அரசியல்வாதிகளின் முறைகேடான விமான பயணங்கள் – மக்களை ஏமாற்றுவது எப்படி …?

.

.

நேற்று முன் தினம் எழுதப்பட்ட
” டெல்லி-திருச்சி-டெல்லி – தனி விமானத்தில்
தலைவர் – எந்த தொழிலதிபர் ஏற்பாடு …? ”
என்கிற தலைப்புடன் வெளிவந்த இடுகையுடன்
இந்த இடுகைக்கு நிறைய தொடர்பு இருக்கிறது…..

படித்துப் பாருங்களேன் – தொடர்பு புரியும்…!!!

private planes-1

அரசியல் கட்சிகளுக்கு எங்கிருந்து பணம் வருகிறது…?
பெரும்பாலும் நன்கொடைகள் மூலமாக …

யார் கொடுக்கிறார்கள் ….?
பெரிய பெரிய தொழிலதிபர்கள்,
பெரும் வர்த்தகர்கள்,
பெரிய பெரிய தனியார் நிறுவனங்கள் –
பெரிய அளவில் நன்கொடைகள் கொடுக்கும் இவர்கள் பற்றிய விவரங்கள் பெரும்பாலும் வெளிவருவதே இல்லை…!

எந்தக் கட்சிக்கு கொடுக்கிறார்கள் …?
என்றாவது ஒரு நாள் அதிகாரத்திற்கு வரக்கூடிய
எல்லா கட்சிகளுக்குமே கொடுக்கிறார்கள்….!

ஏன் கொடுக்கிறார்கள் ….!
சும்மா தானமாகவா கொடுப்பார்கள்….? பிற்காலத்தில் அந்தந்த அரசியல்கட்சிகள், தலைவர்கள் பதவிக்கு வரும்போது,
அரசாங்கத்தில் செல்வாக்கு பெறும்போது –
பதிலுக்கு -வேண்டிய சலுகைகளை பெற்றுக் கொள்ளலாமே …!
அதற்காகத் தான்…!

இது லஞ்சம் இல்லையா …?
ஆமாம் லஞ்சம் தான் – ஆனால் லஞ்சம் இல்லை ….!!!!!!!!!!!!

சரி – இவற்றிற்கு எப்படி கணக்கு வைக்கிறார்கள்…?
20,000 ரூபாய்க்கு மேல் வரும் நன்கொடைகள் காசோலைகள்
மூலமாகவே பெறப்பட வேண்டும் – எனவே கொடுப்பவர் பற்றிய
விவரங்களைப் பதிய வேண்டியிருக்கும். தேர்தல் கமிஷனுக்கு
ஆண்டறிக்கையில் கொடுக்க வேண்டியிருக்கும் –
அதற்கு குறைவான தொகை என்றால் –
நன்கொடை கொடுப்பவர் விவரங்கள் கொடுக்கத் தேவையில்லை.

இது ஒரு பக்கம் இருக்க – இன்னொரு பக்கம்,
பணமாக இல்லாமல் – சலுகைகளாக எத்தனையோ வசதிகளை
அரசியல்வாதிகள் / கட்சிகள் பெரும் தொழிலதிபர்களிடமிருந்தும்,
வர்த்தகர்களிடமிருந்தும், பெரும் தனியார் நிறுவனங்களிடமிருந்தும்
பெறுகிறார்கள். இந்த விவரங்கள் பெரும்பாலும்
வெளியில் தெரிவதே இல்லை…!

இந்தியாவில் தனியார் விமான கம்பெனிகள் இருப்பது நமக்கு தெரியுமே தவிர, இத்தகைய கம்பெனிகள் எவ்வளவு இருக்கின்றன என்றோ, அவை யார் யாருக்குச் சொந்தமானவை
என்றோ தெரியாது….

