“ஆலடி அருணா” , கையில் சவுக்கோடு – கலைஞர் வீட்டுக்கு வந்து கொண்டிருக்கிறார் …?

????????????????????????????????????

இன்று காலை, மறைந்த ஆலடி அருணா வீட்டில் நிகழ்ந்த
திருமண விழாவில் கலைஞர் கருணாநிதி பேசும்போது –

ஆலடி அருணா மட்டும் இன்று இருந்திருந்தால் –
சம்ஸ்கிருதத்துக்கு இடம் கொடுப்பவர்களை ஓட ஓட விரட்ட,
கையில் சவுக்கை எடுத்துக் கொண்டு வந்திருப்பார்…

-என்று பேசி இருக்கிறார்.

அவரது பேச்சிலிருந்து – கருத்துச் சிதறல்களிலிருந்து –
சிறு பகுதி கீழே …..

——————–

வட மொழி சமஸ்கிருதத்தை எதிர்த்து
ஒரு கிளர்ச்சி தமிழ்நாட்டில் உருவாவதற்கு
யாரும் காரணமாகி விடக் கூடாது என்பதை
நான் இந்த நேரத்தில் சொல்ல விரும்புகிறேன்.

தமிழ் மொழிக்கு இருந்த மூவேந்தர் காலந்தொட்டு இருந்து
அதனுடைய மூப்பு, அதனுடைய மொழி ஆதிக்கம்,
அந்த மொழிக்கு இருந்த செல்வாக்கு, அதைக் கையாண்ட
மூவேந்தர்களின் பரம்பரை,

அந்தப் பரம்பரையை எல்லாம் ஒழித்துக் கட்டி விட்டு,
நாங்கள் தமிழுக்கு இடம் தர மாட்டோம், வட மொழிக்குத்
தான் இடம் தருவோம் என்று சொல்வார்களானால்,
கையில் தமிழன் ஒவ்வொருவரும் “சவுக்கை” எடுத்துக்
கொண்டு வடமொழி ஆதிக்கத்தை வேரறுக்கக் கிளம்ப
வேண்டும்.

அதைத் தான் ஆலடி உயிரோடு இருந்திருப்பாரேயானால்,
எனக்கு அதைத் தான் யோசனையாகச் சொல்வார்.
அப்படிப்பட்ட வீரர்,
அப்படிப்பட்ட கொள்கைவாதி,
அப்படிப்பட்ட மொழிப் பற்றாளர்,

———————-

கலைஞரே இப்படிச் சொல்லி விட்ட பிறகு
செய்வது யாரென்று பார்த்துக் கொண்டா இருப்பார்…?

அண்மையில் கீழ்க்கண்ட சம்ஸ்கிருத நிகழ்வை –
வேண்டி, விரும்பி, வரவேற்று –
தன் இல்லத்தில் நிகழ்த்தியவரை
ஆலடி சும்மா விடுவாரா….?

கையில் சவுக்கோடு வர மாட்டார்….?

( ” தூ – மானங்கெட்ட பிழைப்பு….”
என்று ஆலடியின் ஆவி சொல்வது காதில் விழுகிறதா…? )

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to “ஆலடி அருணா” , கையில் சவுக்கோடு – கலைஞர் வீட்டுக்கு வந்து கொண்டிருக்கிறார் …?

 1. B.Venkatasubramanian சொல்கிறார்:

  கே.எம்.,

  கொன்னுட்டீங்க சார்.

 2. Srini சொல்கிறார்:

  for all these, this election has ensured that there is no seat in marina beach.

 3. johan paris சொல்கிறார்:

  என்ன? வேசமிட்டும் தேர்தலில் தோல்வி! நற்தீர்ப்பை வழங்கிய மக்களுக்கு என் நன்றி!

 4. CHANDRAA சொல்கிறார்:

  YES JI the tamil nadu people should once again be congradulated
  for firmly refusing a memorial in the marina beach or in mount road in chennaiT
  thers are atleast four confirmed threats to four tv channels
  before one week of the results of tamil nadu recent election
  yes dmk is dangerous diabolical disgusting
  dejected selfish mean minded treacherous cunning cutthroat POLITICALPARTY

 5. srimalaiyappan சொல்கிறார்:

  கல்வி சார்ந்து மொழி சார்ந்து ஒரு மிக நீண்ட விவாதம் நேற்று ஒரு கூட்டத்தில் நடந்தது … பதிவு அருமை http://ethilumpudhumai.blogspot.in

