எத்தனை வயதானாலும், பொது வாழ்விலும், தனி வாழ்விலும் எவ்வளவு அடிபட்டாலும், இவர் திருந்தவே மாட்டார்….

madurai karunanithi

சிலருக்கு வயதானால் பக்குவம், பெருந்தன்மை வரும்….
சிலருக்கு வாழ்க்கையில் சந்திக்க நேரிடும் நிகழ்ச்சிகளால்,
பெறும் அனுபவங்களால் பக்குவம் வரும்…
சிலருக்கு தாங்க முடியாத துன்பங்கள் வந்தால் –
பக்குவம் வரும்.

ஆனால், வயதாக ஆக,
அடிபட அடிபட,
அவமானப்பட அவமானப்பட –

கொஞ்சம் கூட வெட்கமோ, வேதனையோ, அவமானமோ,
படிப்பினையோ கொள்ளாமல் –

இந்த அனுபவங்களை –

தன் துர் எண்ணங்களையும்,
அறம் மீறியசெயல்களையும்,
தீய சிந்தனைகளையும் –
மேலும் தொடர்ந்து வளர்த்துக் கொள்ள உரமாகவே
பயன்படுத்திக் கொள்ளும் பழக்கம் இருக்கும் சிலர்
கடைசி வரை திருந்தவே மாட்டார்கள் என்பதை –

நேற்றைய தினம் ஹிந்து ஆங்கில நாளிதழுக்கு திருவாளர்
கருணாநிதி கொடுத்திருக்கும் பேட்டி எடுத்துக் காட்டுகிறது.

ஏற்கெனவே வயிற்றெரிச்சலில் இருக்கும்
ஹிந்து நாளிதழின் உரிமையாளர் ராம் –
கலைஞருடன் சேர்ந்து
பொது மக்களுக்கு சொல்ல முயன்றிருக்கும் சேதி –

—————

” ஜெ. பெற்ற வெற்றி, வெற்றியே அல்ல….

கூட்டணிக்கட்சிகளின் தோல்வி காரணமாகவே
திமுக ஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்தது….

சிறிய மெஜாரிட்டியில் ஆட்சிக்கு வந்திருக்கும் ஜெ.ஆட்சி
எப்போது வேண்டுமானாலும் கவிழ்ந்து விடும். மெஜாரிட்டிக்கு
காரணமாக இருக்கும் 12 அதிமுக எம்.எல்.ஏ-க்களை
தடம் புரளச்செய்வது பெரிய காரியம் அல்ல.
இவர்களை தக்க வைத்துக் கொள்வதே ஜெ.வுக்கு பெரிய
சவாலாக இருக்கும்….!!! ”

————–

ஹிந்து செய்தித்தாளும் சரி,
அதன் உரிமையாளர் ராம்-உம் சரி,
ஜெ.அவர்களுடன் நிரந்தரப்பகை கொண்டிருப்பவர்கள்.
அதிமுக ஜெயித்து மீண்டும் ஆட்சிக்கு வந்ததை
ஜீரணிக்க முடியாத ” ராம் ” கலைஞர் கருணாநிதியுடன்
சேர்ந்து – இந்த ஆட்சி அதிக நாட்கள் நீடிக்காது என்று
“பயமுறுத்த” முயன்றிருக்கினர்.

பேட்டியில், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் திமுக
சில இடங்களில் தோற்றதைப்பற்றி கூறியிருக்கும் கலைஞர் –

அதைவிட அதிகமான இடங்களில், அதிமுகவும்
குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்றிருப்பதை
சாமர்த்தியமாக மறைத்து விட்டார்..

அதே போல், அதிமுக வினரிடமிருந்து
பணம் கைப்பற்றப்பட்டதை பட்டியலிட்டிருக்கும் அவர்,

திமுகவின் அரவக்குறிச்சி வேட்பாளர் பழனிச்சாமியிடமிருந்தும்,
சென்னையில் உள்ள அவரது மகனிடமிருந்தும் கைப்பற்றப்பட்ட
சுமார் மூன்று கோடி பணத்தைப் பற்றி வாயே திறக்கவில்லை.

