தேர்தலும், முடிவுகளும் …….மகிழ்ச்சி தருகின்றனவா ……?

voting-machine

நாலைந்து மாதங்கள் படாதபாடு படுத்தி விட்டு ஒருவழியாக
தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் நடந்து முடிந்து விட்டது.
பெரிய அளவில் அசம்பாவிதங்கள் ஏதும் இல்லை என்கிற
அளவில் நிம்மதி கொள்ளலாம்…..

முடிவுகள் விஷயம் தனி….
அதை தனியே விவாதிக்கலாம்.
ஆனால், தேர்தல் நடந்த விதம் – நமக்கு திருப்தியளிக்கிறதா …?

நாம் தலைவர்கள் என்று பலரை கருதியது எல்லாம் –
நமது ஒட்டுமொத்த அறியாமையின் விளைவு
என்று சொல்லக்கூடிய அளவிற்கு

பெரும்பாலான so called தலைவர்கள் எல்லாருமே
தங்களது நடத்தையின் மூலம்,
நம்மைப் போன்ற சராசரி மனிதர்களை விட
அவர்கள் மிகவும் கீழானவர்கள் என்பதை
இந்த தேர்தலின் மூலம் நமக்கு காட்டிக் கொடுத்திருக்கின்றனர்.

மக்கள் நல கூட்டணி உருவான புதிதில்
( இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுடன்,
விசிக-வும், மதிமுகவும் சேர்ந்து ) கொஞ்சம்
நம்பிக்கை பிறந்தது. வழக்கமான கட்சிகளுக்கு மாற்றாக மூன்றாவது
சக்தி ஒன்று உருவாகின்றதே என்கிற திருப்தியை உண்டு பண்ணியது.

ஆனால், வெகு சீக்கிரமாகவே,
எப்போது திரு.விஜய்காந்த் அவர்களை
( in fact திருமதி பிரேமலதா விஜய்காந்த் அவர்களை )
முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு,
அவருடன் சேர்ந்து பஞ்ச பாண்டவர் அணியை
உருவாக்கினரோ – அப்போதே நமது ஆசை நிராசையாகி விட்டது.

அதன் பிறகு, கிடைத்த ஒவ்வொரு மேடையிலும்,
அதன் ஒருங்கிணைப்பாளராக திரு.வைகோ அவர்கள் –
அகங்காரமும், ஆணவமும் கொண்டு உளறிக் கொட்டியது –
மூன்றாவது அணி என்கிற ஒரு சிசுவை
அது உருவெடுக்கும் முன்னரே சிதைத்து விட்டது.
மக்கள் நல கூட்டணி நாசமாகப் போனதற்கு முக்கிய காரணமாக
திருவாளர் வைகோவையும், காரணப் பொருளாக திரு.விஜய்காந்தின்
காமெடி காட்சிகளையும் தான் கூற வேண்டும்.

மீண்டும் – அதே நிலை…
களத்தில் இரண்டே கட்சிகள்…
அவற்றினுள் ஒன்றைத்தான் மக்கள் தேர்ந்தெடுத்தாக வேண்டும்.

திமுக தலைவரும், அவரது தனயனும், அவரது சகோதரியும்
சேர்ந்து முன்னெடுத்துச் சென்ற தேர்தல் வியூகங்கள் –
தமிழக அரசியல் களத்தை ஒரு குடும்பத்துக்கே சொந்தமாக்கி –
மிகப்பெரிய ஏமாற்றத்தையே கொடுத்தன.
அவர்களது பழைய பின்னணியை நினைக்கும்போது –
நமக்கு எந்த விதத்திலும் உற்சாகம் ஏற்படவில்லை.

நமது ஜனநாயகத்தில்,
நமது வாக்குரிமையை –
நல்லவரை தேர்ந்தெடுக்க
பயன்படுத்தும் வாய்ப்பை விட,

மோசமானவரை தவிர்க்கவே
பயன்படுத்த வேண்டிய
கட்டாயம் ஏற்பட்டு விட்ட ஒரு நிலை.

