திருவாளர்கள் கலைஞர், ஸ்டாலின், ராமதாஸ், அன்புமணி, EVKS, வைகோ, திருமா, திருமதி தமிழிசை – இத்தனை பேருக்கும் சேர்த்து ஒரு கேள்வி – இன்னமும் பாராமுகம் ஏனய்யா – ஏனம்மா……?

.

.

திரு.விஜய்காந்த் பாவம் அப்பிராணி –
எனவே அவரை விட்டு விடலாம்…

தமிழ்நாட்டின் முக்கிய கட்சித்தலைவர்கள்,
வருங்கால முதல்வர் பட்டியலில் முண்டியடித்துக் கொண்டு,
வரிசையில் காத்திருப்பவர்கள் –

தமிழ்நாட்டில் யாராவது புல் தடுக்கி விழுந்தால் கூட,
ஓடோடிச்சென்று முதலில் குரல் கொடுப்பவர்கள் –

கடந்த ஒரு வாரமாகப் பார்க்கிறோம் –
தாங்கள் ஏதோ வேற்றுலகில் சஞ்சரித்துக் கொண்டிருப்பது போலவும்,
இங்கு நடப்பது எதுவுமே தங்களுக்கு தெரியாது என்பது போலவும் –

வாய்மூடி மௌனம் சாதிக்கிறார்கள்…!!!

வயதான தாய் தன் மகனைக் காணவில்லை என்று
செய்தியாளர் கூட்டத்தில் கதறுகிறார்….

மனைவி(கள்) கணவர் உயிருக்கு ஆபத்து நேரிட்டிருக்கலாம் –
உடனடியாக அவரை கண்டு பிடியுங்கள் என்று தேம்பி அழுகிறார்கள்…

மருத்துவக் கல்லூரி அட்மிஷனுக்கு லட்சக்கணக்கில் பணம்
கொடுத்த பெற்றோர் – நடுத்தெருவில் விடப்பட்டு, யாரிடம்
முறையிடுவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்….

இந்திய மாநிலங்களிலேயே –
அதிக அளவு முதல்வர் வேட்பாளர்கள் நிறைந்திருக்கும்
தமிழ்நாட்டில் –

தவிக்கும் இந்த தாயின், மனைவிகளின், பெற்றோர்களின்
குறைகளைக் களைய –

” உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்,
பல்கலைக்கழக நிர்வாகத்தின் சீர்கேடுகள் குறித்து
தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும் ” என்று

இந்த முதல்வர் வேட்பாளர்கள் –

வாயைத்திறந்து கேட்க வேண்டாம் – (ஒரு வேளை பயமாக இருக்கும்….)
ஒரு அறிக்கை கூடவா விட முடியவில்லை….?

அப்படி அவர்களைத் தடுப்பது என்ன …..?

தொழில் தர்மமா ..? பண பலமா ?
( ஒரே தொழிலில் இருப்பவர்கள் ஒருவரையொருவர்
காட்டிக் கொடுக்கக்கூடாது என்கிற …)

வெட்கக்கேடு.
இந்த முறைகேடு குறித்து வாய்திறவாமல் மௌனம் சாதிக்கும்
தமிழகத்தின் அத்தனை அரசியல் தலைவர்களுக்கும்
இது ஒரு வெட்கக்கேடு….

அவர்கள் கிடக்கட்டும்…..
நாம் கேட்போம்….
(என்ன வெட்டியா போட்டு விடுவார்கள்…?
இல்லை காசிக்கு கொண்டு போய்
கங்கையில் அமுக்கி விடுவார்களா…? )

மாநில அரசும் சரி, மத்திய அரசு புலனாய்வு நிறுவனங்களும் சரி,
உடனடியாக இந்த விஷயத்தில் தீவிரமாக உரிய விசாரணை நடத்தி,
உண்மைகளை வெளிக்கொண்டு வர வேண்டும்.
குற்றவாளிகள் வெளிப்படுத்தப்பட்டு, உரிய முறையில்
அவர்கள் மீது வழக்குகள் தொடரப்பட வேண்டும்…..
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கிடைக்க வேண்டும்…

பிப்ரவரி மாதமே கட்சியிலிருந்து விலக்கி விட்டோம் என்று
சொல்கிற கட்சியின் வேட்பாளராக திருவாளர் மதன்
மே மாதம் நடந்த தேர்தலில்
போட்டியிட்டது எப்படி என்கிற அதிசயத்தை
தோண்டியெடுத்து வெளிப்படுத்த வேண்டும்…..

