தேர்தல் போதை தலைக்கேறி உளறிக்கொட்டிய மந்திரிகள் “ப்யூஸ்” கோயல்ஜி, ஜவடேகர்ஜி ஆகியோருக்கு சமர்ப்பணம்….!!!

.

.

கடைசியில் ஒரு மூன்று சதவீத ஓட்டுக்காக என்னவெல்லாம்,
எப்படியெல்லாம் – உளறிக் கொட்டினார்கள் அந்த
மத்திய மந்திரிகள்…! தமிழ்நாட்டின் மின் உற்பத்தியைப்பற்றி…
ஏற்கெனவே அதலபாதாளத்தில் வீழ்ந்து விட்ட தமிழ்நாடு
தங்களுக்கு ஓட்டு போட்டாலொழிய – தங்கள் “உதய்” திட்டத்தில்
சேர்ந்தாலொழிய மீள வழியே கிடையாது என்றெல்லாம் ….!

இப்போது வெளிவந்திருக்கிற,
அதுவும் திருவாளர் “ப்யூஸ்” கோயல் அவர்களின் –
மத்திய எரிசக்தித்துறை அமைச்சகத்திலிருந்து
வெளியாகி இருக்கிற கீழ்க்கண்ட செய்திகளை –

அவர்களின் மண்டைக்கனம்
இனியாவது குறையவேண்டும்
என்கிற நோக்கத்துடன், அவர்களுக்கே
“சமர்ப்பணம்” செய்வோம்.

——————————————–

( http://www.thehindu.com/news/national/tamil-
nadu/tn-bags-national-awards-for-solar-
projects/article8718686.ece? )

Tamil Nadu has won two National Excellence
Awards 2016 for rooftop solar power projects
from the Centre’s New and Renewable Energy
Ministry.

While the Tamil Nadu Energy Development
Agency (TEDA) won the award for rooftop
solar power projects in the General category,
the Tangedco won the award for solar projects
in the DISCOM – Own Installation category,
an official release said.

Tangedco has installed 60 KW on top of its
headquarters in Chennai in 2013 and utilising a
shadow-free area of about 440 sqm.

It generates and injects approximately 1 lakh
units a year into the grid.

The plant, made up of 219 modules with each
containing 72 solar cells, meets partial load
of the building during work days.

Another 20 KW is being added now, says a
Tangedco official.

TEDA has also been given the national award for
promoting rooftop solar energy.

According to sources, the Off-Grid SPV Roof
Top Projects commissioned by TEDA number
around 2.30 lakh and generate 21.465 MW
and there are 2,510 Grid Connected projects
which generate 50.752 MW.

In total, the rooftop solar power projects
generate 72.217 MW at present, sources said.

( இரண்டு நாட்களுக்கு முன்னர்,
இந்த அவார்டுகளை திரு ” ப்யூஸ் ” கோயல், தனது
திருக்கரங்களினாலேயே வழங்கியிருக்கிறார்…. அப்போது
அவர் முகத்தில் என்ன வழிந்தது, எப்படி வழிந்தது என்று
பார்ப்பதற்காக நிறைய தேடியும், அந்த வீடியோ
கிடைக்கவில்லை.. யாருக்காவது கிடைத்தால் அனுப்பவும் –
இங்கேயே அனைவரும் பார்க்க பதிவு செய்து விடலாம்….! )

—————————————————–

தமிழகத்தில் 2016-17-ல் 11,649 மில்லியன் யூனிட்
உபரி மின்சாரம் கையிருப்பில் உள்ளதன் மூலம் .
இந்தியாவிலேயே உபரி மின்சாரம் வைத்திருக்கும்
மாநிலங்களில் முதலிடத்தை பெற்றிருக்கிறது தமிழ் நாடு.

