( பகுதி-3 ) புதைந்து, மறைந்த 1200 வருட ரகசியங்கள் …

.

.

பகுதி-1-ல் இந்த இடுகையை துவக்கிய பகுதிக்கு
இப்போது போகிறோம்.

கி.பி.1250 -களில் உருவாக்கப்பட்ட “அங்கோர் வாட்”,
கடந்த 600 ஆண்டுகளுக்கும் மேலாக உலகின்
பார்வையிலிருந்து மறைந்திருந்தது என்றும்
1930-களில் தான், முதன் முதலில் ஆராய்ச்சியாளர்களின்

பார்வையில் பட்டு, 1950-க்குப் பிறகு தான் வெளியுலகிற்கு
இதன் விவரங்கள் தெரிய வந்திருந்தன என்றும்
பேசிக் கொண்டிருந்தோம்.

அந்த கோயில்களை உருவாக்கிய மக்கள்
என்ன ஆனார்கள்… ?
கடந்த 600 ஆண்டுகளாக இருண்ட
மலை-காடுகளுக்கிடையே
புதைந்து போயிருந்த இந்த கோயில்களை –
உருவாக்கிய மக்கள் யார்,
அவர்கள் கலாச்சாரம் என்ன,
அவர்களுக்கு என்ன ஆனது…?
என்பன போன்ற கேள்விகள்
விடை கண்டுபிடிக்கப்படாமலே இருந்தன…

இவற்றை அறியும் முயற்சியில் பல தேசத்து
புதைபொருள் ஆய்வாளர்களும் ஆர்வத்துடன்
ஈடுபட்டிருந்தனர்.

2012-ல் இதில் ஒரு break கிடைத்தது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அகழ்வாராய்ச்சியாளர்
டாக்டர் டேமியன் இவான்ஸின் குழுவினர் –

ஹெலிகாப்டரிலிருந்து லேஸர் கதிர்களை பூமிக்கு அனுப்பி,
அவை பூமியின் தளத்தில் புகுந்து, மீண்டும் பிரதிபலிக்கும்
தொலைவை வைத்து,

பூமியின் அடுக்குகளுக்குள் ஓய்ந்திருக்கும் / ஒளிந்திருக்கும்
நிலப்பரப்பை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியது.

1901 சதுர கிலோமீட்டர் அளவுக்கு எடுக்கப்பட்ட
இந்த ஆய்வு தான், இன்று வரை அகழ்வாராய்ச்சி
உலகில் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய ஆய்வாகக்
கருதப்படுகிறது.

2012-ல் இவர்கள் நடத்திய Lidar (Light Detection and
Ranging) டெஸ்ட்டில் – அங்கோர்வாட்டின்
“மகேந்திரபர்வதா” மலைச்சிகரம் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த வெற்றியின் பலனைக் கண்டு, ஐரோப்பிய
ஆராய்ச்சிக் கழகம், தொடர்ந்து இந்த பெரிய ஆய்வை
மேற்கொள்ள இவான்ஸின் குழுவுக்கு நிதியுதவி செய்தது.

ஆனால், அந்த நிதியுதவி, உலகுக்கு இத்தனை பெரிய
தகவலைக் கொடுக்கும் என்று ஐரோப்பிய ஆராய்ச்சிக்
கழகத்துக்கும் சரி, ஆராய்ச்சியாளர்களுக்கும் சரி –
அப்போது தெரிந்திருக்கவில்லை.

2015ல் நடைபெற்ற lidar ஆராய்ச்சியின் முடிவில்,
தற்போதைய மகேந்திரபர்வதா மலைக்கு அடியில்
ஒரு மிகப்பெரிய நகரமே உறைந்துகிடப்பது
கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

அதாவது, இதுவரை கண்டுபிடிக்கப்பட்டிருக்கும்
அங்கோர்வாட் கோவில்களைவிட நான்கு மடங்கு
பெரிய நிலப்பரப்பு. சுமார் 900 முதல் 1400 ஆண்டுகள்
வரை பழமையான இந்த நகரம் கம்போடியாவின் காடுகளுக்குக்
கீழே உறங்கிக் கொண்டிருக்கின்றன
என்று தெரிவித்திருக்கிறார் ஆராய்ச்சியாளர் இவான்ஸ்.

‘யாருக்கும் தெரியாத மிகப்பெரிய நகரங்கள்
கொம்பாங் ஸ்வே-யின் ப்ரே கான் காடுகளுக்குக் கீழே
கிடக்கின்றன. பினோம் குலேனில் மஹேந்திரபர்வதா
மலையை மட்டும்தான் 2012-ல் கண்டுபிடித்திருந்தோம்.

ஆனால், இந்தமுறை மிகப்பெரிதாக கண்டு
பிடித்திருக்கிறோம். கம்போடியாவின் பினோம் பென்
நகர அளவுக்குப் பெரியது” என்று தனது கண்டுபிடிப்பு
குறித்து பெருமையாகச் சொல்கிறார் இவான்ஸ்.

இது குறித்த சில புகைப்படங்கள் கீழே –

98-06

jungle-camp

244

4699265_orig

Beng-Mealea-bn

cambodia-cache-11

CAMBOGIA-KHMER-CITTA-SCOPERTA-2

Sydney University Professor Damien Evans discovers a new temple site and oncovers a previously unknown style of pillar.

Sydney University Professor Damien Evans discovers a new temple site and oncovers a previously unknown style of pillar.

