திட்டம் போட்டு 400+ கோடி கொள்ளை – ” Exit Poll Results ” வந்தது எப்படி, ஏன் …..?

.

.

தேர்தல் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் ஆகக்கூடும்….
திமுக வோ, அதிமுக வோ – யார் வேண்டுமானாலும் ஆட்சியை
பிடிக்கக்கூடும்.

யார் ஆட்சியை பிடிக்கப்போகிறார்கள் என்கிற விஷயத்திற்குள்
போவதல்ல இந்த இடுகை….

ஆட்சியை பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் – திட்டம் போட்டு,
” எக்சிட் போல் “-ஐ வைத்து பணம் பண்ண முடியும் என்கிற
யோசனை, சாமர்த்தியம் யாருக்கு வரும்….?

” எக்சிட் போல் ” முடிவால் பங்குகள் விலையை 11 % எகிறச் செய்து,
ஒரே நாளில் பங்கு விற்பனை மூலம் சுமார் 400 கோடி அளவிற்கு
பணம் பண்ணக்கூடிய கேடித்தனம் யாருக்கு வரும் …?

ஒரு 40 கோடியை செலவழித்து, அதன் மூலம்
தாம் விரும்பும் விதத்தில் சில எக்சிட் போல் முடிவுகளை வரவழைத்து,
அதன் மூலம் அந்த 400 கோடி பணத்தை சம்பாதித்த
வில்லாதி வில்லராகிய அந்த வியாபாரிகளின் சாமர்த்தியத்தை
என்னவென்று வியப்பது….!!!

இந்த 400 கோடி, முதல் தவணை தான்….

அசல் முடிவுகள் வெளிவரும்போது, திமுக ஆட்சியைப் பிடித்தால்,
விலை இன்னும் எகிறும்…. அது கூடுதல் லாபம்.

ஒருவேளை ஆட்சியை பிடிக்க முடியவில்லை என்றால்,
பங்குகள் வீழ்ச்சி அடையும். அதை குறைந்த விலைக்கு வாங்கி
சேர்த்துக் கொள்வதன் மூலம் மீண்டும் ஒரு தவணை லாபம்.

இந்த வாதத்திற்கு எதாவது அடிப்படை உண்டா என்கிற கேள்வி
வரக்கூடும்…

” Exit Poll Results ” தந்தவர்களில் –
தங்களது நம்பகத்தன்மையை தக்கவைத்துக் கொள்ள விரும்பும்
முக்கியமான ஒரு நிறுவனம் – axis-myindia நிறுவனம்.

16- ந்தேதி மாலையில் எக்சிட் போல் முடிவுகளை ஆரவாரத்துடன்
வெளியிட்ட திரு ராஜ்தீப்-சர்தேசாய் – அசல் முடிவுகள் வரும்போது,
தன் மதிப்பீடு பொய்யென்று ஆகி விடுமோ என்கிற அச்சத்தில்,

– சுயமரியாதையை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற உணர்வில் –
அன்று இரவே – 11.16 க்கு வெளியிட்ட ட்விட்டர் செய்தி இது…..
( இன்று மாலை, நான் வெளியிட்ட முடிவுகளில் –
ஒன்று தவறாக இருக்குமோ என்று அஞ்சுகிறேன்….!! )

 

rajdeep -2

இன்று ( புதன் -18- ந்தேதி ) காலை 9.26-க்கு
மீண்டும் ராஜ்தீப்-சர்தேசாய் வெளியிட்டிருக்கும்
ஒரு ட்விட்டர் செய்தி –
( மறந்து விடாதீர்கள் நண்பர்களே – நான் வெளியிட்ட
முடிவுகளில் ஒன்று தவறாக இருக்குமென்று நான்
ஏற்கெனவே ஒப்புக்கொண்டு விட்டேன்…! )

rajdeep twitter-1

தேர்தலுக்கு முன்னர்,
திமுக குடும்பம் என்னவெல்லாம் செய்தது,
என்னவெல்லாம் செய்யக்கூடிய திறமை வாய்ந்தது என்பது பற்றி
நாம் எவ்வளவு தான் எழுதினாலும் –
அதனை ஏற்றுக் கொள்ளாமல், சிலர்
நாம் தேவையில்லாமல் காழ்ப்புணர்ச்சியால் எழுதுகிறோம்
என்று தமது பின்னூட்டங்களில்
திரும்ப திரும்ப தெரிவித்து வந்தார்கள்…

இப்போதும், இனியும் – நடக்கின்ற செயல்களை பார்த்தாவது –
அவர்களுக்கு உண்மை புரியும் என்று நம்புகிறேன் /
புரிய வேண்டுமென்று விரும்புகிறேன்.

