தினமலர் ஆசிரியரை “உள்ளே” – “போட்டு” விசாரித்தாலன்றி திருந்த மாட்டார்கள்….!!!

.

.

ஓசூர் அருகே பள்ளி ஆசிரியையாக பணி புரியும்
எட்டு மாத கர்ப்பிணி பெண் ஒருவர் நேற்று முன் தினம்
மாலை பள்ளி வேலை முடிந்து இரு சக்கர வாகனத்தில்
வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார்.

அப்போது, பைக் ஒன்றில் வந்த மூன்று பேர் கொண்ட
பொறுக்கி, வழிப்பறி கும்பல் ஒன்று அவரை கர்ப்பிணிப்
பெண் என்றும் பார்க்காமல், மோதி, தாக்கி, வாகனத்தோடு
கீழே தள்ளி, அவர் கழுத்திலிருந்த தங்க செயினை பறித்துக்
கொண்டு, அதே வாகனத்தில் பறந்து விட்டது.

இதனைத் தொடர்ந்து, அடுத்த செக்போஸ்ட்டுக்கு தகவல்
தெரிவிக்கப்படவே, அவர்களை, ஓசூர் டவுன் எஸ்.ஐ., கண்ணன்,
குற்றப்பிரிவு எஸ்.ஐ., நாகராஜ், ஏட்டுகள் முனுசாமி, தனபால்
ஆகியோர், மடக்கி பிடிக்க முயற்சி செய்திருக்கின்றனர்.

அப்போது ஏற்பட்ட மோதலில், எஸ்.ஐ., நாகராஜ்,
ஏட்டுகள் முனுசாமி, தனபால் ஆகியோரை, கொள்ளை கும்பல்
கத்தியால் குத்தி இருக்கிறது. தொடர்ந்து போராடிய போலீசார்,
கும்பலை சேர்ந்த ஒருவனை பிடித்திருக்கின்றனர். உடன் வந்த,
மற்ற இருவரும் தப்பி விட்டனர்.

கத்திக்குத்தில் காயமடைந்த 2 எஸ்.ஐ., உட்பட
இரண்டு போலீசார், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

படுகாயம் அடைந்த ஏட்டு முனுசாமி,
நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணியளவில்,
ஓசூர் மருத்துவமனையில் உயிரிழந்து விட்டார்..
கொள்ளையரால் கொலை செய்யப்பட்ட இந்த
ஏட்டு முனுசாமிக்கு மனைவியும், பள்ளியில் படிக்கும்
இரண்டு பெண் குழந்தைகளும் இருக்கின்றனர்.

எஸ்.ஐ., நாகராஜ், தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில்
சிகிச்சையில் இருக்கிறார்.

கையில் சிக்கிய வழிப்பறி கொள்ளைக்காரனிடம் போலீசார்
அவனது தப்பியோடிய மற்ற கூட்டாளிகளைப் பற்றிய
விவரங்களை – அவர்களுக்கேற்ற முறையில்
விசாரித்திருக்கின்றனர்.
உடல்நலம் குன்றிய நிலையில் அவன் மருத்துவமனைக்கு
கொண்டு செல்லப்பட்டிருக்கிறான். அதிகாலை 4 மணியளவில்
அந்த கொள்ளைக்காரன் ரத்த வாந்தி எடுத்து செத்திருக்கிறான்.

———————–

இந்த செய்தியை தினமலர் நாளிதழ் முதல் பக்கத்தில்
தலைப்புச் செய்தியாக போடுகிறது…. எப்படி ….?

dinamalar front page

” ஓசூரில் ஏட்டுவை குத்தி கொன்ற கொள்ளை கும்பல் –
குற்றவாளியை அடித்து கொன்று பழி தீர்த்த போலீசார் ..”

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள்,
செயின் பறிப்பவர்களின் தொல்லை மிக அதிகமாகி விட்டது –
கூலிக்கு கொலை செய்யும் கும்பல்களும், கூலிப்படை
அடியாட்களும் பெருகி விட்டனர்.

