Dr.சு.சுவாமியின் ட்வீட் – வைத்த குறி யாருக்கு……. ?

Dr-Swamy

டாக்டர் சு.சுவாமி வித்தியாசமாக, முதல்வர் ஜெ.வுக்கு
ஆதரவாக ஒரு ட்விட்டர் செய்தி வெளியிட்டுள்ளார்…

தனிப்பட்ட விஷயங்களில் அல்ல …
ஜிஎஸ்டி மசோதா குறித்து ஜெ. அவர்கள் எடுத்துள்ள
நிலையை ஆதரித்திருக்கிறார்.

ட்விட்டர் செய்தி கீழே –

dr.swamy tweet on jj gst

என்ன சொல்கிறார் சு.சுவாமி …?

—————-
ஜிஎஸ்டி விஷயத்தில், திரு.நரேந்திர மோடி அவர்கள்
குஜராத் முதலமைச்சராக இருந்தபோது எடுத்த அதே
நிலையைத்தானே – இப்போது தமிழக முதல்வர்
ஜெ. எடுத்திருக்கிறார்…? அவரது நிலையில்,
நான் நியாயத்தைக் காண்கிறேன்.

எனவே, ஜெ.அவர்கள் எழுப்பியுள்ள கேள்விகளுக்கான
விடைகளை காணும் விதத்தில் நிதியமைச்சர்
(திரு.அருண் ஜெட்லி ) செயல்பட வேண்டும்…..!!!

————–

ஜெ.அவர்களுக்கு ஆதரவாக சு.சுவாமி அவர்கள்
பேசுவது போல் ஒரு தோற்றத்தை இந்த செய்தி
உருவாக்கினாலும், சு.சுவாமி நினைப்பது அது அல்ல…..!

இது ஒரு மறைமுகச் செய்தி –
இவ்வளவு நாட்களாக திரு.அருண் ஜெட்லியை மாற்ற
எவ்வளவோ விதங்களில் முயற்சி செய்து பார்த்தார்.
எதையும் மோடிஜி காதில் போட்டுக்கொள்ளவே இல்லை….
கண்டு கொள்ளக்கூட இல்லை…

எனவே, இது ஒரு புதிய முயற்சி…
ஜெட்லி அவர்களுக்கு சொல்வதாக காட்டிக்கொண்டு –
மோடிஜிக்கு செய்தி சொல்ல முயற்சிக்கிறார்…
முதல்வர் ஜெ.அவர்களுக்கு ஆதரவாக தான்
செயல்படத் துவங்குவது போல்
ஒரு செய்தி சொல்ல முயற்சிக்கிறார்…

இந்த செய்தி முதல்வர் ஜெ.வுக்கான
ஆதரவு நிலைக்காக சொல்லப்பட்டது அல்ல…

சு.சுவாமி வழக்கமாக குறி வைப்பது – திரு. ஜெட்லிக்கு…
அதிசயமாக இந்த தடவை –
திரு.மோடி அவர்களுக்கும் சேர்த்தா ….???

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to Dr.சு.சுவாமியின் ட்வீட் – வைத்த குறி யாருக்கு……. ?

 1. selvarajan சொல்கிறார்:

  பொதுவாக ஜி.எஸ்.டி. மசோதாவை ” ஜெயா ” எதிர்ப்பதற்கு முக்கிய காரணம் : அதை நடைமுறைப்படுத்தினால் தமிழகத்துக்கு மிகப் பெரிய அளவிலான சொந்த வருவாய் இழப்பு ஏற்படும். ஜி.எஸ்.டி. மசோதாவில் ” உற்பத்தி செய்யும் ” மாநிலங்களுக்கு கிடைக்கும் வருவாயை விட அந்த பொருட்களை பயன்படுத்துகிற மாநிலங்கள் அதிக ஆதாயம் அடையும் வகையிலான அம்சங்கள் உள்ளன. { விவசாயிகளின் நிலைமையைப் போல } தமிழகம் பல்வேறு பொருட்களின் உற்பத்தி மாநிலமாக இருப்பதால் அதிக வருவாய் இழப்பை சந்திக்க நேரிடும் என்பதால் தான் …. உற்பத்தி செய்பவர்கள் – நஷ்டத்தையும் சுமக்க வேண்டுமா என்பது தான் … கேள்வி … !!! …….. // சு.சுவாமியின் ஆத்திரம் ஜெ. மீதா இல்லை ஜெட்லி மீதா …?
  Posted on ஜனவரி 24, 2015 by vimarisanam – kavirimainthan // …… என்கிற முந்தைய இடுக்கைப் போலவே — பல சந்தர்ப்பங்களில் ” கறுப்புப் பண மீட்பு — ரிசர்வ் வங்கி கவர்னர் விவகாரம் என்று சிறு கால இடைவெளியில் ” திரு அருண் ஜெட்லியை ” கடிப்பது தானே — சு.சுவாமியின் வேலை ——- // சு.சுவாமி வழக்கமாக குறி வைப்பது – திரு. ஜெட்லிக்கு…
  அதிசயமாக இந்த தடவை –
  திரு.மோடி அவர்களுக்கும் சேர்த்தா ….??? // — பேய்க்கும் — பேய்க்கும் சண்டை வருமா … ? வரும் … ஆனால் வராது … ??

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   //பேய்க்கும் — பேய்க்கும் சண்டை வருமா … ?
   வரும் … ஆனால் வராது … ??//

   என் வார்த்தை ….. எனக்கேயா …!
   உம்…….நெல்வேலிக்கே அல்வா ?…. 🙂 🙂

   மிகச்சரியாக சொல்லி இருக்கிறீர்கள்…

   சு.சுவாமி அடிப்படையில் ஜிஎஸ்டி பில் தோற்க வேண்டுமென்று
   விரும்புகிறார்….!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.