A Cruel Joke – மக்களை அடி-முட்டாள்களாக்கும் ஒரு செய்தி – அறிக்கை…..!

எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர்.பாரிவேந்தர் வெளியிட்டுள்ள
அறிக்கையில், ” கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு ஊடகங்களில்
எங்களது எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் குறித்து பல்வேறு தவறான
தகவல்கள் வெளியாகி உள்ளன.அவற்றில் கூறப்பட்டுள்ள அனைத்து
தகவல்களும் பொய்யானவை. உண்மைக்குப் புறம்பானவை.

எஸ்.ஆர்.எம்.குழுமத்திற்கும், குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி இருக்கும்
மதன் என்பவருக்கும் மாணவர் சேர்க்கை சம்பந்தமாக எவ்விதத்
தொடர்பும் இல்லை. அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் குறிப்பிட்டு
இருப்பது போன்று எந்தவொரு தொகையையும், எங்களது
நிறுவனத்திடமோ, நிறுவனம் சம்பந்தப்பட்ட எவரிடமோ
ஒப்படைக்கவில்லை.

vendhar movies logo

வேந்தர் மூவிஸ் என்ற நிறுவனத்திற்கும், எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக
வேந்தரான எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று அவரே
பலமுறை தொலைக்காட்சி பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.

இந்திய ஜனநாயக்கட்சியைப் பொருத்தவரை, அவர் கட்சி விரோத
நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் கடந்த பிப்ரவரி மாதம் கட்சியில்
இருந்து விலக்கப்பட்டு விட்டார்.

மாணவர் சேர்க்கை தொடர்பாக நாங்கள் சேர்க்கை ஆலோசகர்களாக
யாரையும் நியமிக்க வில்லை. அனைத்து தகவல்களையும் நேரடியாக
பல்கலைக்கழக அலுவலகத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும்.
யாரிடமும் எங்களது கல்வி நிறுவனம் நேரடியாக
பணம் பெறுவதில்லை

பின் குறிப்பு –

மிகப்பெரிய தொடர் மோசடி ஒன்று நடந்துள்ளது.
நூற்றுக்கணக்கானவர்கள் ( ஆயிரக்கணக்கான…? )
பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுவரை, பாஜக தலைமைக்கு –
சம்பந்தப்பட்டவர்கள் தங்களுடன் ஏன் கூட்டணியில்
சேர்ந்தார்கள் என்பது தெரியாமல் இருந்திருக்கலாம்….
ஆனால், தற்போது விளங்கி இருக்கும்.

மத்திய அரசின் புலனாய்வு நிறுவனங்களும்,
Enforcement Directorate- உம், ஆவணங்கள், தகவல்கள்
அழிக்கப்படும் முன்னர் உடனடியாக செயலில் இறங்குவது அவசியம்.

மீடியாக்கள் வாய்மூடி மௌனமாக பார்த்துக் கொண்டு இருப்பது
அதிர்ச்சி அளிக்கிறது.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to A Cruel Joke – மக்களை அடி-முட்டாள்களாக்கும் ஒரு செய்தி – அறிக்கை…..!

 1. இளங்கோ சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  இவர்கள் நீண்டகாலமாக கொள்ளையடித்து வரும் கல்வித்தந்தைகள்.
  மீடியா முழுவதும் இவர்கள் கையில் தான் இருக்கிறது. எனவே
  மீடியாக்கள் பேசாது.
  பணம் எதையும் செய்யும், செய்ய வைக்கும்.
  சுப்ரீம் கோர்ட் Neet திட்டத்தை மருத்துவ கல்லூரி அட்மிஷனுக்கு
  கட்டாயம் என்று அறிவித்ததால், இவர்கள் அட்வென்சாக பெற்ற
  கோடிக்கணக்கான ரூபாயை திரும்பிக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில்
  இருப்பதால், இப்படி ஒரு குறுக்கு வழியை கண்டு பிடித்திருக்கிறர்கள்.
  மதனை காணாமல் அடித்தவர்களும் இவர்களே தான்.
  மத்திய அரசு உடனடியாக சிபியை மூலமாக விசாரணையை துவக்கினால்
  எதாவது வெளிவரக்கூடும். தமிழகத்தில் இத்தனை அரசியல் கட்சி தலைவர்கள்
  இருக்கிறார்களே. ஒரு பயலாவது வாயைத்திறந்தானா பார்த்தீர்களா ?
  இதைப்ற்றி தைரியமாக எழுதியது நீங்கள் ஒருவர் தான். எதற்கும் நீங்கள்
  ஜாக்கிரதையாக இருங்கள்.

