திருவாளர் ஜாபர் சேட் – அரசியல் – பதினொன்றும் செய்யும்…!!!

.

.

கொடுத்து வைத்த மனிதர்.
இவர் தப்பித்ததற்கு காரணம் என்ன …?
மிக அபூர்வமான காரணங்களாகத்தான் இருக்க வேண்டும்….!

வழக்கு தொடர முதலில் அனுமதி கொடுக்க மறுத்து
இழுத்தடித்தது மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு –
காரணம் – கூட்டணிக்கட்சியான திமுக கொடுத்த அழுத்தம்…!

பின்னர் இப்போது அதையே மத்திய பாஜக அரசும்
தொடர்ந்து செய்தது – அதற்கு காரணம்….?

உள்ளே போக வேண்டியவர்களை வெளியே விடுவதும் –
25 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளேயே இருப்பவர்களை
வெளியே விட மறுப்பதும்…..

நீதி செத்தாலும் பரவாயில்லை…
ஊழல்வாதி தப்பினாலும் பரவாயில்லை…
தன் ஈகோ தான் தனக்கு முக்கியம்..
என்று நினைக்கிறதா பாஜக அரசு…?

அல்லது வெளியே சொல்கிற மாதிரி
வேறு எதாவது காரணங்கள் எதாவதுண்டா … ?
இருந்தால் – சொன்னால் தானே தெரியும்…. …!
திருவாளர்கள் ஜவடேகர்ஜி, ப்யூஸ்ஜி –
ஆகியோர் தானே தமிழ்நாட்டிற்கு பொறுப்பு….
அடுத்த தடவை வரும்போது அவசியம் சொல்வார்கள்
என்று நம்புவோமா ….? அவர்கள் தவறினாலும்,
நமது செய்தியாளர்கள் நினைவுபடுத்த தவறக் கூடாது….

ஒரு அதிகாரி ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக சஸ்பெண்ட்
செய்யப்படுகிறார்… அவர் மீது நடவடிக்கை எடுக்க மத்திய
அரசின் அனுமதி தேவைப்படுகிறது.

மாநில அரசு, மத்திய அரசுக்கு சகல ஆதாரங்களையும்
இணைத்து, கடிதம் எழுதி, அனுமதி கேட்கிறது.
துவக்கத்தில் மத்தியில் இருந்தது
காங்கிரஸ் கூட்டணி ஆட்சி.
அந்த கூட்டணி கட்சிக்கு மிகவும் வேண்டப்பட்டவர்
இந்த அதிகாரி… எனவே, மாதங்கள் கடந்தாலும் –
மத்தியிலிருந்து சம்மதம் கிடைக்கவில்லை…..
காரணம் – நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது…!

தேர்தல் வருகிறது. மத்தியில் ஆட்சி மாறுகிறது.
பாஜக பொறுப்புக்கு வருகிறது.
இப்போதாவது அனுமதி வந்ததா ? இல்லை…..
ஏன் வரவில்லை….?

முன்பெல்லாம் “பணம் பத்தும் செய்யும்” என்பார்கள்.
இப்போது – என்ன காரணம் ….?
” அரசியல் ” – பதினொன்றும் செய்யும்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரிமீது உரிய காலத்தில்
மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாத காரணத்தால் –
ஊழியர் தீர்ப்பாயம் – அவரது பணி நீக்கத்தை ரத்து செய்கிறது…

மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

அவர்களால் வேறு என்ன செய்து விட முடியும்….
வாய்மூடி மௌனியாக வேடிக்கை பார்ப்பதை விட…?
என்று அதிகாரத்தில் இருப்பவர்கள் நினக்கலாம்….

—————-
இந்த வலைத்தளத்தில் வெளிவந்த முந்தைய இடுகை
ஒன்று கீழே மீண்டும் பதிப்பிக்கப்படுகிறது –
மறந்தவர்கள் நினைவுபடுத்திக் கொள்ள –

———————————————————–

.

கலைஞர் முதல்வராக இருந்தபோது, உச்சத்தில் இருந்த
போலீஸ் அதிகாரி பற்றி அநேகமாக எல்லாரும்
மறந்திருப்பார்கள்….

கலைஞருக்கு நெருக்கமாக இருந்து, பல விஷயங்களில் அவருக்கு
தனிப்பட்ட விஷயங்களில் உதவிசெய்து, அதன் பலனாக
தனக்கும் சட்டவிதிகளுக்கு அப்பாற்பட்டு சில பலன்களை அடைந்ததாகச் சொல்லப்பட்டவர்.

