பாய்ந்த எலியும், பதுங்கிய புலியும் – Dr. பச்சமுத்து V/s Dr. ராம்தாஸ் ….!!!

.

.

offensive – defensive நிலைகள் பற்றி விளையாட்டுப்
பிரியர்கள் நன்கு அறிவார்கள்.

திரு. ராமதாஸ் அவர்கள் முதல் அடியை கொடுக்க,
திரு. பச்சமுத்து அவர்கள் பதிலடியைக் கொடுத்தார்….ஆனால்,
அந்த பதிலடியே offensive-ஆகப் போய் விட்டதால்
பதிலுக்கு பாயவேண்டிய திரு.ராம்தாஸ் அவர்கள், தான்
பதுங்கிக்கொண்டு, திரு.ஏ.கே.மூர்த்தியை விட்டு பதில்
கொடுத்திருக்கிறார்….!!!

இப்போதைக்கு சிக்கலில் சிக்கி இருப்பது பாரி மன்னர் தான்
என்கிறபோது, திருவாளர் ராம்தாஸ் பதுங்க வேண்டிய
அவசியம் என்ன …? நேரடியாக பிரச்சினையை எதிர்கொள்ளாமல்
பிறரை விட்டு பதில் சொல்ல வேண்டியதன் அவசியம்,
காரணம் என்ன…?

W E A K N E S S …..???

பாரி மன்னர் எத்தகைய பிரச்சினையில் சிக்கி இருக்கிறார்
என்பது இப்போது current problem என்பதால் கிட்டத்தட்ட
எல்லாருமே ஓரளவு உணர்ந்திருக்கிறார்கள்.
சிறிது கால தாமதம் ஆனாலும் கூட, இது சம்பந்தப்பட்ட
அனைத்து விவகாரங்களும் வெளியே வருவதும்.
தொடர் விசாரணைகளும், வழக்குகளும் – தவிர்க்க
முடியாத விஷயம்.

———————————

ஆனால், பாரிமன்னர் –
திரு.ராம்தாஸ் அவர்களை குறிவைத்து தாக்கியது –

நீண்ட காலங்கள் கடந்து விட்டன என்பதால்
பலரும் மறந்து விட்ட விஷயங்கள்….!

பலர் அறியாத விஷயங்கள்,
பலர் கேள்விப்படாத விஷயங்கள்,

சரி – அதையெல்லாம் நாம் சிரமப்பட்டு தோண்டுவானேன்….?
பாரிமன்னர் பதில் அளிக்கும்போது பார்த்துக் கொள்வார்…!

——————————————-

இப்போது திரு.ராம்தாஸ் – திரு.ஏ.கே.மூர்த்தி அவர்கள்
மூலமாக எழுப்பி இருக்கும் சில முக்கிய விஷயங்கள் ….

( இது அத்தனையும் அவர்கள் சொல்லியதாக்கும்
என்பதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்… …)

1) வெயில் குறையும் நேரத்தில் நடந்து செல்பவர்களின்
நிழல், அவர்களின் உண்மையான உயரத்தைவிட அதிகமாக இருக்கும்.

அதேபோல், வெயில் நேரத்தில்
தனது நிழலைப் பார்த்துவிட்டு தாம் ஏதோ வளர்ந்துவிட்டதாக
நினைத்துக் கொண்டு அவரை ராமதாஸ் எதிர்ப்பதாக
பச்சமுத்து உளறியிருக்கிறார்.

2) பச்சமுத்துவிடம் சட்டவிரோதமாக சேர்த்த பணத்தைத் தவிர
வேறு எந்த தகுதியும் கிடையாது…..

3) அவரது நிலை – மனநிலை பிறழ்வுக்கு முந்தைய நிலை…
(அதாவது பைத்தியம் பிடிப்பதற்கு சற்று முந்தைய நிலை….!!!)

4) தம் மீதான குற்றச்சாற்றுகளுக்கு பதில் சொல்வதை
விட்டு விட்டு வன்னிய சமுதாயத்தையும், பார்க்கவகுல
சமுதாயத்தையும் வம்புக்கு இழுத்திருக்கிறார். ராமதாஸ் எழுப்பியது

வன்னியர் பிரச்சினையும் அல்ல…
பார்க்கவகுல சமுதாயத்தினர் பிரச்சினையும் அல்ல.
மோசடி மன்னர்களை நம்பி மருத்துவப்படிப்புக்கு பணம்
கொடுத்து ஏமாந்த மாணவர்களின் பிரச்சினை.
மருத்துவப் படிப்புக்கு பணத்தை வாங்கி மோசடி செய்தது
குறித்து பச்சமுத்து விளக்கமளிக்க வேண்டும் என்று
கேட்பதால் எவரும் பொங்கி எழுந்துவிட மாட்டார்கள்

5) பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்
என்பதாலேயே பச்சமுத்து போன்றவர்களின் மோசடிக்கு
துணை நிற்பது சமூக நீதியல்ல. இத்தகைய மோசடிகளை
எதிர்ப்பது தான் சமூக நீதி.

