” கொள்ளையடித்தது தெரியாதா ” …? டாக்டருக்கும் டாக்டருக்கும் சண்டை …!!!

paarivendar and ramadoss

கொஞ்ச நாட்களுக்கு முன்னதாக லாரன்ஸ் தயாரித்து, நடித்த
ஒரு படம் வந்தது…. அதில் “பேய்க்கும் பேய்க்கும் சண்டை ”
என்று டைட்டில் போட்டு ஒரு ” பயங்கரமான ” பேய்ச்சண்டை
நடக்கும். ஆனால், தியேட்டரில் படம் பார்ப்பவர்கள் அனைவரும்
குலுங்க குலுங்க சிரிப்பார்கள்….!!!

அது தான் நினைவிற்கு வருகிறது….
சுருட்டல் மன்னர்கள் – இரண்டு பேர் அவர்களுக்குள் சண்டை
போட்டுக்கொள்ளும்போது – இருவரும் ஒருவர் மீது
மற்றொருவர் சேற்றை வாரி இறைத்துக்கொள்ளும்போது தான்
பலருக்கு “அடடா – உள்ளே இவ்வளவு விஷயம் இருக்கிறதா ” ..?
என்று தோன்றும் …!!!

சில விஷயங்களை நாம் சொன்னால் மக்கள் நம்ப மாட்டார்கள்…
” பழைய கூட்டாளிகள் ” – சொன்னால் தான் நம்புவார்கள்….!!!

நமக்கேன் வம்பு….?
இந்த இடுகையில் நான் யாரைப்பற்றியும்
ஒன்றும் எழுதப்போவதில்லை.
இரண்டு பெரிய மனிதர்கள் -அவர்களுக்குள்
ஒருவரைப்பற்றி மற்றொருவர் கூறியதாக
வந்திருக்கும் செய்தி மட்டும் கீழே –

(ஆதாரம் -http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?
N=167236 )

———————————-

முதலில் டாக்டர் ராமதாஸ் கூறியது –

1969ல் சாதாரண ஆசிரியராக இருந்த பச்சமுத்து
துவக்கப்பள்ளி, பொறியியல் கல்லூரி, நர்சிங், மருத்துவ கல்லூரி
என ஆண்டுக்கு ஒன்று என கல்வி நிறுவனங்களை தொடங்கி
20 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை
தொடங்க அவருக்கு பணம் எங்கிருந்து வந்தது…?
எஸ்ஆர்எம் பல்கலைகழகத்தில் 20ஆயிரம் கோடிக்கு மேல்
கருப்பு பணம் இருக்கிறது. கருப்பு பணத்தில்தான் அந்த
நிறுவனங்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. 20 ஆயிரம் கோடி
கருப்பு பணத்தை மத்திய அரசு மீட்க வேண்டும்.
இது குறித்து மத்திய மாநில அரசுகள் விசாரணை நடத்தவேண்டும்……

பதிலுக்கு டாக்டர் பாரிவேந்தர் கூறி இருப்பது –

‘’எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரி மற்றும் வேறு பல
கல்லூரிகளிலும் இடம் வாங்கித் தருவதாக மாணவர்களிடம்
பொய்யான வாக்குறுதி மூலம் பணத்தை பெற்றுக்கொண்டு

தலைமறைவாகி விட்ட மதன் மீதான
வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சூழலில்,
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எஸ்.ஆர்.எம்.
பல்கலைக்கழகம் மீதும் தனிப்பட்ட முறையில் என் மீதும்
அடுக்கடுக்கான பொய்களை கோர்த்து சற்றும்
மனசாட்சியின்றி அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.

சரிந்து வரும் அரசியல் செல்வாக்கை நிலை நிறுத்திக்
கொள்ள யாரையாவது எதிரியாக சித்தரித்து, அவர்களை
எதிர்ப்பதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடுவது டாக்டர்
ராமதாசின் அன்றாட வாடிக்கை.

தமிழ்நாடு முழுவதும் வன்னியர் இனத்தைச் சேர்ந்த
சகோதரர்களும் -பார்க்கவகுலத்தைச் சேர்ந்தவர்களும்
அண்ணன் தம்பிகளாக பழகி வருகிறார்கள். அவர்களிடத்தில்
விரோதத்தை வளர்த்து அமைதியை கெடுக்க
பார்க்கிறார் ராமதாஸ்.

