திரு.திருமாவளவன் மீண்டும் திமுக பக்கம் வருகிறாரா….?

.

.

நாளை கலைஞருக்கு 93-வது பிறந்த நாள்.

தெரிந்தவர்கள், யாராக இருந்தாலும்,
பிறந்த நாள் வாழ்த்து சொல்வது பண்பாடு.

நாமும் வாழ்த்துவோம் –

” தமிழர்களையும், தமிழ்நாட்டையும் பற்றி கவலைப்பட,
நிறைய பேர் வந்து விட்டார்கள். ஏன், அவரது தனயனே
இருக்கிறார். எனவே, கலைஞர் இந்த வயதான காலத்தில்,
இன்னமும் அநாவசியமாக எல்லாவற்றிலும் தலையிட்டு,
தானும் வருந்தி, பிறரையும் வருத்தப்படச் செய்யாமல் –
வயதுக்கேற்ற அமைதியுடன், நிம்மதியாக,
ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும்.. ‘”

————-
அரசியலில் எதிரெதிர் அணியில் இருந்தாலும் கூட
பிறந்த நாள் வாழ்த்து சொல்வது சகஜமே…

ஆனால், எதிரணியில் இருப்பவர்கள், அதுவும்
15 நாட்களுக்கு முன்னர் கூட கலைஞரது சிந்தனைகளை,
செயல்பாடுகளை –
மிகத்தீவிரமாக விமரிசித்தவர்கள் –
இப்போது வாழ்த்து சொல்லும்போது, அவர்கள் என்ன சொல்லி
வாழ்த்துகிறார்கள் என்பது கவனிக்கப்படுகிறது….

karunanithi and thiruma

திருமாவளவன், கலைஞருக்கு பிறந்த நாள் வாழ்த்து
சொல்லும்போது கூறுகிறார் –

// கலைஞரின் நேர்மறையான சிந்தனைகளும்
அணுகுமுறைகளும் தாம்
அவரது வெற்றிக்கு அடிப்படையானவை //

(- அண்மையில், சட்டமன்ற தேர்தலின்போது,
விடுதலைச் சிறுத்தைகளை சேர்த்துக் கொண்டால்,
வட மாவட்டங்களில் திமுகவுக்கு பாதிப்பு ஏற்படும்
என்று திமுக கருதியதும் தங்கள் பிரிவுக்கான
காரணங்களில் ஒன்று என்று திருமா சொல்லி இருந்தார்.. !!
அது கலைஞரின் நேர்மறையான சிந்தனையாக இப்போது
திருமாவுக்கு தோன்றுகிறதே…..!!! )

கலைஞருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வது மட்டும் தான்
நோக்கம் என்றால், திருமாவின் வார்த்தைகள் இப்படி
அமைய வாய்ப்பில்லை ;

திருமாவின், திமுகவுடனான நெருக்கத்திற்கு
இது முதல் முயற்சியாக இருக்கலாம் என்று தோன்றுகிறது…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to திரு.திருமாவளவன் மீண்டும் திமுக பக்கம் வருகிறாரா….?

 1. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ப்பது ஒரு குற்றமா?
  உங்களின் பதிவை நேற்றிலிருந்து எதிர்பார்ததுக்கொண்டிருக்கிறேன் ஐயா.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப அஜீஸ்,

   சுப்ரீம் கோர்ட் நீதிபதி அவர்களின் கருத்துக்கு
   மிஞ்சி வேறு கருத்து சொல்ல முடியுமா என்ன ….?
   ( அதுவும் வழக்கு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்போது….?)

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • today.and.me சொல்கிறார்:

    எனக்கு வருட வருமானம் 12 லட்சம். இருவருடங்களுக்கு முன்பு ஒஎம்ஆர்-ல் ஒரு பிளாட் – பேங்க் நிதியுதவியோடு வாங்கியிருக்கிறேன். வாங்கியபோது அதன் மதிப்பு 40 லட்சம். இன்றைக்கு அதன் மதிப்பு 4கோடி. ஆனால் எனக்கு வருமானம் இன்னமும் உயரவில்லை.
    இப்போது நான் வருமானத்துக்கு அதிகமாக சொத்து வைத்திருக்கிறேன் என்று குற்றமாக முடிந்துவிடுமா? . சுப்ரீம் கோர்ட் என்னத்தையும் சொல்லிவிட்டுப்போகட்டும்… என் கவலை எனக்கு!

 2. நெல்லைத்தமிழன் சொல்கிறார்:

  திருமாவுக்கு வேறு வழி கிடையாது. தன் கட்சி ஆட்களுக்கு உள்ளாட்சியில் சில இடங்களாவது கிடைக்காதா என்ற நிலையிலிருக்கிறார்.

  அஜீஸ் அவர்களுக்கு: ஆனையெல்லாம் (கருணாநிதி கூட்டம் மட்டுமல்ல) தப்பிச்சென்று கொண்டிருக்கிறது.. பூனை போன இடத்தை இருபது வருடங்களாக இன்னும் ஆராயணுமா என்று நீதிமன்றம் கருதியிருந்தால் தவறில்லை

  • nparamasivam1951 சொல்கிறார்:

   உண்மை.

