திருவாளர் அன்பழகன் நிஜமாகவே அய்யோ பாவமா ?

.

.

 

நண்பர் செல்வராஜன் ஒரு பழைய இடுகையைப்  பற்றி
சொன்னார்… வழக்கம் போல் நினைவில் இல்லை… எடுத்துப் படித்தேன்… ஆச்சரியமாக இருக்கிறது…

அப்போது திமுக மத்திய அரசில் அங்கம் வகித்தது என்பதைத்தவிர, மற்றபடி இன்றைக்கும் அப்படியே பொருந்தும் ஒரு செய்தி –
அதை நான் மட்டும் படித்தால் போதுமா ? நண்பர்களும் படிக்க வேண்டாமா ?

எனவே, இடுகையை மீண்டும் கீழே பதித்திருக்கிறேன்.

 

———————————————————————–

அன்பழகன் நிஜமாகவே அய்யோ பாவமா ?  ( Posted on ஜூன் 23, 2012 )

நேற்றைய இரவு சென்னை புரசைவாக்கம் கூட்டத்தை
“நமது” கலைஞர் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு
செய்தார்கள் -பார்த்தேன்/கேட்டேன்.

பேராசிரியர் அன்பழகன் உரையில் உண்மையும்,
கற்பனையும், கலைஞர் பால் அவரது விசுவாசமும்
கலந்திருந்தன. முதலில் சில உண்மைகள் –

“தமிழ்நாட்டு மக்கள் சில நேரங்களிலே
ஏமாறுவது உண்மைதான். ஆனால்
தொடர்ந்து ஏமாற மாட்டார்கள்.
தமிழன் சிந்திக்கக் கூடியவன்தான்.
எண்ணிப்பார்க்கக் கூடியவன்தான்.
அடியோடு அறிவை இழந்தவிட்டவன் அல்ல.
ஆனால் சூழ்நிலை காரணமாக சில நேரத்தில்
தமிழக மக்கள் உண்மைகளை புரிநதுகொள்ள முடியாமலோ,
அறிந்துகொள்ள முடியாமலோ ஏமாந்துபோயிருக்கிறார்கள்.”

அடுத்து கலைஞர் மீது அவர் விசுவாசத்தை
வெளிப்படுத்த சில வார்த்தைகள் –

“கலைஞர் பெரியாருடைய சீடர் அது முதல் தகுதி.
அண்ணாவினுடைய தம்பி அது இரண்டாவது தகுதி.
மிகப்பெரிய எழுத்தாளர் அது அவருடைய சொந்த தகுதி.

சட்டமன்றத்திலே 12 முறை வெற்றி பெற்று வந்தவர்.
அது வேறு யாரும் பெறமுடியாத தகுதி.
பலமுறை குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு
இன்னாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முதன் முதல்
முன்மொழிந்த பெருமைக்குரியவர்”.

அடுத்து  முன்னைப்போல் கலைஞரை மதிப்பதில்லை
என்கிற மறைமுக குற்றச்சாட்டை மறுத்து –

“கலைஞர் முதல் அமைச்சராக இருந்தால் தான்
நான் மதிப்பேன் என்று கிடையாது.
அவர் வீட்டில் இருந்தாலும்,
ரோட்டில் நின்றாலும் நான் மதிப்பேன்.
முதல் அமைச்சர் இல்ல, பதவியே தேவையில்லை.
செல்வாக்கு என்பது தேர்தல் மூலமாக கிடைப்பதுதான்
என்று எண்ணக்கூடாது. தமிழுக்கு தொண்டு செய்தவர் –
அதற்கே அவரை மதிக்கலாம். தமிழனுடைய
இன உணர்வை வளர்த்தவர் அதற்கே மதிக்கலாம்.
கல்லக்குடி போராட்டத்திலே தலை வைத்து ரயில்
வருவதற்கு முன்பு தலை வைத்து படுத்தவர்
அதற்கே மதிக்கலாம். 16 வயதிலேயே இந்தி எதிர்ப்பு
போராட்டத்தில் ஈடுபட்டு கொடிபிடித்தவர் அதற்கே
மதிக்கலாம். தமிழ்நாட்டு தலைவர்களிலேயே
அதிக முறை சிறைச்சாலைக்கு சென்றவர்
அதற்கே மதிக்கலாம். சிறைச்சாலைக்கு போவதற்குக்கூட
புதுப் புது வழி கண்டுப்பிடித்தவர் அதற்கே மதிக்கலாம்”.

