தமிழகத்தின் பொக்கிஷங்கள் – கலைஞர் கருணாநிதி, அழகிரி, ஸ்டாலின், கனிமொழி, தயாநிதி, கலாநிதி, உதயநிதி – மற்ற எல்லா நிதிகளும் ……!!!

.

.

நாளை மறுநாள் வாக்குப் பதிவு. நீண்ட நாட்களாக இந்த தளத்தின்
வாசக நண்பர்கள் பலர் நான் இந்த தேர்தலில் எந்த கட்சியை
ஆதரிக்கப் போகிறேன் என்று கேட்டு எழுதி இருந்தார்கள்.
தேர்தலுக்கு முன்னதாக நிச்சயம் எனது கருத்தை நான்
தெரிவிப்பேன் என்று நானும் பதிலெழுதி இருந்தேன்.

கருத்து தெரிவிக்க இன்று தான் கடைசி நாள்.
எனது கருத்தை தெரிவிக்கும் முன்னர் நான் சில விஷயங்களை
எனக்காகவும், இந்த தள நண்பர்களுக்காகவும் நினைவுபடுத்திக் கொள்ள
விரும்புகிறேன்.

முதலில் நினைவிற்கு வருவது கார்டூனிஸ்ட் பாலாவின்
சில வரிகள் –

———————————

என்ன செய்தாவது போரை நிறுத்திவிட முடியாதா என்று
ஒவ்வொருவரும் ஏங்கி தவித்தபோது, கண்ணீர் அஞ்சலி..
மனிதசங்கிலி என்றெல்லாம் நடித்துப் பார்த்தும் முடியாமல்
முதுகுவலி என்று மருத்துவமனைக்குள் ஓடி ஒளிந்து கொண்ட
கபட நாடக நயவஞ்சகர் கருணா அவர்களே..

கவலைப்படாதீர்கள்.. உங்களை அத்தனை எளிதில்
தமிழர்கள் நாங்கள் மறந்துவிடமாட்டோம்.

எந்த நாற்காலிக்காக எமது இனத்தை பலி கொடுத்தீர்களோ..
அந்த நாற்காலி உமக்கு எத்தனை கடைசித் தேர்தல் வந்தாலும்
கனவாகவே போகும்.

பலரும் என்னை நோக்கி வைக்கும் குற்றச்சாட்டு
கருணாநிதியை அதிகம் விமர்சிக்கிறேன் என்பது.

உண்மைதான்..

” நள்ளிரவு இரண்டு மணிக்கு மூலகொத்தளம் சுடுகாட்டில்
எரிந்து கொண்டிருந்த முத்துகுமார் உடலின் வாசனையை
நுகர்ந்து கொண்டிருந்தபோது எடுத்த முடிவு அது.

என் கோடுகள் இருக்கும் வரை வற்றாது அந்த வன்மம்.. ”

————————————-

தொடர்ந்து நினைவிற்கு வருபவை –

கலைஞர் – தனது சொந்த நலனுக்காக,
தன் குடும்ப உறுப்பினர்களின் நலனுக்காக –
தன் பதவியை காப்பாற்றிக்கொள்ள,
மேலும் மேலும் சொத்து, சுகம் தேடிக்கொள்ள –

தமிழ் நாட்டை,
தமிழர்களை –
வஞ்சித்த சம்பவங்கள் ஒன்றா, இரண்டா…?

உலகில் எப்பேற்பட்ட சுயநலவாதியாக இருந்தாலும் கூட,
எவ்வளவு ஏமாற்றுப்பேர்வழியான தலைவராக இருந்தாலும் கூட –

தன் இனத்தவரையே, தன் மக்களையே –
பசப்பு வார்த்தைகளைக் கூறி,
இந்த அளவிற்கு வஞ்சித்திருக்க மாட்டார்கள்.

