பினாமிக்கும், சுனாமிக்கும் போர் – கணக்கை துவங்கினார் சு.சுவாமி….!!!

 

augusta helicopter

” அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ” – விவிஐபி சொகுசு ஹெலிகாப்டர்களை
வாங்குவதில் நிகழ்ந்த பேர ஊழல் சம்பந்தமான விவாதங்கள் ஏற்கெனவே
கொதித்துக் கிடக்கும் நாட்டில் அரசியல் அனலைக் கக்குகின்றன.

பாஜக அரசால் ராஜ்யசபாவிற்கு நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும்
டாக்டர் சுப்ரமணியன் சுவாமி, மோடிஜிக்கு தான் பட்டிருக்கும்
செஞ்சோற்றுக் கடனை தீர்த்து வைக்கும் முயற்சியை முதல் நாளே
துவக்கி விட்டார்.

ஊழலில் திருமதி சோனியா காந்தியின் பங்கைப்பற்றி அவர் பேச
முற்பட்டதன் விளைவு, பாராளுமன்றத்தில் அமளி…….

 

uproar in parli

முதலில் நம்மைப்பொருத்த வரையில் ஒரு விஷயத்தை
எந்தவித சந்தேகமும் இல்லாமல் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

யுபிஏ – காங்கிரஸ் கூட்டணி அரசின் எண்ணற்ற ஊழல்களில்
இதுவும் ஒன்று… ஒன்றா, இரண்டா – எடுத்துச் சொல்ல –
என்கிற மாதிரி, அந்த கால கட்டத்தில் நிகழ்ந்த ஊழல்களை
சொல்ல ஆரம்பித்தால் அடுக்கிக்கொண்டே போகலாம்.

இப்போதைய ஹெலிகாப்டர் ஊழல் புதியதா …?
இல்லை…. 2010-ல் ” அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ” -என்கிற
பிரிட்டிஷ்-இத்தாலிய கம்பெனியோடு 12 ஹெலிகாப்டர்களை
வாங்குவதற்கு அன்றைய காங்கிரஸ் கூட்டணி அரசு போட்ட
ஒப்பந்தத்தில் இடைத்தரகர்கள் ஈடுபட்டு இருப்பது 2012 -லேயே
தெரியவந்து, 2013-ல் இது இந்தியாவில் பெரும் அளவில்
பேசப்பட்டு, நமது முன்னாள் விமானப்படை தளபதி தியாகி
மற்றும் அவரது உறவினர்கள் பலரின் பெயர்களும் வெளிவந்து,
சிபிஐ, மற்றும் அமலாக்கப்பிரிவு நடவடிக்கைகள் தொடங்கின.

ஹெலிகாப்டர்கள் வாங்கும் முயற்சி கைவிடப்பட்டு, அதற்கான
ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டு விட்டன.

இதில் லஞ்சம் வாங்கியவர்கள் யார் யார் என்பது விசாரிக்கப்பட்டு
வந்தது…… இதெல்லாம் ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி – ஆட்சியில்
இருக்கும்போதே துவங்கி, நடந்து கொண்டிருந்தவை.

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் வரை இந்த விவகாரத்தில்
உண்மையான குற்றவாளிகள் பெயர்கள் வெளிவரும் என்று யாரும்
எதிர்பார்க்கவில்லை. எனவே, அதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.

ஆனால், 2014 மே மாதம் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகும்,
இந்த வழக்கில் குறிப்பிடத்தக்க விதத்தில் முன்னேற்றங்கள்
எதுவும் ஏற்படவில்லை. விசாரணை நத்தை வேகத்தில் தான்
சென்று கொண்டிருந்தது.

இப்போது திடீரென்று இந்த விவகாரம் சூடு பிடிக்க காரணம்-

அண்மையில், இத்தாலிய உயர்நீதிமன்றத்தில், இந்த ஒப்பந்தத்தில்,
லஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பது நிரூபணமாகி இருப்பதாகக்கூறி,
சம்பந்தப்பட்டவர்களுக்கு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டிருப்பது
தான்.

லஞ்சம் கொடுத்தவர்களுக்கு தண்டனை கிடைத்து விட்டது.
லஞ்சம் வாங்கியவர்கள் நிலை என்ன ? – என்கிற கேள்வி எழுகிறது.

அதை கண்டுபிடிக்க வேண்டியதும், நிரூபிக்க வேண்டியதும்,
இந்திய துப்பறியும் நிறுவனங்களான, சிபிஐ மற்றும்
அமலாக்கத்துறைகளின் வேலை.

