திரு. அன்புமணி ராமதாஸ் அவர்களின் அபத்தமான அறிக்கை …

.

.

தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசு ஊழியர்களை குறிவைத்து,
திரு.அன்புமணி ராமதாஸ் திடீரென்று, அபத்தங்களுக்கு
அடிகோலும் – ஒரு துணை தேர்தல்
அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

ஏழாவது சம்பள கமிஷன் தீர்ப்புகளை மத்திய அரசு
ஏற்றுக் கொண்டு நிறைவேற்றி விட்டது போல் ஒரு
மாயத்தோற்றத்தை அந்த அறிக்கையின் மூலம்
உண்டு பண்ண முயல்கிறார். தமிழக அரசு, 50% பஞ்சப்படியை
இணைக்கத்தவறி விட்டதாகவும், கூடுதல் பஞ்சப்படியை
கொடுப்பதை தாமதப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

மத்திய அரசு, தனது ஊழியர்களுக்கான, 7வது சம்பள கமிஷன்
ஆலோசனைகளைப்பற்றி இன்றுவரை இன்னமும் எந்தவித
முடிவிற்கும் வரவில்லை என்பது தான் உண்மை.
விஷயம் இன்னமும் மத்திய அரசின் பரிசீலனையில் தான்
இருக்கிறது.

மத்திய அரசு முடிவெடுத்து ஆணைகள் பிறப்பித்த பின்னர்
தான், மாநில அரசு உரிய ஆலோசனைகளை மேற்கொண்டு
தனது ஊழியர்கள் குறித்த உத்திரவுகளை பிறப்பிக்க முடியும்.

அதே போல் ஜனவரி 2016 முதல் தர வேண்டிய பஞ்சப்படி
உயர்வும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இன்னமும்
கொடுக்கப்படவில்லை.
மார்ச் 23,-ல் உத்திரவு பிறப்பிக்கப்பட்டாலும், அடுத்த
நிதியாண்டில் தான் (அதாவது, ஏப்ரல் 2016-ல் தான் )
கொடுப்பது தான் நடைமுறை வழக்கம்.

இந்த விவரங்கள் எல்லாம்
மாநில அரசு ஊழியர்களுக்கே நன்றாகத் தெரியும். எனவே
இது அன்புமணி அவர்களின் தேர்தலுக்கான திடீர் பாசம்
என்பதை அவர்களே புரிந்து கொள்வார்கள்.

இதெல்லாம் போகட்டும் … நான் சொல்ல வந்தது
முதல்வர் வேட்பாளர் போட்ட திடீர் குண்டு பற்றி தான்.

அதாவது அன்புமணி ராமதாஸ் அவர்கள் முதல்வராக
பதவியேற்றதும், புதிய உத்திரவுகள் போட்டு,
தமிழக அரசு ஊழியர்களுக்கு மாதத்திற்கு ஒரு தடவை
சம்பளம் கொடுப்பதற்கு பதிலாக –

15 நாட்களுக்கு ஒரு தடவை சம்பளம் கொடுப்பாராம்…!!!!!!!!

இதன் விளைவுகளையும், சாதக பாதகங்களையும் யோசித்து
விட்டு தான் சொல்கிறாரா என்று தெரியவில்லை.
எக்கச்சக்கமான குழப்பங்களுக்கு இது அடி கோலும்
பைத்தியக்காரத்தனமான யோசனை இது…!!!

இதைவிட பெரிய பயம் என்னவென்றால், இதைப் பார்த்து விட்டு,
நமது காப்பி, பேஸ்ட் கட்சி – தாங்கள் வாரத்திற்கு ஒருமுறை
சம்பளம் கொடுப்போம் என்றும் –

அதைத்தொடர்ந்து, ஆறுமுகம் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர்
திரு.வைகோ அவர்கள் –

நாங்கள் அரசு ஊழியர்களுக்கு தினமும் சம்பளம்
(அதாவது தினக்கூலி….! ) கொடுப்போம் என்று அறிவித்து விட்டால்
அரசு ஊழியர்களின் கதி என்ன ஆகும் ….?

