( பகுதி – 4 ) புதைந்து, மறைந்த 1200 வருட ரகசியங்கள் …

.

outer image of mahendraparvata

(மஹேந்திரபர்வம் -வெளித்தோற்றம் …… )

mahendraparvata (1)

கம்போடியாவை ஆட்சி செய்துவந்ததாகச்
சொல்லப்படும் கிமெர் பேரரசு எப்படி வீழ்ந்தது?
அங்கிருந்த மக்கள் என்ன ஆனார்கள்?
என்பது குறித்து பல யூகங்களும், செய்திகளும்
இருந்தாலும், இதுவரையிலும் எதுவும் ஆதாரபூர்வமாக
உறுதி செய்யப்படாத மர்மமாகவே இருக்கிறது…

கம்போடியாவுக்கு அருகேயிருக்கும் பேரரசுகள்
‘நாங்கள்தான் அவர்களை வீழ்த்தினோம்’ என்று
மார்தட்டிக் கொள்கின்றனர்.

இது வரையிலும்,
பேரரசுகளின் ஆக்கிரமிப்பால் கம்போடியர்கள்
தெற்குநோக்கி நகர்ந்துசென்று பிறகு
ஆழிப்பேரலையால் அழிந்ததாகக் கூறப்படும்
கூற்றே நிலைத்திருக்கிறது.

ஆனால், அதற்கு வாய்ப்பேயில்லை என்கிறார்
ஆராய்ச்சியாளர் இவான்ஸ். கம்போடியாவின்
தெற்குப்பரப்பில் அத்தகைய அடையாளங்கள் காணக்
கிடைக்கவில்லை என்பதை அடித்துச் சொல்கிறார்.
எனவே, அங்கு வாழ்ந்த மக்களுக்கு என்ன ஆனது?
என்பது தற்போது மிகப்பெரிய கேள்வியாகவே
ஆராய்ச்சியாளர்களின் முன்பு நிற்கிறது.

கம்போடிய காடுகளில் ஆங்காங்கு காணப்படும்
சிற்பங்களை, கவனித்து, கணித்திருந்த
ஆராய்ச்சியாளர்களுக்கு,
இந்த ஆய்வின்முடிவு அந்த சிற்பங்கள், சிதைவுகள்,
மிகப்பெரும் நகரத்தின்மீது வைக்கப்பட்டிருந்த சிலைகளாக
இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

ஹெலிகாப்டரிலிருந்து அனுப்பிய லேசர் கதிர்களின் மூலம்
கிடைத்திருக்கும் தகவலின்படி, மேலும் ஒரு மிகப்பெரிய
உண்மையைக் கண்டறிந்திருக்கிறார் இவான்ஸ்.
காடுகளுக்குக்கீழ் மறைந்திருக்கும் அந்த நிலப்பரப்பு,
அங்கோர்வாட்டைப் போன்ற அமைப்பையே
கொண்டிருப்பதுதான் அது.

கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக இதே காடுகளின்
மேல் பலமுறை பறந்து, கடந்து சென்றிருக்கிறோம்.
ஆனால், எப்பேற்பட்ட அரிய நகரம் ஒன்று இங்கு
புதையுண்டு கிடைக்கிறது என்பதை நாங்கள் கொஞ்சம் கூட
உணரவே இல்லை. லிடார் சோதனைகளுக்குப் பிறகு,
கிடைத்த புள்ளிகளை எல்லாம் ஒன்று சேர்த்து
பார்க்கும்போது தான் இந்த மாபெரும் உண்மை புரிய
வருகிறது என்கிறார் ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்
இவான்ஸ்.

_77767713_map-976

(Lidar – a sophisticated remote sensing technology that is revolutionising archaeology, especially in the tropics.
Mounted on a helicopter criss-crossing the countryside, the team’s lidar device fired a million laser beams every four seconds through the jungle canopy, recording minute variations in ground surface topography.
The findings were staggering.

Lidar technology has revealed the original city of Angkor –
red lines indicate modern features including roads and canals )

மிகப்பெரிய மதில்களால் சூழப்பட்டிருக்கும்
அந்நகரத்துக்குள் பல இடங்களில் சமவெளிப் பரப்பு
காணப்படுகிறது. அவை தோட்டங்களாக, நெல் வயல்களாக,
இருந்திருக்கக்கூடும் எனக் கருதுகிறார்.

