சு.சுவாமி துரத்தத் துடிக்கும் ரிசர்வ் வங்கி கவர்னரும், பின்னாலுள்ள காரணமும்…..


Swamy_and_Rajiv_Gandhi 3x2 via Wiki by Swamy

மோடிஜி ஆட்சியில் அமரும்போதே, தனக்கும் மந்திரி பதவி கிடைக்கும்
என்று சு.சுவாமி மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தார். அது நடக்கவில்லை.

செய்தியாளர்கள் அந்த சமயத்தில் கேட்டபோது –
சில காரியங்களை செய்து முடிப்பதற்காக நான் அமைச்சரவைக்கு
வெளியே இருக்கிறேன். அந்த assignment முடிந்த பிறகு நான்
அரசில் சேருவேன்… இது எனக்கும் மோடிஜிக்கும் இடையே உள்ள
புரிதல் – என்று சமாளித்தார்.

மறைமுகமாக, சோனியாஜியை ” உள்ளே ” தள்ளுவது தான் தனக்கு
கொடுக்கப்பட்டிருக்கும் assignment என்று பொருள்படும்படி
பேசியும் வந்தார்.

பின்னர், அந்த காரியம் அவ்வளவு சீக்கிரம் நடப்பதாக இல்லை என்பதால்,
பொறுமை இழந்து – திரு.அருண் ஜெட்லி நிதியமைச்சர் பதவிக்கு
பொருத்தமானவர் அல்ல என்றும் தன்னிடம் நிதியமைச்சகம்
ஒப்படைக்கப்பட்டால் இதைச் செய்வேன், அதைச் சாதிப்பேன்
என்றெல்லாம் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பேசியும், எழுதியும்
வந்தார். அருண் ஜெட்லியை அவமானப்படுத்தும் விதத்திலும்
அவ்வப்போது குறைகளைச் சொல்லி வந்தார்.

பின்னர் ஒரு சமயத்தில், அருண் ஜெட்லியை பிரதமர் நிச்சயமாக
விட்டுக்கொடுக்க சம்மதிக்க மாட்டார் என்று தெரிந்த பிறகு,

சு.சுவாமியின் பார்வை உள்துறை அமைச்சகத்தின் மீது சென்றது.
திரு.ராஜ்நாத் சிங் பழம் தின்று கொட்டையும் போட்ட ஆசாமி.

ஜெட்லியை போல் ஜென்டிலாக இல்லாமல்,
சு.சுவாமியின் முதலுக்கே மோசம் ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு
செல்லக்கூடியவர்.

நிதியமைச்சகத்தை தான் கைப்பற்ற முடியவில்லை…
உள்துறையிலும் வாய்ப்பில்லை…
ரிசர்வ் வங்கியிலாவது, தனது அதிகாரத்தை செலுத்த வேண்டுமென்று
தீர்மானித்து, தனது ஆதரவாளரான VHP பின்னணியுடைய
பொருளாதார நிபுணர் ஒருவரை தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறார்.
அவரை உள்ளே நுழைக்க ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கவே –
இப்போதைய ரிசர்வ் பேங்க் கவர்னர் ரகுராம் ராஜனின் மீது இந்த
தொடர்ச்சியான தாக்குதல்.

கவர்னரை மாற்றச் சொல்லி தான் சொன்னால் –
மோடிஜி ஏற்க மாட்டார். எனவே, பொதுமேடையில், மீடியாக்கள் இடையே
தொடர்ந்து அவமானப்படுத்தினால், ரகுராம் ராஜன் தானாகவே
பதவியை விட்டு விலகிப் போய் விடுவார் என்பது சு.சு.வின் எண்ணம்.