கடுமையான தண்டனை கொடுத்தாலன்றி, இவர்களை
கட்டுப்படுத்துவது இயலாத காரியம். யாரை கைது
செய்தாலும் ஒரே மாதத்தில் ஜாமீனில் வெளிவந்து
விடுகின்றனர். சட்டத்தில் பல ஓட்டைகள். இவர்களை
பாதுகாக்கவென்றே ஏகப்பட்ட GOD FATHERS AND
POLITICIANS.

குற்றங்கள் தடுக்கப்பட வேண்டுமென்றால்-
கண்ணெதிரே நடக்கும் குற்றங்களை –
பொது மக்களே கண்டிக்க வேண்டும்….
கண்ணுக்கு தெரிகிறாப்போல் – அவர்களுக்கு
தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும்.
இதனைச் செய்யும் பொது மக்களுக்கும், காவலர்களுக்கும்,
சட்ட சிக்கல்களிலிருந்து பாதுகாப்பு கிடைக்க வேண்டும்.

இந்த கொள்ளைக்காரன் எதனால் செத்தானோ –
நமக்குத் தெரியாது… ஆனால், காவலரிடம் அடி வாங்கி
செத்திருந்தாலும், அதில் வருத்தப்பட ஒன்றுமில்லை.
மாறாக, மற்ற குற்றவாளிகளிடம் இது ஒரு பய உணர்வை
ஏற்படுத்தும் என்கிற முறையில்

– நான் இதை வரவேற்கவே செய்கிறேன்.

கடுமையான தண்டனை, கண்ணுக்குத் தெரிகிறாப்போல்
தண்டனை கொடுத்தாலன்றி, இத்தகைய குற்றங்கள்
குறையாது, பொது மக்கள் நிம்மதியாக வாழவும் முடியாது.

இதற்கு மாறாக, கொஞ்சமும் சமூகப் பொறுப்பில்லாமல்
பரபரப்பிற்காக கன்னா பின்னாவென்று தலைப்புச்செய்திகளை
போட்டு, பொதுமக்களை காவல்துறைக்கு எதிராக
தூண்டிவிடுவது போல் செய்தி வெளியிடுவது
கண்டிக்கப்பட வேண்டிய, தண்டிக்கப்பட வேண்டிய ஒரு செயல்.

” குற்றவாளியை அடித்து கொன்று
பழி தீர்த்த போலீசார் ..”

-என்று எந்த ஆதாரத்தில் தினமலர் தலைப்பு போடுகிறது..?
போஸ்ட் மார்ட்டம் முடிந்து விட்டதா…?
போலீசார் அடித்ததால் குற்றவாளி இறந்தான் என்று
ரிப்போர்ட் கூறுகிறதா…?
அல்லது தினமலர் ஆசிரியர் அதை நேரில் பார்த்தாரா…?

பொறுப்பில்லாமல், வதந்திகளை பரப்பியதற்காகவும்,
போலீசார் மீது பொய்யாக, ஆதாரம் இல்லாமல் கொலைபழி
சுமத்தியதற்காகவும் –

தினமலர் ஆசிரியரை “உள்ளே” “போட்டு” விசாரிக்க வேண்டும்.
அமைதியை விரும்பும் பொதுமக்கள்,
குற்றங்கள் குறைய வேண்டும்
என்று விரும்பும் மக்கள்,
கூலிப்படைகள் அழிக்கப்பட வேண்டும்
என்று விரும்பும் மக்கள்-
இதனை நிச்சயம் வரவேற்பார்கள்.

சட்டம், ஒழுங்கு – நிலைநாட்டப்பட
அவசியமான எதையும் காவல் துறை துணிந்து செய்யட்டும்.