நாம் ஜனநாயகத்தில் வெற்றி பெற,
உரிய வளர்ச்சி பெற,
இன்னும் பல காத தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது.

“ஜனநாயகத் திருவிழா” என்று அரசியல்வாதிகள்
பெருமையாகக் கூறிக்கொண்டாலும் –
நடந்து முடிந்த இந்த தேர்தல் நமக்கு எந்தவிதத்திலும்
மகிழ்ச்சியை அளிக்கவில்லை.

திங்கள் இரவு, டெல்லி ஆங்கில தொலைக்காட்சிகளிலும்,
தமிழில் தந்தி தொலைக்காட்சியிலும் –
வெளிவந்த “தமிழக தேர்தல் முடிவுகள்”
பற்றிய அலசல்களை பார்த்தோம்.

எந்த நிறுவனத்தாலும், முற்றிலும் சரியான முடிவுகளை கணிப்பது
இயலாத காரியம். இருந்தாலும், தந்தி தொலைக்காட்சி தந்த முடிவுகள் –
ஓரளவு விஞ்ஞானபூர்வமாக இருந்தன.

நேர்மையாக, இன்னமும் 52 தொகுதிகளில் தங்களால்
முடிவை யூகிக்க முடியவில்லை என்று ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.
(அதிமுக கூட்டணி = 102, திமுக+காங்கிரஸ் =69+10, பாமக =1,
முடிவை யூகிக்க முடியாத இடங்கள் -52 )

– தற்போதைக்கு, காத்திருப்போம் – வியாழன் வரையில்….!!!

பின் குறிப்பு –

இந்த தேர்தலில் “பணம் படுத்திய பாடு”
கொஞ்ச நஞ்சமல்ல…
ஆனால், இதில் சளைத்தவர் யாருமில்லை.
யாரும், யாரையும் தனியே குற்றம் சொல்லி விட முடியாது.
ஆனால், நான் நமது வாக்காளர்களை குறை சொல்ல மாட்டேன்.
பெரும்பாலும், அவர்கள் யாருக்கு ஓட்டுப் போட
மனதார விரும்பினார்களோ,
அவர்களுக்குத் தான் போட்டார்கள்.

( இரண்டு தரப்பினரிடையேயும் வாங்க வேண்டியதை
எல்லாம் வாங்கிக்கொண்டு…..!!! )

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

16 Responses to தேர்தலும், முடிவுகளும் …….மகிழ்ச்சி தருகின்றனவா ……?

 1. C Venkatesh Raja சொல்கிறார்:

  மீண்டும் முக அவரது குடும்பத்தார் மற்றும் அவரது குறுநில மனர்களும் அவர்களது வாரிசுகளும் ஆட்சியை பிடிப்பார்கள் என்றால் கீதையில் சொன்ன தர்மம் இது தான ,மனதிற்கு வேதனையா இறக்கிறது
  அரசியல் சித்து விளையாட்டு தான் ஜெய்க்கிறது
  அந்த பரமர்த்மா தான் இந்த நாட்டை காப்பட்ட வேண்டும்

  CV Raja

 2. Manickam sattanathan சொல்கிறார்:

  //பெரும்பாலான so called தலைவர்கள் எல்லாருமே
  தங்களது நடத்தையின் மூலம்,
  நம்மைப் போன்ற சராசரி மனிதர்களை விட
  அவர்கள் மிகவும் கீழானவர்கள் என்பதை
  இந்த தேர்தலின் மூலம் நமக்கு காட்டிக் கொடுத்திருக்கின்றனர்.//

