” அறிவுஜீவி ” நாயகன் ….!!!

 

 

 Kamal Haasan donates brand endorsement salary of Rs 16 crore to help HIV-affected children


Kamal Haasan donates brand endorsement salary of Rs 16 crore to help HIV-affected children

 

கீழே இருப்பது இன்று வந்திருக்கும் ஒரு செய்தி –

கமல் ஹாஸன் தனது மகள் ஸ்ருதி ஹாஸனுடன் சேர்ந்து
முதன்முதலாக நடிக்க உள்ளார். அந்த படத்திற்கு சபாஷ் நாயுடு
என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் வரும் மே மாதம் 16ம் தேதி நடக்கும்
சட்டசபை தேர்தலில் வாக்களிக்கப் போவது இல்லை என
தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
என் புதிய படத்தின் படப்பிடிப்பு தேர்தல் நடக்கும் அதே மே 16ம் தேதி
துவங்குகிறது. அதனால் நான் படப்பிடிப்புக்கு சென்றுவிடுவேன்.
தேர்தலில் வாக்களிக்க மாட்டேன்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக வாக்குச்சாவடிக்கு
சென்றேன். அங்கு என்னவென்றால் என் வாக்கை யாரோ போட்டுவிட்டு
சென்றுவிட்டார்கள்.

இந்த சட்டசபை தேர்தலில் வாக்களிக்கலாம் என்று தான் இருந்தேன்.
ஆனால் வாக்காளர் பட்டியலில் என் பெயரே இல்லை என்று
கூறிவிட்டார்கள்.

தேர்தல் ஆணைய அதிகாரி என் நெருங்கிய நண்பராக
இருந்தும் இப்படி உள்ளது என்றார்.

( http://tamil.oneindia.com/news/tamilnadu/
my-name-is-not-voters-list-kamal-haasan-252493.html)

——————–

இந்த “அறிவுஜீவி” க்கு சில கேள்விகள் –

எதற்காக இந்த பேட்டி …?
படத்துவக்க விழா என்றால், அதைப்பற்றி மட்டும் பேசிவிட்டு
போக வேண்டியது தானே …?
தேர்தல், ஓட்டுபோடுவது பற்றியெல்லாம் எதற்காக பேச வேண்டும்…?
தனது அறிவுஜீவித்தனத்தை நிரூபிக்கவா… ?

தேர்தல் தேதி இரண்டு மாதங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டு
விட்டது. இவரது சொந்தப்படம் என்பதால் படப்பிடிப்பு தேதியை
முடிவு செய்பவர் இவர் தான். தேர்தல் தேதி தெரிந்த பிறகும்,
படப்பிடிப்பு தேதியை மாற்றாதது யார் தவறு….?
இவருக்காக, தேர்தல் கமிஷன் தேர்தல் தேதியை மாற்றி வைக்க
வேண்டுமென்று நினைக்கிறாரா …?

இந்த தடவை, 100 சதவீதம் ஓட்டுப்பதிவு நடக்க வேண்டுமென்று
தேர்தல் ஆணையம் முனைந்து செயல்படுகிறது.
எக்கச்சக்கமான விளம்பரங்கள்…
துண்டுப் படங்கள்…
இளைஞர்களை ஈர்க்கும் வண்ணம் வலைத்தள செயல்பாடுகள் –
பள்ளிக்கூட சிறுவர்கள் எல்லாம் கூட
விளம்பரங்களில் இது குறித்து பேசுகிறார்கள்.
இவர் இந்த நாட்டு குடிமகன் தானே……?

இத்தனையும் நடந்து கொண்டிருக்கும்போது, சர்வசாதாரணமாக –
தேர்தல் அன்றைக்கு எனக்கு படப்பிடிப்பு இருக்கிறது
எனவே ஓட்டுப்போட மாட்டேன் என்று சொல்கிற ஜென்மத்திற்கு
பெயர் அறிவுஜீவியா …?

இவர் ஓட்டு போடட்டும் – அல்லது போடாமல் ஓடட்டும் –
அதை மெனக்கெட்டு செய்தியாளர்களிடம் தெரிவிப்பானேன்….?

அந்த மிக முக்கியமான செய்தியை –
செய்தியாளர்கள் மூலம் நாட்டு மக்களுக்கு தெரிவித்து,
ஓட்டு போடுவது ஒன்றும் அவ்வளவு முக்கியமான வேலை இல்லை
என்று சொல்ல விரும்புகிறாரா …?

வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் சரியாக இருக்கிறதா என்று
சரி பார்த்துக்கொள்ளவும், விடுபட்ட பெயர்களைச் சேர்க்க
விண்ணப்பிக்கும்படியும் அறிவுருத்தி, தேர்தல் கமிஷன் ஏகப்பட்ட
தடவை அறிவிப்புகள் வெளியிட்டதே.
அதில் ஒன்றைக்கூட இவர் பார்க்கவில்லையா …?
“போத்தீஸ்” விளம்பரமாவது பார்த்திருப்பாரே …?

சரி… தன் பெயர் விடுபட்டிருக்கிறது என்று தெரிந்த பிறகு,
வேட்பாளர் பட்டியலில் தன் பெயரைச் சேர்க்க
இவர் எடுத்த முயற்சி என்ன ?

தேர்தல் கமிஷனர் இவருக்கு நெருங்கிய நண்பராக இருந்தால்,
இவர் பெயர் பட்டியலில் இருக்கிறதா இல்லையா என்று பார்ப்பது தான்
அவரது வேலையா …? இது என்ன உளறல்…?