இத்தகைய நடவடிக்கைகளை நான் நிச்சயம் வரவேற்பேன்…
நமது நண்பர்களும் வரவேற்பார்கள் என்று நம்புகிறேன்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

19 Responses to தினமலர் ஆசிரியரை “உள்ளே” – “போட்டு” விசாரித்தாலன்றி திருந்த மாட்டார்கள்….!!!

 1. B.Venkatasubramanian சொல்கிறார்:

  k.m.sir,

  I perfectly agree with you.

 2. Antony சொல்கிறார்:

  Hi KM,
  Commenting after a break.
  Your views are correct since the accused is caught at site. But supporting these activities by police may lead to a bad example. If you have time and interest,try to watch movie “Visaranai” or the book “lock-up”.

  • B.Venkatasubramanian சொல்கிறார்:

   அப்படியானால், ஒரு பாவமும் செய்யாமல் இளம் வயதில் அந்த போலீஸ்காரரின் மனைவி விதவையானதும்,
   இரண்டு பெண் குழந்தைகள் போலீசில் பணிபுரிந்த ஒரே காரணத்திற்காக
   தங்கள் தந்தையை இழந்து தவிப்பதும்,
   பரவாயில்லை என்று சொல்கிறீர்களா ?
   தவறுகள் இரண்டு பக்கங்களிலும் தான் நடக்கின்றன ?
   எந்த கிரிமினல் வழக்காவது ஐந்து வருடத்திற்கு முன்னால்
   முடிவுக்கு வருகிறதா ?
   எத்தனை கொலையாளிகள் சிரித்துக் கொண்டே ஜாமீனில்
   வெளிவருகிறார்கள் ?
   எட்டு கொலை செய்தவன் எல்லாம் ஜாமீனில் சுத்துகிறானே
   அது பரவாயில்லையா ?

   • Antony சொல்கிறார்:

    I clearly stated I agree with the writer in this particular case. But I opposed the statement “சட்டம், ஒழுங்கு – நிலைநாட்டப்பட
    அவசியமான எதையும் காவல் துறை துணிந்து செய்யட்டும்.” Because it might lead to false cases and false encounters.

  • Tamilian சொல்கிறார்:

   Do you think Visaranai is gospel truth? Some events that took place involving police are shown in the movie. But big wigs were interested and involved in those incidents. If we give brutal power to the police , it will lead to some innocents getting a raw deal. Even in USA an innocent man was punished and truth came out after he was put to death in a rare case. But it is an exception. For people to remain safe , police must be feared by criminals. Irresponsible reporting and giving undue publicity to those criminal lawyers in the name of public interest. If necessary ‘encounters ‘ must be done to put the fear of God into the criminals.

   • Antony சொல்கிறார்:

    Of course It was truth at least the incidents in first half. It was the experience of the writer himself. You can refer the novel. And I dont think it is a rare case in India. See what happened to Rajiv case. Even the ‘limited’ brutal power of the police was enough to prove some innocent as murderers. The system could not do anything even after the police officer admitted that he did not record all facts. Again you can see the brutality of police against women protesting against TAASMAC.

    I am not trying to deviate the topic. I totally agree the media failed to keep up the responsibility.

 3. Narasimhan சொல்கிறார்:

  நாளை வரை பொறுங்கள் . எத்தனை தனிமனித உரிமை ஆர்வலர்கள் பொங்கியெழுந்து பொங்கல் வைப்பதை. மஞ்சள்துன்டிற்கு ஒரு அறிக்கை தானாக வந்து மாட்டியது .

 4. Karthik சொல்கிறார்:

  ஆனால், காவலரிடம் அடி வாங்கி
  செத்திருந்தாலும், அதில் வருத்தப்பட ஒன்றுமில்லை.

  ஐயா – இது தவறான முன்னுதாரணம் ஆக கூடாது. அவன் செய்தது கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாத செயல் . உங்கள் கருத்து அதே மாதிரி உள்ளது . அவர்களை அந்தமான் சிறை போன்ற இடத்தில் வைத்து தண்டனை கொடுக்க வேண்டும். சட்டத்தின் ஓட்டைகளை அடைக்க வேண்டும் .