  முழுக்க உண்மை. :-((

 3. LVISS சொல்கிறார்:

  If the opinion polls hold good then there is lot to worry for the incumbents in all the states except W Bengal _ But you cannot take this seriously as it is only a sample survey and things can change – — In one of earlier blogs I wrote in jest as to what will happen if there is a hung assembly , who will go to whom for support — A hung assembly is the last thing one would like to have in a growing state like Tamil Nadu —Hope it doesnt happen –

 4. today.and.me சொல்கிறார்:

  நண்பர்களுக்கு,

  நேற்றைய எக்ஸிட் போல் முடிவுகளில்

  India Today Axis My India
  DMK – 124-140
  ADMK – 89-101
  BJP – 0-3
  Others – 4-8

  C Voters Times Now
  DMK – 78
  ADMK – 139
  BJP – 0
  Others – 17

  News nation
  DMK – 114-118
  ADMK – 95-98
  MNK – 14
  BJP – 4
  Others – 9

  ABP News
  DMK – 132
  ADMK – 95
  BJP – 1
  Others – 6

  என்று அறிவிக்கிறார்கள். இதில் எந்தத் தொலைக்காட்சியைக் கூட்டினாலும் 234 தொகுதிகள் வருகிறது. நேற்று வாக்குப்பதிவு முடிந்ததே 232தொகுதிகளுக்குத்தான்.

  உண்மையான எக்ஸிட் போல் அனொன்ஸ்மெண்ட் என்றால் 232 தொகுதிகளுக்குத்தானே சொல்லியிருககவேண்டும்.

  ஊடகங்கள் தாங்கள் விலைபோயுள்ளன என்பதை பட்டவர்த்தனமாக ஒப்புக்கொண்டுவிட்டதாகவே எனக்குப் படுகிறது. யாருக்கு விலைபோயுள்ளன என்பதை சொல்லவும் வேண்டுமா…

  இல்லை, தமிழர்களைப் பார்த்தால், தமிழ்நாட்டைப் பார்த்தால் இந்த வடஇந்திய சேனல்களுக்கு இவ்வளவு கேவலமாகத் ‘தோன்றுகிறதா?

  இன்றில்லாவிட்டாலும நாளையாவது மக்கள் மனதில் இந்த ஊடகவிபசாரத்தைக் குறித்த விழிப்புணர்வு வரும் என்று நம்புகிறேன்.

 5. selvarajan சொல்கிறார்:

  ஒரு கூட்டம் வெற்றி பெறும்போது மட்டும் மகிழ்ச்சி அடைந்து — பின் அவர்கள் ஊழல் செய்து நமது சொத்துக்களை கொள்ளையடிப்பதை பார்த்து புலம்புபவர்களை நினைத்தால் — வேதனை தான் ஏற்படுகிறது …. நாம் வாக்களித்தவர் தோல்வியுற்றாலும் — வெற்றிபெற்ற ஒரு ” தீயவனுக்கு ” வாக்களிக்கவில்லை — என்கிற மனதிருப்தி எவனுக்கு ஏற்படுகிறதோ — அவனே — மனிதன் — அவ்வாறான ” தீய சக்திகளுக்கு ” வாக்களிக்கவில்லை என்கிற ” கர்வம் ” ஏற்பட்டால் அதைவிட — சந்தோஷம் வேறில்லை — எனக்கு அந்த கர்வம் கொஞ்சம் அதிகம் … !!!

 6. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  ஐயா
  கிட்டத்தட்ட பாதி பேர் ஓட்டளிக்கவில்லையே நரகவாசிகளில், ஸாரி… நகரவாசிகளில்!
  இவர்களுக்கு அரசியல்வாதிகளை சபிக்க என்ன உரிமையுள்ளது. இவர்களே நம் தேசத்தின் தீய சக்திகள்.

 7. Antony சொல்கிறார்:

  KM,
  Can you clarify this?
  If a candidate was elected in two electorates what will happen?
  Only 233 MLAs?
  If so, does that person have two votes in any polling at LA?

