அரவக்குறிச்சி – கலைஞருக்கு நெஞ்சில் துணிவிருந்தால் – சிபிஐ விசாரணை கேட்க வேண்டும்…!!!

karunanithi family

திங்கட்கிழமை – கலைஞரிடமிருந்து பழைய வயிற்றெரிச்சல்களின்
புதிய வெளிப்பாடுகளாக அறிக்கைகள் –
கேள்விக்கு மேல் கேள்வி – அடுக்கடுக்கான கேள்விகள்
அறிக்கை வடிவில் வெளிவந்திருக்கின்றன…..

—————————–

கலைஞர் கேட்கிறார் –

தமிழகத்தில் தேர்தல் நடைமுறைகளின் போது பல்வேறு இடங்களில்
100 கோடி ரூபாய்க்கு மேல் தேர்தல் ஆணையத்தால் கைப்பற்றப்பட்டது.
ஆனால் இவ்வளவு பெரிய தொகை யார் யாரிடமிருந்து
கைப்பற்றப்பட்டதோ அவர்கள் மீது தேர்தல் ஆணையம்
சட்டப்படி எடுத்த நடவடிக்கை என்ன?

பணம் வைத்திருந்தவர்கள் மீது முதல் தகவல்
அறிக்கையாவது பதிவு செய்யப்பட்டதா?
பணம் வைத்திருந்தவர்கள் கைது செய்யப்பட்டார்களா?
தகுந்த புலன் விசாரணைக்குப் பிறகு, உரிய நீதிமன்றத்திற்கு வழக்குகள்
எடுத்துச் செல்லப்படுவதில் ஏன் இந்தத் தாமதம்?

கன்டெய்னர்களில் கொண்டு செல்லப்பட்டு திருப்பூருக்கருகில்
பிடிபட்ட 570 கோடி ரூபாய் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எடுத்த
நடவடிக்கைகளின் விபரங்கள் என்ன?

—————————–

கலைஞருக்கு தேர்தல் கமிஷனின் மீது சுத்தமாக நம்பிக்கை இல்லை
என்று ஏற்கெனவே சொல்லி விட்டார்.
தேர்தல் கமிஷன் ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டது
என்றும் கலைஞர் குற்றம் சாட்டுகிறார்….

தேர்தல் கமிஷன், தான் நியமித்திருந்த பார்வையாளர்களிடமிருந்து
கிடைத்த தகவல் அறிக்கைகளின் அடிப்படையில், இப்போது
தேர்தல்களை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து விட்டது.

பார்வையாளர்கள் தங்கள் விசாரணை அறிக்கையில் என்ன சொல்லி
இருக்கிறார்கள்….?

—————————

….It began on April 22, when the Income Tax
Department seized Rs. 4.77 crore in cash at the
residence of one C.P. Ambunathan in Aravakurichi,

…..Also, 200 sarees and dhotis were seized.
There was also evidence to suggest that sarees
and dhotis worth Rs.1.30 crore had been purchased.

…..An Income Tax Department a search at the
residence of K.C. Palanisamy, a DMK candidate in
Aravakurichi Assembly constituency –

and his businessman son K.C.P. Sivaraman at Karur
and Chennai resulted in a total cash seizure
of Rs. 1.98 crore.

….. it was brought to the notice of all three
observers that money distribution has played a
major role in vitiating the election process
in Aravakurichi.

…..According to complaints received by
special observers for Aravakurichi.

Rs. 59.4 crore had been distributed
by the AIADMK candidate and

Rs. 39.6 crore by the DMK candidate.

…..“Even before the seizure, the DMK candidate
had distributed 1 lakh dhotis and sarees with
black and red DMK flag colour.

AIADMK candidate had also distributed 1 lakh
dhotis and ‘auspicious green colour saree’
to the voters.

…..Apart from this, AIADMK candidates had
gifted from Rs. 5 lakh to Rs. 50 lakh per village
and small and big residential localities for
renovation of temples and to build “mandapams”
for each temple.

————————————–

ஓட்டு பெற பணம் கொடுத்தவர்கள் யாராக இருந்தாலும்
அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, உரிய விசாரணை
நடத்தப்பட்டு, தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்
என்பதே பொது மக்கள் அனைவரின் கருத்தும்.

நெஞ்சில் துணிவிருந்தால் –
நேர்மைத்திறன் இருந்தால் –
முக்கிய எதிர்க்கட்சியின் தலைவர் என்கிற முறையில் –
தமிழகத்தின் மூத்த தலைவர் என்கிற முறையில் –
உண்மை வெளிப்பட வேண்டும் என்கிற நோக்கில் –

முறைகேடுகளை எதிர்த்து,
பெரிய்ய்ய்ய்ய்ய அளவில் குரல் கொடுத்தவர் என்கிற முறையில் –

கலைஞர் இந்த விஷயத்தில் – சிபிஐ விசாரணை கோரி,
உடனடியாக உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில்
வழக்கு தொடுக்க வேண்டும்….