ஆட்சி மாறியதும், அவர் சில முறைகேடுகளுக்காக, தமிழ்நாடு
அரசால் தற்காலிகமாக பணிநீக்கம் ( சஸ்பெண்ட் ) செய்யப்பட்டார்.
அப்போது அவர் மீது சொல்லப்பட்ட
குற்றச்சாட்டுகள் – தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம்,
பொய்த்தகவல்களைக் கொடுத்து சில ப்ளாட்டுகளைப் பெற்றதும்,
பின்னர் தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றின் மூலம் வர்த்தக
உபயோகத்திற்காக கட்டிடங்கள் கட்டியதும் ….. என்று இப்படிப்போயிற்று

அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு – கிரிமினல் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் ஐபிஎஸ் அதிகாரி என்கிற முறையில், அவர் மீது நடவடிக்கைகள் எடுக்க, மத்திய அரசின் அனுமதி தேவைப்பட்டது.
கலைஞர் செல்வாக்கின் காரணமாக, முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு அனுமதி கொடுக்க மறுத்தது.

இந்த விஷயம் தொடர்ந்து மாநில-மத்திய அரசுகளுக்கிடையே தகவல் பரிமாற்றங்களில் இருந்து வந்தது.

புதிய பாஜக அரசு மத்தியில் பொறுப்பேற்று 11 மாதங்கள்
ஆன போதும், இன்னும் இதில் முன்னேற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. இன்னமும் மத்திய அரசிலிருந்து அனுமதி கிடைத்ததாகத் தெரியவில்லை…..!!!
(செல்வாக்கு தொடர்கிறது….? )

இப்போது திடீரென்று இதைப்பற்றி ஏன் – என்று கேட்கிறீர்களா

….?

இந்த புண்ணியவானின் அஜாக்கிரதை காரணமாக – மீண்டும் கலைஞர் குடும்பத்தில் ஒரு பெரிய பிரச்சினை உருவாகி இருக்கிறது.

உங்களில் பலருக்கு நினைவிருக்கலாம் –
2ஜி வழக்கில் – 200 கோடி பெற்றதான விஷயத்தில் கலைஞர் டிவி
சிக்கியபோது, அதைக்காப்பாற்ற பெரும் முயற்சிகள் செய்யப்பட்டன. இந்தப் பொறுப்பை ஏற்று, முன் நின்று நடத்தியவர் திரு சேட் அவர்கள்.

சென்ற வருடம் – பிப்ரவரி 2014ல், 2ஜி வழக்கில் கலைஞர்
டிவி சம்பந்தப்பட்ட ஆதாரங்களை அழிக்க, முந்தைய திமுக ஆட்சியில் உளவுத்துறை தலைவராக இருந்த ஜாபர் சேட்,
கலைஞரின் மகளும் திமுக எம்.பி.யுமான திருமதி கனிமொழி, கலைஞர் டிவியின் மேலாண் இயக்குநர் சரத்குமார்,
மற்றும் கலைஞர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன்
ஆகியோரோடு நடத்திய உரையாடல் விபரங்களை (ஒலி நாடாக்களை) மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் டெல்லியில்
வெளியிட்டார்.

அது சம்பந்தமான வழக்கு ஒன்றையும் சிபிஐ கோர்ட்டில் அவர்
தொடர்ந்தார். (இந்த ‘டேப்’ திரு.ஜாபர் சேட், தனது சுயபாதுகாப்பிற்காக, தானே பதிவு செய்து வைத்திருந்த டேப். இது, அஜாக்கிரதை காரணமாக பிறரிடம் சிக்கியதன்
விளைவு தான் இந்த வழக்கு ….)

பின்னர், நீண்ட காலம் அதைப்பற்றிய செய்திகள் எதுவும் வரவில்லை. இப்போது திடீரென்று, சிபிஐ கோர்ட் சார்பில்
கடந்த 20ந்தேதி, அதன் வழக்குரைஞர் திரு. கே.கே.வேணுகோபால்-
– 2ஜி வழக்கில் கலைஞர் டிவி தொடர்பான சில ஆவணங்களை
அழித்ததாகவும், போர்ஜரி கையெழுத்துக்களைப் போட்டதாகவும்,
பொய் ஆவணங்களைத் தயாரித்ததாகவும் – சில பேர் மீது
புதிதாக ஒரு வழக்கு தொடர 2ஜி வழக்குகளை மானிடர் செய்து வரும் சுப்ரீம் கோர்ட் பெஞ்சில் அனுமதி கோரி விண்ணப்பித்திருக்கிறார்.
வழக்கு 30ந்தேதி பரிசீலனைக்கு வருகிறது.

