புதைந்து, மறைந்த 1200 வருட ரகசியங்கள் வெளிவருகின்றன ….( பகுதி-1 )

.

.

கி.பி.802 – பல்லவ அரச வம்சத்தைச் சேர்ந்த
இளவல் ஒருவன் – காம்போஜ தேசத்தில்,
“மஹேந்திரபர்வதம்” என்கிற, மலை மேல் அமைந்த
ஒரு நகரத்தை நிர்மாணித்து, இரண்டாம் ஜெயவர்மன்
என்கிற பட்டப்பெயருடன் முடி சூடுகிறான்.
அடுத்த 33 ஆண்டுகளுக்கு மிகச்சிறப்பான ஆட்சியை
உருவாக்கி நிர்வகிக்கிறான். மஹேந்திரபர்வதத்தையொட்டி,
அமரேந்திரபுரா, ஹரிஹராலயா என்கிற பெயர்களில்
இன்னும் இரண்டு நகரங்களையும் நிர்மாணிக்கிறான்.

இன்று எங்கே இருக்கின்றன இந்த நகரங்கள்….?

இன்றைய கம்போடியாவில் “Phnom Kulen”
என்றழைக்கப்படும் மலைப்பிரதேசத்தில்,
உலகப்புகழ்பெற்ற ” அங்கோர்வாட் ” கோயில்களுக்கு
வடக்கே 40 கிலோமீட்டரில் அமைந்துள்ளது இந்த இடம்.

” மஹேந்திரபர்வதம் ” நகரத்தில் இரண்டாம் ஜெயவர்மன்
என்கிற பெயரில், கி.பி.802-ல் ஒரு தமிழ்மன்னன்
முடிசூட்டிக்கொண்ட வரலாறு இன்றும் இங்கு கல்வெட்டில்
பொறிக்கப்பட்டு சான்றாக காட்சி அளிக்கிறது.

” அங்கோர் வாட் ” கோயில்கள் ஜெயவர்மனின் சந்ததிகளால்,
ஜெயவர்மன் ஆட்சிப்பொறுப்பேற்ற சுமார் 300 ஆண்டுகளுக்கு
பிறகு 12-ஆம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்டன.

சுமார் 600 ஆண்டுகளுக்கும் உலகின் பார்வையிலிருந்து
சுத்தமாக மறைந்து விட்ட, மனித நடமாட்டமே இல்லாத
பிரதேசமாக மாறி விட்டிருந்த இந்த “அங்கோர் வாட்”
சென்ற நூற்றாண்டில், 1930-களில் தான் சிதிலமடைந்த
நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் யுனெஸ்கோவின் உதவியுடன், சீரமைக்கப்பட்டது.
உலகெங்கிலிருந்தும், டூரிஸ்டுகள் பெரும் அளவில்
இந்த அதிசயத்தைக் காண வரத்துவங்கினார்கள்.

இருந்தாலும் இவற்றை உருவாக்கிய –
உன்னத கலைத்திறனுடைய
அந்த மக்கள் என்ன ஆனார்கள்..?
எங்கே போனார்கள் –
எப்படி மறைந்தார்கள்…? என்பது
இதுவரை யாராலும் கண்டு பிடிக்கப்பட முடியாத,
புரியாத புதிராகவே இருந்தது.

பல ஆண்டுகளாக எல்லாரையும் திகைக்க வைத்துக்
கொண்டிருந்த இந்த கேள்விக்கு இப்போது பதில்
கிடைத்திருக்கிறது….

அந்த விவரங்களுக்குள் செல்வதற்கு முன்னர் –
“அங்கோர் வாட்” மற்றும், அதனை உருவாக்கிய
தமிழ் மன்னர்கள் பற்றிய பின்னணியை அறிவது
முக்கியம்.

இது குறித்து, நீண்ட நாட்களுக்கு முன்னர்
இந்த விமரிசனம் வலைத்தளத்திலேயே சில
இடுகைகள் வெளிவந்தன. அவற்றிலிருந்து சில
முக்கிய பகுதிகளை மட்டும் கீழே தருகிறேன்…….

——————————
( ஜூலை 2012-ல் எழுதியது )
……..
…….

சரி – ஏஞ்ஜலினா ஜோலியை மாற்றிய அந்த
டா ப்ரோமில் என்ன இருக்கிறது ?

அடர்ந்த காட்டின் நடுவே, நெடிது வளர்ந்த
மரங்களுக்கிடையே,
இடிபாடுகளுக்கிடையே –
சுமார் 600 ஆண்டுகள்
வெளியுலகிற்கே தெரியாமல் – மனிதர்கள்
பார்வையே படாமல் மறைந்து கிடந்த அற்புதமான

கலை நயம் நிறைந்த கோயில்கள் !

யார் கட்டியது ?

