டாக்டர் ராமதாஸ் சில சமயங்களில் நன்றாகவே காமெடி பண்ணுகிறார்….!!!

dr.ramdoss

டாக்டர் ராமதாஸ் சில சமயங்களில்
நன்றாகவே காமெடி பண்ணுகிறார்….!!!

திரு.ஸ்டாலின், திரு.ஓபிஎஸ் அவர்களுக்கு
பதில் கொடுத்த விஷயம் தானே லேடஸ்ட்….
( நாளை சட்டமன்றம் கூடும் வரையில்….!!! )

திரு.ஸ்டாலின் கொடுத்த பதிலில் –
” திமுகவிலும், குடும்பத்திலும் குழப்பம் இருப்பதாக
அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கற்பனை செய்து
பேச வேண்டாம். தந்தைக்கும், மகனுக்கும் இடையே
சிண்டு முடிய வேண்டாம்” என்று கூறி இருந்தார்
அல்லவா …?

அதை வைத்து காமெடி பண்ணி,
இன்று டாக்டர் ராமதாஸ் அவர்கள் ஒரு ட்விட்டர்
செய்தி வெளியிட்டுள்ளார்.

அதில் –
கலைஞருக்கும், எனக்குமான உறவை பிரிக்க
ஓ.பி.எஸ். சதி: மு.க.ஸ்டாலின் – அப்படியானால்
அவ்வளவு பலவீனமாகவா இருக்கிறது
உங்கள் உறவு? 10:47 AM – 19 Jun 2016

-என்று ஸ்டாலினை நக்கல் அடிக்கிறார் சீனியர் டாக்டர்…..!!!

dr.ramadoss -twitter

ராமதாசுக்கு என்ன …?
கூந்தல் உள்ள சீமாட்டி….!!!
அள்ளி முடிந்து கொள்ளலாம்…
கலைஞரையும், ஸ்டாலினையும் கிண்டல் பண்ணலாம்.

இருப்பது ஒரே ஒரு மனைவி –
ஒரே ஒரு மகன் –
வாரிசு பிரச்சினை இல்லை…குடும்பத்தில் போட்டி இல்லை…

தந்தை பதவியை ருசித்ததில்லை…
அதனால், பதவி போதை இல்லை …
அதை விடாமல் பிடித்திருக்கும் பலவீனமும் இல்லை….

ஆனால் –
கலைஞர் விஷயம் அப்படியா…?
ஐந்து முறை ருசித்த முதல்வர் பதவி தரும் போதை …
மனைவி, துணைவி –
மகன்கள்,
மகள் (கள்…)
( பேரன்கள் வேறு …) என்று ஏகப்பட்ட வாரிசுகள்….
சொல்லி வைத்தாற்போல் அத்தனை பேருக்கும் கனவுகள்…
மத்திய, மாநில மந்திரி/முதல் மந்திரி கனவுகள்….!!!

முதலில் இவர் கனவே இன்னும் கலையவில்லை….
தேர்தலுக்குப் பிறகு நிச்சயம் முதல்வர் என்கிற கனவு…
பத்தும் பத்தாததுக்கு – எம்.எல்.ஏ.. திருவாளர் அன்பழகன்
வேறு பொதுக்கூட்டத்தில் கூறி விட்டார் –

” இன்னும் ஒரு வருடத்தில் கலைஞர்
தமிழக முதல்வர் ஆவார்…
ஆனால், எப்படி என்றெல்லாம் கேட்காதீர்கள் ” – என்று.

விடாப்பிடியாக உட்கார்ந்திருக்கும்
தந்தையை அகற்றுவது எப்படி …?
தான் போய் உட்காருவது எப்படி…? என்று
தீவிர கவலையில் சகல நேரமும் மகன் ஆழ்ந்திருக்க –

ஏகப்பட்ட வாரிசுகளை உருவாக்கி,
உலா வர விட்டு விட்டு,
“தனக்குப் பிறகு எப்படியாவது அடித்துக் கொள்ளட்டும் ”
தான் இருக்கும் வரை “இருக்கை”யை
தக்கவைத்துக் கொள்வது எப்படி…?
என்கிற சிந்தனையில் தந்தையும் வீழ்ந்திருக்க –

ஓபிஎஸ் அறிக்கை என்ன –
“சிறு சுழல்காற்று (…? )” அடித்தாலும் கூட,

கலகலத்து, கலைந்து விடக்கூடிய நிலையில் தானே
ஏற்கெனவே இருக்கிறது தந்தை-மகன் உறவு.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to டாக்டர் ராமதாஸ் சில சமயங்களில் நன்றாகவே காமெடி பண்ணுகிறார்….!!!

 1. selvarajan சொல்கிறார்:

  // திராவிடம் குறித்து பேசுகிறவர்கள் அனைவரையும் நம்ப வேண்டாம்- கருணாநிதி
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/all-movements-are-not-dravidians-says-karunanidhi-256412.html // இது ரோமாபுரிப் பாண்டியன் தொலைக்காட்சித் தொடர் பாராட்டு விழாவில் கலைஞர் கூறிய செய்தி … தலைவருக்கு ” பாராட்டுவிழா ” என்றாலே குஷி கிளம்பிவிடும் — தேர்தல் முடிவு வந்து ஒருமாதம் கடந்த அதே நாளில் தான் ” திராவிடம் ” என்பதை கையில் எடுத்துள்ளார் — ஒருமாத காலாமாக தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் என்னென்னவோ குற்றச்சாட்டுகளை சொல்லி வந்தவர் — சில நாட்களுக்கு முன் மொழி பிரச்சனையாக சமஸ்கிருதத்தை எடுத்தார் — தற்போது திராவிடம் —
  டாக்டர் ராமதாஸ் நன்றாக ” காமெடி ” மட்டுமா பண்ணுகிறார் … ! மேலே உள்ள கலைஞர் செய்திக்கு தாங்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இடுக்கை பதிவிட்டு இருந்தீர்கள் — அதில் // டாக்டர் ராமதாஸ் மிக நன்றாகப் பேசுகிறார் – சில சமயங்களில் …. !
  Posted on மார்ச் 5, 2012 by vimarisanam – kavirimainthan.. // நல்ல விளக்கம் ராமதாஸ் கூறுகிறார் … அல்லவா …. ?

 2. நெல்லைத்தமிழன் சொல்கிறார்:

  எனக்கும் அன்பழகன் சொன்னதுபற்றிக் கவலை உண்டு. ஜெ வுக்காக பெரிய வட நாட்டு ஜோதிடரிடம் அந்தக் காலத்திலேயே வலம்புரிஜான் காட்டியபோது, அவர், 2016வர ஜெவை யாராலும் அரசியலில் அசைக்க முடியாது. அவர் 2016வரை செல்வாக்கோடு திகழ்வார் என்று சொல்லியிருக்கிறார். வெளியில் திராவிடம், கடவுள் மறுப்பு, இந்து எதிர்ப்பு என்று பேசுபவர்களெல்லாம்தான் ஜோதிடம், பக்தி என்பதில் மூழ்கி இருப்பவர்களாயிற்றே. அதனால் அந்த ஜோதிடத்தை அன்பழகனும் நம்புகிறார், அண்ணன் (தங்கை) எப்போ கிளம்புவார் திண்ணை எப்போ காலியாகும் என்று எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார் போலிருக்கிறது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.