ஈழப்போர் – சொல்லப்படாத ரகசியங்கள்…..!!!

.

.

war to peace book cover

தோற்றும் – புத்தி வரவில்லை.
அடக்கம் வரவில்லை.
வயதுக்கேற்ற பெருந்தன்மை வரவில்லை.
வயிற்றேரிச்சலை கொட்டுகிறார்.
வசவு பாடுகிறார்…..
நாங்கள் தோற்கவே இல்லை என்று
புள்ளி விவரங்களை திரித்துக் காட்டுகிறார்…..

தமிழக மக்கள் இனி என்றுமே இவரை அதிகாரத்தில் அமர்த்தக்கூடாது
என்பதற்கான இன்னொரு ஆதாரம் கீழே –

பழம்பெரும் எழுத்தாளர் புலமைப்பித்தன் தன் மனம் திறந்து பேசுகிறார்
ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுக்கள் அல்ல.
ஆதாரம் பேட்டியின் கீழேயே,
NDTV தொலைக்காட்சி ஆசிரியர் கோகலே அவர்களின்
புத்தகச் சுருக்கத்திலேயே இருப்பதைக் காணலாம்.

pp-1

pp-2

pp-3

about the book -” Sri Lanka from War to Peace ”
—————————————

Defence and Strategic Affairs Editor with NDTV,
Gokhale covered the 33-month Eelam War in SriLanka.
The Mi-17s that India ‘quietly gifted’ to Lanka
were in addition to a Sukanya class offshore
patrol vessel also gifted by the Indian Coast Guard
to the Sri Lankan Navy in 2002.

The choppers played a major role in several
daring missions launched by the Sri Lankan Air Force
to rescue the army’s deep penetration units and
injured soldiers from deep inside LTTE-held
territory, the book says.

“Hampered by domestic compulsion, New Delhi
could not go beyond such meagre and clandestine
transfer of military hardware. Publicly all India
was willing to acknowledge was the supply of
low-flying detection “Indra” radars to the
Sri Lankan Air Force since this equipment was
considered a defensive apparatus,” the author says.

Gokhale quotes senior Sri Lankan army officers
saying that thanks to the Mi-17s, the soldiers
operating behind enemy lines functioned with
a greater degree of confidence since they knew
these choppers were always at hand to come to
their rescue whenever necessary. This surely was
the key factor in our Special Forces delivering s
pectacular results.

Not wanting to annoy its Tamil Nadu allies like
the DMK unnecessarily, New Delhi had a
‘politically most important message’ conveyed to
Colombo to try and conclude the war against the
LTTE (called Eelam War IV) before the summer
of 2009 when India was expected to hold the
general elections, Gokhale says.

“The Rajapakse regime was nothing if not shrewd”.
Aware of dynamics that determined India’s
Lankan policies, it was also conscious of India’s
anxiety in losing strategic space in Sri Lanka.
The Rajapakse brothers were pragmatic enough to
realize that Lanka needed India’s support in war
against the LTTE, total support from China and
Pakistan notwithstanding”.
Colombo could ignore India but only upto a point,
the author says.

So Mahinda Rajapakse hit upon an idea of an
informal exchange mechanism between New Delhi
and Colombo. He nominated both his brothers –
Basil (MP and Presidential advisor) and Gotabaya,
the Defence Secretary along with his own secretary
Lalith Weeratunga.

India too reciprocated immediately. The Indian team
comprised National Security Advisor M K Narayanan,
Foreign Secretary Shiv Shankar Menon and Defence
Secretary Vijay Singh.

Colombo may have been ambivalent about meeting
Indian requests to end the operations before
the general elections but the Sri Lankan leadership
once again gratefully acknowledged the Indian Navy’s

contribution in locating and destroying at least
10 ‘floating warehouses’ owned by the LTTE that
were used by the Tigers to store arms, ammunition
and even armoured personnel carriers.

Well-coordinated operations by the two navies
between 2006 and 2009 actually broke the backbone
of the Sea Tigers, Gokhale says.

Also, under an agreement between the two countries,
the Indian Navy and the Coast Guard frequently
sent out ships to patrol the Palk Strait and
the Gulf of Mannar. Presence of warships and
Indian patrol vessels acted as firm deterrence
against the Sea Tigers, the book says.