பாவம் பேராசிரியர் !

கலைஞர், அன்பழகன், நெடுஞ்செழியன்,
நாஞ்சில் மனோகரன -எல்லாரும் பேசுவதைக் கேட்க  
ஆவலுடன் மக்கள் கூடிய காலமும் இருந்தது.
அதில் நான் கூட ஒருவனாக இருந்தேன் !
அது ஒரு கனாக் காலம் !

இது அத்தனையும் சுயநலக்கூட்டம் –
தாங்கள்  பதவி பிடிக்க, பணம் சம்பாதிக்க, கவர்ச்சியாக,
அடுக்கு மொழியில் தமிழ் பேசி, சுயமரியாதை இயக்கத்தை
சொந்த சுகங்களுக்காக பயன்படுத்துவார்கள் என்று மக்கள்
கனவில் கூட நினைத்திராத காலம் அது.

அன்பழகனோ – அவரைச் சேர்ந்தவர்களோ
வலைத்தள பக்கமே போவதில்லை போலிருக்கிறது.
வந்தால் தெரிந்திருக்கும் – இன்றைய தமிழ் மக்களின்
மன நிலை என்ன என்பது.

அன்பழகன் என்ன தான் சொன்னாலும் –

இன்று “கலைஞர்” என்கிற பெயரை நினைத்தாலும்,
சொன்னாலும் –

1,76,000 கோடி –
2ஜி ஸ்பெக்ட்ரம் ராஜா,
கனிமொழி,
தா.கி. படுகொலை,
தினகரன் பத்திரிகை அலுவலகம் எரிப்பு
“கண்கள் பனித்தன -இதயம் இனித்தது” குடும்ப நிகழ்வு
முள்ளிவாய்க்கால் படுகொலைகள்,
காலைச்சிற்றுண்டிக்கும் – மதிய உணவுக்கும் இடையே
அவர் கொண்ட உண்ணாவிரத நோன்பு,
குடும்ப வளர்ச்சி –
சோனியா காந்தியுடன் கை கோர்த்துக்கொண்டு –
ஈழமக்களை அழித்தது –
தமிழினத்தலைவன்  என்று சொல்லிக்கொண்டு,
தமிழர்களை அநாதைகளாக, அகதிகளாக ஆக்கியது,
மஞ்சள் துண்டு போடும் மகிமை,
திருட்டு லாட்டரி மார்டின் நட்பு,
“கலாம்” என்றால் “கலகம்” அர்த்தம் கண்டுபிடிப்பு
போன்றவை தான்
நினைவிற்கு வருகின்றன.

நெஞ்சில் என்றும் பதிந்திருக்கும் புகைப்படங்கள்
சில மேலெழுந்து வருகின்றன –

 

karunanithi-kangal-panithana-photofamily-treewar-on-humanity-1

 

 

 

war-on-humanity-2

 

 

என்ன செய்வது ? மன்னிக்க வேண்டும் பேராசிரியரே –
உங்கள் பேச்சை எங்களால்
ஏற்றுக் கொள்ள முடியவில்லை !! நிலைமையை
புரிந்து கொண்டு நீங்கள் “ரிடையர்” ஆவது தான்
உங்களுக்கு இருக்கிற மரியாதையையாவது
தக்க வைக்கும்.

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

18 Responses to திருவாளர் அன்பழகன் நிஜமாகவே அய்யோ பாவமா ?

 1. மானுடன் சொல்கிறார்:

  பழசெல்லாம் நல்லா ஞாபகம் வந்து படம் எடுத்து போடுரீங்க, சந்தோசம். சேலத்தில் 107 டிகிரி வறுத்தெடுத்து காலி பண்ணிய அம்மாவின் கொலை களத்தையும் ஒரு படமா போட்டீங்கன்னா நல்லாயிருக்கும்!!

  • நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

   இதில் ஜெ. பங்கு என்ன? அவரென்ன ஆள் வைத்து தா.கியை, ஆலடியை, தினகரன் பத்திரிகை ஊழியர்களை கருணானிதி ஆட்கள் கொலை செய்ததைப் போல் செய்தாரா?