இதில் சிறிய – 8 பேர் அளவிற்கு பயணிக்கக்கூடிய –
விமானங்களை வைத்துக் கொண்டு, அவற்றை மணிக்கு இவ்வளவு ரூபாய் என்று வாடகை பேசி இயக்கக்கூடிய சிறிய – விமான டாக்சி போல் செயல்படக்கூடிய – நிறுவனங்களும் உண்டு.

private planes-2

அவற்றில் சில –

ஏர் ஒன் ஏவியேஷன்
இந்தோ பசிபிக் ஏவியேஷன்
கிங் ரோடர் அண்ட் ஏர்
பினாக்கிள் ஏர் சர்வீஸ்
லைகர் ஏவியேஷன்
பிசினஸ் ஜெட்ஸ் இந்தியா
ஆர்பிட் ஏவியேஷன் கிராப்ட்
இந்தியா பிளைசேப்
ஏரோடெக் ஏவியேஷன் இந்தியா
ஏர் சார்டர் சர்வீஸ்
பிரபாதம் ஏவியேஷன் –
இவை சாம்பிள் மட்டுமே. இதுபோல் இன்னும் நிறைய
உண்டு.

பெரிய பெரிய தொழிலதிபர்கள், சிமெண்டு கம்பெனி,
மின் உற்பத்தி, நிலக்கரி சுரங்க, எண்ணை கம்பெனி முதலாளிகள்,
தங்கள் சொந்த உபயோகத்திற்காக வைத்துள்ள விமானங்களும் உண்டு.
இவை வாடகைக்கு விடப்படுவதில்லை. இவற்றை
அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு ( ? ) மட்டும் சமயத்தில் பயன்படுத்த கொடுத்து உதவுவார்கள். அதாவது அரசியல்வாதிகளுக்கு ஓசி…!!!

இத்தகைய விமானங்கள் சில –

இந்தியன் ஸ்டீல் ஒர்க்
அதானி குரூப்
ஜி.எம்.ஆர்., குரூப்
ஜி.வி.கே., ஏவியேஷன்
ஜெ.பி., குரூப்
டாட்டா குரூப்
எஸ்.ஆர்.சி., ஏவியேஷன்
ரிலையன்ஸ்
இவையும் சாம்பிள் மட்டுமே. இதுபோல் இன்னும் நிறைய
உண்டு.

அண்மையில் கோப்ராபோஸ்ட் என்கிற அரசியல் –
புலனாய்வு வலைத்தளமொன்று பல தகவல்களை சேகரித்து
வெளியிட்டிருக்கிறது.

இதில் வெவ்வேறு கட்சியைச் சேர்ந்த பல
அரசியல்வாதிகளின் நூற்றுக்கணக்கான விமானப் பயணங்கள் பற்றிய விவரங்களை தந்திருக்கிறார்கள். அரசியல்வாதிகள் பற்றிய இந்த விவரங்களை பார்த்தால் தலை சுற்றுகிறது. நமக்குத் தெரியாத தனி உலகம் அது….!

நாம் தினமும் பஸ் ஏறி போய் வருவது போல் சர்வசகஜமாக
அரசியல் தலைவர்கள் தனியார் விமானங்களை பயன்படுத்தி
இருக்கிறார்கள்….ஒரு வருடத்தில் நூற்றுக் கணக்கான
பயணங்கள்….!!!

இதில் அந்த கட்சி இந்த கட்சி என்றில்லை – கட்சி வேறுபாடு இல்லாமல், காங்கிரஸ், பாஜக, சரத்பவார் காங்கிரஸ், மாயாவதி கட்சி, முலாயம் கட்சி, பிஜு ஜனதா தள், சந்திரபாபு கட்சி…. என்று போய்க்கொண்டே இருக்கிறது.