தமிழகத்தில் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் பல்லவர்களின்
மகோன்னத ஆட்சி நடந்து கொண்டிருந்தது. காலத்தால்
அழியாத சாட்சியாக இன்றும் விளங்கும் மாமல்லபுரத்தை
உருவாக்கிய மகேந்திரவர்மன் கி.பி. 600
முதல்–630 வரையும், அவர் மகன் நரசிம்மவர்மன்
கி.பி.630 முதல் 668 வரையும் ஆண்டனர்.

இன்றைய கம்போடியா, நேற்றைய
கம்பூச்சியா,அந்நாளில்
காம்போஜம் என்றழைக்கப்பட்டு வந்தது.

பல்லவ மன்னர்கள் வலிமை வாய்ந்த
மிகப்பெரிய கப்பற்படையை உருவாக்கி, காம்போஜம்  வரை படையெடுத்துச்சென்று, மாபெரும் வெற்றிகளைக் குவித்து,

தங்கள்  தளகர்த்தர்களையே அங்கே அரசராக
நியமித்து விட்டு வந்தார்கள்.

பிற்பட்ட காலத்தில், சோழ வம்சம் தலை தூக்கி,
பல்லவ வம்சம் நலிந்த காலத்தில், காம்போஜத்தில் ஆட்சி
புரிந்து வந்த பல்லவ குலத்தினருக்கும், பின்னர் அவர்கள்
வழிவந்தவர்களுக்கும் தமிழ் நாட்டுடன் இருந்த  தொடர்புகள்
கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டுப் போய் – அவர்கள்
அந்த கலாச்சாரத்துடன் தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டு
விட்டார்கள். துவக்கத்தில் இந்து மதத்தை ஆதரித்து
வந்த
இவர்கள் காலப்போக்கில் – புத்த மதத்தை
தழுவினார்கள்.

அற்புதமான 6 நூற்றாண்டுகள் –
9ம் நூற்றாண்டு முதல் 14ம் நூற்றாண்டு  வரை
இந்த கம்போடியா நாட்டை  ஆண்டு கொண்டிருந்த  –
ஜயவர்மன்,  இந்திரவர்மன், யசோவர்மன், சூர்யவர்மன், ஜயவர்மன் – 3, 4, 5, 6, 7 –

ஆகிய அத்தனை  பேரும்  
தமிழ் மன்னர் குலத்தோன்றல்கள் தான் !

கி.பி. 1186 ஜெயவர்மன்-7 காலத்தில் நிறைவு பெற்றவை
தான் டா ப்ரோம் -ல் காணப்படும்
கோயில்கள்.
துவக்கத்தில்
இந்து கடவுளர்களையும் பிற்காலத்தில் புத்த மதத்தின்
தாக்கத்தில் போதிசத்வரையும் மூலவராகக் கொண்டது
ராஜவிஹாரா என்றழைக்கப்பட்ட இந்த
கோயில்.
கோயில் அமைந்துள்ளது சுமார் 2.5 கிலோமீட்டர் பரப்பளவில் தான்
என்றாலும், இதன் சுற்றுச்சுவர் 148 ஏக்கர்
நிலப்பரப்பை
உள்ளடக்கி இருக்கிறது.

இங்கு கிடைத்த தகவல்கள் மூலம்
இந்த வளாகத்தையொட்டி(18 பூசாரிகளும், 615 நடன
மங்கையரும் உட்பட) சுமார் 12,500 பேர் பணியாற்றி
வந்ததாகத் தெரிகிறது.

15ஆம் நூற்றாண்டில், அந்நியர்
(வியட்னாமியர்) படையெடுத்ததையொட்டி, இந்த நகரம்
கைவிடப்பட்டு

மக்கள் அனைவரும் வெளியேறி விட்டார்கள்.
ஓங்கி வளர்ந்த மரங்களாலும், அடர்ந்த காடுகளாலும்,
மறைக்கப்பட்டு விட்ட இந்த டா ப்ரோம் அடுத்த
6 நூற்றாண்டுகளுக்கு மனிதரின் நடமாட்டமே
அற்றுப்போய்
இருந்திருக்கிறது.

விளைவு – கீழேயுள்ள புகைப்படங்களில் தெரியும்.
600 வயது மரங்கள்  கோபுரங்களைப்
பிளந்து கொண்டும்,
சுற்றி அணைத்துக் கொண்டும் -உலகில் வேறு எந்த
பழங்காலச்சின்னங்களிலும் காணப்படாத ஒரு
அற்புதத்
தோற்றம்.

கம்போடியா மீண்டும் அந்நியர் ஆதிக்கத்திலிருந்து 1953-ல்
விடுபட்ட பிறகு, உலகம் இந்த அரிய
சின்னங்களை
ஆச்சரியத்தோடு பார்க்கத் துவங்கியது.யுனெஸ்கோ இதனை
பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டது.