   கா.மை சார்… கருணானிதி என்றவுடன், ஏர்கூலர் மத்தியில், பஞ்சணையில், இணைவி, துணைவியுடன் கடற்கரையில் 1 1/2 மணி நேரம் துயில் கொண்டதும், திகார் ஜெயிலின் வாசலில் வீல் சேரில் உட்கார்ந்திருந்ததும், 2004ல் மத்திய அமைச்சரைவில் வலுவான அமைச்சரவைகளைப் பெறுவதற்காக, தில்லியில் காத்திருந்ததும்தான் என் நினைவுக்கு (மக்கள் நினைவுக்கு) வரும். அவை எப்படி உங்கள் நினைவிலிருந்து தப்பின?

  • Tamilian சொல்கிறார்:

   I do not agree with the observations. People come to a rally and return, they get killed in the accidents. Have they been accusing the speaker so far? Why take a negative stand against Jaya?

 2. sivakumar சொல்கிறார்:

  மானுடன் அவர்களே சரியாக சொன்னீர்கள்
  வேற எங்க என்ன அநியாயம் நடந்திருந்தாலும் உடனே ஒரு ஆவேசமான பதிவு வந்திருக்கும்.இங்க 5 பேர் செத்திருக்காங்க. ஒரு பேச்சு மூச்சு காணோம்!

  ஜெயா-வைப் பற்றி எது சொன்னாலும் உடனே கருணாநிதி மட்டுல் ஒழுங்கா-ன்னு கேட்காம கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க. ஜெயா-வைப் பத்தி பேசினாலே dmk – ன்னு நினைக்க வேண்டாம்.

  என்ன ஒரு தவ வாழ்க்கைடா சாமி!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   திருவாளர்கள் மானுடன் மற்றும் சிவகுமார்,

   இந்த இடுகைக்கும் நீங்கள் எழுதி இருக்கும் விஷயத்திற்கும்
   எதாவது சம்பந்தம் உண்டா …?

   உங்களுக்கு ஜெ. மீது வெறுப்போ, கோபமோ, ஆத்திரமோ
   இருக்கலாம். ஆனால், அதற்கும், கலைஞர் மற்றும்
   பேராசிரியர் சம்பந்தப்பட்ட இந்த இடுகைக்கும் எந்த சம்பந்தம் ..?

   ஜெ.மீது குற்றம் சாட்டுவதன் மூலம்,
   கலைஞர் உத்தமர் என்று கூற விரும்புகிறீர்களா …?
   நான் இந்த இடுகையில் கூறி இருக்கும் விஷயங்களில
   எதை தவறு என்று கருதுகிறீர்கள்….?

   இது ஒன்றே உங்கள் திமுக சார்பு நிலையை
   வெளிப்படையாகவே காட்டிக் கொடுப்பது போல் இருக்கிறதே…

   ஒரு கேள்வி –

   என் வயது, உடல்நிலை, எனது தாங்கும் சக்தி பற்றி எனக்குத் தெரியும்.
   நான் போகும் இடத்தில், வெய்யிலில் பலமணி நேரம் காத்திருக்க
   வேண்டியிருக்கும் என்றோ, கூட்டம் மிகுதியாக இருக்கும் என்றோ
   தெரிந்தால் – நான் நிச்சயம் அங்கு போக மாட்டேன்.
   போகிற இடத்தில் கூட்ட நெரிசல் இருக்கும் என்பதும்,
   போலீஸ் கெடுபிடி இருக்கும் என்பதும் ஏற்கெனவே தெரிந்தவை தான்

   எதிர்பாராமல் எங்கேயாவது சிக்கிக் கொள்வது வேறு.
   தெரிந்தே எதிர்கொள்வது வேறு.

   என் உடல் தகுதியை மீறி, என்னால் தாக்குப் பிடிக்க முடியாது என்று
   தெரிந்திருந்தும், பண ஆசை காரணமாகவோ, ஆர்வ மிகுதியாலோ
   நான் எதாவது செய்தால், அதற்கு முழு காரணமும், பொறுப்பும் நானே தான்.
   இதில் வேறு யாரையும் குறை சொல்வதற்கில்லை.

   மற்றும் ஒன்று – சாலை போடும் இடங்களில், மேம்பாலங்கள்
   கட்டுமிடங்களில், வீடுகள் கட்டுமிடங்களில், பகல் முழுவதும்
   கொத்தனார்களும், சித்தாள் வேலை செய்பவர்களும் வெய்யிலில்
   தான் வேலை செய்கிறார்கள். வெய்யில் பாதித்து எல்லாருமே
   இறந்து போய் விடுவதில்லை. அவரவர் உடல்நிலையும்,
   தாங்கும் சக்தியும் இதில் ஒரு காரணம்.