570 கோடி ரூபாய் கன்டெயினர் பற்றி சென்னை உயர்நீதிமன்றத்தில்,
ரிசர்வ் வங்கியின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு, அந்த வழக்கே
முடித்து வைக்கப்பட்ட பிறகும், குறுக்கு புத்தியுடன்,
திமுகவின் மேற்கு மண்டல தோல்விக்கு – அதை ஒரு காரணமாக
காட்டுகிறார்…..

இதையெல்லாம் விடுங்கள் –

172 இடங்களில் போட்டியிட்ட திமுக 89 இடங்களில் வெற்றி
பெற்றுள்ளது. இது 51.74 சதவிகிதம்.

திமுக கூட்டணிக் கட்சிகள் 60 இடங்களில் போட்டி யிட்டு
9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இது 15 சதவிகிதம்தான்.

எனவே கூட்டணிக்கட்சிகள் தான் திமுகவின் தோல்விக்கு
காரணம் என்று பகிரங்கமாகக் கூறுகிறார்….

திமுக வென்ற 89 இடங்களில் அது பெற்றது திமுக ஓட்டு மட்டுமல்ல.
கூட்டணி கட்சிகளின் ஓட்டுக்களும் சேர்ந்ததால் தான்
திமுக 89 இடங்களை பெற முடிந்தது.
கூட்டணிகள் இல்லாமல் இருந்தால் – இந்த இடங்கள்
கூட திமுகவிற்கு வந்திருக்காது என்பது தான் உண்மை.

தனக்கு சாதகமான விஷயங்களை மட்டும் கூறி,
தனக்குத்தானே பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் கலைஞரின் பேட்டி
பற்றி மூத்த பத்திரிக்கையாளர் மணி அவர்கள் –

” ஜெயலலிதா மாறினாலும் கருணாநிதி
மாற விடமாட்டார் போலிருக்கிறதே! ”

என்கிற தலைப்பில் எழுதும்போது கூறுகிறார் –

——————-

” அதிமுக எம்எல்ஏ க்களை விலைக்கு வாங்கி தாங்கள்
ஆட்சியமைக்க உதவும் குதிரை பேரத்திற்கு திமுக
ஆசைப்படுகிறதோ என்ற சந்தேகம்தான் இந்தப் பேட்டியிலிருந்து
கிடைக்கும் தகவலாகும். ”

” எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு கிட்டத்தட்ட கடந்த
29 ஆண்டுகாலமாக கருணாநிதியை ஜெயலலிதா மட்டும்தான்
தமிழக அரசியிலில் வெற்றிகரமாக சமாளித்து வருகிறார். ”

” புதிய சட்டமன்றம் முறையாக தன்னுடைய அலுவல்களை
துவங்குவதற்கு முன்பே ‘குதிரைப் பேரத்திற்கான’ சாத்தியக் கூறு
பற்றி பிரதான எதிர்கட்சியின் தலைவர் பேசத் துவங்கியிருப்பது
தனி மனித துவேஷத்திலேயே சுழன்று கொண்டிருக்கும்
தமிழக அரசியலின் நாகரீகத்தை, ஆரோக்கியத்தை
மேலும் சிதைத்து சின்னாபின்னமாக்கப் போகிறது
என்பது தான் உண்மை ”

———————

தேர்தலுக்கு முன்னர் தன்னுடன் கூட்டணி சேர மறுத்த
மதிமுகவை, தேமுதிகவை, உடைத்து பலவீனமாக்கிய கலைஞர் –

இப்போதும் அந்தப் பணியை –
அதிமுக எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் பணியை
ஏற்கெனவே துவக்கி இருப்பார் என்பதில் எந்தவித
சந்தேகமும் இல்லை….