முடிவுகள் எப்படி இருந்தாலும் சரி –
அந்த கூட்டத்தின் முதல் லாபம் இது….

தேர்தலில் அவர்கள் செய்த முதலீட்டின் –
-லாபத்தில் முதல் தவணை
returned now as raise of 11 % share value
or 400+ crore gains in transactions …!!!

திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது…..!

 

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

15 Responses to திட்டம் போட்டு 400+ கோடி கொள்ளை – ” Exit Poll Results ” வந்தது எப்படி, ஏன் …..?

 1. jksm raja சொல்கிறார்:

  இந்த தேர்தலில் அ தி மு க இவர்களை சரியான படி கையாளவில்லை என்று நினைக்கிறேன். இல்லை என்றால் இவர்கள் இந்த குதி குதித்திருக்க மாட்டார்கள்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப ராஜா,

   நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. today.and.me சொல்கிறார்:

  கா.மை,ஜி

  //” Exit Poll Results ” தந்தவர்களில் –
  தங்களது நம்பகத்தன்மையை தக்கவைத்துக் கொள்ள விரும்பும்
  முக்கியமான ஒரு நிறுவனம் – axis-myindia நிறுவனம்.//

  1. மாறன் சகோதரர்களின் சொத்துக்கள் பற்றிய விவரங்களை புலனாய்வு நிறுவனம் ஒன்று சேகரித்து வருகிறது, வழக்காகப் பதிவுசெய்து சட்டத்திற்கு முன்பு நிறுத்த… பணிகள் பாதிவழியில் இருக்கின்றன. முழுவதும் முடிந்தவுடன் ஆதாரங்கள் இணைக்கப்படும். நிற்க.

  எனக்குக் கிடைத்த நம்பகமான தகவல்களின்படி Axis Myindia Ltd நிறுவனத்தின் 42% பங்குகள் owned by தயாநிதிமாறன்..

  2, இவர், ராஜ்தீப்சர்தேசாய் கன்சல்டிங் எடிட்டர் ஆஃப் இந்தியா டுடே. .

  இந்தியாடுடே – ஆக்ஸிஸ் மை இந்தியா லிட் உடன் இணைந்து தந்த எக்ஸிட் போலில், அந்த நிறுவனம் கொள்ளையடிக்க இவர் விட்டுக்கொடுத்த உண்மையான கருத்துக்கணிப்பை நாளையை தேர்தல் முடிவுகள் மாற்றிவிட்டால் இத்தனைநாள் கட்டிக்காத்த பேரும் புகழும் என்னாவது?

  எனவே இவர் தனது தனிப்பட்ட மரியாதையை(யாவது) காப்பாற்றிக்கொள்ளவும் இந்தியாடுடேயின் பறக்கப்போகும் மானத்தை கொஞ்சூண்டாவது காப்பாற்றிக்கொள்ளவும் முயற்சிசெய்கிறார்…

  அவ்வளவுதான் அவர்.
  அவ்வளவுதான் மீடியா..

  மற்றபடி கோடிகளில் KD-க்கள் கொள்ளையா?

  மீன்குஞ்சுகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்கவேண்டுமா என்ன?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப டுடேஅண்ட்மீ,

   நீங்கள் தரும் இந்த செய்தி சிறிது ஆறுதலை தருகிறது…..

   // மாறன் சகோதரர்களின் சொத்துக்கள் பற்றிய விவரங்களை
   புலனாய்வு நிறுவனம் ஒன்று சேகரித்து வருகிறது,
   வழக்காகப் பதிவுசெய்து சட்டத்திற்கு முன்பு நிறுத்த…
   பணிகள் பாதிவழியில் இருக்கின்றன.
   முழுவதும் முடிந்தவுடன் ஆதாரங்கள் இணைக்கப்படும்.//

   இது குறித்து மேலும் தகவல்கள் தங்களிடம் இருந்தால்,
   கொடுக்க முடிந்தால், ஆறுதல் இன்னும் கொஞ்சம் கூடும்…!

   இது எனக்கு புதிய செய்தி –

   // Axis Myindia Ltd நிறுவனத்தின் 42% பங்குகள் owned by தயாநிதிமாறன்..

   – உங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. Antony சொல்கிறார்:

  KM,
  First of all thanks for giving us a hope that DMK is not coming to power.
  I have not much knowledge on share market. But how an increase in share price will benefit for KDs? Are they selling their own shares?

  • bandhu சொல்கிறார்:

   There are many ways this can be achieved. one. buy the stock before the exit poll, arrange for the exit poll, buy the share. Second, as they are also ‘Employees’, announce a incentive stock option at ‘market’ value before the exit poll. exercise the option now and make money. But the accountants are pretty savvy in getting way more ways of doing this.