திருவிளையாடலில் நாகேஷும், சிவாஜியும் – நடத்துவரே
கேள்வி, பதில் நாடகம்…. அதில் வருமே ஒரு வசனம் –
பிரிக்க முடியாதது எது, மறக்க முடியாதது எது என்றெல்லாம் ….
நம்மைப் பொருத்த வரையில், பிரிக்கவும், மறக்கவும் முடியாதது –

துவக்க காலத்தில் –
ஆபாசப்பேச்சுகளும், கலைஞரும் (பாவாடை நாடா முதற்கொண்டு… )
நட்புக்கு, நண்பர்களுக்கு துரோகம் ( கண்ணதாசன், எம்ஜிஆர் …….)

mgr, karunanithi, kannadasan

(சின்ன வயதிலிருந்து ஒன்றாக இணைந்து உயிரோடு கலந்து பழகிய
கண்ணதாசன், எம்.ஜி.ஆர். இருவருக்குமே துரோகம்…..!!!)

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்
உதயகுமாரின் கொலையும், அவரது தந்தையையே
“இவன் என் மகன் இல்லை” என்று சொல்ல வைத்த கொடுமை….,

பிள்ளைகளுக்கும், பேரன்களுக்கும் இடையே மூண்ட
வாரிசுப் போரில் – எரிக்கப்பட்ட தினகரன் பத்திரிகையின்
மூன்று அப்பாவி ஊழியர்கள்….,

தோழியர் லீலாவதி படுகொலை ….,

திரு.தா.கிருட்டினன் படுகொலை …..,

அண்ணா நகர் ரமேஷ் குடும்பத்தினரின் தற்கொலை/கொலை……

2ஜி…. சாதிக் பாஷா கொலை/தற்கொலை …..

சர்க்காரியா கமிஷன் விசாரணைகள்…..

நீரா ராடிய, ஜாபர் சேட் – கனிமொழி டேப் உரையாடல்கள்….

2ஜியும் தகத்தகாய சூரியன் ஆ.ராசா …..,
அவருடன் இணைந்து திஹார் சிறைசென்ற பெண் வாரிசு….,

தள்ளாத வயது தயாளு அம்மாளின் எழுத்தறிவு இல்லாத
பின்னணியை பயன்படுத்திக் கொண்டு, கலைஞர் டிவி
214 கோடி ஊழலில், தந்தையும், தனயனும்
தப்பித்துக் கொண்டு, அவரை சிக்க வைத்தது….

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் –
வக்கீல்களுக்கும், போலீசுக்கும் இடையே நடந்த வன்முறை…

சட்டக்கல்லூரி வளாகத்தில் தொடர்ந்து மாணவர்களிடையே
நடந்த நேரடி ஒளிபரப்பு காட்சிகளுக்கான வன்முறை நிகழ்வுகள் …

சென்னை கோட்டையிலும், மற்ற மாவட்ட அரசு அலுவலகங்களிலும்
கரை வேட்டிகளின் ஆதிக்கம்…..

போலீஸ் நிலையங்களில், கட்சிக்காரர்களின் தலையீடு,
ரௌடிசம்….

ஆயிரக்கணக்கான அப்பாவி பொது மக்ககளின் நிலங்கள்,
கட்சி குண்டர்களால் அபகரிக்கப்பட்டது ….

அளவுக்கு மீறி சொத்து குவித்த வழக்குகளில் சிக்கிய
மாவட்ட ஜாம்பவான்கள் – திருவாளர்கள் விழுப்புரம் பொன்முடி,
திருவண்ணாமலை வேலு, அரக்கோணம் ஜெகத்ரட்சகர்,
காட்பாடி துரைமுருகன், திருச்சி நேரு,
கப்பலோட்டிய தமிழன் பாலூ….. etc.etc……

25 வயதில், எந்தவித சம்பாத்தியமும் இல்லாமல் –
கோடிக்கணக்கில் பணம் போட்டு படக்கம்பெனி நடத்திய
திருவாளர் உதயநிதி ஸ்டாலின்….

ஏர்-செல் மேக்ஸிஸ் ஊழல் வழக்கும் பேரன் தயாநிதியும்…..

bsnl கேபிள்-சன் தொலைக்காட்சி இணைப்பில்
சிக்கிய பேரனின் வழக்கு …..