 6. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  ஒரு மனிதன், வெளி உலகத்திற்காக நடிப்பதே தன் வாழ்க்கை என்று வாழ முடியுமா? வயது முதிர்ந்த காலத்திலும் அதற்கேற்ற பக்குவம் வராமல், கெட்டவனாகவே இருக்க முடியுமா? அடுத்தவரை வளர விடாமல், தான், எப்போதும் தான், அதுக்கு வழியில்லைனா என் பிள்ளைகள், அதுக்கும் வழியில்லைனா என் குடும்பம், அதுக்கும் வழியில்லைனா, எனக்குக் கப்பம் கட்டுபவர்கள், அப்புறம் அந்த அந்தப் பகுதி குறு’நில மன்னர்கள், அதற்குப் பின்புதான், கொள்கை அது இது என்று பேசுபவர்கள் என்று முன்னுரிமை கொடுத்து வாழ்க்கை முழுவதும் இருக்க முடியுமா? சொந்த நலன், அதற்கு அப்புறம் கட்சி, அதற்கு அப்புறம் தன் எதிர்காலத்துக்கு எது நல்லது, அதற்கு அப்புறம்தான் தான் கடை பிடிப்பதாகச் சொல்லிக்கொள்ளும் கொள்கைகள் என்று ஒருவர் வாழ முடியுமா? வாயைத் திறந்தால் கொஞ்சம்கூட லாஜிக் இல்லாமல், கேட்பவர்கள் எல்லோரும் மதியீனர்கள் என்று நினைத்து பொய் பேச முடியுமா? (தயானிதிக்கு ஹிந்தி தெரியும் அதனால் காபினட் மந்திரி பதவிக்குப் பரிந்துரை செய்தேன். ஒரு மொழியும் தெரியாத அழகிரிக்கு ஏன் பதவி கொடுத்தீர்கள்? அவர் தமிழகத்தில் இருந்தால் எனக்குத் தொல்லை தருவார் என்று நினைத்து டெல்லிக்கு பேக் செய்தேன்). இத்தனை அனுபவம் மிக்கவர் சிறுமதியாளராக நடந்துகொள்ள முடியுமா? முடியும் என்பதற்கு ஒரு வாழும் உதாரணம் கருணானிதி.

  தமிழ் மொழியைப் பேசும் இவர் மீது வரும் ஆத்திர வார்த்தைகளை மனது அடக்கு அடக்கு என்’கிறது. இவர் எந்தக் கொள்கையை ஒழுங்காகக் கடைபிடித்திருக்கிறார்? பதவிக்காக இவரைச் சுற்றுபவர்கள் யார், இவரது கொள்கைகள் என்று வெளியில் பீத்திக்கொள்வதை மதித்திருக்கிறார்கள்? தொலைக்காட்சி பேராகட்டும், சினிமா கம்பெனி பேராகட்டும், அவர்களது பேராகட்டும்… எதுவாவது தமிழில் இருக்கிறதா? அவர்கள் தொலைக்காட்சியிலாவது அவர்கள் நம்பும் கொள்கையை அடியொற்றி இருக்கிறதா? அவர்கள் நிகழ்ச்சிகளாவது அல்லது அந்த நிகழ்ச்சியை நடத்துபவர்களாவது தமிழில் பேசுகிறார்களா? (ராமதாஸ், அவரது contributionஆக, இந்தத் தமிழகத்தில், almost முழுக்க முழுக்க தமிழ் நிகழ்ச்சிகளையும், தமிழில் பேசுவதையும் கொண்டுவந்தார். “பரப்புரை” போன்ற பல வார்த்தைகளை, மக்கள் தொலைக்காட்சி வருவதற்கு முன்பு எந்தத் தொலைக்காட்சியாவது உபயோகித்திருக்கிறதா?) கொள்கையெல்லாம், கொள்ளைக்கு அப்புறம்தான் என்பதே இவரது தாரக மந்திரம்.

  By the by, எளிமை, தமிழ்வழி மரபு என்றெல்லாம் பேசுபவர், சக்கரவர்த்தி இல்லத் திருமணத்துக்குச் சென்றிருக்கிறார் போலிருக்கிறது. ஒரே தங்கம், வைரங்களாக மின்னுகிறது. மின்னத்தானே செய்யும். எளிய, மக்களுக்காக உழைத்தவர்களல்லவா.

