திருமதி நிர்மலாவை போல, திரு.ப.சிதம்பரமும் – இந்த வயதில் மராட்டி கற்றுக் கொள்வாரா….?

.

.

ராஜ்ய சபாவில் ஏற்பட்டுள்ள 57 காலி இடங்களுக்கான தேர்தல்கள்
வரவிருக்கும் ஜூன் 11ந்தேதி நடைபெற உள்ளன….

அகில இந்திய கட்சிகளான காங்கிரசும் சரி, பாஜகவும் சரி –
தாங்கள் கொண்டு வர விரும்பும் சில முக்கிய தலைவர்களை
ராஜ்ய சபா உறுப்பினராக தேர்ந்தெடுக்க முடியாமல் திண்டாடி
தாளம் போட்டு வருகின்றன.

பாஜக – கீழ்க்கண்ட அமைச்சர்களை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள,
வெவ்வேறு மாநில சட்டமன்றங்களில் தனக்கு உள்ள பலத்தின்
அடிப்படையில் போட்டியிட வைக்கிறது. இந்த அமைச்சர்/தலைவர்களுக்கும்
அவர்கள் போட்டியிடவிருக்கும் மாநிலங்களுக்கும் எந்தவித சம்பந்தமோ –
பூர்வஜென்ம தொடர்போ கிடையாது…

திருமதி நிர்மலா சீதாராமன் – கர்நாடகா
திரு.வெங்கையா நாயுடு – ராஜஸ்தான்
பியூஷ் கோயல் – மஹாராஷ்டிரா
சுரேஷ் பிரபு – ஆந்திர பிரதேசம்

கட்சி விசுவாசத்தின் அடிப்படையில் வெற்றி கிடைக்கும் என்கிற
நம்பிக்கையில் தான் போட்டியிடத் துணிகிறார்கள். இருந்தாலும்,
போட்டியிடும் மாநில மக்களை திருப்திப்படுத்த – நிறைவேற்ற
முடிகிறதோ இல்லையோ – வாக்குறுதிகளையும் அள்ளி வீசுகிறார்கள்….!!!

அதே போல், காங்கிரஸ் கட்சி,
ராஜ்ய சபாவில் பாஜக வுக்கு உள்ள மைனாரிட்டி பலவீனத்தை
பயன்படுத்திக்கொண்டு,
விவாதங்களில் பாஜகவை திணறடிக்கக்கூடிய –
பாஜக அரசுக்கு சங்கடத்தை உண்டுபண்ணக்கூடிய –
சில முக்கிய காங்கிரஸ் தலைவர்களை உள்ளே கொண்டு வருகிறது.

ராஜ்யசபாவில் பலவீனமாக உள்ள பாஜகவை
மேலும் பலவீனப்படுத்தவும்,
சுப்ரமணியன் சுவாமி, அருண்ஜெட்லி போன்ற திறமைசாலிகளுக்கு
“counter ” கொடுக்கவும், இவர்களை பயன்படுத்த திருமதி சோனியா
திட்டம் போடுகிறார்…

இதில் கர்நாடகாவையே சேர்ந்த ஜெயராம் ரமேஷூம்,
ஆஸ்கர் பெர்னாண்டசும் – அங்கிருந்தே போட்டியிடுகிறார்கள்.

பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியை – லாலு பிரசாத் யாதவின்
ஆர்.ஜே.டி. கட்சி மூலமாக பீஹாரிலிருந்து உள்ளே கொண்டு வருகிறார்.

கபில் சிபல் – உத்திரப் பிரதேசத்திலிருந்து ( சமாஜ்வாதி ஒத்துழைப்போடு)
கொண்டு வரப்படுகிறார்.

கடைசியாக நம் ப.சிதம்பரம் அவர்கள் மஹாராஷ்டிராவிலிருந்து
தேர்ந்தெடுக்கப்பட விண்ணப்பித்திருக்கிறார்.

ஏற்கெனவே, திரு.ப.சி.அவர்களை கர்நாடகாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட
வைக்க முயற்சி நடந்தது. ஆனால், கர்நாடகா காங்கிரஸ் தலைவர்களின்
கடும் எதிர்ப்பு காரணமாக அந்த முயற்சி கைவிடப்பட்டது.

இப்போது மஹாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர்களின் ஒத்துழைப்போடு
ப.சிதம்பரம் அவர்கள் மும்பையில் வேட்பு மனுவை தாக்கல்
செய்திருக்கிறார்.

p-chidambaram - maharashtra mp

இதில் வேடிக்கையான விஷயமும் ஒன்று உண்டு.
திரு.வெங்கையா நாயுடு அவர்கள் கடந்த இரண்டு முறைகளாக
கர்நாடகாவிலிருந்து தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இந்த முறையும்
முயற்சி செய்தபோது, கர்நாடகா பாஜகவில்
இருந்தே கடும் எதிர்ப்பு கிளம்பியது…
அவர் கர்நாடகாவிற்காக கடந்த காலங்களில் எதுவுமே செய்யவில்லை
என்றும் இத்தனை ஆண்டுகளாகியும் கன்னடத்தில் பேசக்கூட
தெரியவில்லை என்றும் புகார்கள்….!!! எனவே, வெங்கையா நாயுடு
ராஜஸ்தானைப் பார்க்க போய் விட்டார்…!!!

nirmala-sitharaman_

அதனால், திருமதி நிர்மலா சீதாராமன்,
தானாகவே முந்திக்கொண்டு –
வேட்பாளர் மனுவை தாக்கல் செய்யும்போதே,
ஏற்கெனவே தனக்கு கன்னடத்தில் சில வார்த்தைகள் தெரியுமென்றும்,
விரைவில் கன்னடத்திலேயே நன்றாக பேச
கற்றுக் கொண்டு விடுவதாகவும்
உறுதி கூறி இருக்கிறார்.