6) வன்னியர் கல்வி அறக்கட்டளை என்பது உலகம் முழுவதும் உள்ள வன்னியர்களுக்கு சொந்தமானது.

7) மது போதையில் தள்ளாடும் ஒருவன் –
தனது தாயையும், மனைவியையும் பார்த்து எப்படி
அவதூறாக வசைபாடுவானோ, அதேபோல் மதிப்பிற்குரிய
பச்சமுத்து என்கிற பாரிவேந்தரும் ராமதாஸ் குறித்தும்,
மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் குறித்தும்
உண்மை கலப்படமற்ற புகார்களைக் கூறி தன்னை தரம் தாழ்த்திக்
கொண்டிருக்கிறார்.

( நல்ல வேளை – குடிகாரர் – உளருகிறார் என்பது போன்ற
தரம் தாழ்ந்த வார்த்தைகளை இங்கு பயன்படுத்தவில்லை
என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்….!! )

8) ராமதாஸ் மீதும், அன்புமணி ராமதாஸ் மீதும் கூறிய
அவதூறு புகார்களுக்காக பச்சமுத்து மீது பா.ம.க. தொண்டர்கள்
அவதூறு வழக்குகளை தொடுப்பர் …..
( மான, நஷ்ட, அவதூறு வழக்குகள் என்றால்
சம்பந்தப்பட்டவர் தானே தொடர வெண்டும்…? )

9) பச்சமுத்துவின் வாதப்படியே வைத்துக் கொண்டாலும்
அவர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளித்தாக வேண்டும்.

1. எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் மற்றும் எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாகக் கூறி பணம் வாங்கி மதன் ஏமாற்றி விட்டார் என்றால் அவ்வாறு செய்வதற்காக அனுமதியை அவருக்கு தந்தது யார்? அதை பச்சமுத்து ஏன் தடுக்கவில்லை.

2. மருத்துவப்படிப்புக்கு மதன் பணம் வசூலித்து ஏமாற்றியது உண்மை எனும் போது எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம்
மற்றும் திருச்சியில் உள்ள எஸ்.ஆர்.எம் சென்னை மருத்துவக்
கல்லூரியில் மருத்துவப் படிப்பு இடங்கள் விலைக்கு
விற்கப்பட்டன என்பது தானே உண்மை.
அது சட்டவிரோதம் தானே. பச்சமுத்து படிப்படியாக பணக்காரர் ஆனது இப்படித் தானோ?

3. எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்திலுள்ள மருத்துவப் படிப்பு இடங்கள் 8 ஆண்டுகளாக தம்மால் தான் நிரப்பப்பட்டதாக மதன் கடிதத்தில் கூறியிருப்பது உண்மையா… இல்லையா?

4. மதனுக்கும், எஸ்.ஆர்.எம். குழுமத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பச்சமுத்து கூறியுள்ளார். அப்படியானால்
எஸ்.ஆர்.எம் குழுமத்தின் பணம் ரூ.200 கோடியை மதன்
மோசடி செய்து விட்டதாக வளசரவாக்கம் காவல்நிலையத்தில்
புகார் செய்யப்பட்டிருப்பது ஏன்? எஸ்.ஆர்.எம். குழுமத்துக்கு அந்த ரூ.200 கோடி பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து மக்களுக்கு
விளக்கமளிக்க முடியுமா?

5. மதனுடன் தொடர்பு இல்லை என்றால், அவரால் ஏற்பாடு
செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்பட மற்றும்
அரசியல் நிகழ்ச்சிகளில் மதனுடன் ஒன்றாக பச்சமுத்து கலந்து
கொண்டது ஏன்?

6. எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்புக்கு
அனைத்து மாணவர்களும் தகுதி மற்றும் திறமை அடிப்படையில் மட்டும் தான் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களா?
ஒருவரிடமும் நன்கொடை வாங்காமல், அரசு நிர்ணயித்த
கட்டணத்தை மட்டுமே வாங்கி மாணவர்களை சேர்ப்பதாக
பச்சமுத்துவால் கூற முடியுமா?

7. எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் 2005 ஆம் ஆண்டு
முதல் எந்த அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கான மாணவர்
சேர்க்கை நடைபெற்றது. இதற்காக நடத்தப்பட்ட நுழைவுத்
தேர்வுகளின் விடைத்தாட்கள், சேர்க்கப்பட்ட மாணவர்கள்
12 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் உள்ளிட்டவற்றை வெளியிட பச்சமுத்து தயாரா?