 7. selvarajan சொல்கிறார்:

  ஆலடி அருணா மட்டும் சவுக்கோடு வந்தால் போதுமா … தா. கிருஷ்ணன் அவர்களும் சேர்ந்து வந்தால் மேலும் சிறப்பாக இருக்காதா .. ? ஏனென்றால் இருவருமே காலையில் ” நடைப் பயிற்சியின் ” போது கொல்லப் பட்டவர்கள் தானே … ? 1962– மற்றும் 1967 ஆம் ஆண்டுகளில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் கலந்துக் கொண்டு சிறை சென்றவர் ஆலடி அருணா — அந்த நினைப்பில் தலைவர் இவ்வாறு பேசியிருக்கலாம் — ஆனால் ஆலடி அருணாவின் கடைசிக் காலத்தில் மக்களைவைத் தேர்தலில்போட்டியிட வாய்ப்பளிக்காததால் — தலைமையை கடுமையாக விமர்சித்ததால் அவர் தி.மு.க.வை விட்டு நீக்கப்பட்டார் என்பதும் — இதையடுத்து பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் என்பதும் வரலாறு — தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. என்று இரண்டு கட்சியிலும் எம் .பி. மற்றும் அமைச்சர் பதிவிகளில் இருந்தவர் என்பதும் குறிப்பிட தக்கது … நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தலைவர் பல கோணங்களில் தமது அறிக்கைகளை விட்டு — தற்போது சமஸ்கிருத மொழி எதிர்ப்பில் வந்து நிற்கிறார் — ஆனால் சமஸ்கிருத மந்திரங்களை காதுகுளிர — கண் மூடி ரசிப்பதில் கொஞ்சமும் சளைத்தவர் இல்லையல்லவா … ?

 8. today.and.me சொல்கிறார்:

  தேர்தல் வரும்போது மட்டும் இதுக்கு இந்தி வேண்டுமா?
  சென்னை, சௌகார்பேட்டையில் வாக்கு சேகரிப்பதற்காக,
  https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13413620_274900292862974_2981819861020182252_n.jpg?oh=9602f5c89c48af04966cad96be31e969&oe=57C4F5AC

  ( ” தூ – மானங்கெட்ட பிழைப்பு….”
  என்று ஆலடியின் ஆவி சொல்வது காதில் விழுகிறதா…? )

  • நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

   ஆலடி ஆவி என்ன சொல்வது. நீங்கள் கொடுத்துள்ள மாறனின் விளம்பரத்தைப் பார்க்கும் எல்லோரும் கருணானிதியைப் பார்த்துச் சொல்வார்கள்.

 9. R.Gopalakrishnan சொல்கிறார்:

  Yes. Slowly my memory is traversing back to 50+ years. It was 1962 0r 63. I passed my SSLC exam with very good marks and sure of getting a seat in PUC as per my choice of course and
  college. At the same time I also passed a central Govt job in a competitive exam. Out of 27000 people wrote the exam I stood in 4th rank. So my parents advised me to take up the prestigious job. I then attended the interview followed by medical exam. I got through all of them and waiting
  for the appointment order.
  There came the anti Hindi agitation in full swing. One day curfew was ordered. We, 8 or 9 of our friends all wearing canvas shoes and went round the city by foot. One of our friends had a
  defective left leg by birth. We told him not to come with us. But he vehemently came with us.
  We crossed the Rly.gate near MOOR MARKET (it connects to Chintadripet. Now it is permanently
  closed) On one by lane people saw us from their houses in 1st and 2nd floor and shouted
  at us not to go further as police troupe was standing at the corner of the road. We did not listen.
  We were very young. At last the police chased us without any warning. Police were running
  behind us . They were no match to us. Unfortunately the limping boy was caught. He was thrown
  in the jeep. (we saw in one corner of the street hiding) and sent to Central jail.

  In the evening two of us went to his house and informed his mother. In her fit of rage she
  cursed us and threw sand on us and said that we will be buried soon. For more than2weeks
  two of us went to Central jail and gave him fruits, biscuits etc. Then he was released.
  Luckily all of us got decent jobs. To day only self and my friend who visited our other friend
  are alive. I am waiting for a call from the ALMIGHTY.

 10. கக்கு சொல்கிறார்:

  பதிவு செம மாத்து. இருபவர்களை எல்லாம் இன்னமும் கேனைகளாகவே நினைத்துகொண்டு அறிக்கை விடுவதே இவருக்கு வழக்கம். இம்முறை தமிழர்கள் இந்த கூட்டத்திடம் எமாறபோவதில்லை என்பதை காலம் இவருக்கு சொல்லும்.

 11. Tamilian சொல்கிறார்:

  Mu Ka is a frustrated man. He had big dreams of annexing C M ‘s chair but people of T N gave him what he deserved. So, in his frustration he is vigorously issuing statements criticizing centre and state day in and day out. Probably remembering anti Hindi jargon which got them the seat of power, he is attacking centre about Sanskrit language. It is only optional 3rd language along with others. So his statement was not true. He must be exposed for his designs

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.