திருமதி தமிழிசை …. கலைஞருக்கு கிடைத்து விட்டது – சரி. ஆனால் இளங்கோவனுக்கு….?

evksand karunanithi

எப்போதும், எதிலும் தனக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட
வேண்டும், எங்கும் தானே பேசப்பட வேண்டுமென்று விரும்புபவர்,
செயல்படுபவர் கலைஞர்…இது குறித்து கவிஞர் கண்ணதாசன்
மிகவும் விளக்கமாகவே எழுதி இருக்கிறார்….!

தேர்தலுக்கு முன்னர் அவருக்கு கிடைத்த முக்கியத்துவத்தில்
பாதியை திரு.ஸ்டாலின் பறித்துக் கொண்டு விட்டார். தேர்தலுக்கு
பின்னரோ, எதிர்க்கட்சித்தலைவர் என்கிற முறையில் மீடியாவின்
முழு கவனமும் ஸ்டாலின் பின்னாலேயே இருக்கிறது…..

எனவே, தான் முக்கியத்துவம் பெற, தினமும் ஒரு
அறிக்கை வாயிலாக உழைத்துக் கொண்டிருக்கிறார் கலைஞர்….

அவரது எதிர்பார்ப்பு வீணாகாமல், தமிழக பாஜக தலைவர்
திருமதி தமிழிசை, கலைஞருக்கு “உரியதை” தனது விளக்கமான
அறிக்கையின் மூலம் கொடுத்திருக்கிறார்.

இது கலைஞர் கொடுத்தது –

தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக்
கொண்டிருக்கும்போதே, இந்தியாவின் பிரதமர் மோடி அவர்களே,
காலை சுமார் பத்து மணிக்கெல்லாம், ஜெயலலிதாவுக்கு
வாழ்த்துச் செய்தி கொடுக்கிறார் என்றால், இது எவ்வளவு சூது?
எவ்வளவு பெரிய மோசடி?

டில்லியிலே உள்ள பிரதமர் மோடியாலேயே நடத்தப்பட்டிருக்கிறது
என்பதை நான் வெளிப்படையாக, பகிரங்கமாகக் குற்றஞ்
சாட்டுகிறேன். இந்தக் குற்றச்சாட்டுக்கு பிரதமர் மோடியின்
பதில் என்ன? இந்தக் குற்றச்சாட்டுக்கு டில்லியிலே உள்ள
மோடி கட்சிக்காரர் களுடைய விளக்கம் என்ன? எப்படி பத்து
மணிக்கெல்லாம் முதல் இரண்டு சுற்று வாக்கு எண்ணிக்கை
நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, ஜெயலலிதாவின்
வெற்றியைத் தெரிந்து கொண்டு வாழ்த்துத் தந்தி கொடுக்க
முடிந்தது? அப்படியானால் வாக்குகளை நீங்கள் அதற்கு முன்பே
எண்ணிப் பார்த்து விட்டீர்களா? இந்தக் கேள்விக்கு மாத்திரம்
அவர்கள் பதில் சொன்னால் போதுமானது.

————–

tamilisai

இதற்கு பதிலாக திருமதி தமிழிசையிடமிருந்து,
கலைஞர் வாங்கிக் கொண்டது இது –

——————-

தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாத ஆத்திரத்தில்,
ஒரு பொய் உரையை கருணாநிதி பிறந்தநாள் உரையாக
ஆற்றி இருப்பது கண்டிக்கத்தக்கது. ஆட்சி அமைக்க
முடியவில்லை என்ற உடன் வலுவான எதிர்க்கட்சி
அந்தஸ்தை கொடுத்த மக்கள் ஆடுகளாக மாறிவிடுவார்கள்.

தங்கள் ஆட்டத்திற்கு ஓட்டு போட்டால் நல்ல ஆட்கள்.
இல்லை என்றால் ஆடுகள்.

ஆக மக்களுக்காக இன்று கருணாநிதி இல்லை.
கருணாநிதிக்காக மக்கள் இருக்க வேண்டும் என்பதே
அவரது அரசியல் பார்வை. மக்களை பார்த்து
கசாப்புக்கடைக்காரனை நோக்கி செல்லும் ஆடுகள் என்கிறார்.

ஆட்சி அமைக்க முடியவில்லை என்ற காழ்ப்புணர்ச்சியில்
நல்லாட்சி செய்து கொண்டிருக்கும் மோடி மீது பாய்வது தான்
வியப்பை தருகிறது. வாய்ப்பு பறிபோனதற்கு காங்., தான்
காரணம் என்று தி.மு.க.,வினரே சொன்ன பின், மோடியை
குறை சொல்வது ஏன்.

இன்று தி.மு.க., பல இடங்களில் பெற்றிருக்கும் வெற்றி,
2 ஜி பணபலத்தாலும் மற்றும் பல இடங்களில் பா.ஜ.,
வேட்பாளர்கள் கணிசமான ஓட்டுகளை பிரித்ததாலும்,
லோக்சபா தேர்தலில் ஒரு இடம் கூட பெறாத தி.மு.க., கூட்டணி,
இன்று பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

ஆனால் அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததற்கு மோடி சொன்ன
வாழ்த்தே காரணம் என தவறான கருத்தை பரப்புவது
கண்டனத்திற்கு உரியது.