நான் சொல்ல வருவது –

தங்கள் சிந்தனையுடன் ஒத்துப் போகக்கூடிய ஒருவர் ரிசர்வ் வங்கியின்
கவர்னராக பொறுப்பேற்க வேண்டும் என்று மோடிஜி அரசு விரும்பினால்
அதில் தவறேதும் இல்லை….
ஆனால், அதை வெளிப்படையாக, நேர்மையான வழியில்
செயல்படுத்த வேண்டும். இப்போதைய கவர்னரின் பதவிக்காலம்
செப்டம்பரில் முடிவிற்கு வருகிறது.

அந்த சமயத்தில், அவரது பணிக்காலத்தை மீண்டும் தொடராமல்,
புதிய நபரை நியமித்தால் பிரச்சினை தீர்ந்தது.

அதை விட்டு விட்டு பதிலுக்கு பதில் அரசியல் பேச முடியாத
நிலையிலுள்ள அவரை,
சு.சுவாமி இப்படி அவமானப்படுத்துவது
வடிகட்டிய அயோக்கியத்தனம்.
சு.சுவாமியை இப்போது கூட கட்டுப்படுத்தவில்லையென்றால்
பின்னர் மோடிஜி அதற்காக வருந்த வேண்டிய சூழ்நிலை உருவாகும்….

டாக்டர் ரகுராம் ராஜன் பற்றிய பின்னணி விவரங்கள்,
ஆனந்த விகடன் வார இதழில் முன்பு வெளிவந்திருந்தன.
அதைப்படித்தால், நண்பர்களுக்கு அவரைப்பற்றிய பின்னணி
புரியும்….எனவே கீழே தந்திருக்கிறேன்…

rr-1

rr-2

rr-3A

rr-4A

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to சு.சுவாமி துரத்தத் துடிக்கும் ரிசர்வ் வங்கி கவர்னரும், பின்னாலுள்ள காரணமும்…..

 1. LVISS சொல்கிறார்:

  The PM has made his position clear on the RBI Governor issue —Mr Rajan’s tenure is to end in SEptember — Then they can change the RBI chief in the normal course — Was there any RBI chief who has worked for two terms – –We have enough people to head the organisation — Mr Rajan has done a fine job —

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப எல்விஸ்,

   ரிசர்வ் வங்கி கவர்னர் பற்றி நீங்கள் கூறியது ஒரு பக்கம் இருக்கட்டும்….

   அவரைத் துரத்தத் துடிக்கும், அவதூறுகளை அள்ளி வீசும்
   திருவாளர் சுப்ரமணியன் சுவாமி தானே இந்த இடுகையின்
   கதாநாயகன் ( அல்லது வில்லன் …! ). அவரைப்பற்றி,
   அவரது நடத்தையைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்னவென்றும்
   சொல்லலாமே…. !!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • LVISS சொல்கிறார்:

    Mr K M It is difficult to say who Mr Swamy will take on next — More often than not what he says would embarrass his own party –I think the party is used to it — Probably in this case he doesnt want the govt to think of another term for Mr Rajan —

    He is neither a villain or hero to me but he is different from many politicians we have in our country — That is what interests me about him — Without knowing why he is doing a certain thing I do not want to say anything about him — Most of the persons refute his charges but rarely challenge him jn a court of law —
    For most part the RBI Governors were rarely visible in the news–Only in the last few years we are seeing them more in the news —

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     நண்ப எல்விஸ்,

     நான் உங்களிடமிருந்து தெரிந்து கொள்ள விரும்பியது –

     ” இவருடன் பொதுமேடையில் அல்லது மீடியாவில் விவாதம்
     நடத்தக்கூடிய நிலையில் இல்லாத ரிசர்வ் வங்கியின் கவர்னரைப்பற்றி
     இவர் மீடியாவில் இவ்வளவு அவதூறு கூறுவது சரியான நடத்தையா …?

     பிரதமர் மோடிஜியே சொல்லி விட்டார் –
     இது பத்திரிகையில் விவாதிக்கப்படக்கூடிய செய்தி அல்ல
     முற்றிலும் நிர்வாக ரீதியான விஷயம் என்று….

