“நான் இந்த பெண் குழந்தையின் தந்தை அல்ல ” – பதவிக்காக – தந்தை ஸ்தானத்தையே உதறிய ஒரு தலைவர்….!!!

.

.

” கனிமொழி தன்னுடை மகளே அல்ல
என்று சொல்லியது — ஒரு காலம் .. !”

– என்று நண்பர் ஒருவர் கடந்த இடுகையின் பின்னூட்டத்தில்
எழுதி இருந்த வார்த்தை என்னை மேலும் சில செய்திகளை
தேடத்தூண்டியது.

நமது அடுத்த முதலமைச்சராக வரத்துடிக்கும் ஒரு தலைவரது
முன் சரித்திரங்கள் இன்றைய தலைமுறைக்கு தெரிய வேண்டாமா ?

இதன் முழு விவரங்களைத் தேடியதில் –
கனிமொழி மாயை என்னும் தலைப்பில் திரு.ஞாநி அவர்கள் கல்கி
வார இதழில் எழுதிய கட்டுரையை மறுபிரசுரம் செய்த
பாலஹனுமான் என்னும் வலைத்தளத்தில் வந்திருந்த ஒரு
பின்னூட்டம் பல தகவல்களைத் தந்தது.

இந்த தகவல்கள் வேறு சில வலைத்தளங்களிலும் கிடைக்கின்றன.
நல்லையா தயாபரன் என்னும் நண்பர் எழுதியுள்ள
பின்னூட்டத்திலிருந்து சில பகுதிகள் கீழே –

————–
கனிமொழி கைதானது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று நிருபர்கள்
கேட்டபோது, உங்கள் வீட்டில் உங்கள் பெண் ஒரு குற்றமும் செய்யாமல்
சிறைக்கு அனுப்பப்பட்டால், என்ன மனநிலையில் இருப்பீர்களோ,
அதே நிலையில் இருக்கிறேன் என்று முழுப்பூசணிக்காயை எப்படியாவது
சோற்றில் மறைப்பதில் உறுதியாக கருணாநிதி இருக்கிறார்.

செய்யாத குற்றத்துக்காக கருணாநிதியின் குடும்ப சண்டையில்
அப்பாவி 3 பேர் தினகரன் ஆபீசில்
எரித்துக்கொல்லப் பட்டதை மறக்க முடியுமா….?

கருணாநிதி கல்லூரியையே மிதிக்காமல் டாக்டர் பட்டம் வாங்குவதை
எதிர்த்த அண்ணாமலை பல்கலை கழக மாணவர் உதயகுமாரை
கொன்றுவிட்டு அவன் போலீசால் நிர்ப்பந்திக்கப்பட்ட தந்தையை விட்டு
‘இறந்தது என் மகனே அல்ல ‘ என்று வாக்குமூலம் கொடுக்க பண்ணியதை மறக்க
முடியுமா?

சம்பத், கண்ணதாசனை கட்சியில் இருந்து நீக்க செய்த
சதிகளை மறக்க முடியுமா?, சட்ட மன்றத்தில் அனந்தநாயகி பேசும்போது குறுக்கிட்டு
பொழிந்த ஆபாச வசைககளை மறக்க முடியுமா?,

காமராஜர் மீது கிளப்பிய அவதூறுகளை மறக்க முடியுமா?; நெடுஞ்செழியனை ஓரம்
கட்ட செய்த மோசடி முயற்சிகளை
மறக்க முடியுமா?,
ஜனநாயகம், முற்போக்கு என்று பேசிக்கொண்டு
முகம்மது பின் துக்ளக் படம் வெளி வராது செய்ய
சம்பந்தப்பட்ட கலைஞர்களை மிரட்டியதை மறக்க முடியுமா? கூலிப்படையை கொண்டு
திரை அரங்கங்களில் இருக்கைகளை
கிழிக்க வைத்து படம் ஓடாது தடுத்ததை மறக்க முடியுமா?;