   இறந்தவர்கள் குறித்த அனுதாபம் எல்லாருக்கும் உண்டு.
   ஆனால், அதற்காக வேறு யாரையும் இதில் குற்றம் சாட்ட முடியாது.
   எனவே, சாக்கு கிடைத்தது என்று கண்டபடி ஏசுவதையே
   தொழிலாகக் கொண்ட செய்தி தளங்களின் துணையை கொண்டு
   நீங்களும் குற்றம் சாட்ட வேண்டாம்.

   ——–
   சரி – இதை இத்துடன் விட்டு விட்டு,
   உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்.
   தகுந்த காரணங்களுடன் பதில் எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்…

   “வரவிருக்கின்ற சட்டமன்ற தேர்தலில்,
   எந்த கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்று
   விரும்புகிறீர்கள்…? ஏன்…? –
   மற்ற கட்சிகளை எதனால் விலக்குகிறீர்கள்…? ”

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • மானுடன் சொல்கிறார்:

    // “என் வயது, உடல்நிலை, எனது தாங்கும் சக்தி பற்றி எனக்குத் தெரியும்.
    நான் போகும் இடத்தில், வெய்யிலில் பலமணி நேரம் காத்திருக்க
    வேண்டியிருக்கும் என்றோ, கூட்டம் மிகுதியாக இருக்கும் என்றோ
    தெரிந்தால் – நான் நிச்சயம் அங்கு போக மாட்டேன்.
    போகிற இடத்தில் கூட்ட நெரிசல் இருக்கும் என்பதும்,
    போலீஸ் கெடுபிடி இருக்கும் என்பதும் ஏற்கெனவே தெரிந்தவை தான்.எதிர்பாராமல் எங்கேயாவது சிக்கிக் கொள்வது வேறு.
    தெரிந்தே எதிர்கொள்வது வேறு.

    என் உடல் தகுதியை மீறி, என்னால் தாக்குப் பிடிக்க முடியாது என்று
    தெரிந்திருந்தும், பண ஆசை காரணமாகவோ, ஆர்வ மிகுதியாலோ
    நான் எதாவது செய்தால், அதற்கு முழு காரணமும், பொறுப்பும் நானே தான்.” //
    இந்த மனப்பான்மை தான் என்னை மிகவும் பாதிக்கிறது.ஜெயலலிதாவிற்கு இருக்கின்ற இதே விதமான அனுகுமுறை தான் அவரது கட்சியின் கடைசி தொண்டர்களுக்கும், ஆதரவாளராக இருப்பவர்கள் என எல்லோருக்கும் பொதுவாக சரியாகப் படுகிறது.உங்களைப் போன்றவர்களை இன்னும் சற்று நெருக்கி கேள்வி கேட்டால் அது உங்களை ஆத்திரமூட்டி “சும்மாவா வந்து செத்தாங்க? சொளையா 300 ரூபா,சோறு,தண்ணி,போகவர வாகனம் எல்லாம் தந்து தானே கூப்பிட்டாங்க? வெயில்ல உடம்பு தாங்காதுன்னு தெரிஞ்சா எதுக்கு ஆசைப்பட்டு வரணும்? இப்பவும் அம்மா சும்மாவா விடப்போறாங்க , எலெக்சன் முடிஞ்ச பின்னால 3 லட்ச ரூபா வீடு தேடி வரும், கொஞ்சம் பொறுங்க” இப்படித்தான் உங்கள் வார்த்தைகள் எகிறும். இதைத்தான் சென்னை வெள்ள சேதத்திற்கு பின்னும் ஒவ்வொரு அதிமுக அடிமையும் சொன்னார்கள்.மக்களை இந்தளவிற்கு ஒரு பச்சையை பார்த்து ஓடும் மந்தையைப் போல நினைக்கும் மனோபாவம் தான் எனக்கு மட்டுமல்ல பொதுவெளியில் எல்லோருக்கும் அதிமுக மற்றும் அதன் தலைவி மேல் ஒரு வெறுப்பை தோற்றுவிக்கிறது. இந்த வெறுப்பு வர வேண்டுமானால் அவன் திமுக காரனாகத்தான் இருக்க முடியும் என்று முடிவு கட்டி விடுவதும் கூட ஒரு ஆணவம் தான். உங்களைப் போன்றவர்கள் எல்லாம் அந்தம்மாவை ஒரு கர்த்தரை தொழுவதைப் போல இந்த நாட்டில் எல்லோருமே தொழுது வழிபட வேண்டும், அப்படி தொழ விரும்பாமல் எதிர்த்து பேசுகின்றவனெல்லாம் சாத்தானின் (அதாவது உங்கள் புரிதலில் திமுக) ஏவல்கள்.இது தானே உங்களின் தெளிவான புரிதல்?.
    அதிமுகவை கேள்வி கேட்டால் திமுக, திமுகவை கேள்வி கேட்டால் அவன் அதிமுக, அதிமுக வை கேள்வி கேட்காமல் திமுகவை கேள்வி கேட்டால் அவன் அதிமுகவின் பி டீம், ம ந கூட்டணியை கேள்வி கேட்டால் திமுகவிடம் எவ்வளவு கூலி வாங்கினீர்கள் என்று நபரின் தகுதிக்கேற்ப ஒரு விலை……. இப்படியே ஆளுக்கொரு முத்திரை குத்தி கேட்கின்ற கேள்விக்கு ஒரு உள் நோக்கம் கற்பித்து விட்டால் விவாதம் முடிந்து விடும்.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     நண்ப மானுடன்,