11,333 மில்லியன் யூனிட் உபரி மின்சாரத்துடன்,
மஹாராஷ்டிரா இரண்டாவது இடத்திலும் –

8,853 மில்லியன் யூனிட்டுடன் மத்திய பிரதேசம்
மூன்றாவது இடத்திலும்,

5,777 மில்லியன் யூனிட்டுடன் டெல்லி
நான்காவது இடத்திலும்,

4,380 மில்லியன் யூனிட்டுடன் குஜராத்
ஐந்தாவது இடத்தையும் – பிடித்திருக்கின்றன…..!!!

இந்த விவரங்கள் அனைத்தும் மத்திய மின்சார அதாரிட்டியின்
வருடாந்திர லோடு ஜெனரேஷன் ரிப்போர்ட்டில் ( Load
Generation Report ) தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

power chart

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to தேர்தல் போதை தலைக்கேறி உளறிக்கொட்டிய மந்திரிகள் “ப்யூஸ்” கோயல்ஜி, ஜவடேகர்ஜி ஆகியோருக்கு சமர்ப்பணம்….!!!

 1. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  ஜெ வைச் சந்திக்க முடியவில்லை என்று இரண்டு மத்திய மந்திரிகள் சொல்லியும், அதை மறுக்கும் விதமாக பாஜகவிலிருந்தே, வெங்கையா அவர்களும், நிர்மலா சீதாராமன் அவர்களும் அப்போதே மறுப்பு சொல்லி, ஜெ வை ஆதரிக்கும் விதமாகப் பேசினார்களே.. அப்போதே ஜவ்டேகர் மற்றும் பியூஷ் குற்றச்சாட்டு ப்யூஸ் போகிவிட்டதே..

  இதே பியூஷ்தானே முன்பு தமிழ்னாட்டைப் பாராட்டும்விதமாகச் சொன்னது. தேர்தல் சமயத்தில்தானே பொய் சொல்லி குட்டையைக் குழப்ப முயன்றார். பாஜகவும் இப்படிச் செய்ததை, “அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா” என்று எடுத்துக்கொள்ள இயலவில்லை. காரணமில்லாமல் உளறி ஜெ வைப் பகைத்துக்கொண்டதுதான் (அல்லது எரிச்சல்படுத்தியதுதான்) மிச்சம்.

  அரசியல்வாதிகள் வெட்கத்தை எல்லாம் பார்த்தால் முடியுமா? அவர்கள் தொழிலே பொய்யும், புனைசுருட்டும், பல்லிளிப்பதும்தானே. (உதாரணம்: இரண்டு கட்சிகளிலும் இடம் கிடைக்காமல், ம.ந.கூ தலைவர்கள் (வாசன், வி.காந்த் உள்பட) வீரவசனம் பேசியது, பீட்டர் அல்போன்ஸ், எஸ்.ஆர்.பி குரங்குத் தாவல் தாவியது, பீட்டர் வீராவேசமாக காங்கிரஸையும் திமுகாவையும் எல்லாப் பேட்டிகளிலும் ஒரிஜனல் காங்கிரஸ் காரரைப் போல் தாங்கிப்பிடிப்பது, இவர்கள் இரண்டுபேருக்கும், வெங்கையா/நி.சீ கொடுத்த மூக்கறுப்பு, எப்போதும் பேத்துகின்ற (பேசுகின்ற) கருணானிதி அவர்கள்… இப்படி பெரிய லிஸ்டே உண்டே).