அங்கோர்வாட் கோவிலுக்கும்,
புதிதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கும்
‘தொலைந்த நகர’த்துக்கும் இருக்கும் ஒரே வேறுபாடு
இடையில் இருக்கும் ஒரு அகழிதான்.
மற்ற எல்லா கட்டடங்களும் காலப்போக்கில்
சிதைந்து அல்லது இயற்கையால் ஆட்கொள்ளப்பட்டுவிட
அங்கோர்வாட் மட்டும் எப்படிப் பிழைத்தது? என்ற
கேள்விக்குத்தான் முதலில் விடை கண்டுபிடித்தனர்
ஆராய்ச்சியாளர்கள்.

அதற்கு விடையைக் கொடுத்தது அந்த அகழி.
காலப்போக்கில் இயற்கையால் பெருகிவந்த காடு,
அங்கோர்வாட் கோவிலின் அகழியை நெருங்கியபின்
அப்படியே நின்றுவிட்டது. அதைமீறி அவற்றால்
வரமுடியவில்லை. அங்கோர்வாட் கோவிலின்
உட்புறத்தில் கூட கற்களை நகர்த்தி வளர்ந்திருக்கும்
மிகப்பெரும் மரங்களைக் காணலாம். ஆனால்,
நிலையான மணல்பரப்பு கிடைக்காதததே –

அந்த அகழி வரை, துரத்திக்கொண்டே வந்த
அந்த அடர்ந்த காடுகள், அங்கோர்வாட் கோவிலை
நெருங்காததற்கு காரணம் என ஆராய்ச்சியாளர்கள்
இப்போது சொல்கிறார்கள்.

Angkor-Wat-from-the-air

‘லாஸ்ட் சிட்டி’ என அழைக்கப்படும் தற்போது
கண்டு பிடிக்கப்பட்டுள்ள நகரம், காடுகளின் பாதங்களுக்குள்
தஞ்சமடைந்து விட்டது. பல நூற்றாண்டுகள் ஆகவே,
பெரும்பாலும் உள்ளேயே புதைந்து விட்டது.

அங்கோர்வாட் கட்டமைப்பின் மிகச் சிறந்த
அடையாளமாக நீர் மேலாண்மை காணப்படுகிறது.

அந்தக் காலத்திலேயே சுரங்கங்கள் தோண்டி வருடம்
முழுக்க நீர் கிடைக்கும்படி செய்திருக்கின்றனர்…

அங்கோர்வாட்டில் இல்லாத பல சிறப்புகள்
காடுகளுக்கடியில் சூன்யமாகக் கிடக்கும்
அப்பெருநகரத்தில் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள்
நம்புகிறார்கள்…

லிடார் சர்வே மூலம், இந்த காடுகளுக்கிடையேயும்,
அதன் அடித்தளத்திலும், பல தெருக்களையும்,
கால்வாய்களையும், குளங்களையும் அடங்கிய
ஒரு பெரிய நகரம் புதைந்திருப்பது தெரிய வந்தது.

லிடார் சர்வே மூலம் மேலும் கிடைத்த தகவல்களை
அடிப்படையாகக் கொண்டு, இந்த டீம், தரைவழியே,
காடுகளுக்கு ஊடாக பயணத்தை துவக்கியது.
ஆடுகள் செல்லக்கூடிய அளவிற்கே இருக்கக்கூடிய
சிறிய தடங்களில் மோட்டார்சைக்கிள்கள் மூலம்
உள்ளே சென்றனர். முக்கியமாக வாய்க்கால்களின்-

நீர்ப்பாதைகளையொட்டி கரையோரமாகச்
சென்றிருக்கின்றனர்.

hidden city -aj

1586

phnom-kulen

முதல் மூச்சிலேயே, சிதலமடைந்த நிலையிலுள்ள
ஐந்து கோவில்களை கண்டிருக்கின்றனர். இன்னும்
தொடர்ந்து சென்றதில் சுமார் முப்பது சிதிலமடந்த
கோயில் கட்டிடங்களை அவர்களால் காண முடிந்தது.

வெளியே உச்சி மட்டும் தெரிந்த 36 கட்டிடங்களின்
அடியே ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு நகர அமைப்பு
மண்ணுக்கு அடியே புதந்திருப்பது தெரிய வந்தது.

Post holes on an old temple site.

Post holes on an old temple site.