செய்வாரா ….?

கூடிய சீக்கிரம் முழு உண்மைகளும் வெளிப்படவும்,
குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதைக் காணவும்,
மக்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்….!!!

மக்கள் வேண்டுவதும், விரும்புவதும் –
கலைஞரின் உடனடி கோர்ட் நடவடிக்கையை –

நாள்தோறும்,
அதே குற்றச்சாட்டுக்களை,
சேறு-சகதியை
மீண்டும் மீண்டும் அள்ளி வீசிக் கொண்டே இருக்கும்
வெற்று அறிக்கைகளை அல்ல –

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to அரவக்குறிச்சி – கலைஞருக்கு நெஞ்சில் துணிவிருந்தால் – சிபிஐ விசாரணை கேட்க வேண்டும்…!!!

 1. selvarajan சொல்கிறார்:

  அய்யா …! கலைஞர் அவர்களின் 570 – கோடி விவகாரம் மற்றும் தேர்தல் கமிஷன் ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டது என்கிற புலம்பல்கள் எல்லாம் தீர :— நீங்கள் கூறியுள்ளபடி // கலைஞர் இந்த விஷயத்தில் – சிபிஐ விசாரணை கோரி,
  உடனடியாக உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில்
  வழக்கு தொடுக்க வேண்டும்….// என்பது ஒரு புறம் இருக்க …. // தேர்தலும் ………… ஆறுதலும் ! Posted on மே 14, 2011 by vimarisanam – kavirimainthan // என்கிற இடுக்கையின் நகல் ஒன்றை அவருக்கு அனுப்பினால் — அவரது மனம் கொஞ்சமேனும் ” சமாதானமும் — சாந்தியும் ” — அடையுமா … ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   என்ன இப்படிச் சொல்லி விட்டீர்கள்….?

   “எது நடந்ததோ – அது நன்றாகவே நடந்தது……!!!”
   இதையா அனுப்பச் சொல்கிறீர்கள்….?

   ஆறுதல் சொல்லவா – அல்லது இன்னும் எரிச்சலை கிளப்பவா …?

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • selvarajan சொல்கிறார்:

    அய்யா … ! ஆரம்பம் — எது நடந்ததோ — என்று ” ஆறுதலாக ” கூறுவதை போல கூறி — நீ உன்னுடையதை எதை இழந்தாய் – அழுவதற்கு ? என்பதை போன்ற உபதேசங்கள் அவருக்கு ” எரிச்சல் ” ஊட்டுமா என்பதே எப்போதுமே உள்ள கேள்வி தானே … !

  • paamaranselvarajan சொல்கிறார்:

   // திமுக- காங். கூட்டணியில் பிளவுபடுத்த மத்திய உளவுத்துறை சதி: கருணாநிதி குற்றச்சாட்டு
   Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/karunanidhi-alleges-bid-break-dmk-congress-alliance-254920.html // …. வாலு போயி கத்தி வந்தது டும் டும் டும் கத்தி போயி பழம் வந்தது டும் டும் … என்பதை போல — 570 – கோடி — தேர்தல் கமிஷன் ஆளும் கட்சியுடன் கூட்டணி என்று கூறியதெல்லாம் — போயி .. தற்போது மேலே உள்ளதில் பல தரப்பினரையும் குற்றம் சாட்டி ” வாழைப்பழத்தில் ஊசி ” ஏற்றுவது போல கூற ஆரம்பித்து இருப்பது …. ?

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  கலைஞர் வெகு புத்திசாலித்தனமாக சிபிஐ விசாரணை கோரி
  கடிதம் எழுதி இருக்கிறார்….
  யாருக்கு ….? பிரதமருக்கு….!
  அதுவும் எதற்கு ? 570 கோடி கண்டெயினர் விஷயமாக…..!!!

  தேர்தலின்போது கைப்பற்றப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் பணம், பொருள் –
  அது குறித்து தேர்தல் கமிஷன் ஏன் உரிய மேல் நடவடிக்கைகள்
  எடுக்கவில்லை என்பது தானே ( நேற்றைய ) இவரது ” மெயின் ” பிரச்சினை ….?

  அதைக்கிளறினால், சொந்த செலவில் சூது வைத்துக் கொள்வதாக
  ஆகி விடும் என்று நேற்றிரவு அறிக்கையை வெளியிட்ட பிறகு
  ( சொந்தங்கள் ) – யாராவது நினைவூட்டி இருப்பார்கள் போலும்…..
  அதனால், இன்று பொழுது விடிந்ததும் கதையை திசை மாற்றுகிறார்.

  570 கோடி கன்டெயினர் தான் இவருக்கு முக்கிய பிரச்சினையாகி விட்டது.
  அதற்கு மட்டும் சிபிஐ விசாரணை கேட்கிறார்….அதுவும் பிரதமரிடம்…!!!