   • bandhu சொல்கிறார்:

    Typo in the first..

    There are many ways this can be achieved. one. buy the stock before the exit poll, arrange for the exit poll, sell the share after it rose. Second, as they are also ‘Employees’, announce a incentive stock option at ‘market’ value before the exit poll. exercise the option now and make money. But the accountants are pretty savvy in getting way more ways of doing this.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப அந்தோனி,

   நண்பர் பந்து விஷயத்தை தெளிவாக்கி விட்டார்…. அதே தான்.
   அவர்கள் தங்கள் கையில் இருக்கும் சில ஷேர்களை கூட விற்பார்கள்.
   அசல் முடிவுகள் வெளிவந்தவுடன், ஷேர் விலைகள் பயங்கரமாக குறையும்.
   உடனே, அவர்களே குறைந்த விலைக்கு திரும்பவும் வாங்கி தங்கள்
   கணக்கில் சேர்த்து கொள்வார்கள் – அடுத்த சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி….

   நாகரீக கொள்ளைக்காரர்கள்….!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     நண்ப டுடேஅண்ட்மீ,

     மிகத் துல்லியமாக
     எப்போது,
     என்ன செய்தால்,
     எதைச் செய்தால்,
     எப்படிச் செய்தால் –
     பணம் பண்ணலாம் என்பதை
     அவர்கள் ரத்தத்திலேயே நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள்….

     ஒரு விதத்தில் பார்த்தால் –
     ஒரு தமிழன் இவ்வளவு புத்திசாலித்தனமாக இருப்பதைக்காண
     ஆச்சரியமாக இருக்கிறது….!!!

     எல்லாம் தாத்தா வழி… !!!

     ( நீங்கள் அனுப்பிய கிராஃப்பை நான் அடுத்த இடுகைக்கு
     பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்… நன்றி. )

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்.

 4. CHANDRAA சொல்கிறார்:

  JI i have been repeatedly telling in this column that DMK is a dangerous
  diabolical destructive dejected disappointing
  wicked cunning cutthroat mean minded
  selfish arrogant party
  Already muslims in tamilnadu are
  terribly shocked to learn that DMK RAJAS business partner
  SADIQ was murdered only by………
  That is why KALAIGNAR IYYAH
  clearly pronounced the word NATURAL DEATH
  when a reporter asked him
  about his SUCCESSOR

 5. selvarajan சொல்கிறார்:

  400 — கோடி ஒரே நாளில் …? இது ஒரு பக்கம் இருக்க — கலைஞர் கவலையெல்லாம் அந்த 570 – கோடி — மூன்று லாரிகளில் என்பதையே சுற்றி – சுற்றி வந்தது — அதை ஜெயாவின் பணம் தான் என்று சொல்ல வைக்க நேற்று கூடஒரு நீண்ட அறிக்கை விட்டது — கேலிக்குறியது …! இவையெல்லாம் மிஞ்சும் விதத்தில் ” வெற்றி விழா ” கொண்டாட்டம் வள்ளுவர் கோட்டத்திலும் — அவர்களுக்கு வேண்டிய குறிப்பிட்ட அதிகாரிகளை — முக்கிய பொறுப்புகளில் அமர்த்த ஆயத்தம் என்றும் — ஆட்சிக்கு வந்தவுடன் அதிகாரிகளை ஒரு கை பார்ப்போம் என்று மகனும் — யாரையும் பழி வாங்கமாட்டோம் என்று நைனாவும் — மாற்றி – மாற்றி கூறியதையும் — தற்போது வந்துக்கொண்டு இருக்கிற தேர்தல் முன்னிலை நிலவரங்களும் — உற்று நோக்கினால் — கலைஞர் பாவமா … ஆசை — நிராசையா … ? — இந்த தேர்தலில் ” தேர்தல் கமிஷனின் ” — தமாஷ்களையும் கொஞ்சம் விளக்கமாக — அய்யா .. உங்கள் பாணியில் தெரிவிப்பீர்களா … ?

 6. selvarajan சொல்கிறார்:

  // வாக்கு எண்ணிக்கையில் திமுக பின்னடைவு.. சன் டிவி பங்குகள் 11.45% சரிவு..!
  Read more at: http://tamil.goodreturns.in/news/2016/05/19/sun-tv-network-shares-plunge-over-10-on-tamil-nadu-assembly-005502.html // … சூப்பர் ” சூதாட்டம் … ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   உங்கள் தகவலுக்கு நன்றி செல்வராஜன்.
   அதை நான் அடுத்த இடுகையில் பயன்படுத்திக் கொள்கிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 7. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  இப்படியெல்லாம் கூட நடக்கிறதா!!!!! அடப் பாவிகளா!!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.