மதுரையும் கலைஞர் தமாஷ்களும்……!!!

kd with kk at madurai

நேற்று மதுரைக்கு கலைஞர் கருணாநிதி வந்ததையொட்டி
வெளிவந்த செய்திகளிலிருந்து சில சுவையான சுருக்கங்கள் –

————

” முதல்வர் ஜெயலலிதா, சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில்,
ரூ.100 கோடியில் தமிழ்த்தாய் சிலை நிறுவப்படும் என்றார். நான் மேடைக்கு
வந்ததும் சுற்றி சுற்றி பார்த்தேன். எங்குமே தமிழ்த்தாய் சிலையை
காணவில்லை.”

அந்த சிலை நிறுவப்பட்டதா, சிலை எங்கே போனது.
கள்வர் திருடி சென்று விட்டனரா?” என தி.மு.க., தலைவர் கருணாநிதி
நேற்று காட்டமாக கேள்வி எழுப்பினார்.

( தமிழ்த்தாய்க்கு 100 கோடியில் ஏன் இன்னும் சிலை வைக்கவில்லையே
என்று கவலைப்படும் ஒரே தமிழர் கலைஞர்….. !!! )

——–

அண்டை மாவட்டங்கள் தொழில் துறையில் முன்னேற்றம் அடைய வேண்டும்
என்பதற்காக, சேது சமுத்திர திட்டம் தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.
ஆனால் ராமர் கட்டிய பாலம் என்று –
ராவணர் மீது பழியை போட்டு ( …? .. ) திட்டம்
நிறைவேறாமல் தடுத்து விட்டனர். தி.மு.க., தேர்தல் அறிக்கையில்

சேது சமுத்திர திட்டம் பற்றி குறிப்பிடவில்லை.
என்றாலும்
இத்திட்டம் நிறைவேற தி.மு.க., போராடும் என சபதம் ஏற்கிறேன்.

( சேது சமுத்திர திட்டம் திருவாளர் பாலூவின் பாக்கெட்டை நிரப்புவதற்காக
கொண்டு வரப்பட்ட திட்டம். அதான் அதில் 800 கோடியை போட்டாகி விட்டதே…
பாலூவின் பை இன்னுமா நிரம்பவில்லை …? –

– மாய்ந்து மாய்ந்து தயாரிக்கப்பட்ட திமுகவின் தேர்தல் அறிக்கையில்
சேதுசமுத்திர திட்டம் ஏன் குறிப்பிடப்படவில்லை என்பதையும் கலைஞர்
விளக்கினால் தேவலை…..

– மத்தியில் இருப்பது இவர் சொன்னதை எல்லாம் கேட்ட ம.மோ.சிங் அல்ல.
பாஜகவின் மோடிஜி…. கலைஞர் சபதம் ஏற்றால் மட்டும் திட்டம் வந்துவிடுமா..?
சபதம் போடும் முன்பு கலைஞர் கொஞ்சம் யோசிப்பது நல்லது…..!!!)

————

ஜெ., ஆட்சியில், கிரானைட் குவாரிகள் குத்தகைக்கு விடப்பட்டு ஊழலுக்கு
வழிவகுத்தனர்.

( ஜெ.மதுரைக்கு வந்தபோது, கலைஞரின் பேரன் துரை அழகிரி மீது
கிரானைட் ஊழல் வழக்கு இருப்பதாகச் சொன்னாரே….!
அதற்கு பதில் சொல்ல எப்படி கலைஞர் மறந்தார்…? )

—————-

சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரி உடைந்து வெள்ளம் சூழ்ந்தபோது
வீட்டிற்குள் துாங்கி கொண்டிருந்தவர் ஜெ.,
அன்றைய தினம் வெள்ளத்தில் சிக்கிய மக்களை காப்பாற்றியது இந்த கைகள்.
மக்களை காப்பாற்றிய கைகள்.

( இது நிச்சயமாக ஒரு flash news தான்.
– செம்பரம்பாக்கம் ஏரி உடைந்ததாமே …..?
அதுவும் 93 வயது கலைஞரின் கைகள்
வெள்ளத்தில் சிக்கிய மக்களை காப்பாற்றினவாமே…!! )

—————–

மோடி என்ற பெயரில் அன்பு உண்டு. இதுபோன்ற
நடவடிக்கை மீது. மோடி கறாராக இருப்பார் என நம்புகிறேன்.
மக்கள் வரிப்பணத்தை சுருட்டி கொண்டிருப்பவர்கள் மீது மோடி
ஏனோ தானோ என விட்டு விடக்கூடாது.

எனது பழைய நண்பரான மோடி, துணிச்சல் மிக்கவர்
என்பது எனக்கு தெரியும்.