 2. selvarajan சொல்கிறார்:

  // தமிழகம் மின்மிகை மாநிலமா?: ஜெ. அரசு மக்களை முட்டாளாக நினைக்கிறது – ராமதாஸ்
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/power-issue-ramadoss-slams-admk-government-14-255981.html // —– என்று ஒரு அறிக்கை விட்டு அதில்….. // தமிழகத்தில் மின் தட்டுப்பாடே இல்லை என்று கூறி தமிழக மக்களை இதுவரை ஏமாற்றி வந்த தமிழ்நாடு மின்சார வாரியம் இப்போது மத்திய மின்ஆணையத்திடமும் தவறான புள்ளி விவரங்களை அளித்து ஏமாற்றியிருப்பதன் விளைவு தான் தமிழகத்திற்கு கிடைத்துள்ள இந்த போலி கவுரவமாகும்.// என்று கூறியிருப்பதின் உள் நோக்கம் என்ன … ?அந்தளவுக்கு மத்திய மின் ஆணையம் ஒன்றும் அறியாதவர்களா … ? இவர் கூறுவதைப் போல ” மற்ற மாநிலங்களும் ” தவறான புள்ளி விவரங்களை கொடுத்து தான் இரண்டாவது — மூன்றாவது இடங்களை பிடித்து இருக்கிறார்களா … ? ஏன் தவறான விவரங்களை கொடுத்து ” முதலிடத்தை ” பிடிக்காமல் மற்ற மாநிலங்கள் விட்டன — என்பதற்கு ராமதாஸ் விளக்கம் கொடுப்பாரா … ? —– .”மக்களின் ஆதரவு இல்லாமல் எந்தப் போராளியும் வெல்ல முடியாது.” என்றும் — ” எப்போது ஒரு அரசு மக்கள் ஆதரவுடன் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்கிறதோ அதற்கு எதிராக யாரும் போராட முடியாது. காரணம், அது மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.” —– என்று எக்காலத்திற்கும் — எல்லோருக்கும் பொருந்தும் படியாக கூறிய ” திரு .சே குவெரா ” – வுக்கு இன்று 88வது பிறந்த நாள் …!!!

  • B.Venkatasubramanian சொல்கிறார்:

   234-ல் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத
   டாக்டர் ராமதாஸ் வாயைத்திறக்கவே
   தகுதி இல்லாதவர். மக்கள் தங்களை ஒதுக்கி விட்டார்கள்
   என்பது பட்டவர்த்தனமாக தெரிந்த பிறகும், வெட்கம் சிறிதுமின்றி தனது
   இருப்பை காட்டிக்கொள்ள தினம் ஒரு அறிக்கை விடுகிறார்.
   இனி இவர் வாயை திறந்ததால், இவரது குடும்ப
   சொத்துக் கணக்கை கேட்க வேண்டும். பாரிவேண்தர் கேட்ட
   கேள்விகளுக்கு எல்லாம் முதலில் இவர் பதில் சொல்ல வேண்டும்.

 3. LVISS சொல்கிறார்:

  The Uday schemePitush spoke about is for rescuing bankrupt state discoms — This award is for power generation — Piyush could have been bit more restrained -It was election time and all is fair in elections —

  • B.Venkatasubramanian சொல்கிறார்:

   // all is fair in elections //
   Please do not justify.

   Madam Jayalalitha
   didnot speak even a word against bjp
   during elections. All accusations from bjp
   were onesided,
   abusive, half baked and opportunistic.

   • ravi சொல்கிறார்:

    till the disproportionate asset case gets over, madam will not open her mouth against bjp.

    BJP needs madams support in rajya sabha for passing bills ..

    so, both will make sure not to disturb status quo….

 4. gopalasamy சொல்கிறார்:

  The disproportionate asset case is pending from 1997. If Jaya was afraid, she would have bent before Sonia and Congress. If Mr. Ravi accepts special court in Karnataka gave judgement as per Congress order, then we can accept his version.

  • ravi சொல்கிறார்:

   Mr,Gopalsamy,

   jaya, bjp, congress -> all have bent enough to accomodate each other.
   madam, went out of way to topple vajpayee government to accomodate sonia, only to join hands with bjp later.. (courtesy -> Su.Sa)

   by the time the court gave its order ,it was bjp government at centre , not a congress one.
   so, what is your version??

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    விவாதம் திசை மாறிச் செல்வதாகத் தெரிகிறது.
    இத்துடன் போதுமே….

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.