2016-ஆம் ஆண்டின் மிகச்சிறந்த காமெடி ….. ( இப்போதைக்கு – மே 19ந்தேதி வரை தான் இது ) இனி, இதை விட பெரிதும் வரலாம்…!!!

vaiko -van

காசு செலவில்லாமல் காமெடி சீன் பார்க்க வேண்டுமென்றால்
ஒன்று திரு.விஜய்காந்த் அவர்களின் தேர்தல் கூட்டத்திற்கு
போக வேண்டும்… அல்லது

திகைக்காதீர்கள் – திரு.வைகோ அவர்களின் கூட்டத்திற்கு
போக வேண்டும்…

ஆம் -விஜய்காந்திற்கு சற்றும் குறைவு இல்லை வைகோ…
சில வித்தியாசங்கள் மட்டும் உண்டு….
style , presentation தான் மாறுபடுகிறது.

முதலில் வைகோ அவர்களைச் சொல்லி விட்டு பிறகு
மற்றதற்கு போகலாமே…
ஞாயிறு அன்று, அண்ணா நகரில் வேனில் பிரச்சாரம்.
( வழக்கம் போல் ) கருப்புக் கண்ணாடி….
சாவு வீட்டிலேயே கருப்பு கண்ணாடி போடுபவர், பட்டப்பகல்
12 மணிக்கு விடுவாரா…?
தலையில் புதிதாக பச்சை கலரில் தலைப்பா கட்டு…!!!
( தேர்தல் முடியும் வரை விவசாயிகளின் நினைவாகவாம்….!!!)

நடுத்தெரு – வேனைச் சுற்றி 70-80 பேர் இருந்தார்கள்…
நீண்ட நேரமாக -அந்த வெய்யிலில்
(15-20 நிமிடம் நீண்ட நேரம் தானே ) – பேசிக்கொண்டிருந்தார்.

திடீரென்று பேச்சை நிறுத்தினார்.
வேனின் அருகே, கீழே பார்த்தார்…
அங்கே இரண்டு மூன்று பேர் நின்றுகொண்டு தங்களுக்குள்
ஏதோ சொல்லிக் கொண்டிருந்தனர்…

வைகோ, கையில் மைக்கை வைத்துக் கொண்டெ,
குனிந்து அவர்களைப் பார்த்து கூறுகிறார் –

” நீங்க பேசணுமா – நான் பேசணுமா ?
நீங்க பேசித்தான் ஆகணும்னா சொல்லுங்க –
நான் பேச்சை நிறுத்திக்கறேன்…”

திகைத்துப் போன அவர்கள் சிரித்துக் கொள்கின்றனர்.
வைகோ தொடர்கிறார் -(மைக்கிலேயே)
“நீங்க எந்த கட்சி ..?”
(அவர்கள் சொல்கிறார்கள் ..)
“ஓ தேமுதிக வா…? சரி சரி …”
பேச்சைத் தொடரத் துவங்குகிறார்.
இருந்தும் தாங்கமாட்டாதவராக –

மீண்டும் குனிந்து “ஒங்க பழக்கத்தை எல்லாம்
மாத்திக்கணும் தம்பிங்களா…!!!”

———————————————

எல்லா கட்சியினரின் தேர்தல் அறிக்கைகளிலும்,
நம்ப முடியாத, நிறைவேற்றவே முடியாத,
முட்டாள்தனமான ( அல்லது நம்மை முட்டாளாக்கக்கூடிய )
சில வாக்குறுதிகள் இருக்கின்றன.

சில கட்சிகளில் அதிகம் – சிலவற்றில் குறைவு…!
தேமுதிக தேர்தல் அறிக்கை – பயங்கர காமெடி வெடி…!

படிக்கும்போதே நீங்களே உணர்ந்திருப்பீர்கள்…
அவற்றை தொகுத்து குறிப்பாக எழுத பொறுமையின்றி
விட்டு விட்டேன்.

இப்போது நண்பர் செல்வராஜன் பின்னூட்டத்தில்
எழுதிய பிறகு கவனித்தேன். அதை ஒரு செய்தி தளத்தில் –
வசதியாக தொகுத்து தந்திருக்கிறார்கள்…

நண்பர்கள் சிரித்து மகிழ கீழே –

——————————————–

நல்லி, போத்தீஸ் கடைகள் “பிராஞ்ச்” துவங்க
“லைசென்ஸ்” தரும் தேமுதிக..
வேடிக்கை வினோத தேர்தல் அறிக்கை!!

தேமுதிகவின் தேர்தல் அறிக்கையில் ஏகப்பட்ட ஐட்டங்கள்
இடம் பெற்றுள்ளன. ஆனால் அதில் நம்மைக் கவருவது
அதில் உள்ள விநோதமான வாக்குறுதிகள்தான்.
தேமுதிகவின் தேர்தல் அறிக்கையை எடுத்துப் புரட்டிப்
பார்த்தால் – சட்டசபையில் ஜெயலலிதா 110ன் கீழ் படித்த
அறிவிப்புகளை விட அதிகமான விஷயங்களை
போட்டு வைத்துள்ளதை அறிய முடியும்.