——————————–

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to ஈழப்போர் – சொல்லப்படாத ரகசியங்கள்…..!!!

 1. srinivasanmurugesan சொல்கிறார்:

  இந்த பதிவு தேர்தலுக்கு முன்பே வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.98 இடங்கள் கூட கிடைத்திருக்காது.

 2. srimalaiyappan சொல்கிறார்:

  இவ்வளவு கொடுமைகளா ?

 3. CHANDRAA சொல்கிறார்:

  I however feel that most of the tamil nadu people still keep
  srilankan tamil issue ltte war etc
  as their last agenda in tamil nadu election
  Yes tamil nadu people are more worried about
  THE WOES OF JAFFERKANPET JAMBAJAR
  JALAGANDAPURAM JAKKAMPATTI IN TAMILNADU
  than the miserable conditions in JAFFNA IN SRILANKA

 4. selvarajan சொல்கிறார்:

  ஈழப்போர் — இங்கே தமிழகத்தில் பல நிகழ்வுகள் நடந்ததை யாரும் மறக்கவோ — மறுக்கவோ முடியாது — ஆதரவு வாபஸ் என்று கூறி பின்னர் பின்வாங்கயது ஏன் என்பது அவர்களுக்கே வெளிச்சம் — முத்துக்குமார் தீக்குளித்ததும் அவரை ” தமிழ் தீவிரவாதி ” என தனது ஊடகங்களில் செய்தி வெளியிடச்செய்தது —. பிணத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்று பழி போட்டது . —– பள்ளப்பட்டி ரவி தீக்குளித்து இறந்ததும். கடன் தொல்லையாலும்., உடல் நலக் கோளாறினாலும், குடித்துவிட்டும் தற்கொலை செய்தார் என செய்தி வெளியிட்டு கேவலபடுத்தினது —– . சென்னை அமரேசன் எழுதி வைத்திருந்த கடிதம் காவல்துறையால்கைப்பற்ற பட்டு அழிக்கப்பட்டது. இன்று வரை கிடைக்கவில்லை…. ’தமிழீழம்’, ’புலிகள்’, ‘ முத்துக்குமார்’, ‘இலங்கை’—என்று பேசும், எழுதப்பட்ட எந்த சின்ன அறிக்கையோ சுவரொட்டிகளோ அச்சடிக்க தடையை திமுக அரசு விதித்திருந்தது — தலைவரை விமர்சனம் செய்தார்கள் என்பதற்காக சிவனடியார்களை மூன்று மாதம் பொய்வழக்கில் சிறை வைக்கப் பட்டது — சோனியாவிற்கு கருப்பு கொடி காட்ட முயற்சி செய்து, அனுமதி மறுக்கப்ப்ட்டதால்’‘கருப்பு பலூனை ‘’ பறக்க விட்டார்கள் என்பதற்காக இயக்குனர். பாரதிராஜா உள்ளிட்ட திரைப்பட தமிழீழ பற்று கொண்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது — மே மாதம் 2009இல் பெரியார் திக அலுவலகத்தை தாக்கிய திமுக குண்டர்கள், பெரியாரின் சிலையையும் உடைத்தது — தமிழீழப் போரை நிறுத்த வேண்டும் என்று பொதுக் கூட்டத்தில் பேசியதற்காக கொளத்தூர்மணி,நாஞ்சில் சம்பத் , மணியரசன், சீமான் போன்றவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது — இன்னும் பல நிகழ்வுகள் அரங்கேறி பயமுறுத்தி வாய்பூட்டு போட்டது — எல்லாவற்றிற்கும் ” உச்ச கட்டமாக ” கடற்கரை காற்று போதாது என்று குளிர் காற்று வீசும் பெட்டியோடு ” உண்ணா விரத நாடகம் ” நடத்தி ஏமாற்றியது — கொத்துக்குண்டுகள் பொழிந்து ஈழத்தமிழர்கள் கொலையாவதற்கு — போர் நிறுத்தம் என்கிற பொய்யுரைத்து காரணியானது — அப்பப்பா … தேவைப்படும் போதெல்லாம் ” தமிழ் — தமிழர் ” என்று வேடதாரியாக மாறுவது — எல்லாமே பதிவான ” வரலாறுகள் ” தானே …. ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   நீங்கள் எழுதி இருக்கும் பல விவரங்கள் பின்னூட்டத்தைப் படித்த பிறகு
   எனக்கும் வரிசையாக நினைவுக்கு வருகின்றன.
   “பஞ்சமா பாதகர்கள்” – கொஞ்சமாகவா செய்தார்கள்….?

