சு.சுவாமிக்கு போதும் என்கிற பொன்மனமா….? அல்லது ஒன்றும் இல்லாததற்கு இதுவாவது கிடைத்ததே என்கிற சந்தோஷமா….?

PTI4_26_2012_000036B

PTI4_26_2012_000036B

” பதவி எதாவது கிடைத்தால் சந்தோஷப்படுவதும், கிடைக்கா விட்டால்,
வருத்தப்படுவதும் ஒருவரின் பலவீனமான மனநிலையையே
எடுத்துக் காட்டும்… இருப்பதை வைத்துக் கொண்டும்,
கிடைப்பதை (வாங்கிக்) கொண்டும் திருப்தி அடைவதே சரியான நிலை”

– சொல்லுவது யார் ? திருவாளர் சுப்ரமணியன் சுவாமி.

ss-tweet-2-format

மத்திய பாஜக அமைச்சரவை உருவான தினத்திலிருந்தே மிகத்தீவிரமாக
அமைச்சர் பதவியை ( முக்கியமாக நிதி அல்லது உள்துறை )
பெற வெளிப்படையாகவே முயற்சித்தவரும், தொடர்ந்து இப்போதைய
நிதியமைச்சர் கையாலாகாதவர் என்றும் தன்னிடம் நிதியமைச்சக
பொறுப்பு ஒப்படைக்கப்பட்டால், “வருமான வரி” யை சுத்தமாக
ஒழித்துக் கட்டவும், கருப்புப் பணம் அத்தனையையும் மொத்தமாக
வெளிக்கொண்டு வரவும் அற்புதமான திட்டங்களை வைத்திருப்பதாகவும்
சொல்லி வந்த / சொல்லி வரும் ஒரு தலைவர் இப்போது உதிர்க்கும்
தத்துவ வெளிப்பாடு இது….!

————

அடுத்து, தன்னை ராஜ்ய சபாவில் நியமன உறுப்பினராக்குவது,
மோடிஜியின் நலனைக் கருதியே என்று ஒரு self கித்தாப்பு –

” கட்சி பேதங்களை கடந்து எனக்கு எல்லா கட்சிகளிலும்
செல்வாக்கு உண்டு – நான் ராஜ்ய சபாவில் உறுப்பினர் ஆவதன் மூலம்
மோடிஜியின் ராஜ்ய சபா செயல்பாட்டை சுலபமானதாக்க என்னால் முடியும் ”

ss-tweet-1-format

திருவாளர் சு.சுவாமி ராஜ்ய சபாவில்,
ஏற்கெனவே பாஜகவை ஆதரிக்காத
எந்த கட்சியை தன் செல்வாக்குக்கு உட்படுத்த முடியும் என்பதை
யாராவது விளக்கினால் தேவலை.

ராஜ்ய சபாவில் NDA கட்சிகளைத்தவிர கிட்டத்தட்ட மற்ற கட்சிகள்
அனைத்துமே – பாஜக விற்கு எதிரானவை தான்..

ஒருவேளை திமுக வை சொல்கிறாரோ…. 🙂 🙂

தான் ராஜ்ய சபா உறுப்பினராக நியமிக்கப்பட்டதை நியாயப்படுத்த
திரு.சு.சுவாமி இவ்வளவு கஷ்டப்பட வேண்டிய அவசியமே இல்லை.

சு.சுவாமியின் அறிவுத்திறனையும், அனுபவத்தையும், தகுதியையும்
அவரது அரசியல் எதிரிகள் கூட கேள்வி கேட்க முடியாத
அளவிற்கு சிறப்பான தகுதிகளை உடையவர் தான் அவர்.

திரு.சு.வாமி ராஜ்ய சபா உறுப்பினர் ஆவதை நிச்சயமாக
நான் வரவேற்கிறேன். அவருக்கு நமது உளமார்ந்த வாழ்த்துக்கள்.

என்ன – நியமன உறுப்பினராக்குவதற்கு பதிலாக
எதாவது ஒரு மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால்
அது இன்னமும் கௌரவமாக இருந்திருக்கும் என்பதோடு –
அவர் எதிர்காலத்தில் அமைச்சராக நியமிக்கப்படுவதற்கும் சந்தர்ப்பம்
உருவாகி இருக்கும்….

ஒருவேளை அத்தகைய ஒரு சந்தர்ப்பம் உருவாகி விடுவதை
தவிர்ப்பதற்காகவே – பாஜக தலைமை, புத்திசாலித்தனமாக ( ! )
அவரை நியமன உறுப்பினராக ஆக்கி விட்டதோ …?

 

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to சு.சுவாமிக்கு போதும் என்கிற பொன்மனமா….? அல்லது ஒன்றும் இல்லாததற்கு இதுவாவது கிடைத்ததே என்கிற சந்தோஷமா….?