உதாரணத்திற்கு சில பெயர்கள் மட்டும் –

திருமதி சோனியா காந்தி, ராகுல் காந்தி,
வீரப்ப மொய்லி, சரத் பவார், பிரபுல் படேல்
ராஜ்நாத் சிங், அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், நிதின் கட்காரி,
சிவ்ராஜ்சிங் சௌஹான், ராமன் சிங், பிரகாஷ் சிங் பாதல், மாயாவதி ……..
சிலர் தனியாக நண்பர்களுடன், உதவியாளர்களுடன் –
சிலர் தங்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன்…..

இவர்கள் சாதாரணமாகப் பயணிக்கும் விமானம் எத்தகையது….?
எட்டு இருக்கைகள் கொண்ட, Hawker 900 XP விமானம் …
இதன் வாடகை ஒரு மணிநேரத்திற்கு இரண்டே கால் லட்சம் ரூபாய்.

இது பற்றிய விவரங்களை எல்லாம் வெளியிடும் முன்னர் –
கோப்ராபோஸ்ட் பல விமானப் பயணங்களைப் பற்றிய பட்டியல்களுடன்,
இத்தகைய தனியார் விமானங்களைப் பயன்படுத்திய
அரசியல்வாதிகள் ( சுமார் 100 பேர் )மற்றும் அரசியல் கட்சிகளுக்கு சில கேள்விகளைக் கொண்ட மெயில் ஒன்றை அனுப்பி சில விவரங்களைக் கோரி இருந்தது.

எத்தகைய கேள்விகள் …?

இந்த ஒவ்வொரு தனிப்பட்ட விமானப் பயணத்திற்கும்
ஆன பில் தொகை எவ்வளவு …?
பில் பணத்தை கொடுத்தது யார்….?
எப்படி கொடுக்கப்பட்டது – ரொக்கமாகவா ? காசோலையா ?
யார் கணக்கிலிருந்து…?
கொடுத்தது யார்…?

இந்த 100 பேர்களில் 10 பேர்களிடமிருந்து மட்டும் பதில் வந்தது …. உரிய விவரங்கள் எதுவும் இல்லாமல் – சமாளிப்பாக …!!

கூடவே இத்தகைய தனியார் விமான கம்பெனிகளுக்கும்
( மொத்தம் 85 கம்பெனிகள் ….) ஒரு கேள்விப் பட்டியல்
அனுப்பப்பட்டது.

அதில் ஒவ்வொரு பயணத்தையும் குறிப்பிட்டு –
இந்த பயணங்களுக்காக எவ்வளவு பணம் சார்ஜ் செய்யப்பட்டது …?


அதில் சலுகைகள் எதாவது காட்டப்பட்டதா …?
அதில் பயணம் செய்தவர்கள் யார் …?
அதற்கான பில்களை செட்டில் செய்தவர் யார்…?
தனிப்பட்ட நபரா அல்லது எதாவது கட்சியா ?
ரொக்கமாகவா அல்லது காசோலையா ? (யார் கணக்கிலிருந்து )
அந்த தனியார் விமான கம்பெனி நஷ்டத்தில் இயங்குகிறதா
அல்லது லாபத்தில் இயங்குகிறதா ?
இதற்கு 3 கம்பெனிகள் மட்டும் பதில்
அளித்திருக்கின்றன.

இவற்றைத் தவிர, காங்கிரஸ் கட்சி மற்றும் பாஜக விற்கும்
தனித்தனியே கேள்வி மெயில்கள் அனுப்பப்பட்டன.
அந்தந்த கட்சியின் தலைவர்கள் சென்ற பயணப் பட்டியலைக் கொடுத்து –
இதே போல், பில் தொகை, கொடுக்கப்பட்ட பணம், ரொக்கமா, செக்கா, எந்த கணக்கிலிருந்து ? என்பன போன்ற கேள்விகளுடன் மெயில் அனுப்பப்பட்டிருக்கிறது.

எந்த கட்சியிடமிருந்தும் எந்தவித பதிலும் இல்லையாம்.