 5. poovalingam சொல்கிறார்:

  போலிஸ்காரனை கொன்றால் உடனே பழி தீர்த்து விடுவார்கள் இது ஒன்றும் புதிது இல்லை

 6. B.Venkatasubramanian சொல்கிறார்:

  இப்போது அந்தமானில் அந்த மாதிரி சிறையெல்லாம் கிடையாது
  கொடும் குற்றங்களை செய்பவர்களை, அரபு நாடுகள் போல்
  கை, கால்களை வெட்ட வேண்டும், ஊர் நடுவே தூக்கில் தொங்க
  விட வேண்டும். குற்றம் செய்பவர்களுக்கு இங்கே குளிர் விட்டுப் போய் விட்டது.
  ஒரு பயலும் பயப்படுவதில்லை. இரண்டு லட்சம் கூலிக்கெல்லாம்
  கொலை பண்ணுகிறார்கள். கடுமையான தண்டனைகளின் மூலம்
  பயத்தை ஏற்படுத்துவதன் மூலம் தான் குற்றங்களை குறைக்க முடியும்.
  குற்றம் செய்பவர்களை விட தண்டனை கொடுப்பவர் க்டுமையான
  மனநிலை உடையவர்களாக இருக்க வேண்டும்

  • srinivasanmurugesan சொல்கிறார்:

   . இரண்டு லட்சம் கூலிக்கெல்லாம் கொலை பண்ணுகிறார்கள்.இது ஏதோ மிக குறைவான தொகைக்கொல்லாம் கொலை செய்கிறார்கள் என்ற தோற்றத்தை எற்படுத்துகிறது.அப்படியானால் 2கோடிக்கு கொலை செய்யலாமா? தொகை எவ்வளவு என்றாலும் கொலை செய்வது கொடுமையான செயல்.கா.மை அய்யாவின் கருத்து தான் என் கருத்தும்.

 7. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர்களே,

  நான் சொல்ல வந்தது –

  1) தினமலர் பொறுப்பற்ற விதத்தில் செய்திகளைப் போடுகிறது.
  இது அவசியம் கண்டிக்கப்பட வேண்டிய விஷயம்.

  2) நமது சட்டங்களில் உள்ள ஓட்டைகள்,
  நீதித்துறையில் ஏற்படும் அளவு கடந்த தாமதம் –
  எல்லா இடத்திலும் பணம் விளையாடும் விதம் –

  கண்ணுக்கெதிரே கொலை புரிந்த குற்றவாளிகள் கூட
  வெகு சுலபமாக ஜாமீனில் வெளிவந்து,
  மீண்டும் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை
  அனுமதிக்கிறது…
  ஊக்குவிக்கிறது என்று கூட சொல்லலாம்.

  3) மூன்று பேர் கத்தியுடன் சரமாரியாக போலீஸ்காரர்களை
  தாக்குகிறார்கள். ஒரு போலீஸ்காரரின் குடல் வெளிவந்து விட்டது.
  ஆனால் – போலீஸ்காரர்கள் நிராயுதபாணியாக இந்த
  கொலைகாரர்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

  4) குற்றம் புரிபவர்கள் –
  நிச்சயமாக,
  கடுமையாக,
  மீண்டும் வெளியே நடமாடமுடியாத அளவுக்கு –
  தண்டிக்கப்படுவார்கள் என்கிற உணர்வு
  சமுதாயத்தில் ஏற்பட்டாலொழிய
  இந்த குற்றச்செயல்கள் வெகு சகஜமாக தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 8. Tamilian சொல்கிறார்:

  Very true.

