” தீண்டத்தகாதவர் யார் ” ..? வேதம் ஓதுவது சாத்தானா- கலைஞரா…?

.

.

 

 

குடி என்றால் என்னவென்றே அறியாமல் இருந்த ஒரு தலைமுறையை,
ஒட்டுமொத்தமாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாக்கி விட்டு –

” குடிப்பவர்கள் தீண்டத்தகாதவர்கள் ” என்று சொன்னால்
அது சாத்தான் வேதம் ஓதுவது போல் அல்லாமல்,
கலைஞர் பொதுக்கூட்டத்தில் பேசுவது போலவா இருக்கிறது….?

——-

தஞ்சையில் கலைஞர் பேசுகிறார் –
” இந்த நாட்டைப்பற்றி கவலைப்படாதவர்கள் கையில் ஆட்சி சிக்கி
இருக்கிறது. சிக்கிய ஆட்சியை மீட்டு மக்களை காப்பாற்ற வேண்டும்.
என்னுடைய மக்களை காப்பாற்ற வேண்டும். “
( http://www.vikatan.com/news )

கலைஞர் காப்பாற்றத் துடிக்கிற அந்த “என் மக்கள்” – யார் …?
200 கோடி ரூபாய் 2ஜி கலைஞர் டிவி கருப்புப்பண விவகாரம்
சம்பந்தப்பட்ட வழக்கில் எட்டு மாத காலம் டெல்லி “திஹார்” சிறையில்
இருந்து விட்டு, வழக்கு இன்னமும் முடிவடையாததால்
இப்போதும், ஜாமீனில் இருக்கும் மகளா…?

k at tanjore meeting

 

மேடையில் அவருக்கு வலது புறமாக அமைந்திருக்கிறாரே –
ஏர்-செல்-மேக்ஸிஸ் – எழுநூற்று சில்லரை கோடி ரூபாய்
ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணையில் சிக்கி இருக்கும்,

மத்திய அமைச்சராக இருந்தபோது கொடுக்கப்பட்ட BSNL கேபிள்
தொடர்பை, தனது சன் டிவி வியாபாரத்திற்காக பயன்படுத்திய
400 கோடி ஊழல் வழக்கில், சுப்ரீம் கோர்ட் வரை சென்று
முன் ஜாமீன் பெற்று வந்திருக்கும் –
அருமைப் பேரனா….?

ஆமாம் – மேடையில் கலைஞருக்கு இடதுபுறமாக அமர்ந்திருக்கும்
அம்மையாருக்கும் திமுகவுக்கும் எந்த சம்பந்தம்…?
இவர் தான் திமுகவின் தலைவர்…,
அவர் தலைவரின் துணைவியாக இருக்கலாம்…. ஆனால்,
தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அந்த அம்மையாருக்கு
ஏன் மேடையில் முக்கிய இடம் …?
ஓ – அவரும் தன் மக்களில் சேர்த்தியா…?

அந்த அம்மையாருக்கு 12 கோடியே சொச்சம் அளவிற்கு
சொத்து இருப்பதாக கலைஞர் தேர்தல் கமிஷனிடம் வாக்குமூலம்
கொடுத்திருக்கிறாரே – அந்த அளவு சொத்து அந்த அம்மையாருக்கு
எப்படி வந்தது….?
“சிக்கிய ஆட்சியை மீட்டு மக்களை காப்பாற்ற வேண்டும்.
என்னுடைய மக்களை காப்பாற்ற வேண்டும். “

– 93 வயது கலைஞர் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற துடிப்பது
” தன் மக்களை ” காப்பாற்றவே என்பது நன்றாகவே புரிகிறது.

 

Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

” தீண்டத்தகாதவர் யார் ” ..? வேதம் ஓதுவது சாத்தானா- கலைஞரா…? க்கு 9 பதில்கள்

 1. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  மக்கள் நலம் மக்கள் நலம் என்றே பேசுவார்.. தம் மக்கள் நலம் என்பதிலே குறியாக இருப்பார். இது கருணானிதிக்குப் பொருந்தும். அவர் அதனால்தான் “என் மக்கள்” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லியுள்ளார்.

