தேர்தல் முடிவுகள் – “துக்ளக்” ஆசிரியர் “சோ” தலையங்கம்….!!!

.

.

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பற்றி இன்று வெளியாகியுள்ள
துக்ளக் வார இதழில் ஆசிரியர் சோ அவர்கள் தலையங்கம் எழுதியுள்ளார்.

அதைப்படிக்க வாய்ப்பில்லாத நண்பர்களின் வசதிக்காக, கீழே
தந்திருக்கிறேன்.

இந்த விஷயத்தில் ( மட்டும் ) ஆசிரியர் சோ அவர்களுடைய
கருத்துக்களோடு நான் நூறு சதவீதம் உடன்படுகிறேன்.

துக்ளக் தலையங்கம் கீழே –

thalaiyangam-1

thalaiyangam-2

.

பி.கு – பயணத்தில் இருக்கிறேன். சரியாக ஸ்கேன் செய்ய முடியாமைக்கு மன்னிக்க வேண்டுகிறேன்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to தேர்தல் முடிவுகள் – “துக்ளக்” ஆசிரியர் “சோ” தலையங்கம்….!!!

 1. selvarajan சொல்கிறார்:

  அ.தி.மு.க. வெற்றி — தி.மு.க.வின் தொகுதிகள் அதிகமானது — மற்ற கட்சிகள் காணாமல் போனது – போன்ற பல நிகழ்வுகள் நடந்துள்ளன — அ .தி.மு.க. — தி.மு.க. வாக்கு வித்தியாசம் சொற்பமாக இருப்பது — அ .தி.மு.க. இன்னும் அதிகமாக மக்கள் தொடர்பும் — தொகுதியில் களப்பணி ஆற்றுவது போன்ற செயல்களையும் தீவிரமாக்க வேண்டும் — மக்கள் நல பணிகளில் ஈடுபட வேண்டும் என்பதை உணர்ந்து இருப்பார்கள் — தலைமையும் இதை உணர்ந்து — தன் சகாக்களை தொகுதி நலனுக்கு பயன் படுத்தினால் — அடுத்த தேர்தலிலும் வெற்றி வாகை சூடலாம் — பல பன்முக தாக்குதலுக்கு இடையே கிடைத்த வெற்றி இது — இனி …. ? என்று // தப்பித்தோம் ….ஆனால் தோற்றதை வைத்தும் பணம் பண்ணி விட்டார்களே….!!!
  Posted on மே 19, 2016 by vimarisanam – kavirimainthan // என்கிற இடுக்கையில் ஒரு பின்னூட்டம் பதிவிட்டு இருந்தேன் — தற்போது “துக்ளக்” ஆசிரியர் “சோ” அவர்களின் கூற்று உண்மையிலும் – உண்மை — அதனால் ஜெயா தலைமை இனி — அவரின் ” தனிப்பட்ட வெற்றியை ” தக்க வைத்துக் கொள்ள உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் —- இது ஒருபுறம் — மறுபுறம் என்றுமே ” மாறாத தலீவரின் ” // திமுகவை அழிக்கலாம் என நினைத்தவர்கள் அழிந்துபோய்விட்டனர்: கருணாநிதி
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/karunanidhi-slams-pwf-254450.html // என்கிற செய்தியில் — இவரோடு கூட்டணிக்கு சேராதவர்களை மறைமுகமாக தாக்கியதோடு // இப்படிப்பட்ட முடிவுகளைத் தந்த தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தலை நடத்திய அதிகாரிகள், அரசு இவர்களுக்கெல்லாம் பாடம் போதிக்கும் வகையிலே ஏற்பட்டுள்ள இந்த நிலையை எண்ணிப் பார்த்து அடுத்து நாம் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடியும் பலமான அடியாக – யாருக்கும் பயப்படாத அடியாக – துரோகம் விளைவிப்பவர்களுக்கு துணை போகாத அடியாக – எடுத்து வைக்க இந்தச் செயற் குழுவில் ஒவ்வொருவரும் சபதம் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று உங்களையெல்லாம் கேட்டுக் கொண்டு இந்த அளவில் என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்.// என்றும் கூறுவது வழக்கம் போல அவரின் செயல் தானே … ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   இதை உளறல் என்று சொல்லலாம்…
   அல்லது விரக்தி என்றும் சொல்லலாம்…

   “பழம் நழுவி பாலில் விழப்போகிறது ” என்று
   சொன்னது இவர் தானே …?

   ஆறாவது முறை முதலமைச்சர் ஆக முடியவில்லையே
   என்கிற கடுப்பு, எரிச்சல் – பேச்சில் தெரிகிறது.
   ஆக மொத்தம், இவரால் முடிந்த அத்தனை தொல்லைகளையும்
   இனி கொடுக்கப் போகிறார்…..

   புதிய ஆட்சிக்கு இவரை சமாளிப்பதே
   இனி பெரிய வேலையாக இருக்கும்….

