தி.க.ஓடியும் – திரவியத்தை ஒளித்து வை…. சிவகங்கை புதுமொழி…..!!!

.

திரு.ப.சி. அவர்கள் அந்த சமயத்தில் தமிழக இளைஞர் காங்கிரஸ்
செயலாளராக இருந்தாரென்று நினைவு….
நினைவிலிருப்பதை வைத்துச் சொல்கிறேன். நிச்சயமாக சொல்ல
முடியவில்லை. மிகப் பழைய சம்பவம் அது ….

கலைஞருக்கும் காங்கிரசுக்கும் ஒத்துவராத காலம் …..
ஒருமுறை திரு.ப.சி.அவர்கள் திமுகவை குறை கூறி ஏதோ சொல்ல,
கடுப்பான கலைஞர் திரு.ப.சி. அவர்களுக்கு ஒரு புதிய பெயரைச்
சூட்டினார் – “சிவகங்கை சின்னப்பையன் “.

தன் அரசியல் எதிரிகளுக்கெல்லாம் விதம் விதமாக
பட்டப்பெயர் சூடி மேடைகளில் பேசுவதும், எழுதுவதும்
கலைஞரின் அந்தக்காலத்து பழக்கங்களில் ஒன்று.

ப.சி.அவர்கள் அப்போது இளவயதுக்காரர்…!!!
இந்த விஷயம், இதைப் படிக்கும்
சில மூத்த நண்பர்களுக்கு இப்போதும் நினைவில் இருக்கக்கூடும்.
சின்னப்பையன் பெரியவராகி,
அரசியலில் காலூன்றி, நிலைத்து நின்று,
முப்பதாண்டுகளுக்கு மேலாக தமிழகத்தின் சார்பில்
பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து –
ஒரு சமயத்தில் ( 2ஜி வழக்கு உருவான சமயத்தில் )
கலைஞரையே ஆட்டி வைக்கும் அளவிற்கு வளர்ந்தார்…!!!

தன் வயதில் மூன்றில் ஒரு பகுதி அளவிற்கு –
மத்திய அமைச்சராகவே பதவியில் இருந்து –
அரசியலில் தவிர்க்க முடியாத நபராக உருவானார்.

அப்போதிருந்தே தமிழக அரசியலில், சிவகங்கை என்றாலே,
திரு.ப.சி.அவர்களின் நினைவு வருவதை தவிர்க்க இயலவில்லை….

இது ஒரு பக்கம் இருக்கட்டும்…..

பசித்தவன் திருடினால் –
இல்லாதவன் திருடினால் –
போதாதவன் திருடினால் –
அதில் ஏதோ ஒருவித நியாயம் இருக்கிறது.
அதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

திருட்டில் பலவகை உண்டு.
தனி மனிதருக்கு சொந்தமானதை –
பொது மக்களுக்கு சொந்தமானதை –
நிறுவனங்களுக்கு சொந்தமானதை –
திருடி, ஏமாற்றி – தன்வசமாக்கிக் கொள்வது ஒரு வகை.

அரசுக்கு கொடுக்க வேண்டிய வரிப்பணத்தை கொடுக்காமல் ஏய்ப்பது –
மறைமுகமாக அரசை, மக்களை ஏமாற்றுவது –

கருப்புச்சந்தை மூலம், லஞ்சம் மூலம், கையூட்டல் மூலம் –
சட்ட அங்கீகாரமற்ற முறைகளின் மூலம் –
சம்பாதிக்கும் பணத்தை,
கணக்கில் வராத – கணக்கில் காட்ட முடியாத பணத்தை,
சொத்துக்களை – திரவியங்களை –

கண்ணுக்குத் தெரியாத தூர தேசங்களில்,
வெளிநாடுகளில் கொண்டு போய்
பதுக்கி வைப்பது…..இன்னொரு வகை.

தமக்குள்ள சட்ட நிபுணத்துவம் காரணமாகவும்,
அரசாங்கத்தில் சட்டமியற்றும் இடத்திலும்,
சட்டங்களை செயல்படுத்தும் இடத்திலும்,
நீண்ட காலமாக, தான் இருக்கும் – இருந்த காரணத்தினாலும் –

அந்த செல்வாக்கின் மூலமும்,
சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தியும் – சேர்த்த,
கணக்கில் வராத சொத்துக்கள் –
வெளிநாடுகளில் கொண்டு போய் பதுக்கப்பட்ட சில சம்பவங்கள்
அண்மையில் வெளிவந்தன.