சமூக நீதிக்காக போராடுகிறேன் என கூறும் ராமதாஸ்
அவர்கள், பிற்படுத்தப்பட்ட ஒரு சமுதாயத்தின் தலைவரான
என்னை தனிபட்ட முறையில் கொச்சைப்படுத்தி அறிக்கைகள்
விடுவதும் பேட்டி கொடுப்பதும்
எந்த விதத்தில் நியாயம்..?

“சி.பி.ஐ. விசாராணை வேண்டும்” என்கிறார் ராமதாஸ்.
வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. மேலும் காவல்துறை அதிகாரி

ராதாகிருஷ்ணன் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவும்
நீதிமன்றத் தால் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்
உள்நோக்கத்தோடு தவறான அறிக்கைகளை விடுவது வழக்கை
திசை திருப்பும் முயற்சியல்லவா?

மத்தியிலும், மாநிலத்திலும் கிடைத்த அரசு பதவிகளை
பயன்படுத்திக்கொண்டு, கோடிகோடியாய் பணம் சம்பாதித்து
வெளிநாட்டில் முதலீடு செய்துள்ளோமா…? என்பதை ராமதாஸ்
விளக்கவேண்டும்.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு, திண்டிவனத்தில் சாதாரண
டாக்டராக தொழில் செய்து வந்த ராமதாஸ், இன்று பலஆயிரம்
கோடிகளுக்கு அதிபதியாகவும் –
– பல்வேறு அறக்கட்டளைகளை நிர்வகிப்பவராகவும்
இருப்பது எப்படி என்பதை கூறமுடியுமா..? ஆயிரக்கணக்கான
அப்பாவி வன்னியர்களின் கூட்டு முயற்சியால் கட்டப்பட்ட
கல்லூரியை தன் குடும்ப சொத்தாக மாற்றிக்கொண்ட
டாக்டர் ராமதாஸ், 45 ஆண்டுகாலமாக சிறு பள்ளியில் துவங்கி
படிப்படியாக முன்னேறி உலக தரம் வாய்ந்த
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தை உருவாக்கிய என்னை பார்த்து
குற்றம் சாட்டுவது வேடிக்கையாக உள்ளது.

டாக்டர் ராமதாசின் மகன் அன்புமணி மத்திய
சுகாதாரத்துறை அமைச்சராக 5 ஆண்டுகள் பொறுப்பு வகித்தார்.
அப்போது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக்
கல்லூரிகளிலும் ஒரு கல்லூரிக்கு இரண்டு இடங்கள் என்கிற
வகையில் பெற்றுக்கொண்டு, அந்த 5 ஆண்டுகளில் எத்தனை
ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்தார் என்பது நாட்டு மக்களுக்கு
தெரியாதா..?

மேலும், அகில இந்திய மருத்துவ கவுன்சில் மூலம்
எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியை விசாரிக்க வேண்டும்
என்கிறார் ராமதாஸ். இதே மருத்துவ கவுன்சிலின் பரிந்துரையை
நிராகரித்துவிட்டுத்தானே அவரின் மகன் அன்புமணி இரண்டு
மருத்துவக்கல்லூரிகளுக்கான அனுமதியை வழங்கி
பல கோடி ரூபாய் ஊழல் செய்ததாக சி.பி.ஐ-யால் குற்றம்
சாட்டப்பட்டு இன்றும் குற்றவாளியாக கூண்டில்
நிறுத்தப்பட்டுள்ளது ஊர் அறிந்த உண்மை அல்லவா..?

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது இரண்டு திராவிடக்
கட்சிகளுக்கும் இணையாக செய்தித்தாள்களில் கோடி கோடியாக
பணம் செலவழித்து, பாமக சார்பில் விளம்பரம் செய்யப்பட்டதே,

அதற்கான பணம் எங்கிருந்து வந்தது என்பதை
தெரிவிக்க முடியுமா..?

தன்னுடைய கட்சி மாநாட்டிற்கும்,
தேர்தலுக்கும்
தன் வீட்டு சுபகாரியங்களுக்கும் –
ஏன், தன்னுடைய கல்லூரியில் சம்பளம் கொடுக்க
முடியவில்லை என்றும் –
-டாக்டர் ராமதாஸ் எத்தனை முறை தன் கட்சிக்கார்கள் மூலம்
என்னிடம் கைநீட்டினார் என்பது நினைவில் இல்லையா..?
அவ்வாறு கொடுப்பதில் தடை ஏற்பட்டதால் கோபத்தில்
என் மீது நஞ்சை கக்குவது நியாயமா..?

