் நினைவில் இல்லை. நண்பர் செல்வராஜன் பின்னூட்டத்தில்
இதை குறிப்பிட்ட பிறகு தான் எடுத்துப் பார்த்தேன்.

இவர்கள் முன்பு சொன்னது, இப்போது சொல்வது
எல்லாவற்றையும் தொடர்பு படுத்தி பார்க்க
இந்த இடுகையை இப்போது நண்பர்கள் அவசியம் படித்துப்
பார்க்க வேண்டும் என்று தோன்றியது. அதனால் தான்
இங்கு மீண்டும் மறுபதிவு செய்திருக்கிறேன்.

முன்பு அவர்கள் விட்ட சவடால் பேச்சையும்,
இப்போது தமிழக பாஜகவின் நிலையையும்
ஒப்பிட்டுப் பார்த்தால்…………………………. !!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to திருவாளர் அமீத் ஷா வின் “சென்னை ஜோக்ஸ்” ……!!!

 1. CHANDRAA சொல்கிறார்:

  JI Let us also be prepared to hear the sermons of sonia ji rahul ji
  about our illustrious kalignar iyyah how he gave a golden rule in the lastperiod…..
  Ghulam ji might even describe that how alagiris impeccable administration
  in his ministry had lifted india to greater heights….
  JI it is our fate to hear sermons from AMIT JI PRAKASH JI
  SONIA JI RAHUL JI ………

  • LVISS சொல்கிறார்:

   ruling parties , whether at the centre or at the state level has to listen to criticisms about their government –aiadmk would have done the same thing if dmk was in power — opposition parties will try to see only loop holes in the govt — even if there is something to be applauded they wont do it – it is for the people to give a final applause or a thumbs down for a party —

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.