எம்ஜியாரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் வெளியிடாமல் தடுக்க மறக்க
முயன்றதை முடியுமா?,
எம்ஜியாரை ராமாவரம் பாலத்துக்கு அருகில் தாக்கிட ரௌடிகளை
அமர்த்தியதை மறக்க முடியுமா?

kk

முதன்முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்திருந்த போது,
ஒரு காலத்தில் கலைஞர் கருணாநிதி மேடையேறி பேச
உழைத்துக்கொண்டிருந்த என்.கே.டி.சுபிரமணியம் நடத்திய ஜவகரிஸ்ட் பத்திரிக்கையில்,
சென்னையில் உள்ள மருத்துவமனையில்
1968 ஜனவரி 01 ராசாத்தி என்கிற தர்மாம்பாளுக்கு
ஒரு பெண் குழந்தை பிறந்தது

மருத்துவமனையின் பதிவேட்டில் அந்த பெண் குழந்தைக்கு தகப்பனார்
மு.கருணாநிதி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
யார் அந்த கருணாநிதி..? என்ற ஒரு பெட்டி செய்தியை வெளியிட்டிருந்ததை மறக்க
முடியுமா?

ராசாத்தி..தர்மாம்பாள் யார் என்றே தனக்கு தெரியாது. தனக்கு அப்படி
எந்த பெண் குழந்தையும் இல்லை’’என்று கூறி கருணாநிதி
பரபரக்க வைத்தார்.

நீதிமன்றத்துக்கும் போனார்…பெண் குழந்தை ..மகள்.ஏன்று யாருமே
தெரியாது என்றார்.. செய்தியை பிரசுரித்த அந்த
என்.கே.டி.சுபிரமணியம் அவர்களுக்கு ஆறு மாதம் சிறைத்தண்டனை
கிடைக்கச் செய்ததை மறக்க முடியுமா ?

எந்த பெண் குழந்தையை தன் மகளே இல்லை என மறுத்தாரோ…
எந்த பெண் குழந்தையை வெளியில் சொன்னால்கூட தன் பெயருக்கு
இழுக்கு என மூடி மறைத்தாரோ…,அந்த மகள் கனிமொழிக்காகத்தான்
இன்று …….

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to “நான் இந்த பெண் குழந்தையின் தந்தை அல்ல ” – பதவிக்காக – தந்தை ஸ்தானத்தையே உதறிய ஒரு தலைவர்….!!!

 1. Jayasree சொல்கிறார்:

  Reminds me of my old blog titled “Will the father in Karunanidhi rise up for daughter Kanimozhi?”
  which can be read at http://jayasreesaranathan.blogspot.in/2011/04/will-father-in-karunanidhi-rise-up-for.html

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ஜெயஸ்ரீ அவர்களுக்கு,

   உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

   உங்களின் மேற்கண்ட கட்டுரையிலிருந்தே சில பகுதிகளை நமது
   வாசக நண்பர்களின் வசதிக்காக கீழேயே தருகிறேன் –

   —————————–
   ஜெயஸ்ரீ அவர்களின் கட்டுரையிலிருந்து சில பகுதிகள் –

   …… …… ……
   You did not give her the normal right that any child enjoys – of having a legitimate birth! One can imagine what kind of uncertainty and trauma she would have undergone right from the time she could understand her life until now as she and her mother have to grab whatever they can for their security. It is not without reason that the Hindu Law prohibits taking a second wife when the first one is there. Your scant regard for laws, morals and ethics have not only spoiled generations of people, it also had come back to you as retribution for your immoral acts as a person.

   Personal ethics is the foremost virtue for any human being. You were not truthful to your legitimate wife; you were not truthful to the bond of marriage with her. You might have thought that you have the freedom to do anything disregarding that bond. But with what result? The second family can not enjoy what the first family enjoys. And the first family did not accept the second family until recently. Your daughter Kanimozhi had to grow up with the ill-will of the first family. Your lust has spoiled the peace in both the homes for a long time.

