திரு.திருமா – திமுக எங்களை சேர்த்திருந்தால் 200 சீட் பெற்றிருக்கும்…..!!!

thiruma

இன்று வெளிவந்துள்ள ஜூ.வி. இதழில் திரு.திருமாவளவன்
அவர்களின் புதிய பேட்டி ஒன்று வெளிவந்துள்ளது.

அதிலிருந்து இடுகைக்கு தொடர்புடைய
சில பகுதிகள் (மட்டும்) கீழே –

——————————————–

1) இது எங்களுக்கு பெரும் அதிர்ச்சி தான். வாக்குகளை
அதிமுகவும், திமுகவும் விலைகொடுத்து வாங்கி விட்டன.
எங்கள் அணிக்கு எதிரான ஆதாரமில்லாத மிகவும் அபத்தமான
அவதூறுகளை பரப்பினார்கள். போலியான கவர்ச்சியான
வாக்குறுதிகளை கொடுத்தார்கள். இந்த மூன்று ஆயுதங்களையும்,
கொண்டு வென்றனர். “கொள்கை” என்ற ஒற்றை ஆயுதத்தோடு
நாங்கள் களம் இறங்கினோம். எனவே எங்களுக்கு பின்னடைவு
ஏற்பட்டு விட்டது.

2) விஜய்காந்த் எங்கள் அணியில் சேர்ந்த பிறகு எங்களின்
6 கட்சி கூட்டணியை அதிமுகவின் பிடீம் பினாமி அணி
என்றார்கள். அதிமுக எதிர்ப்பு வாக்குகளை எங்கள் அணி
சிதறடித்துவிடும் என்று அஞ்சியதால் திமுக இப்படி
அவதூறு பரப்பியது…

3) கூட்டணி ஆட்சிக்கு திமுக உடன்பட்டு இருந்தால்
விஜய்காந்த் எங்கள் பக்கம் வந்திருக்கவே மாட்டார். திமுகவும்
ஆட்சியைப் பிடித்திருக்கும். கூட்டணி ஆட்சி என்ற கருத்தை
நாங்கள் முன்வைத்ததால் தான் ஓரங்கட்டப்பட்டோம்.
எங்களை இணைத்திருந்தால் 200 தொகுதிகளில் திமுக
ஜெயித்திருக்கும். குறைந்த தொகுதிகளை ஒதுக்கு நிறைய
பயனைப் பெற்றிருக்கும்.

ஆனால், ஏனோ எங்களை அணியில் சேர்த்துக் கொள்ளவில்லை.
தொடர்ந்து வைத்திருக்க அவர்களுக்கு விருப்பமும் இல்லை.
இரண்டு கட்சிகளுக்கும் (திமுக, அதிமுக), தேர்தல் அனுபவமும்,
பணபலமும் இருந்தது. ஆனாலும் திமுக தோற்றிருக்கிறது.

இதுபற்றி திமுக சிந்திக்க, மீளாய்வு செய்து கொள்வதற்கான
வாய்ப்பை இந்த தேர்தல் உருவாக்கி இருக்கிறது. குறிப்பாக,
கூட்டணி ஆட்சி என்ற கருத்தை ஏற்கப்போகிறதா… இல்லையா
என்பதை தீர்மானிக்க வேண்டிய தருணம் இது.

இந்த தேர்தலில் எங்களை மக்கள் புறக்கணித்து விட்டார்கள்
என்று சொல்ல முடியாது. எங்களின் மாற்று அரசியல் மகத்தானது.
எங்களது பயணம் தொய்வின்றி தொடரும்.

—————————————–

திருமா அவர்களின் சுயபரிசோதனைக்கு சில கேள்விகள் –

———-
வாக்குகளை அதிமுகவும், திமுகவும் விலைகொடுத்து
வாங்கி விட்டன.
எங்கள் அணிக்கு எதிரான ஆதாரமில்லாத மிகவும்
அபத்தமான அவதூறுகளை பரப்பினார்கள்.
போலியான கவர்ச்சியான
வாக்குறுதிகளை கொடுத்தார்கள்.
————

முதல் குற்றச்சாட்டு உண்மை என்றே வைத்துக்கொள்வோம்.
அதை இரண்டு கட்சிகளும் செய்திருக்கின்றன.

2-வது குற்றச்சாட்டு -திமுகவுக்கு மட்டுமே பொருந்தும்.
அதிமுக இந்த அணியைப்பற்றி எதுவுமே பேசவில்லை.