அதில் கூறப்பட்டுள்ள சில விஷயங்களைப் படித்தபோது
அடடா என்று சிரிப்புடன் கூடிய ஆச்சரியம் வருவதை
நம்மால் தவிர்க்க முடியாது. அப்படிப்பட்ட அறிவிப்புகளில் சில..

– பிறநாட்டு விவசாய முறைகளை கற்றுக்கொள்ள
வளர்ந்த நாடுகளுக்கு, ஒவ்வொரு ஆண்டும் 5000 விவசாயிகள்
அழைத்து செல்லப்படுவார்கள். ( இது பிராக்டிகலாக சாத்தியமா
என்று தெரியவில்லை)

பள்ளி, கல்லூரி மாணவர்கள்
மாவட்டத்தை விட்டு வேறு மாவட்டத்திற்கும்,
மாநிலத்தை விட்டு வேறு மாநிலத்திற்கும்,
சலுகை கட்டணத்தில் அழைத்து செல்லப்படுவார்கள்.
(இப்போதே டூர் போய்க் கொண்டுதான் இருக்கிறார்கள்)

தமிழகத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 45க்கும்,
டீசல் ரூ. 35 க்கும் விலை நிர்ணயம் செய்யப்படும்.
(விலை நிர்ணயத்தை மாநில அரசு செய்ய உரிமை இல்லையே!)

நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும்

சுங்கவரிகள் இனிமேல் பாதியாக குறைக்கப்படும்.
தேவைப்பட்டால் அந்த நிறுவனத்தை தேசிய மயமாக்குவோம்.
(இதுவும் மாநிலஅரசின் கட்டுப்பாட்டில் இல்லாதது)

தமிழகத்தில் அனைத்து தாலுகாவிலும் வணிகவளாகம்
தனியாருடன் இணைந்து உருவாக்கப்படும். அதில் 200 முதல்
500 கடைகள் வரை அமைக்கப்படும். அதை வாடகை
அல்லது சொந்தமாகவும் வாங்கிகொள்ளலாம்.
ஒவ்வொரு வளாகத்திலும் மூன்று முதல் ஐந்து திரையரங்குகள்

நிறுவப்படும். (கடை கட்டி வாடகைக்கு விட அரசு தேவையா.
இது அரசின் வேலையா?)

கூரியர் சேவை, தின்பண்டங்கள் தயாரித்தல்,
பிஸ்கட், ரொட்டி தயாரித்தல் உள்ளிட்டவற்றில் அரசு ஈடுபடும்.
(கூரியர் சேவையை நடத்த ஒரு அரசு தேவையா)

நல்லி, போத்தீஸ் போன்ற ஜவுளி கடைகளுக்கு
பிற மாநிலங்களில், பிற நாடுகளில் விற்பனை செய்யும்
உரிமம் வழங்கப்படும் (அவங்க துணி விக்கிறதுக்கு இதுக்கு
எதுக்கு அரசு லைசன்ஸ்…?)

(http://tamil.oneindia.com/news/tamilnadu/tamil
-nadu-polls-2016-dmdk-s-bizarre-poll-promises-
surprise-251630.html )

—————————————–

பின் குறிப்பு –

கொஞ்சம் யோசித்தால் –
திருவாளர்கள் வைகோ, திருமா, முத்தரசு, ராமகிருஷ்ணன்,
ஜிகே வாசன் – ஆகியோர் மீது IPC section 420 -யின் கீழ்,
ஒரு புகார் மனு கொடுத்து, பொதுநலவழக்கு பதியலாமா என்று
தோன்றுகிறது…
உலக மகா ஃப்ராடு வாக்குறுதிகளை கொடுக்கும்
திரு.விஜய்காந்த் அவர்களை இவர்கள் தானே,
ஏமாற்று வேலை என்று தெரிந்தும் –
sponsor செய்து promote-உம் செய்கிறார்கள்…?

Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2016-ஆம் ஆண்டின் மிகச்சிறந்த காமெடி ….. ( இப்போதைக்கு – மே 19ந்தேதி வரை தான் இது ) இனி, இதை விட பெரிதும் வரலாம்…!!! க்கு 6 பதில்கள்

  1. R.Gopalakrishnan சொல்கிறார்:

    Does the DMDK know the 6 fundamental rights and the duties of the constitution given to every citizen of our country? I have seen this comedy promises in TOI dt.,19-4-16. We are silently
    observing this till 16-5-16. Every 6th or 7th std stdudent knows. this rights & duties.