லேட்டஸ்டாக – இன்றைய தினம் ஜூனியர் விகடனில்
வெளிவந்துள்ள விவரங்கள் கீழே –

m-1

m-2

m-3

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to திருவாளர்கள் கலைஞர், ஸ்டாலின், ராமதாஸ், அன்புமணி, EVKS, வைகோ, திருமா, திருமதி தமிழிசை – இத்தனை பேருக்கும் சேர்த்து ஒரு கேள்வி – இன்னமும் பாராமுகம் ஏனய்யா – ஏனம்மா……?

 1. drkgp சொல்கிறார்:

  Almost all these political figures are proven crooks

 2. ns raman சொல்கிறார்:

  For catching a pick pocket DIG to Commissioner of police used to give interviews why the pin drop silent from TN police in this case ? Is Money already reached to all relevant parties? All political parties running such so called educational institutions and MGR period (starting of Pvt. Engg college’s) and both DMK and ADMK leading leaders are owners of such institutions. TN govt through a special regislation can take over all such institutions in one day. Hope this govt do some thing!!

  • ragavendra சொல்கிறார்:

   தமிழிசை வாய் திறவாதது ஏனென்று கேட்டதற்கு
   ns raman வக்காலத்து வாங்குகிறீரோ ?
   பாரீ வேந்தர் உங்கள் கூட்டாளீ தானே ?
   அதான் வக்காலத்தா ?:

   • NS RAMAN சொல்கிறார்:

    Read my comments completely. I am asking government to take over all private colleges. Why the hell TN police is keeping quite inspite of complaints. ? Where is the question of supporting? First understand every one got their individual approach to each problem. No need to support blindly.

 3. நெல்லைத்தமிழன் சொல்கிறார்:

  எஸ் ஆர் எம்மை 2 G பணத்தின் மூலம் ஒரு பெண்மணி வாங்க நெருக்கியதால் கட்சி தொடங்கினார் பச்சமுத்து என்கிற வேந்தர். அதுக்கு அப்புறம் கட்சி மூலமாக்க் கறுப்பை வெள்ளையாக்கலாம் என்பதைக் கண்டுபிடித்திருப்பார். 700 கோடி கேபிள் ஊழல், சாதிக்பாட்சா மர்மம், 2G இதைப்பற்றி ரொம்ப அலட்டிக்கொள்ளாத ஜூவி கேடியைக் குளிர்விக்கவும் அப்படியே மொழியைக் குளிர்விக்கவும் பாரிவேந்தர் கதையைத் தொடர்ந்து ஒலிபரப்பும். ஐஜேகே கேள்விப்படாத கட்சிக்கு 50 சீட்டு கேட்டு வாங்கும்போதே ஆச்சரியமாக இருந்தது. ஊருக்கு உபதேசம் பண்ணற ஒரு பயலையும் (பு தலைமுறை) நம்பமுடியாது. இப்பத் தெரியுது அவர்கள் கருத்துக் கணிப்பின் லட்சணம்

 4. B.Venkasubramanian சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  நீங்கள் சொல்லிக்கொண்டிருந்த, கலைஞருக்கு பதில் சொல்லும்,
  திருமதி தமிழிசையின் statement –
  திமுக தலைவர் கருணாநிதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை பேட்டி !