 

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to ” அறிவுஜீவி ” நாயகன் ….!!!

 1. CHANDRAA சொல்கிறார்:

  KM IYYAH INDHA AALU EPPAVUME EDHAVATHU PINAATTHINDU ERUPPAPPALE
  EPPALLAM ELAYA THALAIMURAIYUM IVARE KANDUKKIRATHILLE………….
  VOTTUKKU KASU VANGUM MANITHARGALI PATTRIYA KARUPPUPPANAM VANGUM KAMAL PESA YOGYATHAI ELLAI……….

 2. CHANDRAA சொல்கிறார்:

  These cine actors amassed huge money from star cricket
  actors like kamal never bothered to question the exorbitant ticket costs in theatres
  these actots gathered enormous money from sponsors political parties adds
  during star cricket
  if kamal is a YOGGIAN he could have adviced his cine friends
  not to get money towards donation charity for nadigar sangam….
  kamals recent speech about mahathma also invited much criticisms
  from the gathering……….thank god
  he did not talk about the existence of god……. IN HIS RECENT SPEECHES…….

 3. Raghuraman N சொல்கிறார்:

  I read somewhere (probably Vikatan) that election commission also provided his voter id with details. So his name is there in the list

  Though he says he is not supporting (or opposing) any party, his statements are always biased.

  Watch out for more tamasha –

  scene 1. MK will address his concerns in one of the public meeting and request him to vote.
  scene 2. KL will also say that he reconsidered his decision and voted – by that he did great service to the democratic nation.
  scene 3. Post election – after the results – according to the ruling party, he will make a statement about his statement and action in any of the non-related functon.
  scene 4. Since Vijay TV is restarting the neengalum vellalam or kodi program, he will be a participant in one of the episodde and the anchor will raise this point. His response will touch all the countries in the world and their electoral system – but you will not get a firm answer.

  I am tired – I can think of many scenes… like this.

  Raghuraman N

 4. tyaguu சொல்கிறார்:

  சரியான பேத்தல்.சென்னை மழையின்போது இதேபோல உளரிக்கொட்டி அசிங்கப்பட்டார்.

  வெகுஜன மனோபாவத்திற்கு எதிராகப்பேசுபவர்தான் அறிவுஜீவி என்று யாரோ அவரிடம் சொல்லியிருக்கிறார்கள்

 5. selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! —- ” அறிவுஜீவி ” யா .. ? — ” அறிவு .? ஜீவி .! ” .. யா …. ?

 6. today.and.me சொல்கிறார்:

  அன்பின் காமை ஜி,

  இவர் அரைகுறை ஜீவியாகவே இருந்துவிட்டுப்போகட்டும்.
  இவர் சொன்ன மெண்டல்தனமான ஸ்டேட்மெண்ட்டை உடனேயே தேர்தல் ஆணையம் மறுத்ததோடு, அவர் வந்து தனது வாக்கைப் பதிவு செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது தெரியுமா?

  கடந்த தேர்தலின்போது தேர்தல் ஆணையத்தின் விளம்பரங்களில் ‘வாக்குரிமை எனது முன்னுரிமை; என ஓட்டளிப்பதுபற்றி ஆங்காங்கே தட்டிகளில் இவர் படத்துடன் விளம்பரப்படுத்தியபோது அது முன்னுரிமையாகப் படவில்லையா?

  இந்த வருடம் அதற்கான தூதராக நடிகர் சூர்யாவை முன்னிலைப்படுத்தியவுடன் இவர் தனக்கு பப்ளிசிட்டி வேண்டும என்று தேர்தல் ஆணையத்தின் மீதே துப்புகிறாரா?

  இது என்ன? மஞ்சக்கடுதாசியா?

  https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13103371_10208078780920969_7215132309013075894_n.jpg?oh=96fbd6ba2259ae84a91e5de5c1a96f36&oe=57A5CADE

  இதை போட்டோஷாப் – பொய் என்று கூற குதித்தோடிக்கொண்டுவரும கமல்பித்தர்களுக்காக

  http://electoralservicessearch.azurewebsites.net/searchbyname.aspx
  ID Card No. RJE0288134

  https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13103471_1134148646641683_2902147648304041862_n.jpg?oh=13e8b47ac1afed604e11829f85014050&oe=57B69F6D

  இவருக்கெல்லாம் தேர்தல் அதிகாரி இவ்வளவு மரியாதை கொடுப்பதே தவறு என்பதுதான் என் கருத்து.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப டுடேஅண்ட்மீ,

   நீங்கள் தந்துள்ள விரிவான ஆதாரங்களுக்கு மிக்க நன்றி நண்பரே.

   திருவாளர் கமலஹாசனின் முகத்திலும், பேச்சிலும் தெரியும்
   அலட்சியத்தைப் பார்த்தாலே தெரிகிறதே – இவர் இந்த விஷயத்திற்கு
   எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று..

   இவரைக் கொண்டாடும் ரசிகர்கள் தான் வெட்கப்பட வேண்டும்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 7. nparamasivam1951 சொல்கிறார்:

  ஆம். இவரை கொண்டாடும் ரசிகர்கள் தான் வெட்கப்பட வேண்டும், நாம் இவரைப் போய் கொண்டாடினோமே என வருத்தப்பட வேண்டும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.