அரசியலில் சினிமா கலைஞர்கள் – திரு.ஜெயமோகன் சொல்வது சரியா…?

touring talkies-2

திரு.ஜெயமோகன் திரைப்பட கலைஞர்கள் அரசியலில்
ஈடுபடுவது பற்றி தனது கருத்துக்களை ஒரு கட்டுரையில்
விவரமாக எழுதி இருக்கிறார். விவாதிக்கப்பட வேண்டிய
செய்திகள் அதில் நிறைய உண்டு.

முதலில் ” நடிகர் நாடாளும் போது…” என்கிற தலைப்பிலான
ஜெயமோகன் அவர்களின் கட்டுரை – பின்னர் அதன் மீதான
நமது கருத்துக்கள்.

—————————————————-

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்தை பற்றியும் பிற
மாநிலத்தவருக்கு ஒருவகையான புரிதல் இருக்கிறது.
அது பெரும்பாலும் தவறான புரிதல் என்பதில் சந்தேகமில்லை.
தங்களை ஓர் உயர்ந்த பீடத்தில் அமர்த்தி, பிறரை குனிந்து
பார்க்கும் பார்வைதான் அது. ஒருமுறை கேரளத்தில்,
ஒரு பல்கலைக்கழக விவாதத்தில், அரசியல் துறை
பேராசிரியர் எழுந்து,

“தமிழகத்தின் அரசியல் களத்தில் சினிமா நடிகர்களுக்கு
இருக்கும் மிதமிஞ்சிய செல்வாக்குக்கு என்ன காரணம்?”
என்று கேட்டார்.

நான், “தமிழகத்தின் அரசியல் களத்தில் மிதமிஞ்சிய
செல்வாக்கில் இருக்கும் நடிகர்களின் பெயர்களை வரிசையாக

சொல்லுங்கள்,” என்றேன். ”இல்லை, தமிழகத்தின் அரசியலை
சினிமாதான் தீர்மானிக்கிறது,” என்று அவர் சொன்னார்.
”தமிழக சினிமாவிலிருந்து அரசியலை தீர்மானித்தவர்களின்
ஒரு பட்டியலைச் சொல்லுங்கள்,” என்று திரும்பவும் கேட்டேன்.

“எம்.ஜி.ஆர்” என்றார். “சரி” என்றேன். சற்று சிந்தித்துவிட்டு,
”கருணாநிதி” என்றார். அதன்பிறகு, ”ஜெயலலிதா” என்றார்
கடைசியாக, ”விஜயகாந்த்” என்றார்.

நான் சொன்னேன், “தமிழக அரசியலையே சினிமா தீர்மானிக்கிறது
என்று சொல்லிவிட்டு நான்கே நான்கு பெயர்களை தான் உங்களால்
சொல்ல முடிகிறது. கேரள அரசியலிலும் நாலைந்து நடிகர்களின்
பெயர்களை நான் சொல்ல முடியும்,” நான் மேற்கொண்டு விளக்க
ஆரம்பித்தேன்.

எம்.ஜி.ஆர்., கருணாநிதி இருவரும் சினிமாவை தங்கள் ஊடகமாக கொண்ட அரசியல்வாதிகள். அரசியலின் ஒரு பகுதியாகத்தான் அவர்கள் சினிமாவைக் கையாண்டார்கள். எம்.ஜி.ஆரோ கருணாநிதியோ ஒருபோதும் வெறும் சினிமாக்காரர்களாக தங்களை முன் நிறுத்திக் கொண்டவர்கள் அல்ல.

ஜெயலலிதாவை பொறுத்தவரை அவர் எந்த அரசியல்
இயக்கத்தையும் தொடங்கி நடத்தி வெற்றி பெற்றவர் அல்ல.
எம்.ஜி.ஆருக்கு அணுக்கமானவர் என்ற அடையாளத்துடன்
அ.தி.மு.க.,வின் தலைமைப் பொறுப்புக்கு அவர் வந்தார்.
அப்படிப் பார்த்தால் சீனாவின் புரட்சியாளராகிய மா சே துங்குக்கு
பிறகு அவரது காதலியாகிய ஜியாங் க்விங் (Jiang Qing)
என்ற நடிகை, சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை
பதவிக்கு வந்திருக்கிறார். அமெரிக்காவில் ரொனால்ட் ரீகன்
அதிபராக பத்து வருடம் இருந்திருக்கிறார்.