அரசு ஊழியர்களுக்கு தினக்கூலி ….
சந்தேகமே இன்றி – புதிய சாதனையாகத்தான் இருக்கும்….!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to திரு. அன்புமணி ராமதாஸ் அவர்களின் அபத்தமான அறிக்கை …

 1. LVISS சொல்கிறார்:

  The 7th pay commission will be implemented during the financial year 2016-2017 —

 2. selvarajan சொல்கிறார்:

  அன்பு மணி கூறுகிறார் :— / /விலைவாசி உயர்வால் ஏற்படும் கூடுதல் செலவுகளை ஈடு செய்யும் வகையில் அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். பண வீக்கத்தின் அளவுக்கு ஏற்றவாறு அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வின் அளவும் மாறுபடும். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் ஒருமுறையும், ஜூலை மாதம் ஒருமுறையும் அகவிலைப்படி உயர்த்தப்படும்.
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/govt-employees-ll-be-given-salary-once-15-days-anbumani-ramadoss-251688.html .// —– சராசரி மக்களுக்கு என்ன செய்ய போகிறார் — விலைவாசி உயர்வு என்பது அரசு ஊழியருக்கு மட்டும் தனியே உயருகிறதா — நம்நாட்டில் … ? அடுத்து வேறு எவனாவது — ” மணிக்கணக்கில் ” சம்பளம் என்று கூறினாலும் — நல்லது தான் — ஒரு இரண்டுமணி நேரம் வேலை பார்த்தமா — துட்டை வாங்கனமா — நடையை கட்டனமா என்று போய்க்கினே இருக்கலாம் … எதுவும் நடக்கும் … ?

 3. selvarajan சொல்கிறார்:

  // நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் அரசு வேலை: சீமான் வாக்குறுதி- வீடியோ
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-s-karaikudi-campaign-speech-251689.html // … ஐயோ … ஐயோ …. அவ்வளவு ” ஏமாளிகளா ” இந்த தமிழ்நாட்டில் ..? அய்யா … ! யாராவது காப்பாத்துங்க … காப்பாத்துங்க — இவுங்ககிட்ட இருந்து …. ! இல்லைஎன்றால் ” இப்போ நடிகர்கள் — நீதிபதிகள் கூறுவதை போல — ” வெளிநாட்டிற்கு ” போய் விடலாம் என்றால் — அந்தளவுக்கு — வசதி – வாய்ப்பு இல்லையே .. என்ன செய்வது ….?

 4. Narasimhan சொல்கிறார்:

  எதற்கும் கை தட்ட ஆள் இருக்கும்வரை என்ன கவலை .ஆனால் இந்த தேர்தல் எல்லா விதமான கூத்துக்களையும் அரங்கேற்றும் என்று எதிர்பார்க்கலாம் .

 5. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  ஏற்கனவே அரசு ஊழியர்களின் சம்பளத்துக்கு 90 சதவிகிதத்துக்கு மேல், வருமானம் செலவழிகிறது என்று பேச்சு. நாட்டில் எல்லோரையும் முன்னேற்ற நினைக்காமல், அரசு ஊழியர்களுக்கு அது தருவேன் இது தருவேன் என்பது, தங்கள் தலையிலேயே கொள்ளிக்கட்டையால் சொறிந்துகொள்வதற்குச் சமம். அன்புமணி சொல்வதே பெரிய நகைச்சுவை. இதுல சீமான் பேசுவதைக் கேட்டால் நமக்குப் பைத்தியம் பிடிக்காத குறை. ‘கேட்கிறவன் கேணையனா இருந்தால்….’

 6. CHANDRAA சொல்கிறார்:

  The reason behind anbumanis blatant support for tamil nadu govt servants is that
  most of the vanniars who belong to most backward caste as per govt records
  are in govt service in good numbers……
  Besides chinna iyyah also knows the capability of these govt servants during election time…….
  PMK usually takes enormous effort in appointing vanniar officers
  in key posts particularly when they were in alliance with dmk………….. every top middle level govt officers in tamilnadu govt
  have the support of their caste based politicians…….
  ALL KNOW THAT

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.