கடந்த மாதம் new indian express ஆங்கில நாளிதழில்
வெளிவந்த ஒரு செய்தியின் பகுதி கீழே –

————————————-

Advantage Singapore’s global empire extends to
several countries. The Enforcement sleuths have
unearthed that Advantage Singapore

■ Had acquired 88 acres in Sept 2011 (through the
tax haven British Virgin Island [BVI] company
Somerset Surridge Ltd) at Surridge Farm in Somerset in the UK

for ₤1 million..

■ Bought a company, Artevea Digital Ltd, in Cambridge

■ Has had transactions with Oppenheimer
Investments (UK) Ltd

■ Bought majority stakes in Lanka Fortune Residencies,
which owns the prestigious ‘The Waterfront’,
‘Weligama Bay Resort’ and Emerald Bay Hotel

■ Routed money via Dubai to acquire three farms
and vineyards in South Africa

■ Had money transactions with Nicholls Steyn and
Associates in South Africa

■ Got investments from Dubai-based Desert Dunes
Properties Ltd involving money trail of $1.7
million (Singapore) between these firms

■ Had dealings with Pearl Dubai FX LLC

■ Has joint ventures with two companies in
Philippines and allied with Juna Kevin and Haresh
C Hiranand, Philippines, to obtain a franchise team
of International Premier Tennis League (Asia)

■ Had financial transactions with Real Beyond
Pte Ltd, a Singapore Realty company, which has
three subsidiaries in Malaysia

■ Made 16 land purchases in Thailand

■ Invested $400,000 (Singapore) in Full
Innovations Ltd, a BVI firm

■ Has had financial dealing with Geben Trading
Limited in BVI with offices in Switzerland, through the Swiss

Bank,
UBS — which was involved in the famous Hasan Ali
scam in India

■ Has had a transaction of $5 million (Singapore)
with Unison Global Investment Ltd, Singapore

■ Entered into joint ventures with Gravitas
Investments, Match Point International Tennis Events
to buy a franchise tennis team called
‘Manila Mavericks’, for $12 million payable in 12 instalments

■ Acquired residential flat in Malaysia worth
1.9 million Malaysian ringgits from a firm called
Peninsular Smart

■ Holds franchise of Café’ Coffee Day in some areas
of Malaysia and has had several transactions with
Malaysian companies

■ Opened a subsidiary firm in Barcelona in Spain,
Advantage Estrategia Esportiva SLU, in August 2012,
which is a sports academy on four acres with
seven tennis courts

■ Has also made $1 million investments in France
in Pampelonn Organisation

■ Has had transactions with a Greek firm,
Pisani John Sakellarios in Athens

■ Has also transferred $50,000 to an account in
the name of “Chennai Reserve – Business Advantage
Checking” in Bank of America account —
the beneficiary of this transaction being Kitchen Inc, a

Delaware Corporation company in
New York engaged in issuance of Convertible
Promissory Notes — obviously illicit cross border financial

product

■ This list is illustrative and not exhaustive

————————————————-

சம்பந்தப்பட்ட நபரிடம் இதுகுறித்து கேட்கப்பட்டபோது –
சொத்துக்கள் சம்பந்தப்பட்ட விவரங்களை அவர் மறுக்கவில்லை.

பதிலுக்கு அவர் சொன்னது –
நான் சட்டவிரோதமாகவோ, சட்டம் அனுமதிக்காத எந்த செயலையுமோ
செய்யவில்லை. வருமான வரி இலாகாவிடமோ, அமலாக்கப் பிரிவிடமோ,
என்மீது நடவடிக்கை எடுக்கக்கூடிய அளவிற்கு ஆதாரம் எதுவும்
இருக்குமேயானால், தாராளமாக எடுக்கட்டும்.

சட்டபூர்வமாக அதனை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்….!!!

இந்த செய்தியின் பின்னணியில் இன்னும் நிறைய விவரங்கள்
இருக்கின்றன. அடுத்தடுத்த பகுதிகளில் அவை வெளிவரும்.

(தொடரும்…..)

.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல். Bookmark the permalink.