     நீங்கள் வெறுப்பூட்டும் விதத்தில் பின்னூட்டம் எழுதினாலும் கூட,
     நான் மிகவும் நிதானமாகவும், விவரமாகவும் உங்களுக்கு
     பதில் எழுதினேன். சில விஷயங்கள் குறித்து உங்களது
     கருத்தையும் கேட்டிருந்தேன்….

     அதற்கு …. ?
     மீண்டும் வசைமாரியுடன் வெறுப்பை உமிழ்கிறீர்கள்.
     நான் எழுப்பிய எந்த கேள்விக்காவது பதில் உண்டா உங்கள்
     மறு பின்னூட்டத்தில்…?

     மீண்டும் மீண்டும் ஜெ. மீதும்,
     கலைஞரையும் திமுகவையும்
     விமரிசிக்கும் என் போன்றவர்கள் மீதும்
     அர்த்தம் இல்லாத
     வசைமாறி பொழிவதைத்தவிர,

     உருப்படியாக என்ன விவாதம் செய்கிறீர்கள் ..?

     நீங்களே ஒருமுறை என் விளக்கத்தையும்,
     உங்கள் பதிலையும் பார்த்து விட்டு,
     உங்கள் நிலை சரிதானா என்று சோதித்துக் கொள்ளுங்கள்….!

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

     • மானுடன் சொல்கிறார்:

      அந்த பத்தியில் உங்களது ஒரே கேள்வி இதுதான்,
      //“வரவிருக்கின்ற சட்டமன்ற தேர்தலில்,
      எந்த கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்று
      விரும்புகிறீர்கள்…? ஏன்…? –
      மற்ற கட்சிகளை எதனால் விலக்குகிறீர்கள்…? ” //

      இதற்கு நான் பதில் சொல்வது தான் பிரச்சினையா? இதே கேள்வி உங்கள் முன் எழுப்பியவர்களுக்கு நீங்கள் சொன்ன பதில் ஞாபகம் இருக்கிறதல்லவா? இந்த விஷயத்தில் நான் உங்களை பின் பற்றுகிறேன். மகிழ்ச்சியா?

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் மானுடன்,

      நான் உங்களிடம் கேட்டது ஒன்றல்ல –
      நான்கு கேள்விகள் –

      1) உங்களுக்கு ஜெ. மீது வெறுப்போ, கோபமோ, ஆத்திரமோ
      இருக்கலாம். ஆனால், அதற்கும், கலைஞர் மற்றும்
      பேராசிரியர் சம்பந்தப்பட்ட இந்த இடுகைக்கும் எந்த சம்பந்தம் ..?

      2) ஜெ.மீது குற்றம் சாட்டுவதன் மூலம்,
      கலைஞர் உத்தமர் என்று கூற விரும்புகிறீர்களா …?

      3) நான் இந்த இடுகையில் கூறி இருக்கும் விஷயங்களில
      எதை தவறு என்று கருதுகிறீர்கள்….?

      4)“வரவிருக்கின்ற சட்டமன்ற தேர்தலில்,
      எந்த கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்று
      விரும்புகிறீர்கள்…? ஏன்…? –
      மற்ற கட்சிகளை எதனால் விலக்குகிறீர்கள்…? ”

      இதில் கடைசி கேள்வியை மட்டும் சுட்டிக்காட்டிவிட்டு,
      அதற்கும் பதில் சொல்வதை தவிர்த்து விட்டீர்கள்.