 1. seshan சொல்கிறார்:

  anyway camel entering in to the tent…..let us wait and see…the action and reaction…..

 2. LVISS சொல்கிறார்:

  This RS seat is for 6 years unlike the regular one –So Mr Swamy can be there for 6 years — No need to go through election process –Probably this is why he is happy — To become a LS member he has to wait for another 3 years–And winning is not certain — As for the regular RS seat he has to wait till some members complete their term and that too from the state in which BJP has good number of MLAs –During the last session nominated members retired and this came as a boon to the BJP– So at the earliest opportunity the BJP made him an MP —The BJP has filled up six of the seven vacancies ,four of them known BJP supporters —
  Not all parties in RS are against NDA –BJD supports NDA– some other parties have voted for BJP in getting some bills passed —
  The composition of RS may undergo change in JUly or August when many members move out on completion of their terms —

  • B.Venkatasubramanian சொல்கிறார்:

   திரு.எல்விஸ்,

   மூன் றே கேள்விகள் :

   1) திரு.சு.சுவாமிக்கு மந்திரியாக வேண்டும் என்கிற ஆசை இருந்ததா –
   இல்லையா ? அதைப்பற்றி அவர் வெளிப்படையாகவே
   சொல்லி இருக்கிறாரா – இல்லையா ?

   2) நியமன உறுப்பினர் ஆகி விட்டால், மந்திரி ஆக முடியாது என்பது
   உண்மையா – இல்லையா ? அவரை மந்திரி ஆக விடாமல்
   மறைமுகமாகத் தடுக்க பாஜக மேலிடம் இதை செய்திருக்க
   வாய்ப்பு இருக்கிறதா-இல்லையா ?

   3) தனக்கு பதவி ஆசையே இல்லை என்பது போல் இப்போது சு.சுவாமி
   எழுதுவது நாடகமா -இல்லையா ?

 3. LVISS சொல்கிறார்:

  Mr KM I will answer your questions seriatim —Before that, I see that you have a certain bias against him –It is understandable — I see Mr Swamy from a completely different angle — Now to your questions —
  1)What is wrong in a politician aspiring to climb up in the ladder of politics —Every politician nurses ambitions to become a minister or Prime Minister —
  It is likely that Mr Swamy like any other politician has expressed a desire to become a minister –It is a genuine aspiration — Many people give ideas to the govt on many matters –Mr Swamy also has many ideas for the govt —
  2)Yes , nominated members cannot become ministers –To suggest that he was nominated to prevent him from being given a minister post is stretching it too far –If that was so, Swamy could have been given any foreign assignment ,say ,like the President of the BRICS bank in Shanghai to keep him away –But the BJP needs him in India very much and in a position of some power — At the first available opportunity they made him RS member — You know that Congress party is creating problems for the ruling party in RS –Swamy’s presence will unnerve them –This is how I see this appointment — I never expected Mr Swamy to be made a minister or a RS member—This came as a surprise to me –I even thought he wouldnt accept it —
  3)I do not know whether he is philosophical or drama– My answer 1 I think will be more to the point –Podhum enra maname pon seyyum marundhu—
  Something away from the questions you asked — I frankly do not know the clout Mr Swamy has with other parties in the R S — There is always the possibility that some parties are close to him — I do not recollect leaders from other parties saying negative things about him—
  Considering that there is lot of prestige attached to a nominated member I think he is satisfied with this –He does not belong to any particular state and can adopt any village like Sachin Tendulkar —

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப எல்விஸ்,

   உங்களை நேரடியாக கேள்வி கேட்டவர் திரு.வெங்கடசுப்ரமணியன்
   அவர்கள் தான். இருந்தாலும், இடுகையை முன்வைத்தே கேள்விகள்
   இருந்தபடியால், அவை எனக்கும் பொருந்தும்.
   உங்களது பதிலில் கேள்விக்குரிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன.

   பாஜகவின் அதிதீவிர ஆதரவாளர் என்பதால் –
   உங்களது இந்த மறுமொழிக்கு என்னை விட நண்பர் டுடேஅண்ட்மீ
   (காங்கிரஸ் – பினாமி, பாஜக – சுனாமி…..!!! )
   அவர்கள் பதிலளித்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

   ஒருவேளை அவர் பதிலளிக்கவில்லை என்றால் –
   நான் எழுதுகிறேன்…..!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 4. CHANDRAA சொல்கிறார்:

  All know that an extremely intelligent student in any class is not welcome in a classroom
  The average teacher would find it difficult to manage him
  So no prime minister would take DR SWAMY in his cabinet
  DR SWAMY is a great philosopher forgiving also
  He remained very cool and did not lose temper
  even when eggs were thrown against him
  by a section of advocates in the high court compound
  some years back……..
  what he quoted in twitter truly reveals his inner heart………….

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.