ஆனால் – இதற்கு முன்னர் தனக்கு ஏற்பட்ட முன் அனுபவங்களால்
நல்லதை கற்றுக் கொள்ளாத கலைஞர் –

இந்த பேட்டிக்கு எதிர்தரப்பிலிருந்து கிடைக்கப்போகும்
பதில்-வினைகளின் மூலமாவது உணரக்கூடிய வாய்ப்பு உருவாகும்
என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், முந்தைய சம்பவங்களில் சிலவற்றில் –
அவருக்கு எதிராக எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகள்,
மக்கள் அவர் மீது அனுதாபம் கொள்ள
ஒரு காரணமாக அமைந்தது….

ஆனால் – இந்த தடவை பதில் நிகழ்வுகள் நடக்கும்போது –

” இவருக்கு இது அவசியம் தேவை தான் –
இப்போதாவது புத்தி வருகிறதா பார்ப்போம் ”

– என்பது தான் மக்களின் கருத்தாக இருக்கும்…!!!

இவர் மீது இனி, யாருக்கும், எந்த சமயத்திலும் –
கடுகளவு கூட அனுதாபம் பிறக்காது….

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to எத்தனை வயதானாலும், பொது வாழ்விலும், தனி வாழ்விலும் எவ்வளவு அடிபட்டாலும், இவர் திருந்தவே மாட்டார்….

 1. Tamilian சொல்கிறார்:

  I totally agree with the posting. Mu Ka must be boiling inside that DMK could not win the elections though they vastly improved the numbers. It was a close fight in many constituencies and that must be hurting him. He wants to threaten Jaya that he would engineer defections forgetting that she could also successfully do that . He should not forget that his son at Madurai will also try to do something for his contribution.But with all the evil design of Mu Ka getting exposed all these days , that DMK could improve their seats bogs me. That people have forgotten 2G , land grabbing etc.with in a short time.

 2. Tamilian சொல்கிறார்:

  As for Ram , less said the better. From mount road Mahavishnu- to quote Mu Ka- he has changed to mount road Marxist. Between him and Mu Ka ,there exists -to steal words from EVKS- a secret relationship.

 3. R.Gopalakrishnan சொல்கிறார்:

  What makes Ram so interested towards MK. What mutual gains both get.

 4. selvarajan சொல்கிறார்:

  தொடர் மூன்று தேர்தல்களில் அடைந்த தோல்வி — பல கோடிகள் — பல விதங்களில் செலவு செய்தும் வெற்றி பெறாததின் வெறுப்பு — பொய்யாகிப் போன கணிப்புகளினால் வந்த கடுப்பு — ஸ்டாலின் – ஜெயா வின் வாழ்த்து பரிமாற்றம் ஏற்படுத்திய எரிச்சல் — மாநிலத்தில் ஆட்சியில் இல்லாமல் இருந்தாலும் – மத்திய ஆட்சியில் இருந்து கோலோச்சிய நினைப்பு — வருமானம் போச்சே என்கிற அங்கலாய்ப்பு — 2006 – ல் வெறும் 96 இடங்கள் பெற்று காங்கிரஸ் கூட்டால் ” மைனாரிட்டி ஆட்சி ” அமைத்து பதவியை நுகர்ந்த ஆசை — மீண்டும் தற்போது அதைப்போல எதையாவது செய்து முதல்வர் நாற்காலியில் அமர துடிக்கும் துடிப்பு போன்ற செயல்களால் ஏற்படும் காழ்புணர்ச்சி — இது மட்டுமல்லாமல் பேட்டியில் :– // பயப்படாத அடியாக, நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் இருக்க வேண்டுமென்று குறிப்பிட்டேன். தி.மு. கழகத்திற்கு துரோகம் விளைத்தவர்கள், தற்போது விளைவிக்க நினைப்பவர்கள் ஆகியோருக்கு துணை போகக் கூடாது என்பதற்காக, துரோகம் விளைவிப்பவர்களுக்கு துணை போகாத அடியாக இருக்க வேண்டுமென்று குறிப்பிட்டேன். ” என்னுடைய உடன்பிறப்புகளுக்கு நான் கூறியதன் பொருள் நன்றாகவே விளங்கும் ” . // என்று கூறி உசுப்பேத்தி விடுகிற புத்தி போன்றவைகள் … அய்யாவின் கூற்றுப்படி — ” எத்தனை வயதானாலும், பொது வாழ்விலும், தனி வாழ்விலும் எவ்வளவு அடிபட்டாலும், இவர் திருந்தவே மாட்டார் ” ….என்பது உண்மைதானே … ? மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் கருத்து ஒன்றை தனது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். அதில் // இப்போது மீண்டும் பெரும்பான்மையைவிட தம்மாத் துண்டே அதிகம் என்று கருணாநிதி பேச ஆரம்பித்துள்ளார். இதுக்கு பேருதான் சொந்தக்காசில் சூன்யம் வைத்துக் கொள்வது.. சாதாரணமாகவே அவ்வளவு ஆட்டம் ஆடுவார் ஜெயலலிதா. இப்போது சலங்கையை வேறு கட்டிவிட்டுள்ளார்.. மந்திரி பதவி அப்பால..வாரிய தலைவர் பதவி இப்பால.. என்று திமுகவை — மக்கள் திமுக என ஜெயலலிதா பிளக்காமல் இருக்க விரும்பி வைப்போம்..// என்று பதிவிட்டு இருக்கிறார் — இவரால் மட்டும் தான் மாற்றுக் கட்சியினரை இழுக்க முடியும் என்கிற கணக்கு — தவறாகி — ஜெயா செய்தால் — இவரது கதி …. ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கலைஞரின் பேட்டியிலிருந்து ஒரு
   மிக முக்கியமான பகுதியை எடுத்துப்போடத் தவறி
   விட்டேன் –