டாக்டர் சு.சுவாமி, பாராளுமன்றத்தில், ராஜ்ய சபாவில் திருமதி சோனியா காந்தியின் பெயரை சொன்னவுடன், காங்கிரஸ் உறுப்பினர்கள் பொங்கி எழுந்தனர். அவை ரணகளமாகியது. செயல்பாடுகள் தடைபட்டன.

எந்தவித ஆதாரமும் இல்லாமல் காங்கிரஸ் தலைவியின் பெயரை
எப்படி சம்பந்தப்படுத்திக் கூறலாம் என்பது காங்கிரஸ் தலைப்பின் வாதம்.

இந்த விஷயத்தில் ஒன்றை கூற வேண்டும் –

இத்தாலிய கோர்ட்டில், லஞ்சம் கொடுக்கப்பட்டதும், லஞ்சம்
கொடுத்தவர்கள் பெயரும் நிரூபிக்கப்பட்டதே தவிர, அதில், இந்தியாவில்
லஞ்சம் வாங்கியவர்கள் யார், யார் என்பது நிரூபிக்கப்படவில்லை.
கோர்ட்டில், ஆவணமாக – கையால் எழுதப்பட்ட, யாருடைய
கையெழுத்தும் இல்லாத, ஒரு வெத்துக் கடுதாசி சமர்ப்பிக்கப்பட்டது.

அதில் திருமதி சோனியா காந்தி
உட்பட சிலரின் பெயர்கள் இருந்தன. அந்த கடிதத்தை இடைத்தரகர்
ஜேம்ஸ் கிறிஸ்டியன் மைக்கேல் என்பவர், டெல்லியில் இருந்த
பிரிட்டிஷ் தூதரகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, எழுதி இருந்ததாக
கூறப்படுகிறது. அதில் ஹெலிகாப்டர் ஆர்டரை முடிவுசெய்வதில்
இன்னின்னார் முக்கியமானவர்கள் என்றும் அவர்களை ஒப்புக்கொள்ளச்
செய்வது முக்கியம் என்றும் எழுதப்பட்டிருக்கிறது.

இந்த, கையெழுத்தே இல்லாத, யார் எழுதியது என்பதையும் ஊர்ஜிதம்
செய்ய முடியாத வெத்துக் கடுதாசி ஒன்றை
இந்திய நீதிமன்றங்கள் ஆவணமாக நிச்சயம் ஏற்றுக் கொள்ளாது.
மேலும், அந்த கடிதத்தில் பணம் கொடுக்க வேண்டும் என்றோ, யாருக்கு
எவ்வளவு கொடுக்க வேண்டும் என்றோ – எதுவும் கூறப்படவில்லை.

இதைத்தவிர, நிஜத்தில் பணப்பரிமாற்றம் ஏற்பட்டது எப்போது ?
எந்த விதத்தில் – என்பதும் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை….

உறுதி செய்யப்பட்ட எந்தவித ஆதாரமும் இல்லாமல் ஒரு விஷயத்தை
திரும்பத் திரும்பக்கூறி எரிச்சலைக் கிளப்ப வைக்க வேண்டும்
என்றால், அது டாக்டர் சு.சுவாமியால் மட்டும் தான் முடியும்…!

மோடிஜி அவரை ராஜ்ய சபாவிற்குள் கொண்டு வந்தது எதற்கு
என்பதை முதல் 2 நாட்களின் நடவடிக்கைகள் தெளிவாக்கி விட்டன.

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் இந்த (சுமார் 250 கோடி ரூபாய் ) ஊழலில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதில் நமக்கு சந்தேகம்  எதுவும் எழவில்லை.

ஆனால், அதே சமயம், விசாரணையை விரைந்து நடத்தி,
ஆதாரங்களை சேகரித்து, வழக்கு தொடர்வதை விட்டு விட்டு,
பாராளுமன்றத்தில் அமர்ந்து கொண்டு, வெறுமனே அமளியை கிளப்பவும்,
தலைப்புச் செய்திகளை உருவாக்கவும் – குற்றச்சாட்டுகளை
அள்ளி வீசுவது சரியான முறையா …?

பாஜக ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நிகழ்பெற்ற முறைகேடுகளில்
இதுவரை எவ்வளவு வழக்குகளில் ஆதாரங்கள் திரட்டப்பட்டு
எத்தனை விசாரணைகள் முடிவடைந்துள்ளன ?
எவ்வளவு வழக்குகள் தொடரப்பட்டன ?