தனது 93 வது பிறந்தநாள் உரையில் அப்பழுக்கற்ற பிரதமரை
பார்த்து ஜனநாயகத்துக்கு விரோதமாக ஒரு குற்றச்சாட்டை
சுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

10 மணிக்கே மோடி வாழ்த்து சொல்லி விட்டார்.
அதனால் இவருக்கு கிடைக்க வேண்டிய வெற்றி பறிபோய்
விட்டது என புலம்புகிறார்.

மோடி தமிழக முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து
டுவிட்டரில் பதிவு செய்து இருப்பது காலை 11 மணி.
இன்று ஓட்டு இயந்திரம் மூலம் எண்ணப்படும் ஓட்டுகள்
விரைவில் எண்ணப்படுகிறது என்பதும் ஓட்டு எண்ணிக்கை
காலை 8 மணிக்கு துவங்கி ஒரு மணி நேரத்திற்கு
உள்ளாகவே அனைத்து செய்தி ஊடகங்களில் வருகிறது
என்பதும் 10 மணியளவில் முன்னணி நிலவரம் மட்டுமல்ல
11 மணியளவில் பல உறுதிசெய்யப்பட்ட வெற்றிகள்
அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில்

பிரதமர் 11.15 மணிக்கு தமிழகத்திற்கு வாழ்த்து சொன்னார்.
அவர் இங்கு மட்டுமல்ல அதற்கு முன்னரே 11.14 மணிக்கு
மேற்கு வங்கத்திற்கும் 11.23 மணிக்கு அசாம் வெற்றிக்கும்,
11.26 மணிக்கு கேரள நிலவரத்திற்கும் தன் கருத்தை
பதிவு செய்து இருக்கிறார்.

அப்படி என்றால் எல்லா தேர்தல் முடிவுகளும் அவரது
வாழ்த்தால் மாறியதா. சுமார் 18 ஆண்டுகள் மத்திய அரசின்
ஆட்சி அதிகாரத்தில் அங்கம் வகித்த கருணாநிதி
இதைத்தான் செய்தாரா…?

கடந்த காலத்தில் “சிதம்பர” வெற்றிகள் இப்படித்தான்
சிதைத்து வாங்கப்பட்டதா என்ற சிதம்பர ரகசியத்தை
கருணாநிதி விளக்குவாரா…?

தாங்கள் மத்தியில் ஆட்சியில் பங்கேற்ற போது நம்மாநிலத்தில்
தாங்கள் பெற்ற வெற்றிகள் எல்லாம் அத்தகையது தானா…?

தமிழகத்தில் வாழ்த்து சொல்லி தேர்தல் முடிவுகளை
மாற்ற முடியும் என்றால் மோடி ஏன் டில்லி சட்டசபை
தேர்தல் முடிவுகளை மாற்றவில்லை. பீகாரில்
எப்படி எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்தன…?

தன் கட்சிக்கு தோல்விகள் வந்த போதும் அதை தன் தோளில்
சுமந்து கொண்டே தன்னலம் இன்றி நாட்டுக்கு உழைத்து வரும்
மோடியின் மீது வீண்பழி சுமத்துவதும், தவறான கருத்துகளை
பரப்புவதும் கருணாநிதிக்கு அழகல்ல என்று வலிமையாக
எடுத்துக்கூறி வன்மையாக கண்டிக்கிறேன்.

அதுமட்டுமல்ல கண்டெய்னர் லாரிக்கும் பதில் சொல்ல
வேண்டியது மத்தியரசு என்ற தொனியில் பேசுகிறார்.
அது அரசு வங்கிகளின் பணம் என்று பொறுப்பான உயர்வங்கி
அதிகாரிகள் உறுதி செய்துவிட்ட பின்பும் மத்தியரசு
பதில் சொல்லவில்லை என்கிறார்.

2 ஜி பணம் 1,76,000 கோடிகளுக்கு நீங்கள் இதுவரை
பதிலைச்சொல்லவில்லை. இன்று வலிமையான எதிர்க்கட்சியாக
வந்ததில் 2ஜி பணவலிமையும் இருக்கிறது என்ற உண்மை
உங்கள் மனசாட்சிக்கும், மக்களுக்கும் தெரியும்.

நீங்கள் வென்றால் தேர்தல் ஆணைய அலுவலர்கள்
யோக்கியர்கள். தோல்வியடைந்தால் அயோக்கியர்கள்.

வெற்றி பெற்றால் மக்கள்.
இல்லை என்றால் மந்தை ஆடுகள்.
தான் கட்டுமரம் மக்கள் நெட்டை மரம்.

கவிழ்ந்து விடமாட்டேன் என்று சொல்லி விட்டு
பொய்யை கட்டவிழ்த்து கொண்டு இருக்கிறீர்கள்.
இளங்கோவன் தான் மோடி வாழ்த்து மாற்றி விட்டது
என பிதற்றினார். கருணாநிதியே நீங்களுமா…?