தனியார் கம்பெனிகளிடமிருந்து இவ்வாறு பெரிய அளவில்
சலுகைகளைப் பெறுவதும், அந்த கம்பெனிகளுக்குச் சொந்தமான வசதிகளை ( கெஸ்ட் ஹவுஸ், வாகனங்கள் போன்றவற்றை ) பயன்படுத்திக் கொள்வதும் ஊழலுக்கு வழி கோலுபவை என்பது இந்த அரசியல்வாதிகளுக்கு தெரியாதா…?

இதைப்பற்றி எல்லாம் மக்களுக்கு எங்கே தெரியப்போகிறது
என்கிற நினைப்பு தான் பெரும்பாலும். அப்படித் தெரிந்தாலும்,
இதற்கான பில்களை கட்சி கொடுத்து விடுகிறது என்று
ரெடிமேடு விளக்கம் கொடுக்கப்படும்.

கட்சிகளுக்கு இவ்வளவு பெரிய தொகை
எங்கிருந்து வருகிறது, யார் கொடுக்கிறார்கள்,
எதற்காகக் கொடுக்கிறார்கள் என்றெல்லாம் கேள்வி கேட்கத்தான் –இந்த நாட்டு மக்களுக்கு நேரமும் இல்லை –
விழிப்புணர்வும் இல்லை – இல்லை – இல்லவே இல்லையே …..!!!

—————————————————————-

மறதி…. மக்களின் மறதி தான் அரசியல்வாதிகளின் மூலதனம். மக்களின் மறதியையும், அறியாமையையும் அடிப்படையாக வைத்துக் கொண்டே தொடர்ந்து பயணிக்கிறார்கள்
இந்த அரசியல்வாதிகள்…
இது 2014 டிசம்பரில், இதே தளத்தில் வெளிவந்த இடுகை ….

( https://vimarisanam.wordpress.com/2014/12/25/ )

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to அரசியல்வாதிகளின் முறைகேடான விமான பயணங்கள் – மக்களை ஏமாற்றுவது எப்படி …?

 1. selvarajan சொல்கிறார்:

  இது தொடர்பான மேலும் இரண்டு இடுக்கைகள் // கட்சிகளுக்கு – கம்பெனிகள் கொடுப்பது “டொனேஷனா ? ” அல்லது “அட்வான்ஸ் லஞ்சமா ?”Posted on மார்ச் 12, 2015 by vimarisanam – kavirimainthan …..// என்ற இடுக்கையில் ஒவ்வொரு கட்சியும் பெற்ற ” டொனேஷன் ” பற்றியும் // 2012-13-ல் பாஜக பெற்ற தொகை – 83.19 கோடி.
  2013-14-ல் அதே பாஜக பெற்ற தொகை – 170.86 கோடி…!
  2012-13-ல் காங்கிரஸ் பெற்ற தொகை – 11.72 கோடி.
  2013-14-ல் -ல் அதே காங்கிரஸ் பெற்ற தொகை – 59.58 கோடிகள்..!!
  பொதுத் தேர்தல் நெருங்க நெருங்க – பாஜகவின் மீது
  எதிர்பார்ப்பு அதிகரிக்க அதிகரிக்க – பாஜக விற்கு கிடைத்த
  “டொனேஷன்”களும் அதிகரித்துள்ளது தெரிய வருகிறது …!!!பாஜக விற்கு கிடைத்த மொத்த ‘டொனேஷனில்’
  92 % பெரிய பெரிய கார்பொரேட் நிறுவனங்களிலிருந்து
  கிடைத்திருக்கிறது.
  பெரிய அளவில் டொனேஷன் கொடுத்த சில நிறுவனங்கள் –
  Bharti Group’s Satya Electoral Trust – of Rs.41.37 crore.
  Sterlite Industries India Ltd. – Rs.15 crore.
  Cairn India Ltd – Rs.7.5 crore.
  இதில் குறிப்பிடத்தக்க விஷயம் – இந்த கம்பெனிகளில் எதுவுமே,
  இதற்கு முந்திய 2012-13 – வருடத்தில் பாஜக விற்கு டொனேஷன்
  எதுவுமே கொடுக்கவில்லை….!!!* // இப்போது 2014 — 2015 — 2016 – ஆண்டுகளில் இன்னும் அதிகமாகி இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை — அது போக இதையெல்லாம் செம்மை படுத்த அமைக்க பட்ட சட்டக் கமிஷன் வழங்கிய பரிந்துரைகளை,பற்றி அடுத்து ஒரு இடுக்கை //யானைப் பசிக்கு சோளப்பொரி ….. (பகுதி-2 – கம்பெனிகள் கொடுப்பது …..)
  Posted on மார்ச் 14, 2015 by vimarisanam – kavirimainthan // என்கிற இரண்டு இடுக்கைகளிலும் ” மேலதிக தகவல்கள் ” நிரம்பி வழிகின்றன — அதில் முத்தாய்ப்பா அய்யா … அவர்கள் அன்று முடித்த வார்த்தைகள்— // ஊதுகிற சங்கை ஊதி வைப்போம்…..
  என்றாவது ஒரு நாள் விடியாமலா போகும் …?
  நீங்கள் என்ன சொல்கிறீர்கள் நண்பர்களே …? // என்பது — நம்நாட்டில் சங்கு மட்டும் ஊதிக்கொண்டே இருக்கிறது — விடியுமா… ? எப்பொது … ? பொறுப்பற்ற கட்சிகளின் ” அபிமான ” மக்கள் — திருந்தும் போதாவது நடக்குமா … ?

