திரு.ஸ்டாலின் திருத்திக் கொள்வேன் என்பது தவறுகளையா – ஊழலையா, அராஜகத்தையா, நில அபகரிப்பையா, கொலை கொள்ளைகளையா ..?

mayor stalin

முதலில் திரு ஸ்டாலின் அவர்கள் NDTV தொலைக்காட்சிக்கு அளித்த
தொலைக்காட்சி பேட்டியைப் பார்த்து விடுவோம் –

இப்போது திரு.ஸ்டாலின் அவர்களுக்கு சில கேள்விகள் –

முதலில் NDTV பேட்டியில் முன்வைக்கப்பட்ட கேள்விகள் குறித்து –

—————————–

கடந்த சட்டமன்ற தேர்தலில் உங்கள் கட்சி மீதான ஊழல் புகார்
பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த தேர்தலில் அந்த ஊழல்
பிரச்சினையை எப்படி கையாள்கிறீர்கள்?

இவர் கொடுக்கும் பதில் –
தெரிஞ்சோ, தெரியாமலோ செய்த தவறுகளை திருத்திக் கொள்ள
தயாராக இருக்கிறோம் என ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் நானே
மக்களிடம் நேரடியாக சொல்லி வருகிறேன்.
” நிதி சார்பாகவோ, அரசு அங்கீகாரம் தொடர்பாகவோ ”
எங்கள் ஆட்களே சில தவறுகள் செய்திருக்கலாம்.

கேள்வி ” ஊழல் ” பற்றியது –
தெரிந்தோ தெரியாமலோ
உங்கள் ஆட்கள் செய்த தவறுகள் பற்றி அல்ல….

———
( லஞ்ச ஊழல், நில அபகரிப்பு, மோசடி, அரசுப் பணிகளில்,
காவல்துறையில் – கரைவேட்டிகளின் தலையீடு, –
இவற்றிற்கெல்லாம் பெயர் ” தவறா “…? )

அதென்ன “நிதி சார்பாகவோ,
அரசு அங்கீகாரம் தொடர்பாகவோ சில தவறுகள் ” …? “

அப்படியென்றால் என்ன, எதைக்குறிப்பிடுகிறீர்கள்…?

————————

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளீர்கள்?
லோக்சபா தேர்தலில் தனித்துப் போட்டியிட்டீர்கள்? எப்படி சமரசம் ஏற்பட்டது?

காங்கிரஸ் கட்சியுடன் ஏற்கெனவே கூட்டணியில்தான் இருந்தோம்.
இடையில், இலங்கைப் பிரச்சினையால் சிறிய பிரிவு ஏற்பட்டது.

————
” கூடா நட்பு கேடாய் முடிந்தது ” என்று கலைஞரும்,
” விட்டது எங்களைப்பிடித்த சனியன் ” என்று evks இளங்கோவனும்
சொன்னது தான் சிறிய பிரிவா….?

ஆமாம் – எப்படி சமரசம் ஏற்பட்டது என்கிற கேள்விக்கு
பதிலைக் காணோமே….! அவமானமாக இருக்கிறதா…?

—————————————–

உங்கள் குடும்ப சர்ச்சைகள் கட்சிக்கு பின்னடைவை
ஏற்படுத்துவதாக கூறப்படுகிறதே?

அது எதிர்க்கட்சியினரின் திட்டமிட்ட பரப்புரை….!!!

————-

– திருவாளர் ” ஸ்டாலினை என்றும் திமுக தலைவராக
ஆக விட மாட்டேன் “
என்று அழகிரி அண்ணன் சொன்னதும்,

” இளைய மகன் 3 மாதத்திற்கு மேல் இருக்க மாட்டான்
என்று சொன்ன மூத்தவன் என் மகனே அல்ல ”
என்று
தந்தை வீட்டை விட்டு விரட்டியதும் –

எதிர்க்கட்சியினரின் திட்டமிட்ட பரப்புரையா …?

———————————-

திமுகவில் ஏன் இன்னமும் அதிகார மாற்றம் ஏற்படவில்லை?