( திடீரென்று மோடி பஜனை….!!!
அதுவும் பக்கத்தில் சின்ன கே.டி..யை வைத்துக் கொண்டே …? )

—————
இது கொசுரு …..

* பேராயர் எஸ்றா சற்குணம் பேசுகையில், ஸ்டாலினை ‘அண்ணன்’
என குறிப்பிட்டார்.

————————

பின் குறிப்பு –

சில விஷயங்களை விவரமாக எழுத நினைத்து ஆரம்பித்தேன்.
அவசர அழைப்பு …. வெளியில் செல்ல வேண்டியிருக்கிறது.
அடுத்த இடுகையில் ஈடு செய்யலாமென்று
இந்த அளவிலேயே பதிவிட்டு கிளம்புகிறேன்…..

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to மதுரையும் கலைஞர் தமாஷ்களும்……!!!

 1. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியபோது ஸ்டாலின் ஊரிலேயே இல்லை. தன்னை அழகுபடுத்திக்கொள்வதற்கு கேரளா போயிருந்தார். கருணானிதியா தண்ணீரில் வந்திருக்கப்போகிறார். சேது சமுத்திரத் திட்டத்திற்கு ஒதுக்கிய பணம் எவ்வளவு சதவிகிதம் கருணானிதிக்குச் சென்றது என்பதை ஆராய்ந்தால் தெரியும். எப்படி தி.மு.காவுக்கு 50,000 கோடி அறக்கட்டளையில் சேர்ந்தது, யார் யார் எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்பதை ஆராய்ந்தால் போதும். எப்படி ஒன்றும் வேலை செய்யாத கருணானிதி பேரன், பொறியியல் கல்லூரிக்கு அதிபரானார் என்பதை யார் கண்டுபிடிப்பது? பழைய நண்பர் மோடி, புதிய நண்பராக ஆவதற்கு, திமுகவுக்கு (கருணானிதி குடும்பத்துக்கு) சில, வருமானமுள்ள பதவிகளும், 2ஜி கேசும், கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி லஞ்சம் பெற்றதும் ‘நீர்த்துப்போகச் செய்தால் போதும். எஸ் ரா சற்குணத்துக்கு, இனி யாரிடம் பல்லை இளித்தால் வாழ்க்கை ஓடும் என்பது புரிந்துவிட்டதனால், ஸ்டாலினை அண்ணன் என்று விளிக்கிறார்.

  இப்போ, எல்லாப் பயலுகளும் கருத்துக் கணிப்பு வெளியிட ஆரம்பித்துவிட்டாங்கள். ஆனாலும், எப்போது ஓட்டுக்கள் பிரிகின்றதோ அப்போதெல்லாம், திமுகாவுக்குத்தான் அது சாதகமாக இருக்கும். ஏனென்றால், அதிமுகவின் 35-40 சதவிகித ஓட்டில், நிறைய பொதுமக்களுடைய ஓட்டு இருக்கும். திமுக ஓட்டு எப்போதும் பிரிவதில்லை. அதற்கு பொதுமக்களின் ஆதரவும் குறைவு.

  இந்தத் தேர்தலில் திமுக அணி, 38-40 சதவிகிதம் வாங்கினால்தான், திமுகாவை மக்கள் ஆதரித்தார்கள் என்று அர்த்தம்.

 2. Raman A V சொல்கிறார்:

  Why you are so biased and always blame DMK? If you are the supporter of ADMK you can openly support JJ. But ask your conscience, which will tell what happened to this state in the last five years… Sorry nothing has happened on the administrative front in the last five years.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப ராமன்,

   1) நான் திமுகவை சாடினால் உங்களுக்கு ஏன் வருத்தம் …?
   கொள்ளைக்காரர்களை கொள்ளைக்காரர்கள் என்று சொல்வதில் என்ன தவறு …?

   2) ஒன்றும் நடக்கவில்லை என்பது உங்கள் கருத்து – அவ்வளவே…
   அது சரியாக இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லையே…?

   என் இடுகைகளை தொடர்ந்து படித்தால், நான் ஏன் இப்படி எழுதுகிறேன்
   என்று புரியும்.

   என் கவனம் யார் வரவேண்டும் என்பதை விட –
   யார் வரக்கூடாது என்பதில் தான் அதிகம்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. paamaranselvarajan சொல்கிறார்:

  ஆண்டுகள் பல கடந்து விட்டால் ” திருடன் தியாகியாகவும்..காெள்ளையர்கள் காெளகையாளர்களாகவும்..ஊழல் பேர்வழிகள் உத்தமர்களாகவும் மாறி விடுவார்களா..?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.