தப்பித்தோம் ….ஆனால் தோற்றதை வைத்தும் பணம் பண்ணி விட்டார்களே….!!!

.

.

Exit poll முடிவுகள் கிளப்பிய பயங்கர உருவகங்களிடமிருந்து
தமிழகம் தப்பியது…… வெளிவந்து கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகள்
மன நிம்மதியை கொடுக்கின்றன.

பலமுனை தாக்குதல்களை,
தனி ஒருவராக,
அசாத்திய மனோதிடத்துடன் எதிர்கொண்டு –
சாதாரண மக்களின் துணையுடன் வெற்றி பெற்று,
மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்கவிருக்கும்
செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு இந்த வலைத்தளத்தின் சார்பாக,
நம் அனைவரது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

jj-1

அவர் தமிழக மக்களின் மீது
அசாத்திய நம்பிக்கை வைத்திருக்கிறார்……

அந்த நம்பிக்கை வீண் போகவில்லை –
தமிழக மக்களும் ஜெ.அவர்கள் மீது தங்களுக்குண்டான பற்றையும்,
நம்பிக்கையையும் செயலில் காட்டி விட்டார்கள்.

ஜெ.அவர்கள் நல்ல ஆரோக்கியம் பெற்று,
தமிழகம் சிறக்க,
உலகெங்கும் உள்ள தமிழ்க்குலம் சிறப்பாக வாழ –
இறைவன் அருள் பெற்று – செயல்பட வாழ்த்துகிறோம்…

——————————————————————————————————–

நாம் ஏற்கெனவே விவாதித்தது போல் exit poll result -ஐ
வைத்துக் கொண்டு 400+ கோடி சம்பாதித்தது போலவே,
இப்போது அசல் முடிவுகள் வெளியாகும்போது –
மீண்டும் ஷேர் மார்க்கெட் சரிவை பயன்படுத்திக் கொண்டு,
குறைந்த விலையில் அவர்களது சொந்த கம்பெனியின் ஷேர்களை
அவர்களே மீண்டும் வாங்கிக்கொண்டு,
மற்றுமொரு முறை பணம் பண்ணப்போகிறார்கள்…..

நண்பர் டுடேஅண்ட்மீ அனுப்பி இருக்கும் இந்த கிராப் அதை
உறுதி செய்கிறது.

sun tv share position

செயற்கையாக ஒரு exit poll முடிவை உருவாக்கி,
அதை வைத்து ஒரே நாளில் 400+ கோடிகள் பண்ண முடிந்தவர்கள்
ஒருவேளை ஆட்சி அதிகாரத்திற்கு வந்திருந்தால் – வந்தால் –
என்னென்னவெல்லாம் செய்வார்கள்…?

இந்த கொள்ளைக்காரர்கள் மீது அரசால் எந்த நடவடிக்கையும்
எடுக்க முடியாது….புத்திசாலிகள்… எதையும், மாட்டிக் கொள்ளும்படி
செய்ய மாட்டார்கள்…..

இருக்கட்டும்…. தொடரட்டும்…..
மேலே ஒருவன் இருக்கிறான்….
அவன் பார்த்துக் கொள்வான்….!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

14 Responses to தப்பித்தோம் ….ஆனால் தோற்றதை வைத்தும் பணம் பண்ணி விட்டார்களே….!!!

 1. LVISS சொல்கிறார்:

  Once again the AIADMK leader has shown that she can single handedly win elections for the party — Amazing self confidence — Three alliances were arraigned against the party — The election proved that Vijayakant drew his strength in the last election from the AIADMK alliance — PMK could win some seats on its own which is also commendable –BJP was also there yet not there fully — They should be happy with win in Assam and getting some seats in W Bengal and opening account in Kerala —

 2. ragavendra சொல்கிறார்:

  Jayalalithaji has tremendous self confidence.
  This confidence comes out of the welfare programmes
  she has introduced for the downtrodden people of tnadu.

  Pray God gives good health for ” amma ”
  so that she can serve the people with more energy.

  Congratulations K.M.ji.
  Your wishes have come true.

 3. R.Gopalakrishnan சொல்கிறார்:

  vk and pl shattered because of their nasty election speeches. I regret for vaiko. What a beautiful politican and a powerful oraater he is!
  and

 4. வெ.க.சந்திரசேகரன் சொல்கிறார்:

  புதிய முதல்வருக்கு வாழ்த்துகள். தங்களின் தலைமை மீது நம்பிக்கை கொண்டு மக்கள் தெளிவான தீர்ப்பை அளித்துள்ளார்கள். இனி நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்பது தான் கேள்வி. இனி வரும் வருடங்களிலும் அன்புநாதன்களுக்காக ஆட்சி செய்ய போகிறீர்களா அல்லது சாமான்ய மக்களுக்காக உழைக்கப்போகிறீர்களா என்பதற்கு காலம் பதில் சொல்லும். ஆனால் நாங்கள் எதிர்பார்ப்பது ஐவரணியின் ஆதிக்கம் சசிகசலா குடும்ப ஆதிக்கம் போன்றவற்றால் எங்களது நலன்களை பலி குடுக்க போகறீர்களா என்பது தான் தற்போது மில்லியன் டாலர் கேள்வி

 5. செந்தில் சொல்கிறார்:

  அந்த 400+ கோடியை விட்டது பல பேராசைக்காரர்கள்தானே…
  ஹா ஹா ஹா. நல்லா வேணும்…

 6. Narasimhan சொல்கிறார்:

  1971 என்று நினைக்கிறேன் .. காங்கிரஸ் மறுபடியும் தமிழ்நாட்டில் ஆட்சி பிடிக்கும் என்று எல்லோரும் எதிர்பார்த்தபோது திமுகவே திரும்பவும் ஆட்சி அமைத்தது . தேர்தல் வெற்றியை பாராட்டும்விதமாக ஒரு பொதுக்கூட்டம் கடற்கரையில் திமுக நடத்திற்று . அப்போது மஞ்சத்துண்டு “அட பைத்தியக்கார ஆருடர்களே ” என்று மற்ற எல்லோரையும் நக்கல் செய்தது இப்போது நினைவிற்கு வந்தது .இதுதான் Prepoll , Exit poll விசயங்களிலும் ஜெவின் நினைப்பாக இருக்கும் .

 7. Srini சொல்கிறார்:

  Respected KM Sir,

  Vazthukal. You also played a part in this success. (like what squirrel did for building Ramasethu). The efforts didn’t go waste.

  regards
  Srini

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Dear Srini,

   Nice to see you after a long time….!
   Thank you. I am a very very small person and
   my contribution is nothing.

   -with best wishes,
   Kavirimainthan

 8. selvarajan சொல்கிறார்:

  // திமுக மண்ணை கவ்வியதில் அண்ணன் ஹேப்பி அண்ணாச்சி: அழகிரி ஆதரவாளர்கள்
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/azhagiri-s-house-gala-mood-254091.html // … இது ஒரு ” சிரிப்பு செய்தி ” …! அ.தி.மு.க. வெற்றி — தி.மு.க.வின் தொகுதிகள் அதிகமானது — மற்ற கட்சிகள் காணாமல் போனது – போன்ற பல நிகழ்வுகள் நடந்துள்ளன — அ .தி.மு.க. — தி.மு.க. வாக்கு வித்தியாசம் சொற்பமாக இருப்பது — அ .தி.மு.க. இன்னும் அதிகமாக மக்கள் தொடர்பும் — தொகுதியில் களப்பணி ஆற்றுவது போன்ற செயல்களையும் தீவிரமாக்க வேண்டும் — மக்கள் நல பணிகளில் ஈடுபட வேண்டும் என்பதை உணர்ந்து இருப்பார்கள் — தலைமையும் இதை உணர்ந்து — தன் சகாக்களை தொகுதி நலனுக்கு பயன் படுத்தினால் — அடுத்த தேர்தலிலும் வெற்றி வாகை சூடலாம் — பல பன்முக தாக்குதலுக்கு இடையே கிடைத்த வெற்றி இது — இனி …. ?

 9. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  Congrats to AMMA.Nandri for saving us from Theeya sakthi.

 10. நாக.இளங்கோவன் சொல்கிறார்:

  Actually 2 earnings are already done. First is the buy at the levels of 350 and profit booking at the levels of 425-430. Now, given Sardesai’s comment in twitter, they could have taken short positions in F&O. I am sure you know, the kind of money in Futures and options for an instant fall of 12%. Now, if they buy again, it will be 3rd earning.

 11. srimalaiyappan சொல்கிறார்:

  பார்ப்போம் பொறுத்திருந்து

 12. CHANDRAA சொல்கிறார்:

  Well tamilnadu has been saved from DMK
  Let us hope that jeya ji
  would give a neat administration that will l:ift tamilnadu in the forefront
  She should also stop transfers of good officers when things
  are going in the correct way
  She should ask NRIS of tamilnadu or rather
  she should request them to help her in the development of
  tamilnadU

 13. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  இந்தத் தேர்தல் முடிவு எப்படி உங்களுக்கு இவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுக்குமோ, தெரியவில்லை!

  மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது, ஆறாவது என்று ஆட்சி மாற்றத்துக்கு நிறைய வாய்ப்புகளைக் கொடுத்த தேர்தல் இது. அனுபவம் உள்ள தலைவர்கள், ஏற்கெனவே பல்லாண்டுகளாக மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடுவர்கள் ஆட்சிக்கு வந்தால்தான் நல்லது என்று மக்கள் நினைத்திருந்தால் மூன்றாவது அணியைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். இல்லை, புத்தம் புதிய இளைஞர்கள் ஆட்சிக்கு வருவதுதான் அரசியலில் புதுக்குருதி பாய்ச்சுவதாக இருக்கும் என்று நம்பியிருந்தால் சீமானுக்கு வாக்களித்திருக்க வேண்டும். இத்தனை ஆண்டுக்கால மாநிலக் கட்சிகளின் ஆட்சிகளால் ஏற்பட்ட தீமைகளை உணர்ந்திருந்தால் இந்த மக்கள் நடுவணரசை ஆளும் பா.ஜ.க-வுக்காவது வாய்ப்பளித்திருக்க வேண்டும். அத்தனையையும் விட்டுவிட்டு மீண்டும் அ.தி.மு.க-வுக்கே வாய்ப்பளித்திருக்கிறார்கள். அதுவும் மாற்று என வந்தவர்களுக்கு ஒரே ஓர் இடம் கூடக் கொடுக்காமல். மேலும், இத்தனை ஆண்டுகள் இல்லாதபடி இந்த முறை முழுக்க முழுக்க தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளுக்கு மட்டுமே நாட்டைத் தாரை வார்த்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு முடிவு உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது என்றால், என்ன சொல்ல?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.