தினமலர் – ” புதிய தலைமுறை ” யை பார்த்து குமுறுவது ஏன்….?

.

.

இன்றைய தினமலர் நாளிதழின்
தலையங்கத்திலிருந்து சில பகுதிகள் கீழே –

————————————————-

தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பது பற்றி, தேர்தலுக்கு
முன்னும் பின்னும் கருத்துக்கணிப்பு எடுக்கிறேன் பேர்வழி என்று
யார் யாரோ முளைத்து மக்களைக் குழப்பிய கூத்து நடந்ததையும்
கவனிக்க வேண்டியிருக்கிறது.

பாரம்பரியமாக பத்திரிகை தொழிலில் இருந்தவர்கள் நடத்தும்
பத்திரிகைகள், டிவி நிறுவனங்களுக்கு ஜனநாயகம், மக்கள் நலன்,
பாரபட்சமற்ற நிலை மீது மிகுந்த மரியாதை உண்டு. மக்களை
திசை திருப்புவதோ, குழப்புவதோ கூடாது என்ற பத்திரிகை தர்மம்
தெரிந்தவர்கள்.

ஆனால், கல்வித்தந்தை என்று பட்டம் சூட்டிக்கொண்டு,
கல்விக்கொள்ளை நடத்தி குவித்த பணத்தில் ஒரு டிவி,
ஒரு பத்திரிகை, ஒரு சினிமா கம்பெனி துவங்குவது என்று ஒரு
பெருங்கூட்டம் கிளம்பி இருக்கிறது. மக்கள் பணத்தையும்,
நாட்டின் சொத்தையும் சுரண்டிக் கொழுத்தவர்களும்,
பெரிய லாபமற்ற பத்திரிகை தொழிலுக்குள் நுழைந்து,
தேர்தல் நேரத்தில் தங்கள் அபிலாக்ஷைகளை தீர்த்துக்
கொள்வதற்காக நடத்தியது தான் இந்த கருத்துக் கணிப்புகள்.

முதிர்ச்சியற்ற பத்திரிகையாளர்கள் மக்களின்
கருத்தை கணிக்கத் தெரியாமல்,

தங்கள் சொந்த விருப்பத்தை திணித்த காரணத்தால்
யார் சொன்ன கருத்துக் கணிப்பும் சரியாக வரவில்லை.

மீடியாக்களின் கருத்துக்கணிப்புகள் எந்த அளவுக்கு
நகைப்புக்கும், நையாண்டிக்கும் உள்ளானது என்பதற்கு
சமூக வலைத்தளங்களில் உலாவந்த விமர்சனங்களே சாட்சி.

—————————————————————

முதலில் ஒரு விஷயம் – தமிழ்நாட்டில், வேண்டுமென்றே
தவறான கருத்துக்கணிப்புகளை வெளியிட்டதாக யார் மீதாவது
குற்றம் சாட்ட வேண்டுமானால், முதலில் அது தினமலர் மீதாகத்தான்
இருக்க வேண்டும்.

தான் முற்றிலும் தவறான, போலியான
ஒரு கருத்துக்கணிப்பை வெளியிட்டதை சுத்தமாக
மறைத்து விட்டு, வெகு சாமர்த்தியமாக மற்றவர்களை
குறை சொல்கிறது தினமலர்.

இது தினமலரின் “போலி”க்கு அத்தாட்சி …..

dinamalar -karuththu kanippu

—————————————————————————–
மற்றபடி –
தினமலரின் மேற்படி கருத்துக்களிலிருந்து –

//கல்வித்தந்தை என்று பட்டம் சூட்டிக்கொண்டு,
கல்விக்கொள்ளை நடத்தி குவித்த பணத்தில் ஒரு டிவி,
ஒரு பத்திரிகை, ஒரு சினிமா கம்பெனி துவங்குவது என்று ஒரு
பெருங்கூட்டம் கிளம்பி இருக்கிறது //

-அப்படியெல்லாம் பெருங்கூட்டம் ஒன்றும் கிளம்பி விடவில்லை.
ஒரே ஒரு நிறுவனம் தான் தினமலர் சொல்லும்
அடைமொழிகளுக்குள் அடங்குகிறது…. ( “புதிய தலைமுறை” )

– அதை நேரடியாக சொல்லத்
துணிவில்லாமல்
அல்லது விரும்பாமல்,
மறைமுகமாக சொல்கிறது தினமலர்.

அடுத்து –

//முதிர்ச்சியற்ற பத்திரிகையாளர்கள் மக்களின்
கருத்தை கணிக்கத் தெரியாமல்,

தங்கள் சொந்த விருப்பத்தை திணித்த காரணத்தால்
யார் சொன்ன கருத்துக் கணிப்பும் சரியாக வரவில்லை.//

இதில் பாதி உண்மை-பாதி பொய்.

முதிர்ச்சியற்ற பத்திரிகையாளர்கள் மக்களின் கருத்தை
கணிக்கத் தெரியாமல் – என்று சொல்வது சரியல்ல.

பொதுவாகவே, எந்த பத்திரிகையாளராலும், எந்த மீடியாவாலும்,
முற்றிலும் சரியான ஒரு கருத்துக் கணிப்பை வெளியிடுவது
இயலாத காரியம்.

நேர்மையாகவும், இயன்ற வரையில்
அறிவுபூர்வமாகவும், விஞ்ஞானபூர்வமாகவும் –
கருத்துக் கணிப்பை ஓரளவு சரியாகக்கூறியவர்களும்
இருக்கவே செய்கிறார்கள்.