திமுக தலைவர் கருணாநிதி 93 வயதானாலும் 39 வயது இளைஞர்
போல் சிறப்பாக பணியாற்றி வருகிறாரே!

– ” அவர் தான் 93 வயதானாலும், பதவியை விட்டுத்தர மாட்டேன்
என்கிறாரே..” – என்பது தானே உண்மையான பதிலாக இருக்க முடியும் ?

———————————–

பொதுவாக – திரு.ஸ்டாலின் முகத்தில்
ஏன் இவ்வளவு பதட்டம் …? தயக்கம் …?

தன்னம்பிக்கையின்மையும்,
குற்ற உணர்வும் முகத்தில்
தெளிவாகத் தெரிகிறதே….
முதல் முதலாக பேட்டி கொடுப்பவர் போல் ஏன் உதறல்…?

பேட்டி எடுத்தது NDTV ஆங்கில தொலைக்காட்சி….

கேள்வி கேட்ட 3 சீனியர் எடிட்டர்களுக்கும் தமிழ் தெரியாது.
ஆனால், அவர்கள் ஆங்கிலத்தில் கேட்கும் கேள்விகளுக்கு
இவர் தொடர்ந்து தமிழிலேயே பதில் சொல்கிறார்.
அவர்களும் புரிந்து கொண்டது போல் அடுத்த கேள்வியை
ஆங்கிலத்தில் கேட்கின்றனர்.

அப்படியானால் – இடையில் யாரோ, மொழிமாற்றம் செய்து
ஸ்டாலினின் பதிலை அவர்களுக்கு கூறுகின்றார்…
அதை எடிட் செய்து எடுத்து விட்டிருக்கிறார்கள்….

அதென்ன – B.A. பட்டம் பெற்றவரால்,
5 வருடங்கள் சென்னை மாநகர மேயராக இருந்தவரால்,
5 வருடங்கள் தமிழ்நாட்டின் துணை முதல்வராக இருந்தவரால் –

இந்த சாதாரண கேள்விகளுக்கு கூட
ஆங்கிலத்திலேயே பதில் சொல்ல முடியாமல் போகிறது…?

இந்த பேட்டி, தேசிய தொலைக்காட்சியில், ஆங்கிலத்தில் ஒளிபரப்பப்படும்
என்பது தெரிந்தும், ஸ்டாலினால் ஆங்கிலத்தில் பதில்
சொல்ல முடியவில்லை என்பது அவருக்கே அவமானமாக இல்லை…?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to திரு.ஸ்டாலின் திருத்திக் கொள்வேன் என்பது தவறுகளையா – ஊழலையா, அராஜகத்தையா, நில அபகரிப்பையா, கொலை கொள்ளைகளையா ..?

 1. வெ.க.சந்திரசேகரன் சொல்கிறார்:

  இன்றைய தினமணியில் சிறப்பு கட்டுரை பகுதில் திரு பழ நெடுமாறனது கட்டுரை திருவாளர் கலைஞரின் இரட்டை வேடத்தை தோலுரித்து காட்டுகிறது. சுயநலம்,சந்தர்ப்பவாதம் போன்றவற்றிக்கு அகராதியில் அர்த்தம் தேடினால் முத்துவேல் கருனாநிதி என்றே வரும்.

 2. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  Reply by Mr stalin- not satisfactory &unconvincing,of course language we can ignore. communication is more important.

 3. CHANDRAA சொல்கிறார்:

  All know that this guy stalin is highly incompetent .
  Even when he was deputy cm he could not visit southrern districts
  fearing his elder brother alagiri
  It is pathetic to see this man tries all his nefarious
  tactics to get the power
  All feel now that stalin had been projected too much
  in the medias
  and a common man could easily guess predict what stalin is going to speak
  in a given meeting
  One could easily infer his WICKEDNESS in his face
  Our TAMIL NADU WOMEN WOULD UPROOT
  THIS GUY AND HIS PARTY IN THE ELECTION

