வாழையிலை சாப்பாடு – குறு வீடியோ….

vazhai ilai-2

எங்கெங்கோ சுற்றிவிட்டு, கடைசியில் ஒரு நண்பர் மூலம்
என்னிடமும் வந்து சேர்ந்திருக்கிறது இந்த குறு வீடியோ.
சுவையாக இருந்ததால், அதை
இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இதைப்பற்றி சொல்ல சில விஷயங்கள் இருக்கின்றன.
முதலில் வீடியோவை பாருங்களேன்….
அப்புறம் நமது கருத்து….!

-வாழையிலையில் சாப்பிடுவது என்பது ஒரு தனி கலை.
அதை ரசிக்கும் விதத்தில், கிண்டலாகச் சொல்கிறது இந்த வீடியோ.

இந்த வீடியோவை உருவாக்கியவர்கள் யார் என்று
எனக்குத் தெரியவில்லை…..

ஆனால், இன்னும் சில விஷயங்கள் இதனுடன் சேர்க்கப்பட்டால் –
இன்னும் சுவையாகவும், பலனுள்ளதாகவும் இருக்கும் என்று
தோன்றுகிறது.

இலையில் சாப்பிடுவது, முக்கியமாக ரசம் சாதம் சாப்பிடுவது –
கிண்டலாகச் சொல்லப்பட்டாலும், சில விஷயங்களைப்பற்றி
நாம் நிச்சயம் பெருமை கொள்ளலாம்.

வாழையிலையில் சாப்பிடுவது என்பது,
தமிழர்களுக்கே உள்ள தனிப்பெருமை.
மேலை நாடுகளை விடுங்கள் –
இந்தியாவிலேயே கூட வட மாநிலங்களில்
இந்த பழக்கமும் கிடையாது.
அவர்களுக்கு இதன் அருமையும் தெரியாது.

வாழையிலையில் எல்லாரும் பரிமாறி விட முடியாது.
அதற்கான அனுபவம் வேண்டும் -சிஸ்டம் தெரிய வேண்டும்….

எதை முதலில் பரிமாற வேண்டும் – பிறகு எதையெதை,
எந்தெந்த வரிசையில் என்பது பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
இதற்குப் பின் தான் இது – என்று கண்டிஷன்கள் உண்டு….!
முதலில் பாயசம் / இனிப்பு, பருப்பு, நெய், காய்கறி வகைகள்,
அன்னம், …. என்று…..!!!

இலையில் எந்த பண்டத்தை எங்கே பரிமாற வேண்டும்
என்பதும் அதி முக்கியம். நாம் பாட்டிற்கு காலியாக உள்ள
இடத்தில் கையில் இருப்பதை வைத்து விட்டுப் போய் விட முடியாது –
அடி விழும்….!!!

அதே போல் பரிமாறப்படும் சாதம், காய்கறி மற்ற
பண்டங்களிலும் சரி, இதற்கு அப்புறம் இது என்று,
பரிமாறும் வரிசையிலும் சரி –
அதற்கான அறிவியல்பூர்வமான காரணங்கள் உண்டு.

இவற்றை எல்லாம் சுவையாக விளக்கி இதன் கூடவே சேர்த்தால்
இந்த வீடியோ இன்னும் பயனுள்ளதாகவும்,
சாப்பாட்டில் கூட தமிழருக்குள்ள விசேஷ
ரசனையை, பெருமையை விளக்குவதாகவும் இருக்கும்…..

நான் ஜீரோ – தெரிந்தவர்கள் யாராவது செய்வார்களா….?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to வாழையிலை சாப்பாடு – குறு வீடியோ….

 1. R.Gopalakrishnan சொல்கிறார்:

  Mr.KM, It is a disappointment to me for reading this article since I have been eating in banana leaf for more than 5 decades. It is terribly boring to me. I was expecting a more hot political topic.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப கோபாலகிருஷ்ணன்,

   அரசியலை விட்டு சில சமயங்களிலாவது வெளியே வருவோமே
   என்று நினைத்து தான் சில சமயங்களில் பிற தலைப்புகளில்
   எழுத முயற்சிக்கிறேன்.

   ஆனால், பெரும்பாலான நண்பர்கள் -உங்களைப் போலவே –
   நான் அரசியல் தான் எழுத வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்….