இடிந்து கிடந்த பகுதிகளை அதன் தொன்மை மாறாமல் சீரமைக்கும் பொறுப்பை
இந்திய தொல்பொருள் துறை ஏற்றுக்
கொண்டது.

இன்று  சீரமைப்பு பணிகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டன.
உலகம் முழுவதிலிருந்தும் லட்சக்கணக்கில்
டூரிஸ்டுகள் விரும்பி வரும் இடமாகி விட்டது

தமிழன் உருவாக்கிய டா ப்ரோம் – ராஜவிஹாரா ! அதன் அழகு ததும்பும் புகைப்படங்கள் கீழே –

 

(பின் குறிப்பு – இந்த இடுகையை
எழுதும்போதே மனதில்  மிகப்பெரிய ஏக்கம். நம்
முன்னோர்கள், மூத்தோர்கள், நவீன விஞ்ஞான சாதனங்கள் எதன்
துணையும் இல்லாத காலத்திலேயே எவ்வளவு
தொலைவு
சென்றிருக்கிறார்கள் – பார் புகழ ஆட்சி செய்திருக்கிறார்கள் !

பண்பாட்டைப் பதிவு செய்திருக்கிறார்கள் !

இன்றைய தமிழராகிய நாம் எப்படி இருக்கிறோம் ?
பெருமை கொள்ளும் நிலையிலா ?

இந்த சமுதாயம் மாறுவதற்கு –
நாம் என்ன செய்யப்போகிறோம் ? )

PHOTOS –
கூகுள் மேப்ஸில் சாட்டிலைட்டிலிருந்து
எடுக்கப்பட்ட  டா ப்ரோம் படம் –
அடர்த்தியான  காட்டிற்குள் எப்படி இருக்கிறது பாருங்கள்!

( இடுகை தொடர்கிறது – பகுதி-2ல் )

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to புதைந்து, மறைந்த 1200 வருட ரகசியங்கள் வெளிவருகின்றன ….( பகுதி-1 )

 1. D. Chandramouli சொல்கிறார்:

  Fantastic pictures!

 2. selvarajan சொல்கிறார்:

  அன்றைய தமிழன் : உலகின் மிகப் பெரிய கோயிலை அங்கோர்வாட் என்ற இடத்தில் கட்டியுள்ளதை காண வைத்த அய்யா … அவர்களுக்கு நன்றி …. !. இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இது தான் மிகப் பெரியது.
  திரும்பிய பக்கம் எல்லாம் சிற்பங்கள். இந்த கோயிலின் நான்கு பக்க சுற்று சுவர்களும் முறையே 3.6 கிலோ மீட்டர்கள் நீளமுடையவை.சுமார் 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது….. இன்றைக்கு இருக்ககூடிய பொறியியல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட சுமாராக 300 ஆண்டுகள் ஆகும்….. அப்படியும் அதனுடைய கலையையும் — தரத்தையும் கொண்டுவர முடியுமா … என்பதே சந்தேகம் தான் …. இக்கோயிலின் முழு அளவையும் — உருவத்தையும் காண வேண்டுமானால் 1000 அடிக்கு மேல் உயரமாக சென்று அங்கிருந்து பார்த்தால் மட்டுமே இதை முழுமையாக காண முடியும்…… இதை முழுமையாக படமும் எடுக்க முடியும் .இதன் முழு கட்டிடமும் சுற்று சுவர்களும் — மொத்த பரப்பளவும் அப்போது தான் பதிவாகும்…. அன்று நம்மை ஆண்ட தமிழர்கள் உலகம் முழுக்க சென்று பல அற்புத செயல்களை செய்து ” சரித்திரத்திலும் வரலாறுகளிலும் ” காலத்தால் அழியாதவற்றை பதிவி செய்து உள்ளனர் .. தமிழன் என்ன செய்தான் — என்று கேட்பவர்களுக்கு இன்றைய ” வாக்குமுறை ” ஜனநாயகத்தை உலகம் அறிய — அன்றே அறிமுகப்படுத்திய ” அருள்மொழித்தேவனின் குடவோலை ” முறையை எப்படி மறக்க முடியும் …. இவ்வாறானவற்றை இன்றைய தலைமுறையினருக்கு எடுத்து சொல்ல இது போன்ற ” இடுக்கைகள் ” வாயிலாக செய்வதே பெரும் தொண்டு தான் … இன்றைய ” நாறிப் போன ” அரசியல் பதிவுகளை விட இதைப் போன்றவற்றை அடிக்கடி பதிவாகப் போடுவது நல்லது தானே … ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   என் எண்ணமும் அதே தான்.
   என்னால் இயன்றதை அவ்வப்போது
   செய்கிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. G.Thulasidoss. சொல்கிறார்:

  புதைந்து.மறைந்த.மர்மங்கள்.தமிழனின்
  வமசம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.