தனியார் வானொலி, தொலைக் காட்சிகளில்,
திரைப்படத் தயாரிப்பு தொழிலில்,
திரைப்பட வெளியீட்டு தொழிலில்,
புதிய திரைப்படங்களை தொலைக்காட்சிக்கான உரிமம் பெறுவதில்,
பத்திரிகைத் துறையில் –

இத்தனை துறைகளிலும் கலைஞர் குடும்பம் விரிந்து, பரந்து
ஆதிக்கம் செலுத்தியமை ….

அனைத்துத் தொழில் முயற்சிகளும் ஒரு குடும்பத்தின்
கட்டுப்பாட்டிற்குள் சென்ற கொடிய நிலை……

——————————————-

மக்களின் ” மறதி ” என்கிற ஒரே ஒரு பலவீனத்தை
பயன்படுத்திக் கொண்டு, மீண்டும் ஆட்சியைப் பிடிக்க
அனைத்து வித – சாம, பேத, தான, தண்டங்களிலும் ஈடுபட்டிருக்கும்
இந்த குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் …..
அது தமிழர்களின், தமிழ்நாட்டின் சாபக்கேடு ஆகி விடும்….
இவர்களைத் தவிர, வேறு யார் ஜெயித்தாலும்
பெரிய கேடு ஒன்றும் விளைந்து விடாது….

kalaignar-muthirchi

(இந்த முதிர்ந்த வயதிலும் ஒருவருக்கு
இத்தனை பதவி வேட்கையா ? இவ்வளவு சுயநலமா…? )

—————–

போதும்…..
இனி ஒரே வார்த்தையில் என் கருத்தை சொல்லி விடுகிறேன்…

நான் தமிழகத்தின் 234 தொகுதிகளில், எந்த தொகுதியின்
வாக்காளராக இருந்தாலும் –

இனியும் வேறு எதனைப்பற்றியும் யோசிக்காமல் –

எந்த தொகுதியில் –
எந்த கட்சிக்கு திமுகவை தோற்கடிக்க வாய்ப்பிருக்கிறதோ –
அந்த கட்சிக்கே என் வாக்கை பதிவு செய்வேன்….

– வளமான தமிழகம்
நிச்சயம் உருவாகும்
என்கிற நம்பிக்கையுடனும் –

-வாழ்த்துக்களுடனும்
காவிரிமைந்தன்

————————-

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to தமிழகத்தின் பொக்கிஷங்கள் – கலைஞர் கருணாநிதி, அழகிரி, ஸ்டாலின், கனிமொழி, தயாநிதி, கலாநிதி, உதயநிதி – மற்ற எல்லா நிதிகளும் ……!!!

 1. ragavendra சொல்கிறார்:

  K.M.sir,

  Excellant.
  I fully endorse your views expressed in this article.
  Let the people of TamilNadu vote only with one aim –

  That is DEFEATING AND DRIVING OUT DMK FAMILY
  once for all FROM TAMILNADU POLITICS.

 2. chennaiveeran சொல்கிறார்:

  ADADE…

 3. S.Palanivelu சொல்கிறார்:

  Accusing Karunanidhi makes Jayalalithaa a saint

 4. நாச்சியப்பன் நாச்சிமுத்து சொல்கிறார்:

  கருணா கும்பலுக்கும், ஜெ-சசி கும்பலுக்கும் பெரிதான வித்தியாசம் ஏதும் இல்லை. இரண்டு பிசாசுகளில் பெரும் பிசாசு கருணா கும்பல் தான் என்பதில் ஏதும் சந்தேகம் இல்லை. ஜெ-சசிகும்பலும் இதே பாதையில் தான் செல்கிறது.

 5. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  Excellent,certainly not for DMK

 6. Dr. g.vijayaragavan சொல்கிறார்:

  K.M Sir Excellent… super…l all so accept your golden words

 7. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர்களுக்கு,

  தயவு செய்து தற்போதைக்கு பின்னூட்டங்களை
  தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
  நிறுத்தப்பட்டுள்ள பின்னூட்டங்களை,
  நாளை மாலைக்கு பிறகு விடுவிக்கிறேன்.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.