      அதை நான் இப்படி எடுத்துக் கொள்கிறேன்.

      ” கலைஞர் தான் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே
      என் விருப்பம். ஆனால், அதை வெளியே சொல்லிக்கொள்ள
      வெட்கமாக இருக்கிறது. ”

      நீங்கள் தான் இப்படி பதில் சொல்ல தயங்குகிறீர்கள் என்றால்,
      பாய்ந்து வந்து உங்களுக்கு ஆதரவு கொடுத்தாரே ஒரு நண்பர் –
      அவருக்கும் சேர்த்து தானே நான் எழுதினேன். அவராவது
      வெட்கப்படாமல் விளக்கம் கொடுத்திருக்கலாம். அவரும்
      கலைஞர் பெயரைச் சொல்ல வெட்கப்படுகிறார் போலிருக்கிறது.

      கலைஞர் சென்னையில் கிளம்பியதில் இருந்து – இந்த நிமிடம் வரை
      சுற்றுப்பயணத்தில் கூடவே இருப்பது –

      ஒரு பக்கம் ஏர்செல்-மேக்சிஸ், சன் டிவி திருட்டு கனெக்ஷன்
      புகழ், சிபிஐ வழக்கில் உச்சநீதிமன்றம் வரை போய் முன் ஜாமீன்
      பெற்று வந்திருக்கும் திருவாளர் தயாநிதி –

      இன்னொரு பக்கம், 200 கோடி ரூபாய் கலைஞர் டிவி -2ஜி வழக்கில்
      எட்டு மாதங்கள் திஹார் சிறையில் இருந்து விட்டு,
      ஜாமீனில் வெளி வந்திருக்கும் திருமதி கனிமொழி –

      இவர்கள் இரண்டு பேரையும் இரண்டு பக்கத்திலும்
      வைத்துக் கொண்டு தான்
      கலைஞர் 93 வயதில் ஊழலில்லா ஆட்சி தர,
      தனக்கு ஓட்டுப்போடும்படி
      தமிழகத்தை வலம் வருகிறார்.

      உங்களுக்கேன் தயக்கம் …? –
      தைரியமாகச் சொல்லுங்களேன் உங்கள் விருப்பத்தை …!!!

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

 3. Tamilian சொல்கிறார்:

  Mr K M ! I totally agree with you. A meeting for AIADMK leader is arranged and many people attend it . If their physical condition does not permit it, they should not have attended it. The biased media carry the accusations against CM and carry the accusations of opponents prominently . It was unfortunate but making CM personally responsible calling her names is stooping to the lowest levels. Our politics is in the gutter level now thanks to MK who is the main contributor.

 4. CHANDRAA சொல்கிறார்:

  Well i have been offering comments in this column….. openly i had preferred
  jeyas rule in 2016 for many reasons
  but i differ in bringing lots of old men and women children
  in the huge ground……. in jeyas meetings……
  tiruchi meeting was fairly better than the two meetings ….
  thank god no death took place
  the aiadmk party organisers should take more safety measures in
  the future meetings in SOUTHERN DISTRICTS
  where aiadmk is more popular.