 8. Tamilian சொல்கிறார்:

  ஐயா ! நான் 1971ல் இருந்து எல்லா தேர்தல்களிலும் வாக்களித்து வருகிறேன். ஒரு முறை கூட தி மு க விற்கு வாக்கு அளித்தது இல்லை. ஆனால் இந்த தேர்தலில் திமுக மிகுந்த பொருள் செலவில் மிக நன்றாக ஊடகங்களையும் ,சமூக ஊடகங்களையும் கையில் வைத்துக் கொண்டு பொய்களை அரசுக்கு எதிராக திறமையாக ஒரு ஆண்டாக பரப்பி அதில் ஓரளவு வெற்றியும் பெற்று உள்ளார்கள். அதற்கு ஏற்றார் போல அதிமுகவும் அந்த பொய் பிரசாரங்களை வன்மையாக எதிர் கொண்டதாக தெரியவில்லை. உதாரணம் மழை, பாதிப்பு. உயிர் சேதம் இல்லாமலும், வியாதிகள் பாதிக்காமலும் எதிர் கொண்டதை மத்திய குழுவே பாராட்டியுள்ளது.ஆனால் இந்த செய்தி ஊடகங்களில் மறைக்க பட்டது,அதிகம் மக்களுக்கு சொல்ல படவில்லை. ஒரு சிறிய நிகழ்வை எப்படி காங்-இடது சாரிகள் ஊத்தி பெரியதாக தேசிய அளவில் கொண்டு செல்கிறார்களோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் திமுக ஜெயாவிற்கு எதிராக செய்தார்கள் மிக வலிமையாக. இதற்கு ஜெயா அரசு பொறுப்பேற்கவேண்டும்.இல்லையென்றால் பாராளு மன்ற தேர்தல் வெற்றி அவர்களை மமதை கொள்ள செததோ என்று என்ன வேண்டியுள்ளது. ஊடகங்களின் வழியே மக்கள் அரசை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பது கட்டாயம்

 9. CHANDRAA சொல்கிறார்:

  ji let us wait till nineteenth may

 10. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  I fully endorse Mr Tamilian”s views.

 11. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  பதிவுக்கு முற்றிலும் பொருத்தமில்லாத, ஆனால், ஓரளவு தொடர்புடைய ஒரு கருத்து:

  அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய காவிரிமைந்தன் ஐயா அவர்களுக்கு நேச வணக்கம்!

  ஆனந்த விகடனை நீங்கள் தி.மு.க-வுக்கு விலைபோய் விட்டதாகத் தூற்றியபொழுது அதைக் கண்டித்த அதே ஞானப்பிரகாசன்தான். நடந்த இந்தத் தேர்தல்பொழுதில் நீங்கள் கூறியது எந்தளவு உண்மை, நான் நம்பியது எந்தளவு முட்டாள்தனம் என்பதை உணர்ந்தேன். இந்தத் தேர்தலில் பச்சையாகவே தி.மு.க-வுக்குச் சார்பு நிலைப்பாட்டை எடுத்தது விகடன் இதழ். வெகு நாட்களாகப் பெருமிதத்துடன் படித்து வந்த ஓர் ஊடகம் என் முகத்தில் கரி பூசியது கண்டு தலைகுனிந்தாலும், இது குறித்து உங்களிடம் தெரிவித்து விட வேண்டியது கடமை எனக் கருதுவதால் இதை எழுதுகிறேன்.

  நீங்கள் கூறியது சரிதான்! நான் வாதிட்டது முட்டாள்தனம்தான்! ஒப்புக் கொள்கிறேன்!

  நன்றி! வணக்கம்!

 12. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  தேர்தலை ஒட்டி நான் உணர்ந்த இந்த உண்மையைத் தேர்தல் முடிவுகள் தொடர்பான இந்தப் பதிவில் வெளியிடுவதுதான் ஓரளவாவது பொருத்தமானதாய் இருக்கும் என்பதால் இங்கு வெளியிட்டுள்ளேன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.