   Like the daughter of your first family, you could have settled this daughter also with a secure and peaceful life. But you brought her into act as a front for you – like how you used different people to fulfill your goals. Everyone knows that the 44 crore assets that you showed for your two wives in the election affidavit were not earned by them. Whatever you got, went in their names. The same is true in Kanimozhi’s case also. Whatever money was given to Kalignar TV was given for your sake and Kanimozhi and Dayalu are mere names on your behalf.

   You have done enough to make your party men behave in immoral or illegal ways. You are working towards making the common man also to become immoral at least at the time of elections. With all these, you want to show yourself as a moral person with no stains in your hands. Now your dear daughter has to pay for the immoral ways for which you are the beneficiary and which was done by her to further your interests.
   Will you come out to exonerate her from this predicament?
   Will you tell the world that she is only a puppet and that it is you for whom the money was given – that it is you for whose sake she acted as told in the charge sheet?
   Will you take up the blame from your daughter?
   Should not a father do this to the daughter if he is really concerned about her?

   —————————————————————————————

   ஆமாம் – இந்த கேள்விகள் எல்லாம் மனசாட்சி என்று ஒன்று
   இருப்பவர்களுக்கு தானே பொருந்தும்…?

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. selvarajan சொல்கிறார்:

  28 Mar 2011 / by Ravoof / in Notes
  // கலைஞரின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்திய ஆனந்த விகடன்- தி மு க அதிர்ச்சி + தொண்டர்கள் கிளர்ச்சி // http://ravoof.com/dmk-anantha-vikatan-expose/… உண்மையில் ” தலீவரு ” பலே கில்லாடி தான் — அப்பப்பா … என்ன குடும்பம் — பாசம் — உறவுகள் — பதவிகள் — சொத்துக்கள் … ! // திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றும் சங்கர மடம் அல்ல. எனக்குப் பின்னால் என் மகன். அவருக்குப் பின்னால் அவரது மகன் என்று பட்டத்துக்கு வருவதற்கு! இந்தக் கட்சியில் பொதுக்குழு, செயற்குழு இருக்கிறது. அதுதான் அனைத்தையும் தீர்மானிக்கும்’ என்பது கருணாநிதி அடிக்கடி சொல்லும் வார்த்தைகள். ஆனால், கட்சியின் பொதுக்குழு, செயற்குழுவை மிஞ்சியதாக இருக்கிறது இந்த ஹோம் கேபினெட்! // அய்யா .. ! படித்தால் பிரமிப்பு மற்றும் வேதனை — அன்றைய ” ஆனந்த விகடனுக்கும் ” இன்றைய அதன் மாற்றத்திற்கும் … எப்படி .. அய்யா .. எப்படி … ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப செல்வராஜன்,

   இன்று காலை தேடிக்கொண்டிருக்கும்போது அந்த கட்டுரையையும்
   பார்த்தேன். அந்த விஷயத்தை தான் அடுத்த இடுகைக்காக
   “ரிசர்வ்” செய்து வைத்திருக்கிறேன். நாளை விவரமாக
   அது குறித்து பேசுவோமே…..!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. gopalasamy சொல்கிறார்:

  என்.கே.டி.சுபிரமணியம் அவர்களுக்கு ஆறு மாதம் சிறைத்தண்டனை
  கிடைக்கச் செய்ததை மறக்க முடியுமா ? தெய்வம் நின்று கொல்லும்

 4. selvarajan சொல்கிறார்:

  நேருவின் – மகளே வருக … நிலையான ஆட்சியை – தருக … ? — இது “தன்மீது இருந்த ஊழல் வழக்குகளுக்கு ” விடிவு காண — அன்று நைனா அடித்த ” டயலாக் ” — இதையே கொஞ்சம் மாற்றி // இந்திராவின் பேரனே வருக, இளம் தலைவரே வெல்க.. மதுரையில் ராகுலுக்கு, ஸ்டாலின் வெல்கம்
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/stalin-made-campaign-madurai-along-with-rahul-gandhi-253085.html … // என்று — இன்று மகன் அடித்த ” டயலாக் ” — மீண்டும் கூடி — கொள்ளையடிக்க தானே … ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   புதிதாக கொள்ளையடிக்க என்பதோடு –

   ” அடித்த கொள்ளையை கூட்டாக மறைக்க ” என்றும் வைத்துக்
   கொள்ளலாமே. முன்பு திமுக மீது மட்டும் குற்றச்சாட்டுகள் இருந்தன.
   இப்போது, ராகுல்ஜி, சோனியாஜி மீதெல்லாம் கூட நேஷனல் ஹெரால்டு, அகஸ்டா ஹெலிகாப்டர் – சார்ஜ் ஷீட்- வகையறாக்கள் என்று நிறைய
   சேர்ந்து விட்டனவே.

   “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை…..! ”

   ஆமாம் இடையில் கலைஞர் ஏதோ சொன்னாரே –
   “கூடா நட்பு கேடாய் விளையும் ” ….

   இளங்கோவன் கூட பதிலடி கொடுத்தாரே –
   “விட்டது சனியன்…? ”

   – அதெல்லாம் கவுண்டமணி சார் மாதிரி
   “அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா ” என்று
   நாம் ஏற்றுக் கொள்ள வேண்டியது தானே…!!!

   வெட்கம் கெட்ட மனிதர்கள்….!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • selvarajan சொல்கிறார்:

    “கூடா நட்பு கேடாய் விளையும் ” …. அய்யா .. ! நீங்கள் அடிக்கடி கூறுவது போல் — வார்த்தை ஜாலம் செய்வதில் கில்லாடி — நம்ம ஆளு … ஏனென்றால் இந்த வாக்கியத்தில் உள்ள ஜாலம் என்னவென்றால் — கூடா நட்புதான் கேடாகும் — கூடி விட்டால் ” நல்லதாகி விடும் ” என்று கூறி இப்போது தப்பித்து கொள்ள தானே … ? அடுத்து அவர் கூறியது தான் ஹைலைட் — ” குதிரை குப்புற தள்ளியதும் அல்லாமல் — குழியும் பறித்தது ” என்கிற வாக்கியம் … இது கலைஞர் டி.வி . மீது — குறிப்பாக மகளின் மீது வந்த ஊழல் வழக்குகளுக்கு அடித்த ” டயலாக் ” … முன்னதற்கு ஒரு விளக்கம் சொல்லி தப்பிக்கலாம் — ஆனால் இதற்கு என்ன விளக்கம் சொல்லி தப்பிப்பார் — என்பது அவருக்கே வெளிச்சம் … ? குழி மூடிய பிறகா … ??

 5. srinivasanmurugesan சொல்கிறார்:

  பத்திரிக்கையாளருக்கு தவறாக கிடைத்த தண்டனைக்கு பரிகாரமே கிடையாதா அய்யா?பல ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற குற்றங்களுக்கு தாமதமாகவேணும் தண்டணைகள் அளிக்கப்பட்டுள்ள போது பத்திரிக்கையாளர் மீது தவறான குற்றச்சாட்டை கூறி சிறைக்கு அனுப்பியதற்கு தற்போது வழக்கு தொடுக்க முடியாதா?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ஸ்ரீநிவாசமுருகேசன்,

   இந்த செய்தி சுமார் 45 ஆண்டுகளுக்கு முந்தையது.
   அந்த பத்திரிக்கையாளர் – அவர் சந்ததி பற்றிய பின் விவரங்கள்
   தேடினாலும் கிடைக்கவில்லை. அனுதாபப்படுவதைத்தவிர
   நம்மால் வேறு ஒன்றும் செய்ய இயலாது.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.