எதிரியின் மீது குற்றம்சாட்டி தன் சுட்டுவிரலை நீட்டும்போது,
மற்ற மூன்று விரல்களும் தன் மார்பை நோக்கித் திரும்புவதை
அவர் உணரவேண்டும். யாரோ சில வழிப்போக்கர்கள் பாடும்
வஞ்சக பாட்டிற்கு – பின்பாட்டு பாட வேண்டாம் என
டாக்டர் ராமதாஸ் அவர்களை கேட்டுக்கொள்கின்றேன்’’
என்று தெரிவித்துள்ளார்.

———————————————–

டாக்டர் ராமதாஸ் “ரோசம்” மிக்கவர்….
தன் மீது “இந்த அளவிற்கு” தாக்குதல் நடத்திய
பங்காளியை சும்மா விடுவாரா …?
பதிலுக்கு அவரது அறிக்கை –
டாக்டர் பாரிவேந்தரைப் பற்றிய பல புதிய தகவல்களுடன்
நாளை காலையே நிச்சயம் “ரிலீஸ்” ஆகுமென்று நம்புவோமாக…..!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

14 Responses to ” கொள்ளையடித்தது தெரியாதா ” …? டாக்டருக்கும் டாக்டருக்கும் சண்டை …!!!

 1. jksm raja சொல்கிறார்:

  “யாரோ சில வழிப்போக்கர்கள் பாடும்
  வஞ்சக பாட்டிற்கு – பின்பாட்டு பாட வேண்டாம் ” இது உங்களைத்தான் குறிக்கும் என்று நினைக்கிறேன். சும்மா இருந்த ராமதாசை உசுப்பேத்தி விட்டது நீங்கள்தான்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப ராஜா (jksm raja ),

   மன்னிக்கவும்…..
   நான் அந்த அளவு கவனத்தைப்பெறும் அளவிற்கு
   முக்கியமான மனிதனல்ல….

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • Ragavendra சொல்கிறார்:

    Mr.K.M.

    Very funny and wonderful article.

    நான் இதை வெறும் புகழ்ச்சிக்காக சொல்லவில்லை.
    jksm raja சொன்னது போல், நிஜமாகவே,
    இது உங்கள் கட்டுரையின் விளைவாக கூட இருக்கலாம்.
    நீங்கள் தான் இதைப்பற்றி முதன் முதலில் தீவிரமாக
    எழுதினீர்கள். எல்லா தலைவர் பெயர்களையும் தலைப்பில்
    போட்டு, ஏன் வாய்மூடி இருக்கிறீர்கள் என்று கேட்டிருந்தீர்களே.
    அதற்கு 2 நாட்கள் கழித்து தாண் டாக்டர் ராம்தாஸ் அறிக்கை வந்தது.
    “sarcasm” -ல் நீங்கள் உங்கள் குரு “சோ” வையே மிஞ்சி
    விடுவீர்கள் போலிருக்கிறதே.

    • Jagannathan.M. சொல்கிறார்:

     வல்லவனுக்கு வல்லவன்,
     கில்லாடிக்கு கில்லாடி,
     விடாக்கண்டன் கொடாக்கண்டன் மாதிரி
     இரண்டு திருடர்கள்

 2. selvarajan சொல்கிறார்:

  ஆதர்ச ” தலைவர்களின் ” — கோல் – மால் குட்டுகள் வெளிவருது — இவர் – அவரைப் பற்றியும் — அவர் – இவரைப் பற்றியும் கூறி இவர்களின் வண்டவாள உண்மைகளை மக்களுக்கு தெரிவிப்பது — இவர்களைப் பற்றி நன்கு அறிய உதவி புரிகிறது என்பது தான் நிதர்சனம் … இதற்கு யார் ” மணி ” கட்டியிருந்தாலும் — அவர்களுக்கு நன்றி … ! இவர்கள் பேய்களா … இல்லை — அதைவிட … ?

 3. palani சொல்கிறார்:

  sabas!!!!!!! sariyan potti!!!