    .
    ur

  2. CHANDRAA சொல்கிறார்:

    One can include stalin also along with vaiko v kanth
    he promises everything under the sky
    his artificial dramatic expressions during his election meetings
    create an unpleasantness…..
    he often raises the same question whether
    c mhad ever visited this place
    All know how he had functioned as deputy cm
    he never visited southern dts
    fearing his brother alagiri
    We should pray that dmk is once for all be removed from 2016…….

  3. ரா..பழனிக்குமார் சொல்கிறார்:

    எம்.ஜி.ஆர்.இப்படித்தான் தபால் கார்டு விலையை குறைப்பேன் என்று சொல்லி வைத்தார்..நல்ல வேலை அவர் மீது யாரும் 420 என்று வழக்கு போடவில்லை..

  4. selvarajan சொல்கிறார்:

    போத்திஸ் விளம்பரத்தில் ” பணத்துக்காக ” கமலஹாசன் விட்டாரே ஒரு டயலாக் ” அபிமானம் … மக்களோட அபிமானம் என்றும் — அவுங்களோட சின்ன சின்ன சந்தோஷத்திற்காக என்றும் — அவுங்க எதிர்பாக்கறத விட அதிகமா குடுத்து … மகிழ்ச்சிக்கு ஒருபடிமேல போய் குதுக்கலாமூட்டும் போது … அவுங்க மனசுல வருமே … என்றும் கூறுவாரே அதை நினைத்து விஜயகாந்த் இந்த ” தேர்தல் அறிக்கையில் ” போத்தீஸ் பிளஸ் நல்லியையும் சேர்த்து நம்மை சிரிப்பு மூட்டி — மகிழ்ச்சி கடலில் திக்கு முக்காட வைத்து விட்டார் — அப்படி தானே … ? — அடுத்து ” கலைஞர் ” மகிழ்ச்சியில் திளைக்க ஒரு செய்தி :— // தமிழக அரசின் ஜாபர்சேட் சஸ்பெண்ட் உத்தரவை அதிரடியாக ரத்து செய்தது மத்திய நிர்வாக தீர்ப்பாயம்!!
    Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/cat-revokes-jaffar-sait-s-suspension-251609.html …. // ….என்னமோ நடக்குது — மர்மமா இருக்குது — ஒண்ணுமே புரியல — இந்தியாவுல …. ?

  5. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

    கா மை சார்… இப்போதெல்லாம் 517 (ஆதித்யா), 512 (சிரிப்பொலி) ஆகியவற்றில் பழைய காமெடி வந்தாலோ, அல்லது புதிய தலைமுறை/தந்தி தொலைக்காட்சியில் சாதாரண வாதங்கள் நடைபெற்றாலோ, நான் நாடுவது 483 கேப்டன் தொலைக்காட்சி. அதில் பிரேமலதா அவர்களின் பேச்சு நல்லா எஞ்சாய் பண்ணலாம். ஒவ்வொரு இடத்திலும் அங்குள்ள பிரச்சனைகளைப் பட்டியலிட்டு, உடனே நாங்கள் நிறைவேற்றுவோம். இத்தனை காலம் யாரும் இதை நிறைவேற்றவில்லை என்றெல்லாம் சொல்லும்போது, நகைச்சுவைத் தொலைக்காட்சிக்குப் போட்டியாகவா, அல்லது கூடியிருக்கும் மக்களை மடையர்கள் என்று நினைப்பதாலா, இப்படி அள்ளிவிடுகிறார் என்று தோன்றும். கனிமொழி அந்தப் பக்கத்தில், திமுக ஆட்சிக்கு வந்தால், மதுத் தொழிற்சாலைகளை மூடிவிடுவதாக அதன் உரிமையாளர்கள் திமுகாவிடம் வாக்குக் கொடுத்துள்ளார்கள் என்று புளுகுகிறார். இன்னொருபக்கம், அன்புமணி அனைவருக்கும் கல்வி இலவசம் (பொறியியற் கல்வி முதற்கொண்டு) என்று சொல்லிக்கொண்டே, தன் கல்லூரிக்குப் பணம் வாங்கிக்கொண்டு அட்மிஷன் போடுகிறார். இதையெல்லாம் ஆராய்வது நமது இரத்த அழுத்தத்துக்குக் கேடு.

    இவர்களின் டார்கெட், பி & சி மக்கள். அவர்களுக்கு, எதை அரசாங்கம் செய்யமுடியும் எதைச் செய்ய முடியாது என்று யோசிக்கும் திறன் இருந்தால் நம்மிடம் ஏன் இத்தனை கட்சிகள் முளைக்கின்றன? ஐ.ஜெ.கே கட்சி எதற்கு ஆரம்பிக்கப்பட்டது, எங்கிருந்து சேனல் ஆரம்பிக்கும் பணம் வந்தது என்பதெல்லாம் யாருக்குத் தெரியும்?

  6. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

    All politicians are confusing the minds of people.Dharmathin vazhvuthanai sudhu kavvum neram ithu.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.