2013-07-27_1646-1440x810

இதற்கு மேலும் ஆராய்ச்சியை தொடர, மண்ணைத்
தோண்டி, அகழ்வாராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும்.
அது அடுத்தகட்ட பணியாக இருக்கும்.

(தொடர்கிறது – பகுதி -5-ல் )

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to ( பகுதி – 4 ) புதைந்து, மறைந்த 1200 வருட ரகசியங்கள் …

 1. Raghavendra சொல்கிறார்:

  k.m.sir,

  கேட்க, காணவே அதிசயமாக இருக்கிற விஷயங்கள் இவை.
  தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்கிறீர்கள்.
  உங்கள் உழைப்பை பாராட்டுகிறேன்.

 2. Dr.R.Mahadevan சொல்கிறார்:

  Mr.Kavirimainthan,

  It is amazing.

  I am a regular reader of your blog
  though I do not write any comments.
  I am astonished at your work.
  I admire and appreciate your taste in variety of subjects
  writing skills and tireless efforts.
  May God bless you with good health.
  All the best.
  thank you.

 3. Sridhar சொல்கிறார்:

  KM sir, Wonderful work. thanks for your passion to read and share.

  I thought sharing the below will be a appropriate to know about an existing culture at a different place.

  பாலி (இந்தோனேசியா)

  இந்துக்களின் சொர்க பூமி

  உலகின் மிகப் பெரிய இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவில் உள்ள ஒரூ தீவுதான் பாலி (BALI).

  இங்கே 93சதவீத மக்கள் இந்துக்கள். 42லட்சம் இந்துக்களின் தாயகமாக பாலி விளங்குகிறது.

  ஒருகாலத்தில் ஹிந்துராஜ்யமாக இருந்த இந்தோனேசியாவில், இஸ்லாமிய படையெடுப்பிற்கு பின் பெரும்பான்மையான மக்கள்
  முஸ்லிம்களாக மாற்றப்பட்டனர்.

  இஸ்லாமியர்கள் மஜாபஹிட் (Majapahit ) எனும் கடைசி இந்து மன்னரை வீழ்த்தியபிறகு இந்து மதத்தைவிட்டு மாறாமல் இருந்த மக்கள் பாலி தீவுக்கு குடிபெயர்ந்தனர்.

  பாலியை பற்றிய சுவாரசியமான தகவல்கள்.

  1. இங்கே ஒவ்வொரு மார்ச் மாதத்தில் ஒருநாள் மௌன விரதம் கடைபிடிக்கபடுகிறது.

  Nyepi day என சொல்கிறார்கள்.

  மார்ச் 12ம்தேதி இந்த மௌனதினம் வருகிறது.

  இந்துகளின் பண்டிகைபோன்ற அந்த நாளில் இந்தோனேசியா எங்கும் விடுமுறை அளிக்கபடுகிறது.

  காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணிவரை எந்த போக்குவரத்தும் இருக்காது.

  பன்னாட்டு விமானநிலையமான Denpasar (bali) விமான நிலையம்கூட மூடப்பட்டு இருக்கும்.

  யாரும் பேசிக்கொள்ள மாட்டார்கள்.

  வீட்டில் இருந்தபடியே தியானம்செய்வார்கள்.

  2. பாலியில் இருக்கும் இந்து கலாச்சாரம் இந்திய ரிஷிகளிடமிருந்து வந்ததுதான்.

  பாலி பள்ளிகளில் இன்றும்கூட ரிஷிகளைபற்றிய பாடங்கள் இருக்கின்றன.

  புராணங்களில்வரும் அகஸ்திய, மார்கண்டேய, பரத்வாஜ ரிஷிகளைபற்றி இந்தியாவில் யாருக்கும் தெரியாதநிலையில், இந்த ரிஷிகளைபற்றி பாலி குழந்தைகள்கூட தெரிந்துவைத்து இருக்கிறார்கள்.

  3. பாலியில் ஆண் , பெண் என இருபாலருக்கும் தேசிய உடை ‘வேஷ்டி’ தான்.

  எந்த ஒரு பாலிகோவிலுக்கும் வேஷ்டி அணியாமல் ஆணோ, பெண்ணோ உள்ளே செல்லமுடியாது.

  இந்தியாவில்கூட சில கோவில்களில் தான் பாரம்பரியஉடை கட்டாயமாக உள்ளது (குருவாயூர் போன்ற).