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. selvarajan சொல்கிறார்:

  பதவியேற்பு விழா — இருக்கை பிரச்சனை — இருக்கைக்காக ” கருணாவின் குதர்க்கம் ” — ஜெயா விளக்கம் — ஸ்டாலின் – ஜெயா பரஸ்பரம் வாழ்த்து பகிர்வு — முக்கிய ஐந்து கையெழுத்து — ஸ்டாலின் புரிதலோடு செயல்பட தந்தை அனுமதிப்பாரா … ? இல்லை …. நீங்கள் கூறியது போல // புதிய ஆட்சிக்கு இவரை சமாளிப்பதே
  இனி பெரிய வேலையாக இருக்கும்….// ஸ்டாலினையும் ஒரு வழியாக்கி விடுவாரா … ?

 3. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  ஸ்டாலின் தனித்துச் செயல்படுவதுபோல் தெரிகிறது. பொதுமக்கள் பார்வையில், ஸ்டாலின் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொண்டதும், நாகரீகமாக நடந்துகொண்டதும் நன்றாக இருந்தது. கருணானிதியின் அறிக்கைதான், கருணா என்றும் தீயசக்தி என்பதைக் காட்டிக் கொடுத்தது.

  துக்ளக்கின் தலையங்கம் சரியாகப் பிரதிபலித்திருக்கிறது. ஆளும் கட்சிக்கு இயல்பாக இருக்கும் எதிர் ஓட்டுக்களை மீறி, கூட்டணி இல்லாமல், வேறு தலைவர்கள் இல்லாமல், பல எதிர் விமரிசனங்களையும் மீறி (வானத்தில் பறந்துவந்தார், செம்பரம்பாக்கம், செயல்படாத ஆட்சி என்றெல்லாம் வந்த விமரிசனம்) வெற்றி பெற்றுள்ளது ஜெவின் உண்மையான வெற்றி. மற்ற இரண்டு சட்டசபை வெற்றிகளையும் விட, இதுதான் ஜெவின் தகுதியைப் பிரதிபலிக்கும் வெற்றி. ஜெ. நிறைய முதிர்ச்சி பெற்றுள்ளார் என்று தெரிகிறது. ஒரு எதிர்மறை விமரிசனங்களையும் அவர் இந்தத் தேர்தலில் வைக்கவில்லை. கருணானிதியையும், திரு கருணானிதி அவர்கள் என்றே குறிப்பிட்டார். வயதாகி விட்டது, கடைசித் தேர்தல் என்றெல்லாம் ஏமாற்று வேலை செய்யவில்லை. ஜெவை நினைவில் இருத்தும்படியாக இந்தமுறை அவர் ஆட்சி செய்யவேண்டும். வாழ்த்துக்கள்.

 4. R.Gopalakrishnan சொல்கிறார்:

  It is really surprising to note that JJ has not made any single comment about any party or leaders
  in her election campaign except MK and DMK. She has not mentioned about Stalin even once.
  This is probably due to her bitter and nasty time with MK during the past which no one knows.

  • நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

   நான் அப்படி நினைக்கவில்லை. அடுத்த அடுத்த ஸ்டேஜுக்கு வாழ்க்கை செல்லும்போது, பழையவை நினைவுக்கு வாரா. அதுவும்தவிர, மோசமான நினைவுகளை மனது எப்போதும் தவிர்த்துவிடும். இந்தத் தேர்தலில் அவர், ஆச்சரியமாக, “திரு கருணானிதி அவர்கள்” என்றே பேசினார். ஆரம்பம் நல்லா இருக்கு. ஸ்டாலின் சரியாகச் செயல்படுவார் என்று தோன்றுகிறது (‘நல்ல பிம்பம் create பண்ணிக்கொள்ள. இது அவருக்கு அடுத்த தேர்தலில் பயன்படும்). ஆனால், கருணானிதி கெடுக்காமல் இருக்கவேண்டும். நேற்றுக்கூட கருணானிதி ஒரு அறிக்கை வெளியிட்டார் (கெட்ட எண்ணத்திலேயே வாழ்க்கை முழுவதும் வாழ்ந்தவருக்கு அதனை மாற்றிக்கொள்ள இயலுமா?)

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நெல்லைத்தமிழன்,

    தேர்தலின்போது நிகழ்ந்த நாராசங்கள்,
    அவதூறு பேச்சுக்கள் சகிக்க முடியாதவையாக இருந்தன.
    ஒரு ஆறு மாதங்களாவது தமிழகத்தின் அரசியல்வாதிகள்
    மௌனம் காத்தால் நல்லதென்று தோன்றுகிறது.

    திருவாளர்கள் கருணாநிதி, வைகோ, டாக்டர் ராமதாஸ்,
    ஜிகே வாசன், திருமதி தமிழிசை ஆகியோர் கொஞ்ச நாட்கள் வாய் திறக்காமல் இருந்தாலே பல நல்ல விஷயங்கள் நடக்கும்…..
    (விஜய்காந்த் – அவரே இப்போதைக்கு மௌனியாகி விட்டார்…)

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

 5. CHANDRAA சொல்கிறார்:

  JI pl include mr anbumani also in your list
  A couple of his interviews after the election shows his impertinent haughty
  arrogant attitude

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.