இதில் தற்போது மேற்கொண்டு விவரங்கள் எதுவும்
வெளியிடப்படவில்லை. என்றாலும், உரையாடல் நாடாவின் நம்பகத்தன்மை குறித்து சிபிஐ
அறிவுபூர்வமான ஆய்வுகளை நிகழ்த்தி, அவை உண்மை தான்
என்கிற முடிவிற்கு வந்ததாகவும் அதன் விளைவே இந்த புதிய வழக்கு என்றும் தெரிய வருகிறது.

சம்பந்தப்பட்டவர் யார் யார் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை
என்றாலும், உரையாடல் நாடாவில் சிக்கியுள்ளவர்கள் –
திரு.ஜாபர் சேட், திரு சரத்குமார், திருமதி கனிமொழி மற்றும்
கலைஞரின் உதவியாளர் சண்முகநாதன் ஆகியோர் என்பது
குறிப்பிடத்தக்கது.

.

( https://vimarisanam.wordpress.com/2015/04/24/ )

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to திருவாளர் ஜாபர் சேட் – அரசியல் – பதினொன்றும் செய்யும்…!!!

 1. CHANDRAA சொல்கிறார்:

  Probably jeyajis govt is concentrating more on MAKKAL NALATTTHITTANGAL
  rather than pursuing these cases
  meticulously
  On another occasion A SENIOR WOMAN POLICE OFFICER from this state was not given posting for a long time……..
  Immediately central govt had appointed that officer
  in the most coveted responsible post …….
  And now ponmudi had also been discharged…….

  • Narasimhan சொல்கிறார்:

   எனக்கு என்னவோ ஜேஜே அரசுக்கு அல்லது வழக்கு நடத்தும் நபர்க்களுக்கோ அவ்வளவு சமர்த்து போறாது என்று தோன்றுகிறது. இதே மஞ்சள்துண்டு ஆரம்பித்தால் அந்த விஷயத்தில் எவ்வள்ளவு வலை பின்னுவார் என்பது அனுபவித்தவர்களுக்குதான் தெரியும்.

 2. LVISS சொல்கிறார்:

  No need for any central minister to come and tell us why the center did not give sanction for prosecution- the reason is available in the link below —where do the ministry other than home ministry comes in here —
  http://timesofindia.indiatimes.com/city/chennai/Centre-denies-state-sanction-to-prosecute-suspended-IPS-officer/articleshow/27154129.cms

 3. LVISS சொல்கிறார்:

  Probably the NDA goes with the reason given by UPA govt —DMK is not in alliance with BJP and we know what the DMK thinks of BJP –They are against the BJP — Doesnt sound logical or makes sense —

  • B.Venkatasubramanian சொல்கிறார்:

   Was BJP elected only to continue
   all corrupt practices that were being done by UPA ?

   Then what our Friend Mr.TodayandmE says is
   absolutely right.

   //காங்கிரஸ் சும்மா பினாமிதான்
   பாஜக தான் சுனாமி.//

 4. today.and.me சொல்கிறார்:

  காங்கிரஸ் சும்மா பினாமிதான்
  பாஜக தான் சுனாமி.

 5. R.Gopalakrishnan சொல்கிறார்:

  We are watching every thing Mr.KM silently and wait for 16-5-16 and pray God to bless me to
  be alive till that date.

  • Sharron சொல்கிறார்:

   God Bless You brother and grant you excellent health.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கோபாலகிருஷ்ணன்,

   தாமதத்திற்கு மன்னிக்கவும். பயணத்தில் இருந்ததால்,
   உங்கள் பின்னூட்டத்தை இப்போது தான் பார்க்க முடிந்தது.

   93 வயதில், ஆறாவது முறையாக முதலமைச்சர் பதவி
   வகிப்பேன் என்று ஒரு இளைஞர் ஆரவமாக கூறும்போது,
   உங்களுக்கென்ன அவசரம்…?

   ஜாம் ஜாமென்று இன்னும் பல தேர்தல்களை
   நீங்கள் பார்ப்பீர்கள். இறைவன் அதை கவனித்துக் கொள்வான்.
   உங்களின் நல்ல உடல்நலத்திற்கும், நீண்ட ஆயுளுக்கும்
   நானும் வேண்டுவேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.