3-வது குற்றச்சாட்டு “போலியான கவர்ச்சியான
வாக்குறுதிகளை கொடுத்தார்கள்” –
இதை திருமா சொல்வது பொருத்தமா…?

திரு.விஜய்காந்த் கொடுத்த வாக்குறுதிகள் –
திருமதி பிரேமலதா ஊர் ஊராகச் சென்று
பரப்புரையாக்கிய அந்த வாக்குறுதிகள் –
“கனவிலாவது ” நிறைவேற்றக்கூடியவையா…?

அந்த போலியான, கவர்ச்சியான, பைத்தியக்காரத்தனமான
வாக்குறுதிகளை திருமா கூட்டணி மக்களிடம் எடுத்துச்சென்று
ஏமாற்றவில்லையா…?

அடுத்து –
“கூட்டணி ஆட்சிக்கு திமுக உடன்பட்டு இருந்தால்
திமுக ஆட்சியைப் பிடித்திருக்கும். கூட்டணி ஆட்சி என்ற
கருத்தை நாங்கள் முன்வைத்ததால் தான் ஓரங்கட்டப்பட்டோம்.
எங்களை இணைத்திருந்தால் 200 தொகுதிகளில் திமுக
ஜெயித்திருக்கும். குறைந்த தொகுதிகளை ஒதுக்கி நிறைய
பயனைப் பெற்றிருக்கும்.”

ஆக, நீங்கள் – ” திமுக- அதிமுக இரண்டு கட்சிகளுமாக
சேர்ந்து 50 வருடங்களாக ஆண்டு தமிழ்நாட்டை
குட்டிச்சுவராக்கி விட்டன.
மது வந்ததற்கு இரண்டு கட்சிகளும் காரணம்.
லஞ்ச ஊழலில் இரண்டு
கட்சிகளும் ஒன்றை ஒன்று மிஞ்சின ”
என்றெல்லாம் சொல்லி தேர்தலில் பிரச்சாரம் செய்து
வந்த குற்றச்சாட்டு –
திமுக, கூட்டணியில் உங்களை சேர்த்துக் கொண்டிருந்தால்
மாயமாகி இருக்கும்.

திமுக உத்தம தோழனாகி, அதிமுக மட்டுமே
ஊழல் கட்சியாகி இருக்கும் – அப்படித்தானே…?

ஊழல் கட்சியுடன் கூட்டு சேர்வது பற்றி உங்களுக்கு
கவலை இல்லை. ஆட்சியில் பங்கு -அது மட்டுமே
உங்கள் குறிக்கோள் – என்று நீங்களே இங்கு ஒப்புதல்
வாக்குமூலம் கொடுக்கிறாப்போல இல்லை…?

——————–

சரி, கடைசியாக –

” இதுபற்றி திமுக சிந்திக்க, மீளாய்வு செய்து கொள்வதற்கான
வாய்ப்பை இந்த தேர்தல் உருவாக்கி இருக்கிறது. குறிப்பாக,
கூட்டணி ஆட்சி என்ற கருத்தை ஏற்கப்போகிறதா… இல்லையா
என்பதை தீர்மானிக்க வேண்டிய தருணம் இது. ”

————

– மீளாய்வு அல்லது மறுபரிசோதனை செய்து கொள்வதற்கான
வாய்ப்பு – திமுகவுக்கு மட்டும் வந்திருப்பதாக நினைக்கிறீர்களா
இல்லை உங்களுக்குமா….?

– கூட்டணி ஆட்சி இல்லை என்கிற கொள்கையை
திமுக தொடர்ந்தால் –

நீங்கள் தொடர்ந்து உங்கள் “கூட்டணி ஆட்சி” என்கிற
கொள்கையை வலியுறுத்தி, உறுதியாக இருப்பீர்களா அல்லது
பஞ்சாயத்து தேர்தல் அல்லது பாராளுமன்ற தேர்தல்
வரும்போது –

கூட்டணி ஆட்சி என்கிற அடிப்படை
தத்துவத்தை விட்டு விட்டு –

தேர்தலில் போது, திமுக உங்கள் மீது அதிமுகவின் பினாமி
என்று அவதூறு பரப்பியதையும் மறந்து விட்டு,

– யதார்த்தத்தை யோசிப்போம்…
எவ்வளவு சீட்டு கொடுப்பீர்கள்..?
என்று மீண்டும் ஆரம்பத்திலிருந்தே
பேரத்தை துவக்குவீர்களா …?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to திரு.திருமா – திமுக எங்களை சேர்த்திருந்தால் 200 சீட் பெற்றிருக்கும்…..!!!