   —————–
   தமிழக சட்டப் பேரவையின் வரலாற்றில்,
   திமுக 1971-ல் 184 உறுப்பினர்களுடன்
   இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய
   ஆளுங்கட்சியாக இருந்திருக்கிறது;

   இப்போது 89 உறுப்பினர்களுடன் இதுவரை
   இல்லாத அளவுக்கு மிகப் பெரிய எதிர்க் கட்சியாகவும்
   உருவெடுத்திருக்கிறது.

   ஆளுங் கட்சியாகவும், எதிர்க் கட்சியாகவும்
   திமுக ஏற்படுத்தியிருக்கும் சரித்திரச் சான்றுகளை
   யாராலும் மறைத்து விட முடியாது!

   ———————

   ஆளும் கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும்
   தமது சாதனைகளை சொல்லிக்கொண்ட கலைஞர் –

   இரண்டே வருடங்களுக்கு முன்னர்,
   2014 பாராளுமன்ற தேர்தலில், 39 தொகுதிகளில்
   போட்டியிட்டு, 39 -லும் தோற்ற வரலாற்றை
   வசதியாக மறந்து ( மறைத்து …? ) விட்டார்
   பார்த்தீர்களா….?

   கலைஞர் இந்த வயதிலும் ஆர்வத்தோடு இயங்குவது,
   இந்த மாதிரி சிந்தனைகள் தொடர்ந்து
   அந்த மூளையில் உதித்துக்கொண்டே இருப்பதால் தானோ….?

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 5. Narasimhan சொல்கிறார்:

  இவரது பொது வாழ்க்கையும் தனி வாழ்க்கையையும் ஆராய்ந்தால் ஆயாசம்தான் வரும். இவரை நீங்கள் குறைத்து மதிப்பிடுகிறீர்கள் .இன்னமும் தேர்தல் நடக்காத தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த இவர் ஏன் அவசரப்படுகிறார் .என்னமோ இவர்தான் அவற்றை கைப்பற்றபோகிறதாக எண்ணிக்கொண்டு அதனால் திமுகாவிற்கு ஒரு மேலவை உறுப்பினர் குறைகிறதாக புலம்புகிறார் .