 4. Jayasree சொல்கிறார்:

  ஸ்டாலின் சொன்னதை மொழி மாற்றம் செய்தார்களோ இல்லையோ, ஸ்டாலினுக்கு யாராவது மொழி மாற்றம் செய்திருந்தால் ஸ்டாலின் வாங்கிய அல்லது வாங்கியதாகச் சொல்லப்படுகின்ற B.A டிகிரியை நாம் நம்பியிருக்கலாம். அவரது ஆங்கில அறிவும் குறைவுதான் என்று இந்த பேட்டியில் தெரிகிறது. இரண்டு கேள்விகளுக்கு சொதப்பி விட்டார். 1-58 மணித்துளிகளில் ஜெயலலிதாவின் inaccessibility பற்றி கேட்கிறார்கள். ஜெயலலிதாவின் பெயரைச் சொல்லவில்லை என்றாலும், அந்தக் கேள்வியில் அவரைத்தான் குறிப்பிடுகிறார் என்று தெரிகிறது. அவரை எளிதில் அணுக முடியாது என்னும் பிரசாரத்தை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்றும், அந்த அணுக முடியாத தன்மையே அவருக்கு ஒரு மிஸ்டிக் இமேஜை, கடவுள் போன்ற இமேஜைத் தருகிறது என்றும் கேள்வியாளர் கேட்கிறார். ஜெயலலிதாவை மட்டம் தட்ட அவர்களாகவே ஒரு சான்ஸ் கொடுத்தார்கள். ஆனால் நம் B.A. பட்டதாரிக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன பதில் சொல்கிறார் என்று மீண்டும் வீடியோவைப் பார்த்து சிரிக்கலாம். கலைஞர் 5 முறை சி.எம் ஆக இருந்தாரென்றும், 6 ஆவது முறையும் அவரே சி எம் ஆக வருவாரென்றும் பதில் தருகிறார். தமிழ் தெரியாததால், கேட்டவர்கள் சீரியஸாக தலை ஆட்டிக் கொண்டிருக்கிறார்கள். நமக்கு சிரிப்பு தாங்கவில்லை. காப்டனிடம் தான் எந்தக் கேள்வியைக் கேட்டாலும், நான் தான் சி எம், நான் தான் சி எம் என்று சொல்லிக் கொண்டிருப்பார். அதையே ஸ்டாலினும் – என்ன கொஞ்சம் மாற்றி எங்கப்பன் தான் சி எம், எங்கப்பன் தான் சி எம் என்று கேள்விக்கு சம்பந்தமே இல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

  அடுத்ததாக 3-18 மணித்துளிகளில், தி மு க – காங்கிரஸ் உறவு பற்றி கேட்கிறார்கள். லோக் சபா தேர்தலில் பிரிந்தீர்களே, இப்பொழுது எதனால் இணைந்தீர்கள் என்று கேட்கிறார். நம்ம அறிவுக் கொழுந்து சொல்கிறார், அதை லோக்சபா எலெக்ஷன் போது பார்த்துக் கொள்லலாம், இப்பொழுது ஒன்றும் சொல்ல முடியாது என்கிறார். 4 நிமிடத்துக்கே இவ்வளவு என்றால், 40 நிமிடம் அர்னாப் போன்றவர்கள் கேள்வி கேட்டால், ராகுலுக்கு தான் ஒன்றும் குறைந்தவனில்லை என்று நிரூபித்து விடுவார் போலிருக்கிறதே.

 5. mani சொல்கிறார்:

  Education and spoken english are not needed for these people as they have amassed huge wealth,
  during their tenure both in central and state govts. only thing they need is the cunningness
  to fool the tamilnadu people with false promises and propaganda and to come back to power
  to protect the huge wealth they have already earned illegally.

 6. gopalasamy சொல்கிறார்:

  NDTV is 100 % congress support TV,; hence automatically supporting DMK. But Stalin is not having any capacity to utilize that opportunity.

  • chandramouly venkatasubramanian சொல்கிறார்:

   Mr stalin has done lot of research in” Namakku Namei ” for which Doctorate(Ph.D)should have been awarded to him. Pls wait &see.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.