8. 250 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும்
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக காட்டாங்கொளத்தூர் வளாகம் ஏரிகளையும், புறம்போக்கு நிலங்களையும் வளைத்து பட்டா வாங்கி கட்டப்பட்டது தானே? அதுகுறித்த விவரங்களை பொதுமக்களுக்கு வெளியிட்டு,
விசாரணைக்கு உட்படுத்திக் கொள்ளத் தயாரா?

9. தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஏரியை ஆக்கிரமித்து
எஸ்.ஆர்.எம். குழுமம் படகு சவாரி நடத்தி வருகிறது.
அரசு சொத்தான ஏரியை ஆக்கிரமித்தது குற்றமில்லையா?

10) இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரித்தால் தான்
முழு உண்மையும் வெளிவரும் என்பதால் சி.பி.ஐ.
விசாரணைக்கு மத்திய, மாநில அரசுகள்
ஆணையிட வேண்டும். இப்பிரச்சினையில்
பச்சமுத்து உள்ளிட்ட குற்றவாளிகள்
தண்டிக்கப்படும் வரை ராமதாஸ் தலைமையிலான
பாட்டாளி மக்கள் கட்சி ஓயாது.

————————————————

திரு.ராம்தாஸ் அவர்கள் இப்படி ஒரு பதிலை மூன்றாம்
நபரின் மூலம் கொடுப்பதை விட –
திரு.பச்சமுத்து அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு
நேரிடையாக பதில் விளக்கங்களை கொடுத்து விட்டு-

பிறகு தன் சார்பிலான வினாக்களை தானே எழுப்பி இருந்தால் –
அவரது நிலையில் நம்பிக்கை பிறந்திருக்கலாம்….

(திரு.பச்சமுத்து அவர்கள் என்ன கேள்விகளை எழுப்பினார்
என்கிற விவரங்கள் இதற்கு முந்தைய இடுகையில் உள்ளன…. )

—————————————–

பின் குறிப்பு –

1) இன்னும் வெளிவரவேண்டிய விஷயங்கள்
நிறைய இருந்தாலும்,
இந்த விவாதங்கள் தொடர்ந்தால்,
இரு தரப்பினருக்கும் பிரச்சினை என்பதால் –
(இருதரப்பினரின்) பொது நலன் கருதி –
இதற்கு உடனடி ரீ-ஆக்ஷன் எதுவும்
இல்லாமல் போகலாம்….
எனவே இனி இரண்டு தரப்பினருமே
அடக்கி வாசிப்பார்கள் என்று நம்பலாம்….!!!

2) ஒரு விஷயம் கவனித்தீர்களா ….?
கள்ளக்காதலருடன் சேர்ந்து கொண்டு, மனைவி
புருஷனை கொலை செய்த விஷயங்களுக்கெல்லாம்
கூட – தமிழக அரசை குறைகூறி அறிக்கை விடும்
கலைஞர் –

இந்த விஷயம் பற்றி,
இது வரை வாயை திறக்கவே இல்லை….!!!

ஏனென்று யூகிக்க முடிகிறதா…???

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to பாய்ந்த எலியும், பதுங்கிய புலியும் – Dr. பச்சமுத்து V/s Dr. ராம்தாஸ் ….!!!

 1. Jagannathan.M. சொல்கிறார்:

  பயம்.
  எத்தனை முறை கலைஞ்சருக்கும் பணம் கொடுத்திருக்கிறார் வேண்தர்.
  பெரிய மருத்துவரை திட்டியது போலவே கலைஞ்சரையும் திட்டினால் ?
  அதான் பயம். அதனால் தான் கலைஞ்சர் வாயே திறக்கவில்லை.

 2. CHANDRAA சொல்கிறார்:

  JI i can only say
  that these so called big people are
  washing dirty linen
  in dirty water

 3. Tamilian சொல்கிறார்:

  They have lot of dirt to wash and in their anger , they wash it in public.

 4. selvarajan சொல்கிறார்:

  // ஏனென்று யூகிக்க முடிகிறதா…??? // என்கிற கேள்வி — கலைஞர் அவர்களை ஒரு இக்கட்டான நிலைமைக்கு தள்ளிவிடும் என்பது தானே நிஜம் — இவர் ஏதாவது இது பற்றி அறிக்கை விட்டு — ” பேய்கள் ” இரண்டும் இவர் பக்கம் திரும்பி தாக்கினால் — இவரது … கதி … என்னவாகும் என்று தெரிந்து தான் வாய்மூடி இருக்கிறாரோ … ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.