” மோடிஜி அலை “யை நம்பியவர்கள் இப்போது “சுரேஷ் கோபிஜி ” அலையை நம்புகிறார்கள்…..!!!

gopi1

மலையாளத் திரையுலகின் புகழ்பெற்ற நடிகர் சுரேஷ் கோபியை
மத்திய அரசு ராஜ்ய சபாவிற்கு நியமன உறுப்பினராக
தேர்ந்தெடுத்திருக்கிறது. தேர்தல் நேரத்தில் ஏன் இப்படி என்று கேட்டால்….

மலையாள தேசத்தில் அடுத்த மாதம் சட்ட மன்ற தேர்தல்
நடைபெறுவதற்கும் – இதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
என்னை கலையுலகின் பிரதிநிதியாக மோடிஜி அங்கீகரித்திருக்கிறார்
என்று “கோபிஜி” கூறுகிறார்… நம்புவோமாக……!

தேர்தல் முடிந்தவுடன் “கோபிஜி”
மத்திய அமைச்சராகவும் நியமிக்கப்படுவார் என்றும் பாஜகவினரே
வதந்தியை கிளப்பி விட்டுள்ளனர்…. அதையும் நம்புவோமாக….!!!
( நியமன உறுப்பினர் அமைச்சராக நியமிக்கப்படுவது சாத்தியமா
என்பதைப்பற்றி வதந்தியை கிளப்புபவர்களுக்கு என்ன அக்கரை …? )

சில நாட்களுக்கு முன்னர், கேரள தேர்தலை முன்னிட்டு,
பிரச்சாரத்திற்கு சென்றிருந்த மத்திய அமைச்சர் ரூடி,
கேரள சட்டமன்றத்திற்கு மக்கள் ஒரு பாஜக எம்.எல்.ஏ.வை
தேர்ந்தெடுத்தால் கூட , மத்தியில் ஒரு கேரளத்தவர்
அமைச்சராக்கப்படுவார் என்று உறுதி கூறி இருந்தார்.
அதையும் நம்புவோமாக….!!!

அடுத்த மாதம் கேரள சட்டமன்ற தேர்தலுக்கு பிரச்சாரம்
செய்வதற்காக பிரதமர் செல்கிறாராம். அவர் கலந்து கொள்ளும்
6 பிரச்சார கூட்டங்களிலும், மோடிஜியுடன், கோபிஜியும்
கலந்து கொள்கிறாராம்.

சுரேஷ் கோபி எம்.பி.யாக நியமிக்கப்பட்டதற்கும்,
பிரதமரின் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் அவர் கலந்து
கொள்வதற்கும் எந்தவித விசேஷ முக்கியத்துவமும் கிடையாது.
கேரள சட்டமன்ற தேர்தலை நாங்கள் “மோடிஜி அலை”யை
முன்வைத்து தான் சந்திக்கிறோம் என்று மலையாள தேச
பாஜக கூறுகிறது…. அதையும் நம்புவோமாக…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

16 Responses to ” மோடிஜி அலை “யை நம்பியவர்கள் இப்போது “சுரேஷ் கோபிஜி ” அலையை நம்புகிறார்கள்…..!!!

 1. LVISS சொல்கிறார்:

  Suresh Gopi has been a supporter BJP –His nomination to Rajya Sabha is not a surprise choice —The story goes that he was offered a seat for assembly election but he did not want to contest –For those who are uninitiated here is what I gathered about elections in kerala —Rajasenan a director and Kollam Thulasi actor will be contesting on BJP tickets — Jagdish and Siddique both actors will be contesting on Congress ticket — Mukesh actor will be campaigning for the Communist party –There is Ganesh Kumar actor a three time MLA , and a minister in the previous govt , will contest as UDF candidate — Years back Prem Nazir wanted to enter politics in a big way like NTR but did not succeed —This is the first time , to my knowledge, the mollywood personalities are coming out openly in support of some party or the other —
  Kerala is a different in that both the actors and politicians are easily approachable – —