இது கூடா நட்பினால் வந்த சாயமா? சாயலா?
தமிழ் மக்களுக்கு வந்த சாபமா?
மக்கள் புரிந்து கொள்ளுவார்கள்….
தமிழ் மக்களுக்காக வாழ்வதாகச் சொல்லி தற்சமயம்
தன் மக்களுக்காக வாழ்ந்து வருவது யார் என்று.

————————————–

ஒரு அருமையான fitting reply-ஐ, கலைஞருக்கு
கொடுத்திருக்கும் திருமதி தமிழிசைக்கு நமது
மனமார்ந்த வாழ்த்துக்களும், பாராட்டுகளும்….!!!

ஆனால், அவர் அறியாமலே ஒரு ஓரவஞ்சனை நிகழ்ந்து விட்டது.
கலைஞருக்கு மட்டும் சரியாக கொடுத்து விட்டு,
ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு குறைவாக கொடுப்பது
சரி இல்லையே…. எனவே, இளங்கோவனுக்கும் குறையாக
இருப்பதை கொடுத்து விட்டால், எல்லாருக்கும்
நிறைவாக இருக்கும்….!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to திருமதி தமிழிசை …. கலைஞருக்கு கிடைத்து விட்டது – சரி. ஆனால் இளங்கோவனுக்கு….?

 1. aksharam சொல்கிறார்:

  சபாஷ்

  இத்தனை வருஷ பா.ஜ.க. தலைவர் பொறுப்பிலே இன்னைக்குத்தான் இந்த அம்மா நல்லா ஒரு அறிக்கையே விட்டு இருக்காங்க. இது இப்படியே தொடரணும்னு கேட்டுக்கறேன்.

  செய்தியைப் பகிர்ந்தமைக்கு நன்றி காவிரிமைந்தன் அவர்களே

 2. B.Venkasubramanian சொல்கிறார்:

  உண்மையிலேயே தமிழிசை அவர்கள் கலைஞருக்கு
  மிகச்சரியான முறையில் பதிலடி கொடுத்திருக்கிறார்.

  விமரிசனத்திலிருந்தே பாராட்டுகள் குவிகின்றனவே.
  ஈவிகேஎஸ் இளங்கோவனையும் கொஞ்சம் கவனித்தால் தேவலை.

 3. selvarajan சொல்கிறார்:

  ஒரு உருப்படியான பதிலடி — அது அவருக்கு எந்தவித தாக்காத்தையும் ஏற்படுத்தாது என்பது தான் உண்மை — அண்ணாவிடம் தன் காசில் வாங்கிய ” கணையாழியை ” கொடுத்து பின் பரிசாக பெற்ற போதும் சரி — கல்லக்குடியில் ரயில் மறியல் போராட்டத்தில் — தண்டவாளத்தில் இவர் படுத்ததை பற்றிய வண்டவாளம் வெளியே வந்தபோதும் — எந்தவித கூச்சமே இல்லாமல் திரிந்தவராச்சே — என்னா மாதிரியான ஒரு நபர் … ! தமிழிசை இவ்வளவு காட்டமா ஒரு அறிக்கை விட்ட பின்னும் — // ஜெ. வீட்டிற்கே மோடி சென்றது கூட்டணிக்கான முதற்கட்ட சமிக்ஞை போலும்: கருணாநிதி
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/modi-visits-jaya-keeping-alliance-mind-karunanidhi-255291.html // என்று அவரது கேள்வி, பதில் வடிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது ,.. நமக்கு தான் வேடிக்கை — இந்த கேள்வி – பதிலிலும் அவர் விடாப்பிடியாக ” 570 – கோடி …தேர்தல் ஆணையம் ” போன்றவற்றை குறிபிடுவது — ?

 4. CHANDRAA சொல்கிறார்:

  Reminds me of MARK ANTONYS inspiring speech
  DR Tamizhisai has inherited kumari anandan iyyahs oratorical skills
  Soon we could expect from her a strong rejoinder against elangovan
  for his unsavoury remarks against
  jaitley ji in the container issue

 5. CHANDRAA சொல்கிறார்:

  JI it is obvious that kalaignar wants to score over stalin in all issues
  kalignar is yet to digest the stalins elevation as the leader of
  opposition…….
  He expects dmk cadres to understand that he is still a formidable
  leader than stalin
  This situation prevails in most of the joint families
  where a very senior citrizen still directs his fifty sixty year old
  son even in trivial issues in his family matters

 6. LVISS சொல்கிறார்:

  It is obvious that Stalin will be sought out by the press more than the DMK supremo — Dragging Modi or BJP into everything in nothing new — At the national level they have started dragging Gujarat also into every conversations—
  Today’s news is that BJP wants the AIADMK to join the NDA and be a part of development —AIADMK is already supporting the NDA on some issues in the parliament — As a person living in T Nadu for 70 yrs I would like to see our state coming on top over every other state —

 7. CHANDRAA சொல்கிறார்:

  LVISS JI just like K M JI your sincere earnest wish that tamil nadu would be occupying
  a top place in its development………should happen ji

 8. CHANDRAA சொல்கிறார்:

  JI hope your earnest sincere wish about tamil nadu should happen ji

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.