திருவாளர் வாத்ராவின் மீது சாட்டப்பெற்ற குற்றச்சாட்டுகளின்
தற்போதைய கதி என்ன ?

உலக கிரிக்கெட் புகழ் “லலித் மோடி”யின் வழக்கு,
இந்தியாவுக்கு நாடு கடத்தும் விவகாரம் என்ன ஆயிற்று ?

ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேயின் மகனுக்கும்
லலித் மோடிக்கும் ஏற்பட்ட பேரங்கள் எந்த அளவிற்கு
விசாரிக்கப்பட்டன ?

மத்திய பிரதேச முதல்வர் சௌஹானின் புகழ்பெற்ற
“வியாபம்” ஊழல்கள் எந்தகதியில் செல்கின்றன….?

செல்வி மாயாவதியின் மீது, மூடப்பெற்ற வழக்குகள் இப்போது
உத்திர பிரதேச தேர்தல் வருவதையொட்டி, புத்துயிர் பெறுவது
எப்படி ?

புலனாய்வு நிறுவனங்களை பாஜக அரசு தனக்கு சாதகமாக
பயன்படுத்துகிறது என்கிற குற்றச்சாட்டு பலமாக எழுந்துள்ள
நிலையில்,

தலைப்புச் செய்திகளை உருவாக்க சுப்ரமணியன் சுவாமிகளை
தயார் செய்து பயனில்லை….
மக்கள் நம்ப வேண்டுமானால், உருப்படியான
தொடர் நடவடிக்கைகள் தேவை.

இப்போது இந்த ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில் கூட
இடைத்தரகர் ஜேம்ஸ் கிறிஸ்டியன் மைக்கேல்- ஐ
நாடு கடத்தி இந்தியாவிற்கு கொண்டு வருவதற்காக ஆவண
தயாரிப்பு வேலைகள் நடைபெற்றுக் கொண்டு வருவதாக
மத்திய அரசு சொல்கிறது.

தற்போது இந்த ஆசாமி துபாயில் தங்கி, தொழில் நடத்திக்கொண்டு
இருக்கிறார் – செய்தி நிறுவனங்களுக்கு பேட்டி கொடுத்துக்
கொண்டிருக்கிறார்….! இந்திய புலனாய்வு நிறுவனங்களுடன்,
தான் ஒத்துழைப்பு தருவதற்கு
தயாராக இருப்பதாக அவரே நேற்று துபாயில் அறிவித்திருக்கிறார்.

இந்தியாவிற்கு வந்தால், தான் கைது செய்யப்படக்கூடும் என்றும்,
தன் தொழில், குடும்பம் ஆகியவை ஆண்டுக்கணக்கில் பாதிக்கப்பட கூடும் என்றும், புலனாய்வு நிறுவனங்கள் துபாய்க்கு வந்தால்,
எந்தவித விசாரணக்கும் தான் ஒத்துழைக்க தயார் என்றும் கூறுகிறார்.
நாடுகடத்தும் முயற்சிகள் ஒருபக்கம் இருக்கட்டும்.
இந்திய புலனாய்வு நிறுவனங்கள் துபாய்க்கு சென்று அந்த ஆசாமியை
விசாரிப்பதிலும், மேற்கொண்டு ஆதாரங்களை திரட்டுவதிலும்
என்ன தடங்கல் இருக்க முடியும்….?

குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவதிலும்,
தலைப்புச் செய்திகளை உருவாக்குவதிலும் மட்டும் ஈடுபாடு
காட்டினால் போதுமென்று பாஜக அரசு நினைக்கிறதா ?

குற்றவாளிகளின் மீது விரைவான தொடர் நடவடிக்கைகள்
எடுக்கப்பட வேண்டும் என்பதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள்.

 

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to பினாமிக்கும், சுனாமிக்கும் போர் – கணக்கை துவங்கினார் சு.சுவாமி….!!!