  • B.Venkatasubramanian சொல்கிறார்:

   காவிரிமைந்தன் ஜி,

   நீங்கள் எந்த மாநிலத்தில் உள்ள பாஜகவை குறை கூறினாலும்,
   எந்த விஷயத்திற்காக குறை கூறினாலும்
   மிஸ்டர் எல்விஸ் ஓடி வந்து விடுவார் பாஜகவை பாதுகாக்க.
   பாருங்க இப்போ பாஜக பண்றதுனால எல்லா கட்சியும் தான்
   நடிகர்களை பயன்படுத்தறாங்க என்று சொல்கிறார்.
   இதே சுரெஷ் கோபியை ஒரு வருடம் முன்பாகவே நாமினேட்
   செய்திருக்கலாமே பாஜக. ஏன் தேர்தல் பிரச்சார சமயத்தில்
   என்று நான் கேட்டால்
   – உடனே இதற்கும் பதில் வைத்திருப்பார் பாருங்கள்.

   • LVISS சொல்கிறார்:

    Mr Venkatasubramanian I am sorry–Suresh Gopi joined the BJP only in 2015 — —Only in the last session of Parliament some nominated members retired and these are the vacancies that are being filled up now – —So there is no way he could have been “nomnated” earlier —

 2. LVISS சொல்கிறார்:

  Mr Kamaiji, Pratap Rudy may be right –A winning candidate from Kerala may become a minister –Kerala had only one BJP minister ,Mr O Rajagopal, in the central cabinet –Nominated members cannot become a minister — So Suresh Gopi becoming a minister is ruled out —
  This time a large number of mollywood personalities can be seen campaigning for different parties —

 3. today.and.me சொல்கிறார்:

  SuSaa also gets the MP seat.
  Hail SuSaa’s name and his supporters Praising.

 4. selvarajan சொல்கிறார்:

  ” எம்.பி.யானால் நதிகளை காப்பதே முதல் பணி : மலையாள நடிகர் சுரேஷ் கோபி ” — பத்திரிக்கை செய்தி …! இதில் முல்லை பெரியாரும் அடங்குமா .. ? நதிகளை சுத்தப்படுத்திய பின்பா — என்பதை பற்றி ஒன்றும் கூறாதது — மனசுக்கு கொஞ்சம் வருத்தமாக தான் இருக்கிறது — இவர் இப்படி — நம்ம ஆளு ” சு.சுவாமி ” என்ன கூற போகிறாரோ என்று அறிய ரொம்பவும் ஆவலாக இருக்கிறது …!!!

 5. CHANDRAA சொல்கிறார்:

  In tamilnadu a person of vijayakanths calibre is hailed as the future c m by
  many……..
  A person like s v sekar could join any party in no time could also enjoy
  many posts…….
  A school drop out singamuthu the comedy actor is conducting an
  important show in jeya tv
  GROWING TRIBUTES are often offered to rajni kamal amithab
  amirkan etc
  No wonder suresh gopi had been offered ………
  BROS pl remember that we are in in india

 6. LVISS சொல்கிறார்:

  Mr KM There is no such thing as Modi wave now –That was there only for a year at the most– Only you are still talking about it — But there is something thing called charisma which very few leaders possess — BJP is depending on this charisma of Mr Modi and not the wave you are talking about — Indira gandhi, Rajiv Gandhi, MGR, all had charisma which cannot be explained ,but they could find supporters among different sections of people —
  According to a poll survey conducted by a news channel , BJP will will in 3 to 5 seats with 18% vote share —We will have to wait and see –But there is a thing called destiny which made Mr Modi the PM in spite of all the muck poured on him since 2002 –Destiny will mark the road for the country not our whims and fancies —

  • B.Venkatasubramanian சொல்கிறார்:

   திரு எல்விஸ்

   மோடியின் “சாரிஸ்மா”வில் நம்பிக்கை இருப்பவர்கள்\
   ஏன் கேரள தேர்தல் சமயத்தில்
   சுரேஷ் கோபியின் “சாரிஸ்மா” வைத் தேடி ஓட வேண்டும்
   என்று தான் கேட்கிறார் கே.எம்.
   இப்படிச் சொன்னால் என்ன அப்படிச் சொன்னால் என்ன ?