இதே போல், மஹாராஷ்டிராவிலும், திரு.ப.சிதம்பரம் அவர்கள்
போட்டியிடுவதற்கு, சிவசேனா கட்சி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது….

எனவே, அவர்களை சமாதானப்படுத்த – திரு.ப.சிதம்பரம் அவர்கள்
விரைவில் மராட்டி கற்றுக் கொண்டு விடுவதாக உறுதியளிக்க
வேண்டி வரலாம்….!!!

பின் குறிப்பு –
கலைஞர் மனம் வைத்திருந்தால் வெகு சுலபமாக
திரு.ப.சி. அவர்கள் தமிழ்நாட்டிலிருந்தே,
கௌரவமாக ராஜ்ய சபாவிற்கு சென்றிருக்கலாம்.
பழி தீர்க்க கிடைத்த வாய்ப்பை தவற விடுவாரா கலைஞர்…!!!

“ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக் கோனே –
காரியத்தில் கண் வையடா தாண்டவக் கோனே ” –
என்று எழுதியவராயிற்றே கலைஞர்…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to திருமதி நிர்மலாவை போல, திரு.ப.சிதம்பரமும் – இந்த வயதில் மராட்டி கற்றுக் கொள்வாரா….?

 1. B.Venkasubramanian சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  ப.சி. நாமினேஷன் போடும்போது கூடவே
  பிரபல தொழிலதிபர் “சன்” னும்
  இருந்தார் – பார்த்தீர்களா…?

 2. R.Gopalakrishnan சொல்கிறார்:

  MK is definitely very cunning. No doubt about that. But the present nominees of his party deserves that post. They are long standing members of that party and they are denied a seat in
  the latest election. Also, MK has a long standing aversion towards PC. So he took this
  opportunity to settle score with him as usual with a warm gesture. Two mangoes in one hit.

  • Amudhan Sanatanu சொல்கிறார்:

   It is stupidest thing to think that any party would select an outsider.Your hatred towards MK is seen clearly in your comment.

   • B.Venkasubramanian சொல்கிறார்:

    This is a stupid comment on an intelligent writing.
    P.C. is not an outsider. He is a Senior Leader of the DMK’s Alliance Congress Party.
    It is quite common to nominate the persons from alliance party in R.Sabha elections;
    Mr.Suresh Prabhu is being nominated by Telugu Desam Party in AP.

    the pinnoottam by Mr.Amudhan Sanatanu only exposes that
    he is a கலைஞ்சர் தாசன் or கலைஞ்சர் வெறியர்.

   • Tamilian சொல்கிறார்:

    It is common for political allies to come to an understanding. Congress being an ally could have got an RS nominee from TN. They did not make it an election alliance condition. Last time jaya elected communist Raja.

 3. selvarajan சொல்கிறார்:

  எதை – எதையோ கற்றவர் … கற்றுக் கொடுத்தவர் அவருக்கு ” மராட்டி ” கற்றுக் கொள்வதா சிரமம் — ஒருவேளை இதுவரை கற்காமல் இருந்தால் — இன்றைய செய்தியில் :– // 20 மணி நேரத்தில் ஹிந்தி கற்றுத் தரும் மதுரை தம்பியண்ணா.. “ஒன்இந்தியா” ஸ்பெஷல்
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/you-can-learn-hindi-within-20-hours-says-madurai-hindi-teacher-255008.html // —– தம்பியண்ணா போல ஒருவரிடம் சென்று சில மணி நேரத்தில் ” கற்றுக் கொண்டால் ” போச்சு — அவ்வாறு செய்தால் சிவ சேனாவும் — பாராட்டும் அல்லவா …. ? ப.சி . என்றால் சும்மாவா … ?

 4. NS RAMAN சொல்கிறார்:

  National parties like Cong BJP used to elect their candidates through other state us very common. Even lok shaba elections people from other state contesting from other state eg. Indra Gandhi from Karnataka , narasimha rao from maha Modi from UP etc. Narrow minded parties like Shiv Sena taking like stupids. Is the same logic applicable to state assembly candidates should stick to home town?

  PC till the time convicted by court there is no bar for him contesting from any where in India. Cong still not reached to the worst condition for selecting his leaders for RS. DMK as there is no representation in LS naturally would like to increase strength in RS at the first opportunity.

 5. LVISS சொல்கிறார்:

  Getting elected from another state has been happening since long- Now it is being talked as a big issue for no apparent reason —
  Where the party is ruling or in majority party members will easily win from there — The Congress is fast losing state after state —So now itself they are putting their best men in the RS- –
  BJP would welcome the new entrants P Chidambaram Kabil Sibal and others with both hands – –Now they cant stop with issuing statements from outside –Some interesting debates can be expected in Rajya Sabha — BJP has Arun Jaitley Venkaiah naidu, Ravi sankar prasad Swamy and also Smriti Irani to take on the congress —

 6. LVISS சொல்கிறார்:

  The elected RS MPs represent the state and not any constituency –That is the advantage –But they can use the MPLAD amount to nurture a village in the state from which they are elected –For eg Sachin Tendulkar adopted a villagePuttamraju Kandiga in Andhra and converted into a very lovely village –

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.