விஜயகாந்த் அரசியலுக்கு வந்தாலும் மிகக்குறைவான
செல்வாக்கை தான் தமிழக அரசியலில் அவரால் உருவாக்க
முடிந்திருக்கிறது. அதற்கு அவருக்கு இருக்கும்
தெலுங்கு ஜாதிப் பின்புலம் ஒரு காரணம்.

மற்றபடி தமிழக சினிமாவில் ஓங்கி உயர்ந்து நின்ற பல
ஆளுமைகள் அரசியலில் வெற்றி பெற்றதில்லை.சிவாஜி கணேசன்,
எஸ்.எஸ்.ராஜேந்திரன், பாக்யராஜ், டி.ராஜேந்தர் தொடங்கி என்று
ஒரு நீண்ட பட்டியலையே சொல்லலாம். வடமாநிலங்களில்
சினிமா நடிகர்கள் அரசியலில் குறைவாகவே வெற்றி பெற்றார்கள்.
அதற்கான காரணத்தை வடமாநிலங்களில் நீங்கள் பயணம் செய்தால் அறியலாம்.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில், சாதாரண மக்கள் அனைவரையும் சென்றடையும் ஊடகமென்பது தொலைக்காட்சிதான். ஆகவே, தொலைக்காட்சி நட்சத்திரங்கள் அரசியலில் வெல்கிறார்கள். சிறந்த உதாரணம் இன்று கல்வி அமைச்சராக இருக்கும் ஸ்மிரிதி இரானி.

தமிழகம் திரைப்படத்துக்கு பின்னால் ஓடுகிறது என்பது உண்மை.
ஆனால், திரைப்படக்காரர்கள் அனைவரையும் அரசியலுக்குத்
தமிழர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது பொய்.
உத்திர பிரதேசம் போன்ற பகுதிகளில் திரையரங்குகளே
மிகக்குறைவு. நகரங்களில் மட்டும்தான் சினிமாவே உள்ளது.

சினிமாப் பாடல்களைக் கூட இன்றும் நாட்டுப்புறங்களில்
அதிகமாக கேட்க முடியாது. நாட்டுப்புற இசைதான் எங்கும்
ஒலிக்கும். ஒட்டுமொத்தமாக வடமாநிலங்களில், இந்தி சினிமா
சென்றடையும் பகுதிகள் மிகக் குறைவானவை.
அங்கேஇவ்வாறு விளக்கியபின் மேலதிகமாக ஒன்றை சேர்த்துச்
சொன்னேன். அரசியல்வாதிகள் சினிமா ஒரு படி கீழானது என்று
சொல்லும் எந்த தகுதியும் அற்றவர்கள்.

ஒரு சினிமா நடிகர் உண்மையான அரசியல் ஈடுபாடும்,
மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கமும்
கொண்டிருந்தார் என்றால் மற்றவர்களை விட அவர் சிறந்த
அரசியல்வாதி தான். ஏனென்றால், பிற அத்தனை
அரசியல்வாதிகளும் சாதியுடனும் மதத்துடனும்
சம்பந்தப்பட்டவர்கள். அந்த வட்டத்தைச் சாராத பிறரால்
அவர்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டார்கள்.
நடிகர்கள் எப்படியோ சாதி, மத அடையாளத்துக்கு அப்பால்
இருப்பவர்களாக இருப்பதனால் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்
தலைவர்களாக இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர்., ஒரு சிறந்த உதாரணம்.

மேலும் சிறந்த உதாரணம், என்.டி.ராமராவ். எண்பதுகளில் நான்
ஆந்திராவில் பயணம் செய்தபோது ஆந்திரா வறுமை வாய்ப்பட்டு,
100 ஆண்டுகளுக்குப் பின்னால் துாங்கிக் கிடப்பதாகத் தோன்றியது.

சுதந்திரம் கிடைத்த காலத்திலிருந்து அங்கு காங்கிரஸ்தான்
ஆட்சியில் இருந்தது. மாநில முதல்வர்களை காங்கிரசின் மத்திய
தலைமை தீர்மானித்தது. மத்திய தலைமைக்கு நெருக்கமாக
இருக்கும் சுருக்கெழுத்தாளர்களோ, அந்தரங்கச் செயலர்களோ
ஆந்திராவின் முதல்வர்களை துாக்கியடித்தார்கள். ஆகவே,
ஆந்திர முதல்வராக அமர்ந்தவர்கள் ஆந்திராவுக்கு எதுவுமே
செய்ய நினைக்கவில்லை. மத்திய தலைமையை மகிழ்விப்பதில்
மட்டும் தான் குறியாக இருந்தார்கள். இது தான் ஆந்திராவை
தேங்கி அழிய வைத்தது.