 4. நெல்லைத்தமிழன் சொல்கிறார்:

  காமை சார்… இந்தக் கூத்தாடிச் சண்டைக்கு நடுவில் கருணாநிதி திமுகாவில் தன் நிலையை consolidate பண்ண முயற்சிப்பதைக் கவனித்தீர்களா? ஸ்டாலின் முன்னேறிச் செல்ல (his conduct) முயற்சிக்கிறார். கருணாநிதி தன் பழையகால பழிவாங்கும், எந்த நல்ல முயற்சிக்கும் கட்டை போடும், எதிலும் மலிவான சுயநல அரசியல் பண்ணும் போக்கையும் தொடர்கிறார். திமுக எம்எல்ஏ கூட்டத்தைக் கூட்டுகிறார். அன்பழகன் மூலமாக சில மாவட்டச் செயலாளர்களையும் பிரமுகர்களையும் கட்டம் கட்டுகிறார். ஸ்டாலின் பிக்சர்லயே இல்லை. கருணாநிதியின் சொந்த கேள்வி பதில்கள் very negative while Stalin tries to maintain better image. ஏதோ திமுகவில் நடக்கிறது. அல்லது both are playing good bad police drama, though I doubt. கருணாநிதி தன் நிலையை consolidate செய்ய எண்ணுவதாகத்தான் தோன்றுகிறது. இதைக் கவனியுங்கள்.

  • R.Gopalakrishnan சொல்கிறார்:

   Yes. I also agree Mr.Nellai Thamizhan’s view. But it is too late. .

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நெல்லைத்தமிழன்,

   இரண்டு விஷயங்கள் தெரிகின்றன –

   1) கலைஞர் தன் முக்கியத்துவம் குறைந்துகொண்டே
   வருவதைக் கண்டு துடிக்கிறார். அதை தக்கவைத்துக்
   கொள்ள எதையும் செய்யத் துணிகிறார்….
   எதிர்காலத்தில் – இன்னும் மோசமான செயல்களுக்கும்
   அவர் துணியக்கூடும். அவை ஸ்டாலினுக்கு எதிராகவே
   கூட அமையக்கூடும்…

   2) இதுவரை கலைஞர் செய்தவை (மாவட்ட நிர்வாகிகள்
   நீக்கம் உட்பட ) ஸ்டாலினுக்கு சௌகரியமாகவே
   இருப்பதால், ஸ்டாலின் வாய் திறவாமல் இருக்கிறார்.
   ஆனால் -தந்தையின் செயல்களால் அவருக்கு பாதிப்பு
   ஏற்படும்போது என்ன நடக்கும் ….?

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 5. gopalasamy சொல்கிறார்:

  Here after both “leaders” will not talk about any issues. There is a possibility of compromise.
  Karuna could not digest the defeat of DMK. HE could not get the opposition leader post also. He spits venom. But he will not talk about SRM. Because he is afraid of Pachamuthu.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப கோபாலசாமி,

   என்னவோ தெரியவில்லை.
   தமிழக அரசியல்வாதிகள் யாருமே ( வைகோ ,திருமா,
   விஜய்காந்த், சீமான், கம்யூனிஸ்ட் தலைவர்கள்….)
   வேந்தருக்கு எதிராக பேசாவிரதத்தில் இருக்கிறார்கள்…

   அந்த அளவிற்கு வேந்தரின் influence ?? …!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 6. CHANDRAA சொல்கிறார்:

  JI Yesterday pmk had replied to vendar through moorthy ex central minister
  There is another KALVITHANTHAI melmaruvathur adigalar who however
  maintains a low profile
  Klaignar is a shrewd politician may not like to jump into
  this pmk?vendar politics
  Rather he might like to create another issue to snub
  Stalin

 7. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  pucca thieves

 8. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  பாரிவேந்தர் பேசுவதைப் படிக்கும்போது எனக்கு ஒன்று தோன்றியது. இந்த மாதிரிப் பேச திராவிடக் கட்சிகள், குறிப்பாக கருணானிதியே காரணம். அவர்தான், ஒருவர் தனக்கு எதிரியாகும்போதோ அல்லது தன்னைப் பற்றிக் குறை சொல்லும்போதோ, மிகவும் தரம் தாழ்ந்து விமரிசனம் செய்வார். ராஜாஜி கொட்டும் மழையில், மதுவிலக்கை நீக்க வேண்டாம் என்று சொல்ல வந்ததை, அவரது சொந்த லாபத்திற்காக (யாருக்கோ வேலை கேட்டு, என்று படித்த ஞாபகம்) என் வீட்டுக் கதவைத் தட்டினார் என்று சொன்னார். இதைப் போன்றே, காமராஜ் போன்றவர்களை மட்டுமல்ல, சமீபத்தில் கலாமையும் (கலாம் என்றாலே கலகம்) எள்ளி நகையாடினார். தேவை என்றால், மதச் சார்பு, தேவை யில்லை என்றால் கூடா நட்பு.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.