   மக்கள் எல்லாவற்றையும் வெகு சுலபமாக மறந்து விடுகிறார்கள்.
   அது தான் இவர்களது பலம், அதிர்ஷ்டம் எல்லாமே…

   அவ்வப்போது நினைவுபடுத்திக் கொண்டே இருக்க இந்த மாதிரி பதிவுகளும்,
   உங்களுடையதைப் போன்ற விஷயம் தெரிந்தவர்களின் பின்னூட்டங்களும்
   மிகவும் அவசியம் என்றே நினைக்கிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 5. jksm raja சொல்கிறார்:

  என்னதான் இருந்தாலும் இந்த அயோக்கிய கூட்டத்திற்கு பின்னால் இன்னும் மக்கள் செல்வதுதான் வியப்பாக இருக்கிறது .

 6. gopalasamy சொல்கிறார்:

  செல்வராசன் அசத்துகிறார் . பாராட்டுக்கள் . நினைவு பெட்டகமாக திகழ்கிறார் .

 7. gopalasamy சொல்கிறார்:

  செல்வராசன் , டுடே அண்ட் மீ இருவரே போதும் .

 8. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  இதில் என்னுடைய கருத்து வேறுபடுகிறது. அது பாப்புலர் கருத்து இல்லை. சோனியாகாந்தி அவர்களோ (அனேகமாக அவர்களை, காந்தி குடும்பத்தை மிகவும் ஆதரிப்பவர்கள்), அவர்களை ஆதரிப்பவர்களோ, இதைச் செய்தால் சோனியா வருத்தப்படுவாரே என்று நினைப்பவர்களோ, விடுதலைப் புலிகளின் அழிவுக்குக் காரணமாயிருந்திருக்கிறார்கள். அந்த நிலைப்பாட்டில் எனக்கு ஒரு தவறும் தெரியவில்லை. தமிழர்கள் என்ற உணர்வில் வருத்தம்தான். ஆனாலும் அரசு செய்ததைத் (மத்திய) தவறு என்று எண்ண இயலவில்லை. எனக்கு அதிகாரம் இருந்திருந்தால் நான் வித்தியாசமாகச் செய்திருப்பேன் என்றும் தோன்றவில்லை. நிற்க..

  கருணானிதி எப்போதும் ஈழத் தமிழர்களை ஆதரித்தவர் அல்லர். அவருக்கு சுய நலத்தைத் தவிர வேறு எதுவும் பெரிதல்ல. எம்ஜியார் ஆட்சிக் காலத்தில், கருணானிதி கொடுத்த பணத்தை விடுதலைப் புலிகள் வாங்கவில்லை. அவர்கள் எம்ஜியாரை மட்டுமே நம்பினார்கள். யாராகிலும் கருணானிதி, ஈழத் தமிழர்களுக்கு நன்மை செய்வார், தொப்புள் கொடி உறவு என்றெல்லாம் நினைத்திருந்தால், அது, அவர்கள் கருணானிதியைப் புரிந்துகொள்ளாததன் விளைவு. கொக்குக்கு ஒன்றே குறி. அது, அவரது பதவி ஆசை, தன் குடும்பத்துக்கு வருமானமுள்ள, செல்வாக்குள்ள பதவிகளைப் பெறுவது, தான் முதலமைச்சராவதற்காக, அதுக்கு என்ன வேண்டுமோ அந்த நிலைப்பாட்டை எடுத்துக்கொள்வது. இதனால்தான், அவரால், கூடா நட்பு என்று சொல்லவும் முடியும், பண்டாரம் பரதேசிகள் என்று சொல்லவும் முடியும், திருமாவைக் கழட்டிவிடவும் முடியும். திரும்பி சேரும்போது, அதுக்கு ஏத்த வியாக்யானம் பேசவும் தெரியும். விடுதலைப் புலிகள் கருணானிதியை எப்போதும் நம்பினவர்கள் அல்லர். கருணானிதியைவிட அவர்கள் வைகோ வை நம்பினார்கள். அவர் திமுக தலைவராக வேண்டும் என்று விரும்பினார்கள் (புலிகளின் நன்மையைக் கருதி. அந்த எண்ணத்தில் தவறேதும் இல்லை. எல்லோரும் அவர் அவர் நன்மையைமட்டும் உத்தேசிப்பார்கள்)