   • LVISS சொல்கிறார்:

    Mr Venkatasubramanian Let us understand one thing first – Suresh Gopi has no charisma —The state does not believe in hero worship of any sort —
    Coming to why the BJP is putting more effort this time –Unlike the other three south Indian states Kerala has a sizable presence of RSS cadres who will work for the party BJP if asked to — But they were not active till this year because the politics in Kerala swung between LDF and UDF and the BJP itself did not take much interest in kerala politics — After Modi came to power at the centre the BJP for the first time fared well in local body elections and there was an increase in their vote share –So the party sees a faint chance of making a foray into the assembly this time using Modi’s charisma —Do you see any harm in that –As they say “Katrulla podhey thootrikkol ” “Strike when the iron is hot” —
    Elsewhere I have mentioned that according to a survey BJP is expected to win 3 to 5 seats in this elections –Whether Modi’s charisma can yield this result will be known only on 19th May —

 7. selvarajan சொல்கிறார்:

  // I have influence cutting across parties and hope to help Modi sail through Rajya Sabha // என்று — சு.சுவாமி கூறியது — அவருடைய — கட்சி மற்றும் இதர கட்சிகளுக்கும் சேர்த்து தானே … ? அடுத்து :– // Happiness or sadness on getting or not getting a post shows mental weakness. Be content with what you have and get // நல்லா … ” கொடுக்குறாருங்க — டீடைலு ” …. !!!

 8. selvarajan சொல்கிறார்:

  // பாசம் வெக்க நேசம் வெக்க தோழன் உண்டு… நண்பன் கருணாநிதிக்கு வாழ்த்து சொல்லிய அன்பழகன்!
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/anbalgan-wishes-karunanidhi-251913.html // — அய்யா … இந்த செய்தியை படித்தவுடன் எனக்கு தாங்கள் — சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பதிவிட்ட ஒரு இடுக்கை நினைவுக்கு வருகிறது — அந்த இடுக்கை :– // அன்பழகன் நிஜமாகவே அய்யோ பாவமா ?Posted on ஜூன் 23, 2012 by vimarisanam – kavirimainthan // — அருமையான பதிவு — அது இப்போதும் இந்த செய்திக்கு ” ஒத்து போவது தான் ” — ஆச்சர்யம் — முடிந்தால் படித்து பார்க்கவும் … !!!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   நீங்கள் சொன்ன இடுகையை எடுத்துப் படித்தேன்…
   வழக்கம் போல் இதுவும் புதிதாகவே தோன்றியது…
   அந்த செய்தி இன்றைக்கும் அப்படியே பொருந்துவது தான்
   ஆச்சரியமாக இருக்கிறது.

   நான் மட்டும் படித்தால் போதுமா …?
   நண்பர்களும் படிக்க வேண்டும் அல்லவா …?
   செஞ்சுடலாம் – அதையும் செஞ்சுடலாம்…!!!
   மிக்க நன்றி செல்வராஜன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 9. NS RAMAN சொல்கிறார்:

  Our Kerala brothers not going behind cine Stars like Tamil Nadu. Most of thd Malayalam actors are simple as compared to arrogant political leaders of Tamil Nadu. BJP CONG communist parties are not really portraiting actors as CM candidates in Kerala.
  RS nominated member post longtime being used as a rewarding tool for CONG AND BJP. Nothing wrong in swamy / suresh Gopi selection. Also there is no specific ban on nominated members become ministers.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.