4 Responses to தி.க.ஓடியும் – திரவியத்தை ஒளித்து வை…. சிவகங்கை புதுமொழி…..!!!

 1. nparamasivam1951 சொல்கிறார்:

  அப்பாடி. எப்படி சொத்து பட்டியல் நினைவில் வைப்பது, பாதுகாப்பது…கலைஞருக்கு போட்டி போல.

 2. 'நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  இவர், ராஜேஷ் பைலட், மணிசங்கர் ஐயர் போன்ற பலர், ராஜீவ்காந்தி அவர்கள் பதவிக்கு வந்ததும் உள்ளே நுழைந்தவர்கள். எனக்குத் தெரிந்தவரை (படித்தவரை), 2004க்கு அப்புறம்தான், நீங்கள் சொல்லும் நபர் கொள்ளைக்காரனாக மாறினார். தன் பையனுக்குக் கொள்ளையடிக்கும் வழியைக் காட்டினார். இவரைப் போன்றவர்கள், முதல்முறை தகாத செய்கையில் ஈடுபடும்போதுதான் வெட்கமும் தயக்கமும் (படித்தவர்கள் அல்லவா) கொள்வார்கள். அப்புறம் அதுவே வழக்கமாகிவிடும். ஊருக்கு உபதேசம் செய்யும் அருகதையோ அல்லது மற்ற அரசியல்வாதிகள் செய்யும் ஊழலையோ சொல்லிக்காட்டக்கூட இவர்களைப் போன்றவர்களுக்கு அருகதை கிடையாது. இதில் மிக எரிச்சல் (கிரேசிமோகன் பாணியில்… அறையணும்போல இருக்கு) தருவது என்னவென்றால், ஏதோ, புத்தனுக்குப் பிறந்ததுபோன்று, மற்றவர்களுக்கு அட்வைசும், மெத்தப் படித்தவன்போன்று பொருளாதாரம் எப்படி இருக்கவேண்டும் என்றெல்லாம் ஊராருக்கு உபதேசம் செய்வது. படித்ததைச் செயலில் காண்பிக்காதவர்களெல்லாம், உலகில் இருந்தென்ன.. போயென்ன..

  இதையெல்லாம் எழுதும்போது, வயத்தெரிச்சலில் (“படித்தவன் சூதும் வாதும் செய்தால் அய்யோவென்று போவான்”.. அந்த வயத்தெரிச்சல். நமக்கு இப்படிப் பணம் பண்ணும் வாய்ப்பு கிடைக்கவில்லையே என்ற கருணானிதி வயத்தெரிச்சல் இல்லை) உங்களுக்கும் படிப்பவர்களுக்கும் இரத்தக் கொதிப்பு ஏறாமல் இருந்தால் சரிதான்.

  துபாய்க்குச் செல்லும் அரசியல்வாதிகள், நடிகர்கள், so called தொழிலதிபர்கள் லிஸ்ட் எடுத்தாலே தெரிந்துவிடும் இவர்கள் சாயம். இது, ப.சிக்கு மட்டுமல்ல, சாதாரண அரசியல்வாதிகள்/நடிகர்கள் (என்னுடைய கீ போர்டில் ப்ராப்ளம். இந்த இரண்டு வார்த்தைகளை எழுதினால், அது தானாகவே கொள்ளைக்காரர்கள் என்று எழுதிக்கொள்கிறது. கஷ்டப்பட்டு மாற்றியுள்ளேன்) – துரைமுருகன், விஜயகாந்தின் பினாமி சதீஷ், சரத்குமார், எலைட் “நாங்க இருக்கோம்” கடைக்காரர்கள் போன்ற எல்லோருக்கும் பொருந்தும்.

  நான் ஒரு காலத்தில் நல்ல டீசண்டான அரசியல்வாதி என்று நினைத்த ப.சி. இப்படி மாறியது, காலத்தின் கோலமா, அல்லது வீட்டம்மாவின் சாயல் படிந்ததாலா அல்லது பையனின் வேலைகளாலா என்று தெரியவில்லை. ஒருவேளை, அவர் தேர்தலில் தோல்வியுற்றதால், நல்லவனாயிருந்தால் பிரயோசனமில்லை என்று எண்ணி ஜோதியில் ஐக்கியமாகிவிட்டாரோ?

 3. gopalasamy சொல்கிறார்:

  P.C may be having so many friends, well wishers and followers in all important departments like E.D, Income Tax etc, etc. It is not possible to take action against him.

 4. srinivasanmurugesan சொல்கிறார்:

  O my God!!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.