  “மோடி அவர்களின் மீது வீண் பழி சுமத்துவதும் தவறான கருத்துக்கள் பரப்புவதும் கலைஞர் அவர்களுக்கு அழகல்ல என்று வலிமையாக எடுத்துகூறி வன்மையாக கண்டிக்கிறேன். கண்டைனர் லாரி விவகாரத்தில் மத்திய அரசு மீது குற்றம் சாட்டுகிறார். அதற்கு பொறுப்பான வங்கி அதிகாரி பதில் கொடுத்துவிட்டார். 2 ஜி பணம் 1,76,000 கோடிகளுக்கு நீங்கள் இதுவரை உண்மையான பதிலை சொல்லவில்லை. இன்று வலிமையான எதிர்க்கட்சியாக வந்ததில் 2ஜி பண வலிமையையும் இருக்கிறது என்ற உண்மை உங்கள் மனசாட்சிக்கும், மக்களுக்கும் தெரியும் …
  நீங்கள் வெற்றி பெற்றால் தேர்தல் ஆணைய அலுவலர்கள், யோக்கியர்கள். தோல்வி அடைந்தால் அயோக்கியர்கள். வெற்றி பெற்றால் மக்கள் இல்லையென்றால் மந்தை ஆடுகள். தான் கட்டுமரம் மக்கள் நெட்டை மரம். கவிழ்ந்து விடமாட்டேன் என்று சொல்லிவிட்டு பொய்யை கட்டவிழ்த்து கவிழ்ந்து கொண்டு இருக்கிறிர்கள். கலைஞர் அவர்களே EVKS இளங்கோவன் தான் மோடி வாழ்த்து மாற்றி விட்டது என்று பிதற்றினார் நீங்களுமா? இது கூடா நட்பினால் வந்த சாயமா? சாயலா? தமிழ் மக்களுக்கு வந்த சாபமா? மக்கள் புரிந்து கொள்வார்கள். தமிழ் மக்களுக்காக வாழ்வதாக சொல்லி தற்சமயம் தன் மக்களுக்காக வாழ்ந்து வருவது யாரென்று சிந்தித்து பாருங்கள் “”

 5. Raw சொல்கிறார்:

  Madam matter diplomatically handles by key people.

  Very good drama well conducted by black mones people in front of public.

  So no one will take any action. Until next sensation topic arise.

 6. selvarajan சொல்கிறார்:

  // இன்னமும் பாராமுகம் ஏனய்யா – ஏனம்மா……? // …. ஜாதி — மதம் சார்ந்த பிரச்சனை இல்லை — வாக்குகள் பெறக் கூடிய தன்மை இல்லை — அரசை குறைக் கூறும் சந்தர்ப்பம் இன்னும் வாய்க்கவில்லை — தேர்தல் தோல்வியை பற்றியே அறிக்கைவிட்டு இன்னும் ஓயவில்லை — ” ஒரே இனம் — தன்மை ” போன்றவற்றை மறக்க முடியவில்லை — என்பதாலோ …. ?

 7. selvarajan சொல்கிறார்:

  தேவாலயத்தின் பெயரால் கச்சத்தீவில் கடற்படை முகாம் அமைக்கிறது இலங்கை? — கட்ச தீவு அவ்வளவுதானா … ?

  • நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

   இந்தக் கட்சத்தீவுக் கதையைப் பல வருடங்களாகக் கேட்டு வருகிறேன். சும்மா, நானும் இருக்கேன் எங்கிற கதையா, நம் அரசியல்வாதிகள், “தனி ஈழம் அமையப் பாடுபடுவேன்”, “ஈழத் தமிழர் சார்பாக நிற்போம்”, “கட்சத்தீவை மீட்போம்” என்றெல்லாம் சொல்வதை வைத்து யாரும் உணர்ச்சி வசப் படவேண்டாம்.

   கச்சத்தீவு போனது போனதுதான். எனக்குத் தெரிந்தவரை, அது டிரிபியூனலுக்குச் சென்றிந்தாலும், நம்மால் (இந்தியா) அதைச் சொந்தம் கொண்டாட முடியாது. இதேபோல்தான், நாம் அடுத்த நாட்டில் சென்று தனி ஈழம் வாங்கித் தர முடியாது. உள்ளூரில் இருக்கும் ஈழத் தமிழர் அகதிமுகாமை படு கேவலமாக வைத்துக்கொண்டு, அங்கிருக்கும் ஈழத் தமிழர்களை கௌரவமான இடமோ, சௌகரியமோ கொடுக்காமல் வைத்துக்கொண்டு, அதைப் பற்றி யாரும் கவலைப்படாமல் இருந்துகொண்டு, இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு வீடு கட்டுகிறோம், அதைச் செய்கிறோம் இதைச் செய்கிறோம் என்ற வாய்ச்சவடால்களை மட்டும் கேட்டுக்கொண்டு, நம் அரசியல் கட்சிகள் செய்வார்கள் என்று நம்புவது நமக்கே அதிசயமாகத் தெரியவில்லையா?

 8. Antony சொல்கிறார்:

  Questions are raised towards the right people.
  Not only CM, The so called CM canfidates also answerable. Nicely written unbiased article. Well done KM.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.