  • சைதை அஜீஸ் சொல்கிறார்:

   இன்றைய தேதிகளில் (nowadays) நாம் எவ்வளவு தரம் தாழ்ந்துவிட்டோம் என்பதையே இது உணர்த்துகிறது.
   பெரிய தவறு தண்டிக்கப்படாத போது சிறிய தவறை ஏன் கண்டுகொள்ளவேண்டும் என்பது என்னமாதிரியான உலகில் நாம் இருந்துகொண்டிருக்கிறோம் என்பதை அறிந்துகொள்ளலாம். தவறு சின்னதோ பெரியதோ, தண்டிக்கப்படவேண்டும் என்பதே என் தரப்பு வாதம்

   • நெல்லைத்தமிழன் சொல்கிறார்:

    இதற்கு நான் பிறகு பதில் எழுதுகிறேன். அதற்குள் நீங்கள் யோசித்து வையுங்கள். ஜெ குற்றம் செய்தவர் என்று நீங்கள் நினைப்பதற்கு என்ன சான்று? மோடி ஒரு குற்றமும் செய்யவில்லை என்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. பாபர் மஸ்ஜித் வழக்கில் இரு இந்து நீதிபதிகள் ஒரு மாதிரியும் ஒரு இஸ்லாமிய நீதிபதி வேறு மாதிரியும் தீர்ப்பளித்தனர் (நான் வழக்கினுள் செல்லவில்லை). வழக்கில் முகாந்திரம் இருந்தாலும்கூட சாட்சியங்கள் கலைக்கப்படும் என்பதாலும் (பேப்பர்களெல்லாம் முன் தேதியிட்டுத் திருத்தப்பட்டன அப்போது இவர் நிர்வாகத்தில் இல்லை … என்பதை நாம் அறிவோம்) என்று நாட்டின் சிபிஐ நீதிபதிகளும் கருதியதால் பல மாதங்கள் கனிமொழி ராசா திகாரில் தள்ளப்பட்டார்கள. நான் எழுதியுள்ள இவைகளில் உங்கள் நிலை என்ன என்பதையும் யோசித்து வையுங்கள்

 3. LVISS சொல்கிறார்:

  A trip back to DMK seems to be the only route he can take –He will justify it anyway and take his cadres for granted – – The trouble with leaders like Thirumavalavan is that they think that without them bigger parties cannot win while actually it is their party which draws t support from the bigger party — DMDK is a good example —-The fact is Thirumalavan does not know how to run a party which has a small base —

 4. CHANDRAA சொல்கிறார்:

  In this context i fully admire jeya ji for thoroughly avoiding thiruma
  krishnasamy jawaharullah john pandian
  and many groups who are not in good books
  with tamil nadu people generally………
  Some self interested groups surround the above
  for their own interest
  Stalin has an aversion for dalit leaders
  So thirumas entry in dmk is
  only a question mark

 5. jksm raja சொல்கிறார்:

  திருமாவளவனும் ரவிக்குமாரும் எப்பொழுதுமே கருணாநிதியின் ஆதரவாளர்கள் .கருணாநிதியின் தூண்டுதலினால் ரவிக்குமார் தலித் முதல்வர் என்று அவர்கள் கூட்டணியை காலிசெய்ய முதல் குண்டை வீசியவர். தலித்தை சேர்த்தால் தான் வெற்றி பெற முடியாது என்று தன கட்சியை ஒதுக்கும் சூழ்நிலையில் தலித்து தான் முதல்வர் என்று கூறும் அளவிற்கு புத்திசாலிகள் அவர்கள் .

 6. selvarajan சொல்கிறார்:

  // நம் சாதனைகள் சரிகிறதே.. பாதிப்பு தமிழினத்திற்குத்தானே.. கருணாநிதி வேதனை
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/karunanidhi-calls-dmk-cadres-unite-255100.html // என்று தன் கட்சியினருக்கு வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் … ! எது — எப்படியோ — 92 அகவை பூர்த்தியாகி 93 – ல் நுழையும் கலைஞர் அவர்களுக்கு ” நல்- எண்ண ” போக்கோடு வாழ வாழ்த்துவோம் …. !!
  திரு.மா அடுத்து வேறெங்கு செல்வது … ? இதே கருத்தை 28 – 05 – 2016 அன்றைய விகடன் செய்தியில் வி.சி.க. மாநில நிர்வாகி தெரிவித்ததாக வந்ததில் — பல விவரங்களை கூறிய அவர் — முத்தாய்ப்பாக — // தொகுதிக்கு மூன்று லட்சம் வாக்குகளை உறுதி செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு. நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அணியில் நாங்கள் இடம் பெறவே வாய்ப்பு அதிகம். தி.மு.க.வும் இதையேதான் விரும்புகிறது. எம்.பி தேர்தலை நோக்கிய பயணத்தில் இருக்கிறார் திருமா” என்றார் உற்சாகத்தோடு. http://www.vikatan.com/news/tamilnadu/64650-will-vck-leader-thiruma-join-in-dmk-alliance.art?artfrm=related_article // … என்னவோ நேரிடையாக தி.மு.க. வோடு சேராமல் காங்கிரசோடு என்று கூறுவதே — நகைப்புரியது .. தானே … ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.