ராஜீவ் வழக்கு – திரு. மோகன்ராஜ் ஜெபமணி – – – ( பைத்தியத்திற்கு வைத்தியம் ….??? )

.

.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குறித்து
திரு.மோகன்ராஜ் ஜெபமணி அவர்கள் சில நாட்களாக
மற்றவர்களுக்கு பேட்டி கொடுப்பதும்,
விவாதங்களில் கலந்து கொள்வதும்,
தனக்கு தானே வீடியோ எடுத்து பதிவு செய்து
வெளியிடுவதுமாக இருக்கிறார்….

அந்த வழக்கில் விசாரணை செய்த குழுவில் இவரும்
இருந்தார் என்பதைத்தவிர மற்ற அனைத்துமே கிட்டத்தட்ட
உளறல்கள் தான். உளறல்களிடையே சில உண்மைகளும்
உள்ளன என்பதும் உண்மை தான்…!!!
(குழப்பி விட்டேனா….? தொடர்ந்து மோகன்ராஜ் ஜெபமணி
விவரங்களை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்ததன் விளைவு…!!!)

இந்த கொலை வழக்கில் உண்மையாகவே சம்பந்தப்பட்ட
பலர் இன்னமும் சுதந்திரமாக வெளியில் திரிந்துக்
கொண்டிருக்கிறார்கள் என்பதும்,

சில அப்பாவிகளும்
தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதும்,

குற்ற நிகழ்வில் சம்பந்தப்பட்டிருந்த சிலர் கூட –
அளவிற்கு அதிகமாக
தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதும் – உண்மையே…

ஆனால் –
—————

3-4 ஆண்டுகளாகவே நான் இந்த ஆசாமியை அறிவேன்.
திரு.மோகன்ராஜ் ஜெபமணி நீண்ட நாட்களாக
ஒரு கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்.
அவர் தன்னையும், அந்த கட்சியையும் பிரபலப்படுத்த
அவரால் இயன்ற அனைத்து உபாயங்களையும்
இது நாள் வரை செய்து பார்த்தார்.
உம் ஹூம் – வெற்றி கிட்டவில்லை.

ஆனால், இறுதியாக, இப்போது ஹிட் அடித்து விட்டார்….
எதைச் சொன்னால், எந்த விஷயத்தை, எப்படி பேசினால்
தான் கவனிக்கப்படுவோம் என்பதை – ஒருவழியாக
கண்டு பிடித்து விட்டார்……
அதன் விளைவே – மீடியா பரபரப்பு……!!!

திரு.மோகன்ராஜ் ஜெபமணி – தனக்குத்தானே
பதிவு செய்து வெளியிட்டுக் கொண்டுள்ள
சில வீடியோக்கள் –

கடைசியாக இன்று மாலை news7 செய்தி சேனலுக்கு
கொடுத்துள்ள பேட்டி –

ஆகியவற்றை கீழே தந்துள்ளேன்….
இவற்றை பார்த்தால் –
இந்த ஆசாமியைப் பற்றிய உண்மை புரியும் –

கொஞ்சம் டைம் வேஸ்ட் தான் –
ஆனால், இன்டெரெஸ்டிங்க் ஆக இருக்கும் – பாருங்கள்…!!!

——————————————————————-

பின் சேர்க்கை –

வேடதாரி – நெற்றியில் வித்தியாசத்தை காணவும்…!!!

jeb.naamam

jeb.pottu,viboothi

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to ராஜீவ் வழக்கு – திரு. மோகன்ராஜ் ஜெபமணி – – – ( பைத்தியத்திற்கு வைத்தியம் ….??? )

 1. today.and.me சொல்கிறார்:

  காமைஜி,
  எனக்கென்னவோ,
  எதையாவது எப்படியாவது குழப்பிவிட்டு
  முடிந்தால் இப்போதைக்கு,
  இல்லாவிட்டால் எப்போதுமே
  எழுவர் விடுதலையை
  இல்லாமல் ஆக்க
  முகவின் சோனியாஜியின் முன்னணியாக இவர் இயங்குகிறாரோ என்று தோன்றுகிறது.

  ஒருவேளை இவரது ஸ்டண்ட்களையும் சாமியின் சாகசங்கள் லிஸ்ட்டில் அடுக்கவேண்டி வருமோ?