” சில பத்திரிகையாளர்கள் தங்கள்
சொந்த விருப்பத்தை திணித்த காரணத்தால்,
கருத்துக் கணிப்பு சரியாக வரவில்லை ”
-என்பதும் சரியாக இருக்கலாம்.

இந்த கருத்து, மற்ற மீடியாக்களை விட, “தினமலர்” பத்திரிகைக்கு
தான் அதிகம் பொருத்தமாக இருக்கும். அதிமுக அரசின் மீது,
அதற்குண்டான எரிச்சலால் (அல்லது திமுக
மேலிடத்திலிருந்து கிடைத்த ” கவனிப்பால் ” )

திமுகவுக்கு மேற்கு மாவட்டங்களில் பலத்த வெற்றி கிடைக்கும்
என்று தொடங்கி, இறுதியில் – திமுக தான் ஆட்சியைப் பிடிக்கும்
என்று முதல் முதலாக,
கருத்துக் கணிப்பு வெளியிட்டது தினமலர் தான்.

எனக்குத் தெரிந்து – புதிய தலைமுறை ( முக்கியமாக,
சொந்தக்காரர்கள் யார் என்பதை கருத்தில் கொண்டு பார்க்கும்போது )
ஓரளவு நடுநிலையாகவே செயல்பட்டிருக்கிறது.

இதில், அதிகபட்சம் நேர்மையுடன் செயல்பட்ட நிறுவனம் தந்தி டிவி.
தன்னால் முடிந்ததை கணித்து விட்டு, மற்ற இடங்களைப்பற்றி
தங்களால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை என்று நேர்மையாக
ஒப்புக்கொண்டு விட்டது.

—————————————————————————————

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.
தினமலர் இப்போது இப்படி ஒரு தலையங்கத்தை
வெளியிட்டிருப்பதன் காரணம், பின்னணி –
என்னவாக இருக்குமென்று நினைக்கிறீர்கள்….?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to தினமலர் – ” புதிய தலைமுறை ” யை பார்த்து குமுறுவது ஏன்….?

 1. Sharron சொல்கிறார்:

  Dinamalar behaved very badly. Many regular reading people left Dinamalar.After Dinamalar’s opinion poll Dinamalar receiverd more than 450 comments from its readers.

 2. தங்கராசு சொல்கிறார்:

  கருத்துக் கணிப்பை விடுங்கள்.. அது எப்போது சரியாக இருந்திருக்கின்றது?. எல்லாம் ‘டகால்டி’ வேலைதான். டி.வி.யில் நீங்கள் சொல்வது போல் தந்தி டி.வியும், பத்திரிகைகளில் துக்ளக்கும் நேர்மையாக கணிப்பை வெளியிட்டன.

  ஆனால், ஒரு ஜோதிடர் ஏப்ரலிலேயே, அ.தி.மு.க 131 இடங்கள் பெற்று வெற்றி பெறும் என்று முன்னறிவிப்புச் செய்திருக்கிறார். ஆச்சரியமாக உள்ளது.

  பார்க்க : https://ramanans.wordpress.com/

 3. Srini சொல்கிறார்:

  Respected KM sir,
  Not sure how far this is true. But someone mentioned that there are now two family groups managing dinamalar. one group controls some sections of the paper and the online edition. This one is pro dmk. the other group is controlled by another family member which is anti-dmk. DO you have any information on the same

  regards
  Srini

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ஸ்ரீநி,

   நீங்கள் சொல்வது கிட்டத்தட்ட சரி தான்.
   இப்போது வாரிசுகள் பிரிந்து செயல்படுகிறார்கள்.

   பொது நோக்கம் – வியாபார வளர்ச்சியும், பணம் பண்ணுவதும் தான்-
   நம்பகத்தன்மையை பற்றி இரண்டு குழுக்களும் கவலைப்படுவதே இல்லை.

   இப்போதைக்கு –
   ஒரு குழு திமுக சார்பு,
   இன்னொன்று பாஜக(விஹெபி ) சார்பு.
   ஆனால் – இந்த நிலை நிரந்தரமானதல்ல.
   அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 4. NS RAMAN சொல்கிறார்:

  This one of the close contest elections in the last three decades. 22 seats less than 1000 votes margin (14 admk 8 DMK) and 64 seats less than 5000 margin (35 admk 29 DMK).which is 30 pct total seats. With a small sample size very difficult to predict the results by any one.
  election margin analysis

  Winning ADMK. DMK .
  Margin
  1000. 14 8
  2000. 7. 7
  3000. 6. 4
  4000. 5. 5
  5000. 2. 5
  35. 29
  Almost 30% seats margin less than 5000. No sweep or wave to any one party. 2 pct swing would have changed the results.

 5. Tamilian சொல்கிறார்:

  Chennai edition of Dinamalar is DMK party version openly. No merit in news coverage. But they may change sides now.

 6. gopalasamy சொல்கிறார்:

  Forget opinion poll. Dinamalar published so many false news. ( 73000 crore corruption in EB in ADMK period, ADMK weakened in southern districts etc etc. ) I am reading only on line edition. After election also they did not change. Now they are publishing news favouring congress also. They might have believed they could settle their family feud in favour of them. Kumudham Jawahar also behaved in same way.

 7. Tamilian சொல்கிறார்:

  This Dinamalar paper was covering the Rs570 crore SBI money transfer as a detective story for 4 days continuously. Shameless fellow’s.

 8. CHANDRAA சொல்கிறார்:

  GOPALSWAMY JI i understand that mr jawahar is no longer in kumudam
  the entire admn has come to mr varadarajan years back
  yes dinamalar had become the laughing stock in the eyes of unbiased
  political observers…….

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.