 6. selvarajan சொல்கிறார்:

  அண்ணா அரும்பாடுபட்டு 1967 – ல் ஆட்சியை பிடித்தார் — அவருக்குப்பின் எம்.ஜி.ஆரின் தயவால் 1969 – ல் கலைஞர் முதல்வர் ஆனார் — ஆனால் பதவிக் காலம் ஓராண்டு இருக்கும் போதே கலைஞர் சட்டசபையை கலைத்தது ஏன் .. ? சற்றே சிந்தித்து பார்த்தால் பல விடைகள் கிடைக்கும் — அவற்றை ” உருவகப் படுத்தி ” பார்த்தல் ஒரு உருவம் வரும் — அது தான் சுயலமிக்க கலைஞர் அவர்கள் … ! இதில் என்ன சுயநலம் என்றால் — 1967 -வெற்றி அண்ணாவினால் கிடைத்த வெற்றி என்பதை மறக்கடிக்கவும் — எம்.ஜி.ஆரால் முதல்வர் என்பதை துடைத்து எறியவும் — கட்சிக்குள் அரசால் புரசலாக உள்ள ஊழல் — கணக்கு கேட்கும் படலம் ஆரம்பிக்கும் நிலை போன்றவைகளை ஓரம்கட்டி — தன்னால் தான் கட்சி என்பதை உறுதி படுத்தவும் — அதன் பிறகு ” குடும்பத்துக்காக கழகம் ” என்பதை விதைக்கவும் — மற்றவர்கள் வாயடைக்கவும் தான் என்பது விளங்கும் — அதுதான் இன்றளவும் தொடர்கிறது —- அந்த 1971 –வருட தேர்தலில் சிபிஐ, முஸ்லீம் லீக், பார்வர்ட் பிளாக், ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சி, பிரஜா சோசலிஸ்ட் கட்சி,இந்திரா காங்கிரஸ் ஆகியவை திமுக கூட்டணியில் இடம் பெற்றன …காங்கிரஸ் பிளவுபட்டவுடன் மத்தியில் தன்னை நிலைப்படுத்திக்கொள்ள திருமதி இந்திரா நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க தயாரானார் — அவரைப் போலவே இங்கே இவரும் தயாரானார் … இந்திரா வோடு கூட்டணி அமைத்தாலும் அந்த தேர்தலில் ஒரு இடம் கூட அவர்களுக்கு ஒதுக்காமல் — அவர்களது அபிரிதமான வாக்குகளை மட்டும் பெற்று 184 இடங்களை பெற்றார் — அப்போதும் கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளை இவரோடு சேர்க்க விரும்பாத பலே ” கில்லாடி ” இவர் — என்றுமே மாறாத ஒரே ” தலீவரு ” … ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   கூட்டணி கட்சிகளின் ஓட்டு வங்கியோடு தான் வெற்றி பெற்றதை
   தன்னுடைய சொந்த சாதனை என்கிறார்….

   ஆனால், திமுக உதவியும், கூட்டணி கட்சிகள் தோற்கும்போது,
   அதை கூட்டணி கட்சிகளின் தோல்வியாக வர்ணிக்கிறார்…

   அவருக்கேயுள்ள சாமர்த்தியம்….!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 7. sriram சொல்கிறார்:

  வள்ளுவர் கோட்டம் பிழைத்தது ஒரு சாவுலிருந்து சமாதி ஆக

 8. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  Anyhow Amma can not call Minority DMK henceforth

 9. Sundaram சொல்கிறார்:

  You are right. MK will never change. MK is like a dreaded and dangerous virus and should never be elected to power. Thank God, DMK is not voted to power this time and TN and India are saved. If he comes to power he will do more damage to the country as a whole and TN in particular by his hate policies. People are frustrated that even at this age, he is not retiring and still trying to continue his family politics. Surprisingly it seems his son Stalin started showing some signs of maturity lately, but how far MK will allow him to go further is to be seen.

  Your posts all are superb. Appreciate your efforts in this regard. Keep going!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.