 1. gopalasamy சொல்கிறார்:

  Right from beginning Thiruma was an insider. There is reason to believe that he wanted to bring the entire alliance partners to DMK. But Stalin’s stance made it difficult. Even though DMK accused them as “B” team Thiruma never vehemently opposed it. When VAIKO was accused of 1500 crores bribe also, Thiruma never angrily reacted. I never saw Thiruma speaking about DMK’s corruption specifically. He wanted to ensure always his return path to DMK should be smooth.It will not be so easy for him.

 2. CHANDRAA சொல்கிறார்:

  JI thirumas entry in dmk is an uphill task
  Stalin has an aversion to dalit leaders
  Stalin firmly believes that other caste voters would desert dmk if
  thirumas party is given more recognition
  All know that p t leader krishnasamy faulted stalin many a time
  in election talks
  Already there is a loud talk in dmks circles
  that dmk lost in this election because of many seats
  that were offered to dmks friendly parties
  So thiruma has to sail his boat >>>>>> LONELY

 3. raj சொல்கிறார்:

  அருமையா சொன்னீங்க , வெட்கம் கேட்ட அரசியல் வாதிகள்

 4. நெல்லைத்தமிழன் சொல்கிறார்:

  பெரும்பாலும் சாதீய எண்ணம் தமிழக வாக்காளர்கள் மனதில் இருக்கிறது. பார்ப்பனீய எதிர்ப்பு என்பதில் ஆரம்பித்த திராவிட அரசியல் சாதீய நெருப்பை அணையாமல் பார்த்துக்கொண்டுள்ளது. சாதி என்பதை சமூகம் என்று சொல்வதால் சாதீய எண்ணம் இல்லை என்று பெரும்பான்மை எண்ணுகிறது.

  இதைப் புரிந்துகொண்டதனால்தான் திருமா கழட்டிவிடப்பட்டார். அளவுக்கு அதிகமாக திமுகவுக்கு ஜால்ரா தட்டினார். கழட்டிவிடப்பட்டதும் ஆட்சியில் பங்கு என்று ஆரம்பித்தார் திருமா. விஜயகாந்த் வி.சியுடன் கூட்டுச்சேராமல் இருந்திருந்தால் இன்னும் 3-5 சதவிகிதமாவது தேதிமுக பெற்றிருக்கும். அப்போது பாமக 1-2 சதவிகிதம் குறைந்து வாங்கியிருக்கும். விஜயகாந்த் இதை நிச்சயமாக உணர்ந்திருப்பார்.

  மற்றபடி தேர்தலுக்குப்பின், சதவிகித்த்தைக் கூட்டிச் சொல்வதில் ஒரு அர்த்தமும் இல்லை. கூட்டணி நடந்திருந்தால் விளைவும் எப்படியும் இருந்திருக்கும்.

  தனிப்பட்ட முறையில் திருமா நன்றாகவும் பல சமயங்களில் டீசன்டாகவும் பேசுவார். பாமக போலவே இவருடையது சாதீய வாக்குகள். அதனால் இருவரும் அவர்கள் baseஉதவ தவிர வேறு எங்கும் தனித்து நிற்க, ஜெயிக்க இயலாது.

  இன்னொன்று… நிறையபேர் அதிமுக திமுக ஊழல் கட்சிகள், வாக்காளர்களுக்கு காசு கொடுத்தனர் என்று சொல்கின்றனர். அரசு அனுமதித்த அளவுக்குள் எந்தக்கட்சி செலவைப் பார்த்துக்கொண்டது? பாமக எத்தனை ஆடம்பரக்கூட்டங்கள், தேதிமுக எத்தனை செலவழித்தது? பாமக எத்தனை விளம்பரங்கள் வெளியிட்டது? தேர்தலே ஒரு திருவிழாவாகிவிட்ட இந்தக்காலங்களில் எந்த அரசியல் கட்சியும் (பெரும்பாலும் கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தவிர) ஊழலையோ, வாக்காளர்களுக்கு காசு கொடுக்கிறார்கள் என்றோ சொல்ல எந்த யோக்கியதையும் கிடையாது.

 5. gopalasamy சொல்கிறார்:

  Thiruma has two options..
  1. If he wants to get power, he has to join his party with DMK. (He is always pro DMK; hence no question of ADMK.)
  2. If he wants DMK to be back in power, without contesting elections, he can support DMK. He need not wait at the doorsteps of DMK. Because it appearsStalin is not interested with Thiruma.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.