 5. selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! இந்த இடுக்கை இப்போது அதுவும் தேர்தல் நேரத்தில் மீண்டும் வெளிவந்தது தான் சிலரது ” ஆவேசத்திற்கு ..? ” காரணம் — ஏனென்றால் ஐந்து பேர் உயிரிழப்பை வைத்து அரசியல் பண்ணிக்கொண்டு இருக்கும் போது — // இன்று “கலைஞர்” என்கிற பெயரை நினைத்தாலும்,
  சொன்னாலும் –
  1,76,000 கோடி –
  2ஜி ஸ்பெக்ட்ரம் ராஜா,
  கனிமொழி,
  தா.கி. படுகொலை,
  தினகரன் பத்திரிகை அலுவலகம் எரிப்பு
  “கண்கள் பனித்தன -இதயம் இனித்தது” குடும்ப நிகழ்வு
  முள்ளிவாய்க்கால் படுகொலைகள்,
  காலைச்சிற்றுண்டிக்கும் – மதிய உணவுக்கும் இடையே
  அவர் கொண்ட உண்ணாவிரத நோன்பு,
  குடும்ப வளர்ச்சி –
  சோனியா காந்தியுடன் கை கோர்த்துக்கொண்டு –
  ஈழமக்களை அழித்தது –
  தமிழினத்தலைவன் என்று சொல்லிக்கொண்டு,
  தமிழர்களை அநாதைகளாக, அகதிகளாக ஆக்கியது,
  மஞ்சள் துண்டு போடும் மகிமை,
  திருட்டு லாட்டரி மார்டின் நட்பு,
  “கலாம்” என்றால் “கலகம்” அர்த்தம் கண்டுபிடிப்பு
  போன்றவை தான்
  நினைவிற்கு வருகின்றன.
  நெஞ்சில் என்றும் பதிந்திருக்கும் புகைப்படங்கள்
  சில மேலெழுந்து வருகின்றன // என்று தாங்கள் ஈழ தமிழர்களின் பலியான புகைப்படங்களையும் சேர்த்து பதிவிட்டது தான் – காரணம் — வேறொன்றும் இல்லை — இதே இடுக்கை ” சென்ற சட்டமன்ற தேர்தலுக்கு பின் ” வெளிவந்ததே — அதைப்போல வந்திருந்தால் — இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்காது —- அடுத்து :– // காங்கிரசா, கம்யூனிஸ்ட்டா.. கருணாநிதியே கன்பியூஸ் ஆகிட்டாரே!
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/karunanidhi-wrongly-pronounce-congress-as-communist-251988.html?// என்ற பத்திரிக்கை செய்தியை படித்தவுடன் …. // கலைஞர் இன்னும் 100 ஆண்டுகள் வாழ வேண்டும்
  என்பதே நம் ஆசையும்…… 93 வயது முதியவரை வேலை வாங்குவது
  கொடுமை அல்லவா ? இரக்கமில்லாத
  செயல் அல்லவா ?
  கற்பனை செய்து பார்க்கவே
  பயங்கரமாக இருக்கிறதே.
  தமிழ் மக்கள் என்ன அவ்வளவு
  கொடிய கல் நெஞ்சுக்காரர்களா ? // என்று [ ஒரு இடுக்கை ” பிப்ரவரி 27, 2011 ] ” வெளிவந்ததில் எழுதி உள்ளீர்கள் … உங்களுக்கு இருக்கும் ” இந்த இரக்கம் ” —அவரது கட்சியினருக்கோ — வாரிசுகளுக்கோ இல்லாமல் — போனது ஆச்சர்யம் — தெளிவான — புள்ளி விவரங்களுடன் பேசுபவரின் நேற்றைய தடுமாற்ற பேச்சு — எதனால் — யாரால் — எதுக்காக …. ?

 6. ltinvestment சொல்கிறார்:

  ஐயா
  MK மற்றும் JJ இருவரும் 5 வருடம் பொறுத்தால் மீண்டும் பதவிக்கு வரலாம் என்று அவர்கள் மனதில் ஆழப் பதிந்து விட்டது . I was JJ supporter . ஆனால் கடந்த 5 வருடம் ஆட்சி ஒரு passive ஆக இருந்தது . இப்போது விட்டால் அடுத்த 5 வருடம் நாம் தான் என்று ஒரு மமதை இருவருக்கும் இருக்கும் வரைக்கும் நமது தமிழ் நாடு முன்னேற்றம் , இயற்கை வளம் , மனித மேம்பாடு எல்லாவற்றிலும் பின்னோக்கி செல்கிறது . முன்றாவது அணி , BJP மீதும் நம்பிக்கை இல்லை. NTK manifesto நன்றாக உள்ளது. But It looks like they become opprtunist or exploiting weakness of need of alternative. they did not get on ground to get justice for all the sensitive subjects ( TN worker killing by AP police, EElam, Sasi perumal death for liquor prohibition, Freebies…etc). if they would have dont for all the matters, they may look good at this moment. But they did not.