 1. B.Venkatasubramanian சொல்கிறார்:

  கே.எம்.,

  நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. சும்மா பட்டாசைக் கொளுத்திப்போட
  யாரால் வேண்டுமானாலும் முடியும். பாஜக அரசு 24 மாதங்களாக
  ஏன் தூங்கிக் கொண்டிருக்கிறது. ? தெரியாமல் சுணங்கிப் போய்
  தூங்கிக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.
  இந்த விஷயம் கோர்ட்டுக்கு வந்தால், ஆதாரங்கள் போதாது என்று
  நிராகரிக்கப்பட சான்ஸ் அதிகம். எனவே, கோர்ட்டுக்கு கொண்டு வராமலேயே
  காங்கிரஸ் தலைமையை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கலாம் என்று நினைத்திருக்கும். கோர்ட்டுக்கு வராதவரையில் இதைப்பற்றி
  பேசிக்கொண்டே இருக்க சான்ஸ் அதிகம் அல்லவா ?
  மோடி ஒன்றும் தெரியாதவரல்ல. வேண்டுமென்றே தான் இந்த மாதிரி
  விஷயங்களுக்காகவே தான் சு.சு.வை கொண்டு வந்திருக்கிறார்.

 2. selvarajan சொல்கிறார்:

  // பிரான்சிலிருந்து ரபேல் ரக போர் விமானங்களை வாங்குவது
  குறித்து டாக்டர் சுப்ரமணியன் சுவாமி தீவிரமாக எதிர்ப்பு
  தெரிவித்திருக்கிறார். தான் ஏற்கெனவே பிரதமர் மோடிஜியிடம்
  இந்த விமானங்களை வாங்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாகவும்,
  அதையும் மீறி “வேறு அழுத்தங்கள்” காரணமாக, மோடிஜி இந்த
  விமானங்களை வாங்க முடிவு செய்தால், தான் கோர்ட்டை நாடி
  தடையுத்தரவு பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும் நிலை
  உருவாகும் என்று பயமுறுத்தி இருக்கிறார்.இது ட்விட்டர் செய்தியும் வெளியிட்டு இருந்தார் …
  நாம் திரு சுப்ரமணியன் சுவாமி அவர்களுக்கு ஒரு சவால் விட
  விரும்புகிறோம்.
  ” உண்மையிலேயே உங்களுக்கு “தில்” இருந்தால் –
  வெறும் வாய்ச்சவடாலுடன் நிற்காமல்,
  இந்த விமான கொள்முதலுக்கு எதிராக கோர்ட்டுக்கு போய்
  தடை உத்தரவைப் பெறுங்கள் பார்க்கலாம்.”
  அதைச்செய்தால் – உங்களைப் பாராட்டி ஒரு தனி இடுகையே
  போட இந்த வலைத்தளம் தயாராக இருக்கிறது….!!! // என்று ஏப்ரல் 13, 2015 இடுக்கையில் நீங்கள் பதிவிட்டு இருந்திர்கள் …. தற்போது விமானங்கள் வாங்குவது என்று முடிவாகிவிட்டது போல தெரிகிறது — இதைபற்றி நமது ” புது எம் .பி ” சு.சுவாமி ஏதாவது சபையில் பேசுவாரா … ?

  • LVISS சொல்கிறார்:

   Mr Selvarajan ,Mr Swamy may not accept your bait -He may disappoint all of us- He may not do anything just to satisfy us –It is likely that he has been told the reasons for buying Rafale fighter jets –We dont know –Probably there were no “veru azhuthangal” –Sitting so far away we can only make guesses as to what is really going on in a party —

 3. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  corruption has become a way of life for politicians.GOD/super natural power only can correct them.DEIVAM nindru kollum,i”m sure about it.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நேற்றிரவு ஒரு தொலைக்காட்சி பேட்டியில் திரு.சுப்ரமணியன்.சுவாமி,
   இந்த ஹெலிகாப்டர் பேர ஊழலில் பெற்ற லஞ்சப்பணத்தை,
   திருமதி சோனியா காந்தி இரண்டு ஸ்விஸ் வங்கிகளில்
   போட்டிருப்பதாக, வங்கிகளின் பெயருடன் குறிப்பிட்டு
   பேசி இருக்கிறார்.

   அவர் தனக்குத் தெரிந்த இந்த விவரங்களை மத்திய அரசின் புலனாய்வு
   நிறுவனங்களிடம் கொடுத்திருக்கிறாரா ? – அதன் மீது எத்தகைய மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டது / எடுக்கப்படுகிறது என்பதையும் சுவாமி விளக்கினால் தேவலை. இல்லையென்றால், சு.சுவாமி சொல்லும்
   ஆயிரத்தொன்றாவது பொய் என்று தான் இதை எடுத்துக் கொள்ளத் தோன்றும்.

 4. LVISS சொல்கிறார்:

  what was expected to happen when Swamy enters Rajya Sabha happened –For the first time he put Congress in a bind–

 5. today.and.me சொல்கிறார்:

  ஆமாம் … போர்… போர்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.