அச்சூழலில் தான் அங்கு என்.டி.ராமராவ் ஆட்சிக்கு வந்தார். ஆந்திர முதல்வராக இருந்தஅஞ்சய்யா என்பவரை, 1982ல்
காங்கிரஸ் பொது செயலர் ராஜீவ் காந்தி விமான நிலையம்
ஒன்றில் பொதுமக்கள் முன்னிலையில் கன்னத்தில் அறைந்தார்.
அந்தச் செய்தி ஆந்திராவில் உருவாக்கிய அவமான உணர்வுதான்
என்.டி.ஆரை ஓர் அரசியல் சக்தியாக மாற்றியது.தெலுங்குதேசம்
அவர் ஆரம்பித்த கட்சி. அது ஆந்திராவுக்கு மிகப்பெரிய புத்துணர்வு
உருவாகியது.

அவர் நினைத்தால் வட்டார உணர்வுகளைத் துாண்டியிருக்கலாம்.
ஆந்திராவில் பெரிய பொருளாதார சக்தியாக உள்ள தமிழர்களுக்கு
எதிரான கசப்புகளை வளர்த்திருக்கலாம். எதையும் அவர்
செய்யவில்லை. தமிழர்களை நண்பர்கள் என்றே சொன்னார்.
தேசிய நோக்கையே முன்வைத்தார். ஆனால், ஆந்திரா என்னும்
தன்மதிப்பை அங்குள்ளவர்களிடம் உருவாக்கினார்.இன்று
ஆந்திராவுக்கு செல்லும்போது துாங்கிக் கொண்டிருந்த
ஒரு பூதம் கண் விழித்து எழுந்தது போல பிரமிப்பு எழுகிறது.

என்.டி.ராமராவின் சாதனைகள் இரண்டு. ஒன்று, நெடுங்காலமாக ஆந்திராவை ஆட்டிவைத்த இடதுசாரி தீவிரவாதிகளின் வன்முறையை அவர் தீர்த்து வைத்தார்.
இரண்டு, தெலுங்கு கங்கா என்ற மாபெரும் பாசனத் திட்டம்
வழியாக ராயலசீமா என்ற வறண்ட பகுதிக்கு நீர்வசதி செய்து
கொடுத்தார். அவ்விரு செயல்களாலும் ஆந்திரா மிகப்பெரிய
அளவில் பொருளாதார வளர்ச்சி அடைந்து இன்று இந்தியாவின்
மிகப்பெரிய சக்தியாக மாறி உள்ளது.

இன்று தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆந்திர மாணவர்கள்
முதலிடம் வகிக்கிறார்கள். விவசாய உற்பத்தியில், தொழில்,
மின்சார உற்பத்தியில் ஆந்திரா முதலிடம் வசிக்கும் மாநிலமாக
மாறிக் கொண்டிருக்கிறது. இவை அனைத்திற்கும் வழி வகுத்தவர்
ஒரு நடிகர். அரசியல்வாதிகளின் எந்த எதிர்மறை அம்சமும்
இல்லாதவர். முழுக்க முழுக்க மக்களை நம்பியவர்.
மக்கள் முன் அவர் நடித்தார் என்பதில் ஐயமில்லை.
ஆனால், மக்கள் வாழ்க்கையை மலரச்செய்தார்.

என்.டி.ஆர்., நடிகர் என்பதாலேயே அவர் ஆண்ட காலம் முழுக்க
இந்தியாவில் உள்ள ஆங்கில ஊடகங்களில் ஒரு கோமாளியாக
அவர் சித்தரிக்கப்பட்டார். அறிவுஜீவிகளால் கேலி செய்யப்பட்டார். ஆனால் அவரளவுக்கு ஒரு மாநிலத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பாற்றிய அரசியல்வாதிகள்
இந்தியாவில் குறைவே.

அப்படியென்றால் நடிகர்களை குறை சொல்வதற்கு
பத்திரிகையாளர்களுக்கு, அரசியல்வாதிகளுக்கு ஏதேனும்
தகுதியிருக்கிறதா? நடிகர்கள் தங்கள் புகழை அரசியலுக்கு
செலவிட்டு பணமும் அதிகாரமும் அடைவது கீழ்மையானதுதான்.
ஆனால், தனக்கிருக்கும் செல்வாக்கைக் கொண்டு ஜனநாயகத் தேர்தல் அரசியலில் ஈடுபட்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று ஒரு நடிகர் முன்வந்தால்
அனைத்து வகையிலும் அது வரவேற்கத்தக்கதே.