( தொடர்கிறது – பகுதி-4-ல் )

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to ( பகுதி-3 ) புதைந்து, மறைந்த 1200 வருட ரகசியங்கள் …

 1. ANT சொல்கிறார்:

  தற்கால நிலையை விளக்கும் விதமாக தொடர்புடைய நிழல்பட்ங்களுடன் புதிய பயனள்ள தகவல்கள். கல்வெட்டு எழுத்துகள் தமிழ் போல் தெரிந்தாலும் அது ”கிமோர்” என அழைக்கப்படுகிறது. இறுதியாக இந்த பகுதியில்தான் முதன் முதலாக பூஜ்ஜியம் பயன்படுத்தியது (இந்தியாவில் அல்ல) ஆதரத்துடன் கண்டுபிடிக்கப்பட்டள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அருவிபாறைகளில் உள்ள சிற்பங்கள் இன்னும் குற்றாலம் அருவிகளில் காணஇயலும் ஒரே வேறுபாடு அவை சித்தரிக்கும் ஆன்மீக வடிவங்கள் மட்டுமே. மேலும் ஒரு தகவல், பாளையங்கோட்டை அருகே அமைந்துள்ள ஆதிச்சநல்லுாரில் புதை பொருள் ஆராய்சியில் கிடைக்கப்பெற்ற மண்வெட்டி (மம்பட்டி) வடிவமும் இன்றும் அந்தமான் தீவு பழங்குடி மக்கள் பயன்படுத்தும் மண்வெட்டி வடிவன கருவியும் ஒன்றே (படங்கள் youtube-ல் உள்ளது. ஆதிச்சநல்லுார் மண்வெடடி படங்கள் தினத்தந்தி ஞாயிறு பதிப்பில் காணக்கிடைக்கிறது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப ANT,

   // இந்த பகுதியில்தான் முதன் முதலாக பூஜ்ஜியம் பயன்படுத்தியது (இந்தியாவில் அல்ல) ஆதரத்துடன் கண்டுபிடிக்கப்பட்டள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. //

   இந்த தகவலை நீங்கள் எங்கே பார்த்தீர்கள் …?
   ஆதாரங்களாக எவற்றை கூறப்பட்டுள்ளது…?

   தயவுசெய்து சொல்ல முடியுமா…

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • ANT சொல்கிறார்:

    There are number of references available on net, however, the following is a reliable source that shows the zero discovered is older than Gwalior (India) zero “Search for the world’s first zero leads to the home of Angkor Wat” and the link is:
    http://www.sciencealert.com/search-for-the-world-s-first-zero-leads-to-the-home-of-angkor-wat

    • ANT சொல்கிறார்:

     This article also describe the Mayan system of zero From the article one can understand that means zero is nothing but a representation for “Nothing” only the “glyph” may vary. Remember both Cambodia and Peru are related to Tamils. The “pyramid” structure found in Cambodia and Peru are also similar at the same time both are faraway by location and separated by sea.

    • ANT சொல்கிறார்:

     Indonesia too have similar pyramids, like, the mayan pyramids in Peru. Notice that in Tamil Nadu local demi gods are represented in pyramid like structure till date. Main god with bigger size and others with vary in small size (One can found from southern districts.)

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பரே,

      இதைப்பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன…..?

      ——————————————-

      The concept of zero as a digit in the decimal place value notation was developed in India, presumably as early as during the Gupta period (c. 5th century), with the oldest unambiguous evidence dating to the 7th century.[12]

      The Indian scholar Pingala (c. 200 BC) used binary numbers in the form of short and long syllables (the latter equal in length to two short syllables), a notation similar to Morse code.[13] Pingala used the Sanskrit word śūnya explicitly to refer to zero.[14]

      The earliest text to use a decimal place-value system, including a zero, the Lokavibhāga, a Jain text surviving in a medieval Sanskrit translation of the Prakrit original, which is internally dated to AD 458 (Saka era 380). In this text, śūnya (“void, empty”) is also used to refer to zero.[15]

      The origin of the modern decimal-based place value notation can be traced to the Aryabhatiya (c. 500), which states sthānāt sthānaṁ daśaguṇaṁ syāt “from place to place each is ten times the preceding”,[16][16][17][18]

      The rules governing the use of zero appeared for the first time in the Brahmasputha Siddhanta (7th century). This work considers not only zero, but negative numbers, and the algebraic rules for the elementary operations of arithmetic with such numbers. In some instances, his rules differ from the modern standard, specifically the definition of the value of zero divided by zero as zero.[19]

      (https://en.wikipedia.org/wiki/0_(number) )

      —————————————–

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

 2. ANT சொல்கிறார்:

  What Wikipedia says are usage of “zero” as word only. The representation for zero with glyph is the matter for discussion. All over word people know that there is “nothing” like: things come down if it thrown into sky. Because they do not used separate symbol that does not mean that they do not know “nothing” because it is everybody known fact and no proof is required. It crux is the usage with representation with a “glyph”. Wikipedia itself says that it used from 5th century and evidence found in 7 century. Moreover, the article refers to the exclusive use of digit zero’s “glyph” in Angkor Wat, Cambodia. The evidences not only found in India, Camdodia but also in Peru. Tamils are linked with all these three countries by sea. Tamil travelled to Europe through east and at the same time through west via meditrian sea there by made a circular visit to west it not necessary to orbit the earth like Megalon. In fact some source says that Christopher Columbus used Tamil’s map obtained through an Italian family.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.