 9. kalakarthik சொல்கிறார்:

  உண்மை அண்ணா .நான் உங்கள் கருத்துகளை முற்றிலுமாக வழி மொழிகிறேன்.
  kalakarthik
  karthik amma

 10. ANT சொல்கிறார்:

  //தொடர்ந்து போராடிய போலீசார்,
  கும்பலை சேர்ந்த ஒருவனை பிடித்திருக்கின்றனர். உடன் வந்த,
  மற்ற இருவரும் தப்பி விட்டனர்.// போலீசார்பி டித்துவிட்டபின் அவர் எப்படி செத்தார்? ஒரு தொலைகாட்சியில் மக்கள் அடித்து கொன்றதாக செய்தி வெளியிட்டனர். இதில் இருந்து தெரிய வருவது போலிஸ் அடித்து கொன்றுவிட்டு அதை மக்கள் தலையில் கட்டிவிட்டனர். தினமலர் தலைப்பு சர்ச்சைக்குறியதாக இருக்கலாம் ஆனால் செய்தியில் தவறில்லை.

 11. BSV சொல்கிறார்:

  The right way is to give unquestioned powers to police to kill the criminals if they are caught red-handed on the spot. No arrest, no trial, no judgement. In short, no law books, law colleges, laws, the legislative bodies like Assemblies and Parliament to pass criminal laws, no Law Minister etc. If such a scenario comes into being, with the approval of all concerned, you are correct to approve the act of the police who killed a criminal caught and then, say he died on his own.

  So, first change the law.

  With the laws as they are now, Dinamlar is correct and you are wrong.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Mr.BSV,

   // With the laws as they are now,
   Dinamlar is correct and you are wrong. //

   Gentleman -Where did you learn LaW …?

   Please explain and justify which law permits this –

   words from the above article –

   // -” குற்றவாளியை அடித்து கொன்று
   பழி தீர்த்த போலீசார் ..”

   -என்று எந்த ஆதாரத்தில் தினமலர் தலைப்பு போடுகிறது..?
   போஸ்ட் மார்ட்டம் முடிந்து விட்டதா…?
   போலீசார் அடித்ததால் குற்றவாளி இறந்தான் என்று
   ரிப்போர்ட் கூறுகிறதா…?
   அல்லது தினமலர் ஆசிரியர் அதை நேரில் பார்த்தாரா…? //

   இந்த ”
   குற்றவாளியை அடித்து கொன்று
   பழி தீர்த்தனர் போலீசார் – என்கிற ஒரு
   statement -க்காகவே சட்டப்படி,
   தினமலர் ஆசிரியர் மீது வழக்கு தொடர முடியும்…

   – சட்டம், மனித உரிமை என்று பேசுபவர்கள்
   நிறைய பேரை பார்த்தாகி விட்டது….
   தனக்கு பாதகம் ஏதும் நிகழாதவரை மனித உரிமைகள்
   பற்றி நிறைய பேசுவர் –

   அந்த ஸ்கூட்டரில் வந்த கர்ப்பிணி பெண்மணி
   உங்கள் சகோதரியாகவோ, மகளாகவோ இருந்தாலும்
   உங்கள் வாய் இதையே தான் பேசுமா…?

   கொள்ளைக்காரனால் குத்தி, குடல் உருவி கொலை
   செய்யப்பட்ட போலீஸ்காரர் உங்கள் அண்ணனாகவோ,
   தம்பியாகவோ இருந்தாலும் உங்கள் வாய் இதையே தான் பேசுமா…?

   வாய்ப்பேச்சு வீர்ர்கள் நிறைய பேரை பார்த்தாகி விட்டது.
   ஊர் பூராவும், கொலைகாரர்களும், செயின் பறிப்பவர்களும்,
   கூலிப்படைகளும் பெருகியது தான் மிச்சம்.

   சமுதாயம் உருப்படுகிற வழியை பாருங்கள்….

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 12. yarlpavanan சொல்கிறார்:

  அருமையான பதிவு

  http://ypvn.myartsonline.com/

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.