——————

பின் குறிப்பு –

நண்பர்கள் எவ்வளவு பேர் இந்த கருத்தை
அப்படியே ஏற்றுக் கொள்வீர்கள்….?

முக்கியமாக – நமது கடந்தகால மற்றும் நிகழ்கால
அனுபவங்களுடன் சேர்த்து பார்க்கும்போது….?

சினிமா நடிகர் என்கிற ஒரு கவர்ச்சியையும்,
அவருக்குப் பின்னால், ஒரு 7-8 சதவீத ரசிகர் கூட்டத்தின்
ஓட்டு இருக்கிறது என்பதையும் தவிர,
வேறு எந்தவித தகுதியும் இல்லாத,
மகா அருவருப்பான நடத்தைகளையுடைய ஒருவரை –
தங்களின் தலைவனாக திருவாளர்கள் வைகோவும்
திருமாவும் ஏற்றுக் கொள்ளும் அவல நிலையை
பார்த்த பிறகும் – நம்மால் ஜெயமோகனின் இந்த கருத்தை
அப்படியே ஏற்றுக் கொள்ள முடியுமா….?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to அரசியலில் சினிமா கலைஞர்கள் – திரு.ஜெயமோகன் சொல்வது சரியா…?

 1. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  ‘நீங்கள் விஜயகாந்தைத் தலைவராக ம.ந.கூ ஏற்றுக்கொண்டதைப் பற்றி ஆச்சர்யப்படுகிறீர்கள். வாக்குவங்கி அரசியலில், கவர்ச்சி உள்ளவர்களும், வாக்கு வங்கி உள்ளவர்களும்தான் தலைவர்கள். மக்கள் எள்ளி நகையாடமாட்டார்கள் என்ற தெம்பு வந்தால், குஷ்புவையோ, நக்மாவையோ தங்கள் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தத் தயங்கமாட்டார்கள். இது காங்கிரஸுக்கும் பொருந்தும். அதனால்தான் அரசியலில், ஜெயப்ரதாவும், நக்மாவும், குஷ்புவும், குத்து ரம்யாவும், ரோஜாவும் இன்னும் பலரும் ஒளிர முடிகிறது.

  சாதாரண மக்கள், திரைப்பட ஆளுமைகளால் கவரப்படுகிறார்கள். ரசிகர்கள், நிதானமில்லாமல் தங்கள் திரைப்பட ஆளுமைகளை ஆராதிக்கிறார்கள். குஷ்புக்குக் கோவில் கட்டினதும், நடிகர்களின் கட் அவுட்டுக்குப் பாலாபிஷேகம் செய்வதும் தமிழர்கள்தான். நல்லவர்களைப் புறக்கணித்ததும் தமிழர்கள்தான். அதனால்தான் சினிமாக் கவர்ச்சியில் மக்கள் மதிமயங்குகிறார்கள் என்ற தோற்றம் தமிழ்னாட்டைப் பற்றி இருக்கிறது.

  கருணானிதி சினிமாக் கவர்ச்சியினால் பெரிய ஆளாக ஆனதில்லை. எம்ஜியார் சினிமாவின் மூலம்தான் தன் ஆதரவாளர்களைப் பெற்றார். ஜெ. எம்ஜியாரின்மீது பற்றுக்கொண்டவர்களால், அவர் கட்சி என்ற எண்ணத்திலும் ஆரம்பகாலத்தில் மக்கள் ஆதரவைப் பெற்றார். இப்போதிருக்கும் ஜெ. அவரின் செயல்களால்தான் ஆதரவோ எதிர்ப்பையோ பெறுகிறார். என்.டி.ஆர் சில குறிப்பிடத்தக்க செயல்களைச் செய்திருந்தாலும், சந்திரபாபு நாயுடு ஆந்திராவின் வளர்ச்சிக்குச் செயலாற்றியிருக்கிறார். அவர் தகவல் தொழில்’நுட்பத் துறையில் காண்பித்த வேகத்தை, விவசாயத்தில் காண்பிக்க வில்லை.