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • selvarajan சொல்கிறார்:

    அய்யா .. ! அரசியம் மட்டுமே வாழ்க்கை அல்ல … அரசியல் தான் வாழ்க்கை — பிழைப்பு என்று நினைப்பவர்கள் … யார் … அது … வந்து … யாரோ … !!! ” விந்தை மனிதரின் ” அறிக்கைகள் : — 1 . // ரூ.570 கோடி பண விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கை என்ன? கருணாநிதி கேள்வி
    Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/karunanidhi-ask-question-about-rs-570-crore-254885.html — 2 . ஸ்டாலினுக்கு இருக்கை ஒதுக்கப்பட்ட விவகாரம்:ஜெ.அணுகுமுறை நாடகமேயன்றி அரசியல் நாகரிகம் அல்ல- கருணாநிதி
    Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/karunanidhi-statement-about-jayalalithaa-s-swearing-function-254883.html // அய்யா .. நீங்கள் கூறியுள்ளது ..? // நான் அரசியல் தான் எழுத வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்…. // அவர்களுக்கு கொஞ்சம் காரமாக மேலே உள்ள இரண்டும் …

   • surya சொல்கிறார்:

    நண்பர் கோபாலக்ருஷ்ணனின் கருத்து எனக்கு சம்மதமில்லை. தங்களின் அரசியல் கட்டுரைகளை ரசிக்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். அரசியல் கட்டுரைகளுடன் அரசியல் இல்லாத விஷயங்களையும் தயவு செய்து எழுதுங்கள்

 2. LVISS சொல்கிறார்:

  Mr K M you are wrong In saying that eating in leaves is prevalent only in Tamil Nadu -In Kerala in many hotels food items are served in leaves — On important festivals like Onam the” Sadhya” or “Virundhu” as we call it in Tamil is served in leaves only –Same goes for marriage sadhya — One more thing, rasam doesnt not find a place in “sadhya” if it is prepared by malayalis —-

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப எல்விஸ்,

   நீங்கள் சொல்வது சரியே…
   கேரளாவில் மட்டுமல்ல – ஆந்திரா, கர்னாடகாவிலும்
   வாழை இலை சாப்பாடு உண்டு. ஆனால், அவை எல்லாம்
   தமிழ்நாட்டிலிருந்து சற்று மாறுபட்டவை.
   நான் சரியாகச் சொல்லத்தவறி விட்டேன்.

   நான் சொல்ல வந்தது – தமிழ்நாட்டில் பந்தி பரிமாறுவதற்கு
   என்று சில முறைகள் உள்ளன. அவற்றை கடைபிடிக்க
   வேண்டுமென்கிற கட்டாயமும், அதற்கான சில அர்த்தங்களும்
   இருக்கின்றன என்பதைத் தான்.

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. ( நான் கேரளாவில் நிறைய
   சுற்றி இருக்கிறேன்… நிறைய ஓட்டல்களில் சாப்பிட்டிருக்கிறேன்…
   அங்கு நான் மாட்டிக் கொண்டு விழிப்பது –
   காலை டிபனில் நேந்திரம்பழத்திலும்,
   மதியம் சாப்பாட்டில் புழுங்கலரிசி சாதத்திலும் தான்….! )

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • LVISS சொல்கிறார்:

    Mr K M I liked your humorous comments on Nenthrampazham and boiled rice — Yes that fruit which is like a variant of banana is widely used because it is available in plenty — The chips made out of this fruit is very famous even in our state T Nadu –Keralites prefer boiled rice to pacharisi —
    There is a method of even keeping the leaf in a particular direction ie which side should face left or right — There is also a method of folding the leaf after eating ,whether towards you or in the opposite direction — In kerala sadhya there is a dish called “Injipiuli “made of ginger which is supposed to aid digestion of food you have taken — I also remember reading somewhere that sweet is included in these sadhyas to counter the kapha (phlegm?) triggered by karam items — So much thought have gone go into these things —

 3. selvarajan சொல்கிறார்:

  தமிழர்களின் பண்பாடு — கலாச்சாரம் — வாழ்க்கை முறை போன்றவை அனைத்தும் இயற்கையோடும் அவனது உள்ளத்தோடும் — உடலோடும் — ஆரோக்கியத்தோடும் பின்னி பிணைந்து இருந்தன — ஆனால் தற்போது காலப்போக்கில் பல நடைமுறைகள் மறைந்துக் கொண்டே வருவது வேதனையானது — அதில் ஒன்று ” வாழையிலையில் உணவு ” உண்ணும் வழக்கம் — வாழையிலையில் உண்ணுவதால் பலவித நன்மைகள் கிடைகின்றன — வாழையிலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. இதனால் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்தை அளிக்கிறது. வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள். மேலும் மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு , பித்தம் , இளநரை போன்றவை ஏற்படாது என்பது வைத்திய சான்று …. சாப்பிடுபவருக்கு இடது கை பக்கம் நுனி இலை இருக்க வேண்டும் … இலையில் இடதுபுற மேல்பக்கம் உப்பு – அடுத்து பச்சடி – கூட்டு – பொரியல் – வறுவல் – ஊறுகாய் போன்றவை வரிசையாக வலதிலிருந்து இடது வரை வைக்க வேண்டும் — அடுத்து இடது புற கீழ்புறம் அப்பளம் – வடை – சித்ரான்னம் – சாதம் – இனிப்பு என்று இடதிலிருந்து வலது வரை பரிமாற வேண்டும் —- சாதத்தில் முதலில் பருப்பு – நெய் பரிமாற வேண்டும் அடுத்து குழம்பு வகைகள் — ரசம் — தயிர் அல்லது மோர் என்று உண்ண ஒன்றன்பின் ஒன்றாக பரிமாற வேண்டும் — இதில் நடுவில் அன்னமும் சுற்றிலும் அறுசுவை உள்ள மற்றவைகளும் என்பதை காணவே — நன்கு புசிக்க வேண்டும் என்கிற எண்ணம் எழும் — உண்ணும் வரிசை உடல்நலத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து தான் தமிழன் இக்கலையை கண்டு கொண்டான் போல தெரிகிறது — அதாவது : — முதலில் பருப்பு மற்றும் நெய்( செரிக்கும் தன்மை குறைந்த பொருட்கள் மற்றும் நமது உணவு குழாயை தன்மையாக்கும் பொருட்கள் ), பிறகு குழம்பு ( ருசியுடன், தன்மையான உணவு குழாயை வருடும் ), பிறகு ரசம் ( இது வரை உண்ட அனைத்தையும் செரிக்கசெய்யும் ), பிறகு மோர் ( வயிறார உண்டபின் உருவாகும் சூட்டைக்குறைக்கும் )..அதுவுமில்லாமல் நம் கைகளை கொண்டு உண்ணுவதால் ருசி அறிந்தும் — தேவையான அளவும் உண்ண முடியும் — வாழையிலையில் உண்ணுவதால் உடல் நலன் மட்டுமின்றி — சுத்தம் — சுகாதாரம் — தண்ணீரை சேமிக்கவும் முடியும் ஏனென்றால் கழுவி தூய்மை படுத்த தேவையில்லை அல்லவா … காலத்தின் கோலத்தினால் ” கரண்டியும் — முள் கரண்டியும் — கத்தியும் ” கொண்டு உணவை கொத்தி – குளறி சாப்பிடும் தமிழனை நினைத்தால் …. ? என்ன இருந்தாலும் எவ்வளவு திறமைசாலியான ” பொறியாளராக ” இருந்தாலும் — ரசத்திற்கு அணை கட்டுவது சிரமம் தானே … ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   அசத்தி விட்டீர்கள்…!
   உங்கள் பின்னூட்டத்திற்கு பிறகு தான்
   இடுகை முழுமை பெற்றிருக்கிறது.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 4. நெல்லைத்தமிழன் சொல்கிறார்:

  இப்போ நான் சைனாவில் சுற்றுகிறேன். விளக்கமாக எழுத இயலவில்லை. வாழை இலையில் எங்கு எதைப் பறிமாற வேண்டும் என வழிமுறை உள்ளது. முதல் இனிப்பு பாயாசமாக இருந்தால் வலது சிறிது கீழே. வாழைப்பழம் ஜீனி என்றால் இடது மேல். வலது மேல் கறி (பொரியல்) அதற்கு இடப்புறம் கூட்டு. காம்பின் இருபுறமும் நடுவே சாதம். இது மாதிரி, சாம்பார், மோர்க்குழம்பு என வரிசை உண்டு

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நெல்லைத்தமிழன்,

   உங்கள் பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்.

   நீங்கள் திரும்பி வந்த பிறகு, இன்றைய சீனாவில் உங்களுக்கு
   வித்தியாசமாக / விசேஷமாக தெரிந்த விஷயங்கள் பற்றி
   கொஞ்சம் விவரமாக எழுதுங்களேன்…(முடிந்தால் புகைப்படங்களுடன்…)

   நான் இது குறித்தெல்லாம், நேரடியாகப் பார்த்த யாரிடமிருந்தாவது
   விவரமாக கேட்டு தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

   அது மற்றவர்களுக்கும் உதவும் என்றால், இங்கேயே
   இடுகையாகக்கூட பதிப்பிக்கலாம்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 5. srinivasanmurugesan சொல்கிறார்:

  இனிப்பு பருப்பு நெய் சாதம்,சாம்பார் சாதம் வத்தல்/மோர் குழம்பு சாதம் ….அப்பளத்துடன் ரசம் சாதம் பாயாசம் மோர் என்றுதான் நாங்கள் பழகியுள்ளோம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.