  கருணானிதி, அவரின் 50+ வருட அரசியலில், தன்னைப் பாதித்துக் கொண்டு (அல்லது தன் குடும்பத்தின் நலனுக்கு எதிராக), நாட்டு மக்களுக்காக, அல்லது தமிழன் என்ற உணர்வுக்காக, ஏதாவது ஒரு செயல் செய்திருக்கிறார் என்பதைக் காட்டுங்கள். எதுவுமே கிடையாது. எந்த development work செய்தாலும், அவருக்கு அல்லது அவரது குடும்பத்துக்கு நேரடியான பயன் இருக்கும், அல்லது அவருக்குப் பிடிக்காதவர்களுக்குக் கெடுதி தருவதாயிருக்கும். இதற்கும் விதி விலக்கை நான் கேள்விப்பட்டதில்லை.

  சம்பந்தன் அவர்கள் கருணானிதியை உதவி கேட்டுச் சந்தித்தது, தண்ணீரில் தத்தளிப்பவன், பாம்பைப் பிடித்துக்கொண்டு கரை ஏறலாம் என்று நினைப்பது போன்று, எதுவும் புலப்படாமல், இதுவாவது செய்வோம் என்று எண்ணிச் செய்தது. அதே சமயம், மத்திய அரசு, ஓரளவு இலங்கை அரசின் நலன் கருதி அவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்தபோது (ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்தில்), எம்ஜியார், நேரடியாகவும், மறைமுகமாகவும் விடுதலைப் புலிகளுக்கு உதவினார். புலிகளுக்கு ஆயுதங்களுக்காக, முதலில், அவர்கள் எதிர்பாராத 5 கோடி ரூபாய்களை (அந்தக் காலத்தில் இது மிகப் பெரிய தொகை)க் கொடுத்து உதவினார். வேறு பல, எழுத முடியாத நன்மைகளையும் செய்தார். ராஜீவ் காந்தியிடம் பிரபாகரனுக்காகவும், புலிகளுக்காகவும் வாதாடினார். எம்ஜியாரையும், கருணானிதியையும் சரியாக விளக்க வேண்டுமானால், “செயற்கரிய செய்வர் பெரியோர் சிறியோர் செயற்கரிய செய்க லாகார்”

 9. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  அதனால், புலமைப் பித்தன் புலம்புவதில் அர்த்தமேயில்லை. ஆனால், இதெல்லாம் ஆவணமாக இருந்து கருணானிதியின் தன்மையை எல்லோரும் பிற்காலத்தில் அறியும்படிச் செய்யும். அரசியலுக்குச் சம்பந்தமேயில்லாத எனக்கு இவ்வளவு செய்திகள் தெரியும்போது, புலமைப் பித்தனுக்குத் தெரியவில்லை என்பது அவரது தவறுதான்.

 10. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  நடந்த இனப்படுகொலையின்பொழுது கருணாநிதி செய்த துரோகங்கள் எக்காலத்திலும் மன்னிக்கவோ மறக்கவோ இயலாதவை. அதற்குண்டான தண்டனையும் அவருக்குக் கிடைத்தாக வேண்டும். ஆனால், இந்த ஒரு தேர்தலில் தி.மு.க தோற்பதால் அந்தத் தண்டனை அவருக்குக் கிடைத்து விட்டதாகுமா? வேண்டுமானால், இதுவரை ஒருமுறை கூடத் தேர்தலில் தோல்வியடையாதவர் என்கிற பெருமையை முறியடிக்கும் வகையில் தீர்ப்பு வந்திருந்தாலாவது தமிழினத் தலைவராக இனியும் இந்த துரோகியை ஏற்றுக் கொள்ள மக்கள் ஆயத்தமாக இல்லை எனக் கொள்ளலாம். ஆனால், அப்படியும் நடக்கவில்லை.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.