  தகுதி என்று பார்த்தால், நம் அரசியலில் உள்ள 99% பேர் (தலைவர்களானாலும், பொறுப்பில் உள்ளவர்களானாலும்) தகுதியற்றவர்கள். இவர்களே ஆட்சி செய்வதாகக் காட்சி செய்யும்போது, ரசிகக் குஞ்சுகள் இருக்கும் நாம் ஆட்சி செய்ய முடியாதா என்று திரைப்பட உலகைச் சார்ந்த விஜய்க்கோ, விஜயகாந்திற்கோ வருவதில் ஆச்சர்யமில்லை. இதில் நுழையாமல் தப்பித்தவர்கள் அஜித்தும் ரஜினியும்தான்.

 2. selvarajan சொல்கிறார்:

  // எத்தனையோ வள்ளல்களைப் பற்றி நாம் படித்திருக்கிறோம்,
  கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், நம் காலத்திலேயே
  வாழ்ந்த ஒரு நிஜமான வள்ளல் எம்.ஜி.ஆர். மட்டுமே.

  தான் சம்பாதித்த அத்தனை பணத்தையும், மற்றவர்களுக்காகவே
  செலவழித்த, இவரைப்போன்ற இன்னொரு மனிதரை
  என் வாழ்வில் நான் காணவில்லை. // …. அய்யா … இது தாங்கள் கூறியது — மார்ச் 27, 2016 அன்று பதிவிட்ட இடுக்கையில் — திரு எம்.ஜி.ஆர் . அரசியலில் பல ஆண்டுகளாக காங்கிரசிலும் — பின் தி.மு.க.விலும் இணைந்து செயல்பட்டு — தன் சொந்த உழைப்பில் வந்த வருமானத்தை செலவு செய்து படிப்படியாக பயிற்சி பெற்று — எம்.எல்.ஏ .. மற்றும் கட்சியின் பொருளாளர் போன்ற பதவிகளை பெற்று — கட்சியில் இருந்து ” கணக்கு கேட்ட ” ஒரே காரணத்திற்காக கலைஞர் அவர்களால் வெளியேற்றப்பட்டு — பின் கட்சி தொடங்கி — ” தன் குடும்பத்தை சேர்ந்தவர்களை ” எந்த இடத்திலும் முன்னிலை படுத்தாமல் — மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்று “முதல்வர் ” ஆனவர் — ஆனால் விஜயகாந்த் : ஏதோ கட்சி ஆரம்பித்து — மனைவி — மச்சான் போன்றவர்களை முன்னிறுத்தி பேரம் பேசும் ” வியாபாரிகள் ” ஆக்கி — காசு மற்றும் முதல்வர் என்கிற வெறியுடன் அரசியல் நடத்தும் இவரை — திரு எம்.ஜி.ஆர் .— என்.டி. ஆர் . போன்றவர்களோடு ஒப்பிடுவது —– ??? இன்றைய ” சிரிப்பு தேர்தல் அறிக்கை ” செய்தி ஒன்று : — // நல்லி, போத்தீஸ் கடைகள் “பிராஞ்ச்” துவங்க “லைசென்ஸ்” தரும் தேமுதிக.. வேடிக்கை வினோத தேர்தல் அறிக்கை!!
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/tamil-nadu-polls-2016-dmdk-s-bizarre-poll-promises-surprise-251630.html … // எல்லாம் ” தமிழனின் தலைஎழுத்து ” …. !!!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   உங்கள் தகவலுக்கு நன்றி.
   உங்கள் உபயத்தில் இன்னொரு இடுகை
   தயாராகிக் கொண்டிருக்கிறது….

   தலைப்பு –
   ” 2016-ஆம் ஆண்டின் மிகச்சிறந்த காமெடி …..
   ( இப்போதைக்கு மே 19ந்தேதி வரை தான் இது )
   இனி, இதை விட பெரிதும் வரலாம்…!!! ”

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. LVISS சொல்கிறார்:

  Bollywood–For some reasons the BWood actors dont take much interest in politics-
  Tolywood–Only NTR succeeded — Chiranjeevi is now i an alliance –
  Mollywood–An attempt was made by one actor to enter politics in a big way but was nipped in the bud –In this election some actors are being fielded by different parties — But by themselves they dont lead any party –
  Kollywood –This gave more leaders than any other woods —the actors think that fan club vote is enough to become a big leader –The only party which has kept away from stars is PMK —

 4. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  Actor legend SIVAJI GANESAN was unable to shine in politics?He was not properly recognised by Indira congress .He lost lot of money in forming his own party.As per his strong advise to Mr Rajini,super star,is avoiding politics.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.