  நாம் மீண்டும் வலியுறுத்துவது –

  தேர்தலின்போது கைப்பற்றப்பட்ட கருப்புப்பணம், பொருட்கள்
  குறித்து தேர்தல் கமிஷன் ஏன் உரிய மேல் நடவடிக்கை எடுக்கவில்லை –
  என்றும், அது குறித்து விவரமாக விசாரித்து உண்மைகளை வெளிக்கொணர
  சிபிஐ விசாரணைக்கு உத்திரவிட வேண்டும் என்றும் கோரி –

  சென்னை உயர்நீதிமன்றத்தில் “ரிட்” மனு…..
  அவ்வளவே….!!!

  கலைஞர் இதை அவசியம் செய்வாரென்று நம்புவோமாக….!

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 3. Amudhan Santanu சொல்கிறார்:

  570 கோடியை பத்தி பேசினா ஏன் இப்படி tension ஆகுரிங்க

  • இளங்கோ சொல்கிறார்:

   இங்கே யாரும் டென்ஷன் ஆகவில்லை.
   அமுதன் சாந்தனு தான் டென்ஷன் ஆகிறார்.
   அவருடைய தலைவரும் டென்ஷனாகித்தான்
   டெய்லி ஒரு அறிக்கை விடுகிறார்.
   உங்கள் கலைஞரை நீதிமன்றத்தில் ரிட் மனு போடச்சொல்லுங்களேன்.
   ஏன் பயப்படுகிறார் ; உண்மை வெளிவந்து விடுமே என்றா ?

 4. CHANDRAA சொல்கிறார்:

  KALAIGNAR and his parymen in dmk still continue to criticise jeya and her party
  over the seat alltment to stalin the function
  karuna has been continuously releasing statements……..
  Stalin has gone to malaysia for rest though statements
  are coming out in his name
  It will be better that dmk concentrates on tamil nadu peoples problems rather than petty issues……..

 5. today.and.me சொல்கிறார்:

  மாண்புமிகு சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் அவர்கள்
  மீடியாக்களுக்கு மலேசியா செல்வதாக அறிவித்துவிட்டு
  தற்போது மக்காவ் தீவில் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதையெல்லாம் உளவுத்துறை ஆராய்ந்துவிட்டால் என்ன செய்வது?
  அந்தப் பக்கம் மக்கள் கவனம் போய் விடக்கூடாது என்பதில் தான் முக கவனமெல்லாம்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப டுடேஅண்ட்மீ,

   எதிர்க்கட்சித்தலைவர் “மக்காவ்” தீவில் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது குறித்து மேலதிக தகவல்கள் எதாவது கிடைக்குமா பாருங்களேன்.
   மக்கள் “பொது அறிவு” பெற உதவியாக இருக்கும்….. 🙂 🙂

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 6. Narasimhan சொல்கிறார்:

  ஈயம் பூசினமாதிரியும் இருக்கணும்,ஈயம் பூசாத மாதிரியும் இருக்கணும் . அதாவது இந்த விசயத்தில் அக்கறை இருக்கிறமாதிரியும் அறிக்கை விடணும் .அதையே யாராவது ரொம்ப அக்கறை எடுத்து விசாரணை என்ற பெயரில் தன்னை நெருங்கிவிடக்கூடாது .

 7. நெல்லைத்தமிழன் சொல்கிறார்:

  திமுக கருணாநிதி கையை விட்டு அனேகமாகச் சென்றுவிட்டது. முடிவு எடுப்பதும் ஸ.டாலின் கையெழுத்து இல்லாமல் நடக்காது. சமீபத்தில் செயற்குழுவில் ஸ்டாலின் வருகைக்காக அரை மணி நேரம் காத்திருக்க நேரிட்டது. ஸ்டாலின் இல்லாமல் கூட்டத்தை ஆரம்பிக்க கருணாநிதி சொல்லியும் துரைமுருகன் போன்றோர் தயாராக இல்லை. பத்திரிகைக்கு கேள்வி பதில் அறிக்கை கொடுப்பதான் கருணாநிதி இருப்பைத் தெரிவிப்பதற்கான ஒரே வழி. இதுவுமில்லாவிட்டால் அவர் என்னதான் செய்வது? எதிர்கட்சித் தலைவர் பதவியும் இல்லை. மீடியாவில் வரும் இந்த வாய்ப்பையும் இழக்கச் சொல்லலாமா? அற்ற குளத்து அறுநீர்ப் பறவைபோல் துரைமுருகன் போன்ற சிலரைத்தவிர பலர் பறந்தபின் அவர் என்னதான் செய்வார்? அவர் உள்ளத்தனையது அவர் அறிக்கை. குணத்தைப் பொறுத்துத்தானே செயலும் இருக்கும்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.