 2. புது வசந்தம் சொல்கிறார்:

  /*யாரிடமும் எங்களது கல்வி நிறுவனம் நேரடியாக
  பணம் பெறுவதில்லை*/ உண்மை இங்கே மறைமுகமாக சொல்லப்பட்டுள்ளது.

 3. selvarajan சொல்கிறார்:

  எந்த வழியிலோ வந்து குவியும் செல்வம் — குடும்ப வாரிசுகள் — தப்பித்துக் கொள்ள ஒரு கட்சி என்று இருந்தால் இதெல்லாம் ” நடக்காமல் ” இருந்தால் — அது தமிழ்நாடே – அல்ல … ? என்ன தவம் செய்தோமோ .. ! பணத்தை படிப்பு சேர்க்கைக்கு கொட்டிக்கொடுத்து புலம்புவர்களும் இதே ரகத்தை சேர்ந்தவர்கள் தான் ,,, அரசு செயலில் இறங்கினால் என்ன உடனடி தீர்வு கிடைக்க போகிறது — வழக்கம் போல — வழக்கு — வாய்தா — ஜாமீன் — பதவி என்று ஊர் சுற்றி பரப்புரை செய்வார்கள் — இல்லைஎன்றால் உலகின் சூதாட்டத்திலும் — கேளிக்கைகளிலும் நெம்பர் ஒன்னாக திகழும் ” மக்காவ் தீவுக்கு ” சென்று உல்லாசத்தை அனுபவிப்பார்கள் — மிகவும் அதிக செலவு வைக்கும் இடம் மட்டுமில்லாது ” கருப்பு பணம் ” பதுக்கலுக்கும் ” ஏற்ற நல்லதொரு இடமாகவும் இருக்கும் மக்காவ் – சீன குடியரசாக இருந்தாலும் 2049 – வரை போர்ச்சுக்கல் ஒப்பந்தம் இருப்பதால் தனி -சட்டம் — சட்டசபை — கரன்சி என்று பாரிஸை — லாஸ் வேகாஸ் போன்ற கேளிக்கை நகரங்களை பின்னுக்கு தள்ளி ஒன்றாவது இடத்தில் இருப்பதே — இந்த மாதிரியான ” சுரண்டல் — ஊழல் ” பேர்வழிகளால் தானோ … ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   “மக்காவ் தீவு” பற்றி நீங்கள் தந்த தகவல்களுக்கு
   மிக்க நன்றி …… 🙂 🙂

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 4. sriram சொல்கிறார்:

  tamil nadu vin Vijay mallaya yengindra in tha mathan .. naadu romba ooruppadum

 5. CHANDRAA சொல்கிறார்:

  JI very reputed doctors over a period of years and some other business doctors
  have established clinics nursing homes costly labs
  and super speciality hospitals in major towns in tamilnadu
  These doctors bribe very heavily the private medical
  institutions and get their sons/daughters
  admitted for mbbs/MD courses
  i can point out that many had passed their schooling with ordinary grades got admitted in medical courses
  You see they have to protect and enjoy their HUGE PROPERTIES
  that their fathers have left for them
  in the form of massive hospitals labs fertility centres health
  resorts etc

  • நெல்லைத்தமிழன் சொல்கிறார்:

   நம்ம ஊர்ல எல்லோரும் செய்வது இது. டாக்டர் மட்டுமல்ல. நடிகர் அரசியல்வாதி ஆட்டக்காரன் (Sportsman) எந்த வியாபாரமும் செய்யும் தொழிலதிபர்கள், மற்றும் எல்லோரும். எந்தத் தொழிலிலும் ஜெயித்தவனால் வீட்டைக் கவனிக்கமுடியாது. அவர்களுக்கு பாபனாசம் படத்தில் வருகிற பையன்கள்தான் பெரும்பாலும் அமைவார்கள். அவர்களைத் தான் கட்டி எழுப்பிய சாம்ராஜ்யத்தை ஆளுவதற்கு தயார் பண்ண எல்லா வழிகளிலும் தகப்பன்கள் முயல்வார்கள். அதனால்தான் ஸ்டாலின்களும் உதயநிதிகளும் சிம்பு அஸ்வின், போன்றவர்களும் நம்மிடையே இருக்கிறார்கள். டாக்டர்களும் போலீசுக்கு சிலரும் மட்டும் யோக்கியமாக இருக்கவேண்டும் மற்றவர்கள் (நம்மையும் சேர்த்துத்தான்) அயோக்கியர்களாக தொடர்ந்து இருப்போம் அயோக்கியர்களை ஆதரிப்போம் என்பது என்ன நியாயம்?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.