 2. CHANDRAA சொல்கிறார்:

  K M JI today morning mr prakash javdekar had thrown an allegationagainst jeya govt
  that jeya govt just spends three rupees and that the central
  govt spends THIRTY TWO RUPEES to enable
  jeya govt offer one kilo of free rice to tamil nadu people……..
  It remains a mystrey why tamilzhisai akka
  pon raa and his team including the ever alert
  ela ganesan ji could not find out this truth
  I am sure that DGP INTELLIGENCE
  TAMILNADU would have submitted
  a report on jeyajis table by this time……regarding mr
  prakashs press interview

 3. sivakumar சொல்கிறார்:

  Dear JJ supporters,
  Forget all other allegations about JJ by the other politicians, which you all decide to ignore. Mr.Pa.Ragavan is a writer and criticizes all, leaves nobody in this column he is writing in dinamalar. In the below article he has asked very reasonable & valid questions. They are the thoughts many of the neutral people have. Any explanations?
  http://www.writerpara.com/paper/?p=10806.

  • ராகவேந்திரா சொல்கிறார்:

   Dear Karunanithi supporter,

   This one is enough for the present –

   //இந்த வாரம் முழுக்க அதிமுகவை மட்டுமே அலசிக்
   காயப்போடவேண்டும் என்று நினைத்துக்கொண்டுதான்
   ஆரம்பித்தேன். //

   http://www.writerpara.com/paper/?p=10802

 4. LVISS சொல்கிறார்:

  Traveling by planes, helicopters by political leaders are all things that happen in our country —Donations are allowed –As long as this stays donations cannot be stopped — Politicians cannot own these private jets — so they hire from private operators which are owned by rich people like Ambani Tata etc — Upto the level permitted these expenses will be shown under elections expenses —

  • ராகவேந்திரா சொல்கிறார்:

   what you want to say gentleman ?
   You want to justify their actions ?

   • ravi சொல்கிறார்:

    இந்த விஷயங்கள்படி பார்த்தால், இந்தியாவில் எந்த தேசிய கட்சி மற்றும் மாநில கட்சியும் தேறாது ..
    இந்தியாவில் காம்ரேடுகளுக்கு மட்டும் தான் ஒட்டு போட முடியும் போல …

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.