  ஆனால் பாலியில் அனைத்துகோவில்களிலும் நமது உடை அணிந்துதான் செல்லவேண்டும்.

  4. பாலியின் அரசியல் சமூக, பொருளாதார, கட்டமைப்பு ரிஷிகள் உருவாகிய tri-hita-karana எனும் கோட்பாட்டின் படிதான் அமைந்துள்ளது.

  அதை தான் அவர்கள் தங்கள் வாரிசுகளுக்கும் சொல்லி கொடுக்கிறார்கள்.

  Parahyangan – Pawongan – Palemahan என பொருள்படும். tri-hita-karana என்பது சமஸ்கிருதம்.

  5. Trikala Sandhya என்பது சூரியநமஸ்காரம்.

  அணைத்து பாலிபள்ளிகளிலும் கட்டயாமாக மூன்றுவேளை சூரியநமஸ்காரம் செய்கிறார்கள்.

  அதேபோல மூன்றுவேளையயும் ் காயத்ரி மந்திரத்தை அவர்கள் பள்ளியில் சொல்ல வேண்டும்.

  பொதுவாக பாலிரேடியோவில் மூன்றுவேளை சூரிய நமஸ்காரம் செய்யவேண்டிய நேரத்தில் அதை ஒலிபரப்புவார்கள்.

  6. பாலி கோவில்பூசாரிகளின் சம்பளத்தை இந்தோனேசியா அரசாங்கமே கொடுக்கிறது.

  முஸ்லிம் மதநாடான இந்தோனேசியாவில் அனைத்து மதகோவில் பூசாரிகளின் சம்பளத்தை அரசேகொடுக்கிறது.

  ஆனால் இந்தியா மதசார்பற்ற நாடு, இருந்தாலும் முஸ்லிம்களுக்கு மட்டுமே ஹஜ்செல்ல பணத்தை வாரிஇறைக்கின்றது.

  7. இந்தோனேசியாவின் மூதாதையர்கள் அனைவரும் இந்துக்களே, அதனால் அவர்களின் பண்பாடுகளில் இந்தியகலாசாரமே அதிகம் கலந்துள்ளது.

  8. உலகில் அரிசிவிளைவிக்கும் நாடுகளில் இந்தோனேசியா முக்கிய பங்கு வகிக்கிறது, பாலிதீவு முழுவதும் அரிசி வயல்கள்தான் இருக்கின்றது.

  பாலிமக்கள் விளைந்த அரிசியை முதலில் ஸ்ரீதேவி, பூ தேவி (Shri Devi and Bhu Devi ) ஆகிய தெய்வங்களுக்குதான் படைக்கிறார்கள்.

  அனைத்துவயல்களிலும் இந்த இரண்டு தெய்வங்களுக்கும் கோவில் இருக்கும், விவசாயிகள் இந்த இருதெய்வங்களை வணங்கிய பிறகுதான் விவசாய தொழிலுக்கு செல்வார்கள்.

  9 வது நூற்றாண்டிலேயே விவசாய மற்றும் நீர்பாசன விதி முறைகளை இந்து பெரியோர்கள் கற்றுக்கொடுத்து இருக்கிறார்கள்.

  அதற்க்கு Subak System என பெயர்.

  இங்கே நீர்பாசனம் முழுவதும் கோயில் பூசாரிகளின் கட்டுபாட்டில்தான் இருக்கும்.

  உலகவங்கியே Subak System பின் பற்றுமாறு மற்ற நாட்டினருக்கு அறிவுரை வழங்கியுள்ளது குறிப்பிட தக்கது.

  இந்தியர்கள் கொண்டுவந்த இந்த விஞ்ஞானம் இன்று இந்தியாவில் இல்லை.

  9. பாலி இந்துக்கள் பூஜை செய்யும்பொழுது பிரிண்ட் செய்யப்பட்ட புத்தகங்களை வாசிப்பதில்லை.

  இன்றும்கூட அவர்கள் கையால் எழுதப்பட்ட ஓலைசுவடியையே (Lontar) பயன் படுத்துகிறார்கள்.

  ராமாணயம் அனைவருக்கும் தெரிந்துதிருக்கும்.

  ராமாணய ஓலை சுவடியை நல்ல நாட்களில் எடுத்துவரும் திருவிழா நடை பெறும்.

  10. அனைத்து திருவிழாகளிலு ம் பாலிநடனம் ஆடுவார்கள், அதில் பெரும்பாலும் இராமாயண இதிகாசங்களை கதைகளாக சொல்வார்கள்.