     இவர் நேர்மையான, பண்பான ஒரு matured மூத்த அரசியல்வாதியாக
     இருந்தால், இவரது எண்ணம் ரகுராம் ராஜன் இன்னொரு term
     பெறக்கூடாது என்பதாக மட்டும் இருந்தால், அதை சு.சுவாமி
     பிரதமருடன் தனிமையில் விவாதிப்பது தானே பொருத்தமாக
     இருந்திருக்கும்….?

     அதைவிட்டு விட்டு, இப்படி புழுதிவாரித் தூற்றுவது
     ஒரு பக்குவப்பட்ட மனிதரின் செயலா …?

     – இவரின் இத்தகைய செயல்களையும் நீங்கள்
     ஆதரிக்கிறீர்களா ….?

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

 2. selvarajan சொல்கிறார்:

  By GABRIELE PARUSSINI
  May 26, 2016 6:18 pm IST

  // Indian Prime Minister Narendra Modi on Wednesday declined to say whether he is in favor of Reserve Bank of India Governor Raghuram Rajan getting a second term in office, with the end of the central bank boss’s tenure only three months away.
  Asked in an interview with The Wall Street Journal whether he supported the reappointment of Mr. Rajan as governor, Mr. Modi said: “I don’t think this administrative subject can be an issue for the media. And that issue is only in September, not now.” — http://blogs.wsj.com/indiarealtime/2016/05/26/what-narendra-modi-said-when-asked-about-rbi-governor-raghuram-rajan/ … // ரகுராம் ராஜனை எப்படியாவது அவரது பதவிக் காலம் இன்னும் ஒரு மூன்று மாதம் முடிவதற்குள் ” தூக்கி விட வேண்டும் ” என்று முனைப்பாக சு.சுவாமி தன் வேலையை துவக்கி இருந்தாலும் — மோடிஜி ” வால் ஸ்ட்ரீட் ஜர்னல் ” பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் மேற்கண்டவாறு கூறியிருப்பது — ரிசர்வ் வங்கியின் கவர்னர் – தன் முழு பதவிக் காலத்தையும் முடித்து விட்டு தான் செல்வார் போல தெரிகிறது — !!!

 3. paamaranselvarajan சொல்கிறார்:

  அய்யா…! ஜனவரி 21 / 2016 அன்றைய இடுக்கைலேயே சு.சாமி பற்றி அனைத்தும் இருக்கிறது … மீண்டும் அவரைப் பற்றி … நடத்தைப் பற்றி சாெல்ல வேண்டுமா…?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   இந்த இடுகையின் நாயகனைப்பற்றியும்,
   அவரது லேடஸ்ட் நடத்தைகளைப்பற்றியும்
   நண்பர் எல்விஸ் என்ன கருதுகிறார் –
   அவரது சிந்தனையில் ஏதேனும் மாற்றம் உண்டா ? – என்று
   தெரிந்து கொள்ள் விரும்பினேன். அவ்வளவே….!!!

   ( பழைய இடுகைகளில் உள்ள விஷயங்களை இந்த அளவிற்கு
   உள்ளங்கையில், நினைவில் வைத்திருக்கும் உங்களுக்கு
   என்ன பட்டம் கொடுத்தால் பொருத்தமாக இருக்குமென்று
   யோசித்துக் கொண்டிருக்கிறேன். பார்ப்போம் – மற்ற
   நண்பர்களுக்கும் எதாவது தோன்றலாம்… 🙂 🙂 )

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 4. ltinvestment சொல்கிறார்:

  Rajan is fantastic person and he is good leader. he has given little power where as he uses that 100% efficient. Even Govt palnned to take that power by forming commitee. he agreed to do it. But we can see lot of bad examples by doing lower interest rate across globe. Govt wants steriod to keep them alive next round. Whereas Rajan wants longer term medicine to kill the disease completely. thats the difference.
  Babus (few) does good job though they may not get rewards / renewals. same way few politicians only follow it.
  present politics to keep them media presence and keep alive for next round.
  We need to India thatha to remove the unwanted.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.