 2. B.Venkatasubramanian சொல்கிறார்:

  இந்த ஆள் அப்பாவியா, அடப்பாவியா, காரியவாதியா, பைத்தியமா ?

 3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  காரியவாதி மட்டுமல்ல ஃப்ராடும் கூட.

  ஒரு பேட்டியில் சந்திராசாமியிடம் காசு வாங்கிக்கொண்டு
  புலிகள் கொலை செய்தார்கள் என்கிறார்.

  இன்னொரு பேட்டியில், அகன்ற தமிழகம் அமைக்க
  திட்டமிட்டு கொலை செய்தார்கள் என்கிறார்.

  முதலில் 7 பேர் வெளியில் வரட்டும்.
  அதன் பிறகு, இந்த ஆளை உள்ளே தள்ளி
  முட்டிக்கு முட்டி தட்ட வேண்டும்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பரே,

   இப்போதைக்கு இந்த ஆசாமிக்கு
   முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
   பின்னர் நேரம் வரும்….

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 4. selvarajan சொல்கிறார்:

  ” நெல்லை ஜெபமணி ” யை பலர் மறந்திருக்கலாம் … ! …. இந்தக்கால இளைஞர்களுக்கு ” குழப்பவாதி ஜெபமணி மோகன்ராஜ் ” என்பவரை தெரிந்த அளவுக்கு அவரை தெரிந்திருக்க நியாயம் இல்லை …. அவர் — தீவிரமான காமராஜர் பக்தர். காங்கிரஸ் கட்சியில் இருந்தவர் பின்னாடி ஜனதா கட்சி சார்பில் சாத்தான்குளம் தொகுதி எம்.எல்.ஏ-வாகவும் இருந்தார். அந்தக்கால காங்கிரஸ் சார்பு தமிழ் தினசரிகளில் – மிகவும் கார – சாராமாக கட்டுரைகளை எழுதியவர் — சட்டமன்றத்தில் விவாதங்களில் சூடு பறக்க வைத்தவர் — அவருக்கு – போயி ” இப்படியொரு பிள்ளை ” … ?

 5. NS RAMAN சொல்கிறார்:

  Not only Mohanraj so many coast writers selling their own stories in this case and try to justify the crime.

  SC judgement is clear taken into all arguments that us why so many people acquainted or released with lesser punishment and rest in jail.

  The only way to stop this nonsense revoke their retirement benefits.

 6. srinivasanmurugesan சொல்கிறார்:

  அய்யா சு.ச. நல்லவரா கெட்டவரா?
  GST மசோதா பற்றிய ஜெயலலிதாவின் சந்தேகங்கள் மற்றும் வாதங்கள் நியாயமானவையே.

  நிதி அமைச்சர் இவற்றை கருத்தில் கொண்டு அவற்றை சரி செய்ய வேண்டும்.

  நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த போது இத்தகைய வாதங்களை எழுப்பினார்.

  உற்பத்தி திறன் கொண்ட தமிழ் நாட்டிற்கு இந்த சட்டம் இழப்புகளை ஏற்படுத்தும் என்ற
  ஜெவின் அச்சத்தை போக்க நிதி அமைச்சகம் முன் வரவேண்டும்

  சொல்பவர் சுப்பிரமணியம் சுவாமி

  சுவாமி நல்லவரா கெட்டவரா

  நல்லது நடக்கப் போகிறது என்பதன் அறிகுறி 14 ஆம் தேதியே தெரிந்து விட்டது

  இனி மத்திய மாநில அரசுகள் இணைந்தே செயல்படும்
  நன்றி:முகநூல் பக்கம்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப ஸ்ரீநிவாசன்முருகேசன்,

   சூரியன் எப்போதாவது மேற்கே உதிக்குமா….?
   திரு.சுப்ரமணியன் சுவாமி உள்நோக்கம் இல்லாமல்
   எதையாவது சொல்வாரென்று நம்புகிறீர்களா ….?
   சு.சுவாமி சொன்னது குறித்து தனியே
   இடுகை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

   ஆமாம் –
   //இனி மத்திய மாநில அரசுகள் இணைந்தே செயல்படும்
   நன்றி:முகநூல் பக்கம்//

   என்று எழுதி இருக்கிறீர்களே –
   எந்த முகநூலில் பார்த்தீர்கள்…?

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.