  இந்துக்களின் சொர்க்கபூமி பாலி என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

  உலகின் அழகியதீவுகளில் பாலி முக்கிய இடம்வகிக்கிறது.

  அழகிய இடங்கள், அமைதியான வாழ்க்கைமுறை, பாரம் பரியமிக்க ஹிந்துகலாச்சாரம், நடனம், இசை என இந்த தீவு உலக சுற்றுலாபயணிகளை அதிகம் கவருவதில் ஆச்சிரியம் ஏதும் இல்லை.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   அன்புள்ள ஸ்ரீதர்,

   அற்புதமான தகவல்கள்.
   “பாலி” பற்றி நீங்கள் கொடுத்திருக்கும் தகவல்கள்
   மிகவும் சிறப்பானவை.
   மனதிற்கு மிகவும் திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

   இரண்டு-மூன்று வருடங்களுக்கு முன்னர் நான் இந்தோனேஷியா
   பற்றி இதே தளத்தில் விவரமாக ( 3-4 பகுதிகள் கொண்டது ) ஒரு இடுகை
   எழுதி இருந்தேன். அதில் பாலி பற்றி கூட ஓரளவு விவரங்கள்
   தந்திருந்தேன். ஆனால் நீங்கள் இப்போது கொடுத்திருக்கும்
   அளவிற்கு இல்லை.

   அப்போது நிறைய தகவல்களை சேகரிக்க முயற்சித்தேன்.
   ஆனால், இந்த அளவிற்கு எனக்கு கிடைக்கவில்லை….

   நிறைய படிக்க வேண்டும்…
   நமக்கு கிடைப்பவற்றில் பயனுள்ளவற்றை மற்றவர்களுடன்
   பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது என் எண்ணம்.

   இது போன்ற தகவல்கள் எப்போது கிடைத்தாலும் அனுப்புங்கள்.
   பின்னூட்டத்தில் போடுவதற்கு பதிலாக, இடுகையாகவே
   பதிவிடுகிறேன்…, அதிகம் பேரின் கவனத்திற்கு செல்லும்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 4. நெல்லைத்தமிழன் சொல்கிறார்:

  ஸ்ரீதர் சொல்வது சரிதான். நான் இரு வருடங்களுக்கு முன்பு பாலி சென்றிருந்தபோது, இந்துமதக் கலாச்சாரம் அங்கு வேரூன்றி இருப்பதைக் கண்டேன். கணபதி சிலைகளாகட்டும், கோவில்களாகட்டும் (அங்கு ‘நிறைய வீடுகளிலேயே கோவில்கள் போன்று சுற்றுப்புறச் சுவர்களுக்குள் உண்டு. இது கேரளத்தில் இருப்பதைப்போன்று எனக்குத் தோன்றியது. ராமாயணம் (அதன் சிதைந்த வடிவில்) அனேகமாக எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. (தாய்லாந்து ஊரும் மன்னர் பெயரும், அவர் மணிமகுடம் தரிக்கும்போது பாடும் சிதைந்த திருப்பாவையும், நமக்கு ‘நினைவுக்கு வரவேண்டும்). அவர்களின் நாட்டியக் கலையும் ஒரு வகையில் இந்துமதச் சார்பானதுதான். கா.மை. அவர்களுக்கு விரைவில் சில புகைப்படங்களை அனுப்புகிறேன்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப நெல்லைத்தமிழன்,

   கொடுத்து வைத்தவர் நீங்கள்..
   வித்தியாசமான இடங்களுக்கு பயணிக்கிறீர்கள்….
   எனக்கும் புதிய இடங்களுக்கு செல்வதில் மிகுந்த ஆர்வம் உண்டு…
   இளைஞனாக இருந்தபோது, இந்தியா முழுவதும் நிறைய
   சுற்றி இருக்கிறேன்…. வெளிநாடுகளில் “சிங்கப்பூர்” மட்டுமே…

   இப்போதும் பயணம் போவதில் ஆர்வம் உண்டு….
   ஆனால்…..!!!

   உங்கள் புகைப்படங்களுக்காக காத்திருப்பேன்.
   பிரசுரிக்கலாம் என்று சொன்னால்
   kavirimainthan@gmail.com -க்கு அனுப்புங்கள்.
   இடுகையாகவே பதிவிடுகிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.