  One party spending time to save themself from old wrongdoings
  one party spending all efforts to become Sooper rich family
  Multiple party spending efforts to exploit the need of alternative.
  60% of education institution ran by Both big party members. – we are paying extra ordinary money.

  we need one brave leader who can save TN ( right from our education, agriculture, Environment, Employment ) from all external noises and arm twisting Centeral govt.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பரே,

   ஒரு புதிய தலைமை உருவாக வேண்டும் என்பது தான்
   என் விருப்பமும். ஆனால், மாற்று என்று கிளம்புபவர்கள்
   எல்லாரும் ஏமாற்றத்தையே அளிப்பவர்களாக இருக்கிறார்களே…

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 7. மானுடன் சொல்கிறார்:

  அய்யா, நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கேள்வி #1 க்கு பதில் எளிமையானது. ஈழத்தில் நிகழ்ந்த 2009 இன ஒழிப்பிற்கு ஆளான படங்களை அன்பழகன், திமுக பற்றிய இடுகைக்கு போடுகின்றீர்கள்.அதை நான் சந்தோசம் என்று வரவேற்றிருக்கிறேன்.அதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.அதை சந்தோஷம் என்றே வரவேற்றேன்.ஆனால் நடப்பு பிரச்சினை என்பது அம்மாவின் கொலைக்களமாகிய 5 பேர் மரணித்த சம்பவம்.அது பற்றி ஏன் கருத்து தெரிவிக்கவில்லை என்பதற்காகவே கேள்வி கேட்டேன். உங்கள் கேள்வி #2,3,4 எல்லாவற்றுக்கும் பதில் ஏற்கனவே பதில் சொல்லி விட்டேன்.அது இதோ….

  //”உங்களைப் போன்றவர்கள் எல்லாம் அந்தம்மாவை ஒரு கர்த்தரை தொழுவதைப் போல இந்த நாட்டில் எல்லோருமே தொழுது வழிபட வேண்டும், அப்படி தொழ விரும்பாமல் எதிர்த்து பேசுகின்றவனெல்லாம் சாத்தானின் (அதாவது உங்கள் புரிதலில் திமுக) ஏவல்கள்.இது தானே உங்களின் தெளிவான புரிதல்?.
  அதிமுகவை கேள்வி கேட்டால் திமுக, திமுகவை கேள்வி கேட்டால் அவன் அதிமுக, அதிமுக வை கேள்வி கேட்காமல் திமுகவை கேள்வி கேட்டால் அவன் அதிமுகவின் பி டீம், ம ந கூட்டணியை கேள்வி கேட்டால் திமுகவிடம் எவ்வளவு கூலி வாங்கினீர்கள் என்று நபரின் தகுதிக்கேற்ப ஒரு விலை……. இப்படியே ஆளுக்கொரு முத்திரை குத்தி கேட்கின்ற கேள்விக்கு ஒரு உள் நோக்கம் கற்பித்து விட்டால் விவாதம் முடிந்து விடும்.”//

  ஆக ஒருவன் எல்லோரையும் விமர்சிக்க முடியும் யாருடைய சார்பில்லாமலும் என்பதை “விமர்சனம்” என்ற தளம் வைத்திருக்கிற உங்களுக்கு ஏற்க மனமில்லை. கேள்வி கேட்பவனை எதிர்கட்சிகாரன் என்று நிறுவிவிட்டால் எல்லாம் முடிந்தது என்பது உங்கள் வாதமுறை. அதைத்தான் இப்பொதும் செய்கிறீர்கள். நன்றி!!

  • B.Venkatasubramanian சொல்கிறார்:

   திரு.மானுடன் அவர்களே,

   கே.எம். உங்களுக்கான பதிலில் கூறி இருக்கிறார் –

   //கலைஞர் சென்னையில் கிளம்பியதில் இருந்து – இந்த நிமிடம் வரை
   சுற்றுப்பயணத்தில் கூடவே இருப்பது –

   ஒரு பக்கம் ஏர்செல்-மேக்சிஸ், சன் டிவி திருட்டு கனெக்ஷன்
   புகழ், சிபிஐ வழக்கில் உச்சநீதிமன்றம் வரை போய் முன் ஜாமீன்
   பெற்று வந்திருக்கும் திருவாளர் தயாநிதி –

   இன்னொரு பக்கம், 200 கோடி ரூபாய் கலைஞர் டிவி -2ஜி வழக்கில்
   எட்டு மாதங்கள் திஹார் சிறையில் இருந்து விட்டு,
   ஜாமீனில் வெளி வந்திருக்கும் திருமதி கனிமொழி –

   இவர்கள் இரண்டு பேரையும் இரண்டு பக்கத்திலும்
   வைத்துக் கொண்டு தான்
   கலைஞர் 93 வயதில் ஊழலில்லா ஆட்சி தர,
   தனக்கு ஓட்டுப்போடும்படி
   தமிழகத்தை வலம் வருகிறார்.//

   இதனைப் பற்றி உங்கள் கருத்து என்ன ?
   அதையும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.