  நீங்கள் அநியாயத்துக்கு ராசாத்தி அம்மாளின் கணக்கில் காட்டிய பணத்தை 35 கோடிக்கு மேல் குறைத்துவிட்டீர்களே.. (தினமணி 42 கோடி என்று குறிப்பிடுகிறது. தினகரன் 64 கோடி என்று குறிப்பிடுகிறது. கீழே கொடுத்துள்ளேன்.

  அமைதியாக இருக்கும் மு.க.தமிழரசுவின் சொத்து மதிப்பையும், முகவின் பெண் செல்வியில் சொத்துமதிப்பையும் பார்த்து மலைத்துவிடவேண்டாம்.

  நாளைக்கு முக ஸ்டாலின், கனிமொழியைக் கழட்டிவிடக் கூடாது என்பதற்காக ராசாத்தி அம்மாளுக்குக் கட்சிப் பதவி கொடுத்திருக்கிறாரோ அல்லது திமுக அறக்கட்டளையில் ஒரு பதவி கொடுத்திருக்கிறாரோ.. யாருக்குத் தெரியும்?

  அது சரி.. 1 லட்சத்து 70 ஆயிரம் கோடியைக் கொள்ளையடித்த ஆ.ராசாவை எங்கேயும் காணவில்லையே.. ஒருவேளை 2 ஜி கொள்ளையை மக்கள் ஞாபகப் படுத்திக்கொள்ளக்கூடாது என்பதற்காக இருக்குமோ?

  தினமணி – கருணாநிதியின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 13.43 கோடியாகவும், தயாளு அம்மாளின் மொத்த சொத்து மதிப்பு ரூ.7.52 கோடியாகவும், ராசாத்தி அம்மாளின் சொத்து மதிப்பு ரூ. 42 கோடியாகவும் உள்ளது. கருணாநிதியின் சொத்து மதிப்பு 2011-இல் ரூ. 4.93 கோடியாகவும், தற்போது ரூ. 13.43 கோடியாகவும் அதிகரித்துள்ளது

  தினகரன் – மேலும், ராசாத்தியம்மாள் பெயரில் வங்கி கடன் ரூ.11 கோடியே 94 லட்சம் என்றும், தயாளு அம்மாள் பெயரில் 11 கோடியே 94 லட்சத்து 37 ஆயிரத்து 427 வங்கி கடன் என்றும் கூறப்பட்டுள்ளது. கருணாநிதி தாக்கல் செய்த வேட்பு மனுவில் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.62 கோடியே 99 லட்சத்து 35 ஆயிரத்து 476 என்று கூறப்பட்டுள்ளது

 2. srinivasanmurugesan சொல்கிறார்:

  எப்படி…..எப்படி….. இவரால் ஏதும் அறியாதவர் போல் பேச முடிகிறது.திருடன் “திருடன் பிடி…. பிடி”என்று கத்திக்கொண்டே முன்னால் ஓடுவது போல் இருக்கிறது.

  • Narasimhan சொல்கிறார்:

   உங்களுடைய கருத்துத்தான் எனக்கும் . தீவட்டி கொள்ளைக்காரன் கூட்டத்தோடு சேர்ந்துகொண்டு பிக்பாக்கட் திருடனை துரத்துவது போல இருக்கிறது. இருந்தாலும் எந்த கொள்ளையும் ஊரை ஏமாற்றுவதையும் மஞ்சத்துண்டு தன பாணியில் நாசுக்காக செய்வதை ரசிக்கவேண்டும் .

 3. selvarajan சொல்கிறார்:

  // இந்த நாட்டுக்காக, தான் வாழ்ந்த வீட்டையே
  கொடுத்தவர் எங்க தலைவர். அவர் வீட்டை
  ஆஸ்பத்திரிக்கு கொடுக்கச்
  சொல்லி யாரும் மனுவா போட்டாங்க?
  மகாத்மா காந்தி கூட தன்னோட சபர்மதி ஆசிரமத்தை
  யாருக்கும் எழுதி வைக்கல்லையே! —நேருவோ, இந்திராவோ தங்களோட பண்ணை வீடுகளை
  இந்த நாட்டுக்காக எழுதி வெச்சாங்களா ?
  தேசத் தலைவர்கள்
  கூட செய்யாத காரியத்தை என் தலைவர்
  செஞ்சிருக்காரய்யா.
  வீடு ஒண்ணு தான்யா அவர்கிட்ட மிச்சம் இருந்துச்சு.
  அதை வாங்க அவர் பட்ட பாடு கொஞ்சமா நஞ்சமா?
  கதை வசனம் எழுதி,
  பெரியார்கிட்ட வேலை பார்த்து,
  குடியரசு பத்திரிகையில் சப் எடிட்டரா இருந்து
  வாங்கிய வீட்டை
  கொஞ்சம் கூட யோசிக்காம ஆஸ்பத்திரிக்கு எழுதி
  வெச்சிருக்கார்.
  இவ்வளவு பெரிய தியாகத்தை ஜெயலலிதா
  பித்தலாட்டம்னு சொல்லுது.
  நான் பகிரங்கமா சொல்றேன்.
  ” நாங்க நடத்தறது குடும்ப ஆட்சி தான்.-”
  எனக்குப்பிறகு என் வீடு, என் பையனுக்கு தானே சொந்தம் ?
  அந்த மாதிரி இந்த நாடும், என் தலைவரோட
  வாரிசுகளுக்கு தான் சொந்தம்.
  100 வயசு தாண்டி வாழக்கூடிய என் தலைவருக்குப்
  பின்னால், அவர் மகன் ஸ்டாலின் தான் தமிழ் நட்டை
  ஆளுவார். எங்களுக்கு குடும்பம் இருக்கு. அதனால
  குடும்ப ஆட்சி நடத்துறோம். ஆனா .. உங்களுக்கு ? // …. அய்யா … ! இது அன்றைய தி .மு.க. ” அதிரடிப் பேச்சாளர்.வெற்றிகொண்டான்.” என்பவற்றின் மேடை பேச்சு… ஜனவரி 25, 2011 அன்று வெளிவந்த இடுக்கையில் உள்ளது — இந்த நாட்டைப்பற்றி ஏகப்பட்ட — மிதமிஞ்சிய — அதிகமான கவலை கொண்டவர் — தன் ” வாரிசுகளுக்காக ” பாடு படுவதை ” அவரது கட்சி பேச்சாளர் எவ்வளவு தீர்மானமாக கூறி — தமிழ்நாட்டை கிரய பத்திரம் எழுதி — பதிவு செய்கிறார் … ? ஊரை ஏமாற்ற தனது ஒரே ஒரு வீட்டை இந்த நாட்டுக்காக கொடுத்த பரோபகாரி — மிக பெரிய சொத்தான [ தமிழ் நாட்டை ] வேறு யாரும் பாத்யதை கொண்டு விடாமல் இருக்க — கலைஞர் தனது 93 வயதிலும்கடுமையா உழைக்கிறார் … !!!

 4. செ. இரமேஷ் சொல்கிறார்:

  ” எனக்கு ஓய்வு தாருங்கள் ” என்று திரு.கருணாநிதி கேட்டுவிட்டார். அதனால் மக்கள் தான் இனி அவருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். ஆதலால் அவரை திருவாரூர் மக்கள் தோற்கடித்து விடுங்கள். அவரது வேண்டுகோளை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

  • paamaranselvarajan சொல்கிறார்:

   இதை இப்பாே ஒரு வீரமான செயல் என்று நினைக்கிரானுங்க பாேல இருக்கு .! ஏதாே ஒருவெறி பிடித்து அலையரானுங்க. எவனாவது எதிர்த்து ஒன்று வச்சா தான் திருந்துவானுங்க.நண்பரே கூடிய விரைவில் நீங்கள் அதையும் “கிளிப்பிங்கா” பாேடுவது உறுதி என்று நினைக்கிறேன்…!

 5. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  MK was in the habit of stealing money (coins in those days) from EVR”s coat pocket&was chided by EVR on many occasions.Did he mention this in his Nenjukku needhi?

  • srinivasanmurugesan சொல்கிறார்:

   உங்களிடம் இது குறித்து விபரங்கள் இருந்தால் தயவு செய்து அனைவரும் அறியும் வகையில் பதிவிடுங்களேன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.