டாக்டர் சு.சுவாமி – கள் குடித்த குரங்கை, தேள் கொட்டினால் …..

ss comedy-1

ss comedy-2

மூச்சு முட்ட கள்ளைக் குடித்த குரங்கை –
தேளும் கொட்டினால் அது என்னவெல்லாம் செய்யும்….?
எப்படியெல்லாம் ஆட்டம் போடும்….

உன்னைப்போல் புத்திசாலி உலகில் உண்டா…
இந்திரனே, சந்திரனே என்று கொண்டாடி,
ஆர்.எஸ்.எஸ். சும், பாஜகவும் சு.சுவாமியை
உயரத்தூக்கி பிடித்ததன் விளைவு ……

– நிதியமைச்சர் பதவியை நிர்வகிப்பதற்கு
என்னைவிட வேறு யாருக்கு தகுதி இருக்கிறது….?
என்று கேட்டு –

அது கிடைக்காத வெறியில் –

– என்ன செய்கிறோம், யாரைக் கடிக்கிறோம்
என்கிற சிந்தனையே இன்றி, மனம்போன போக்குக்கு
வெறி பிடித்த குரங்கு யாரை வேண்டுமானாலும்
கடிக்கிறது – தாக்குகிறது….

முதலில் அது குறிவைத்து தாக்கியது
நிதியமைச்சர் திரு.அருண் ஜெட்லியை…..
ஜெட்லியின் அஸ்திவாரம் பலமாக இருந்தது –
எனவே, தாக்குதல் பலனளிக்கவில்லை……

அடுத்த குறி – ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன்…
பாவம், குரங்குக்கு இணையாக கீழே இறங்கி வந்து
சண்டை போடத்தெரியாத ஜென்டில்மேன்…
மோடிஜி உதவிக்கு வருவாரென்று எதிர்பார்த்தார்….
உதவி கிடைக்கவில்லை…

மோடிஜியின் மவுனம் குரங்குக்கு வலுவும்,
திமிரும் சேர்த்தது…

தாக்குதல் உக்கிரமாகத் தொடர்ந்தது –
வேறு வழியின்றி, அவமானப்பட்டு அசிங்கப்படுவதை
எதிர்கொள்ள முடியாமல், தானாகவே முன்வந்து
பதவி விலகுவதாக அறிவித்தார் உலகப்புகழ் பெற்ற
பொருளாதார நிபுணரான ரிசர்வ் வங்கியின் கவர்னர்…

அவர் தொடர்வதை மோடிஜி அரசு விரும்பவில்லை
என்றால், அவரிடம் நேரடியாகவே மிகவும் கவுரவமான
முறையில், நாங்கள் மாற்றம் செய்ய விரும்புகிறோம்
என்று தெரிவித்திருக்க வேண்டும்..

அந்த கவுரவமான வழியை பாஜக அரசு கடைபிடிக்காததன்
விளைவு, தான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் –
எல்லாரும் தனக்கு பயப்படுகிறார்கள் என்கிற
நினைப்பை குரங்குக்கு அதிகப்படுத்தியது.

விளைவு – இன்று காலை அடுத்த குறி மீது தாக்குதல்…
( இதிலும் ultimate aim திரு.அருண் ஜெட்லி தான்.
ஆனால், அவர் மீது நேரடியான தாக்குதல் நடத்தாமல் – )

அவரது முதன்மை பொருளாதார ஆலோசகர் –
( Chief Economic Adviser to the Government of India )
திரு.அர்விந்த் சுப்ரமணியன் மீது தாக்குதல்…

அர்விந்த் சுப்ரமணியன் ஒரு அமெரிக்க ஏஜெண்ட்…
அவரை உடனடியாக பொருளாதார ஆலோசகர்
பதவியிலிருந்து தூக்கியெறிய வேண்டும்….
-இது தான் டிமாண்ட்.

யார் மீது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தவும்,
அவமானப்படுத்தவும் –
இந்த குரங்கை அனுமதிக்கும் போக்கு
மத்திய அரசின் கோழைத்தனத்தை தான் பிரதிபலிக்கிறது.

தனக்கு விருப்பமானதை அரசு செய்வதை
யார் தடுக்கிறார்கள்….?
ரிசர்வ் வங்கி கவர்னர் விஷயத்திலோ,
பொருளாதார ஆலோசகர் விஷயத்திலோ –
மாற்ற வேண்டும் என்று அரசு நினைத்தால் –
அதை வெளிபடையாகச் சொல்லி விட்டு,
செய்ய வேண்டியது தானே….?

மத்திய அரசு தானாகவே இந்த முடிவுகளை
எடுக்க விரும்புகிறதா ?
அல்லது குரங்கின் ப்ளாக்மெயிலுக்கு
பயப்பட்டு பணிகிறதா…?

மத்திய அரசில் முடிவுகளை எடுப்பவர் யார்….?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

22 Responses to டாக்டர் சு.சுவாமி – கள் குடித்த குரங்கை, தேள் கொட்டினால் …..

 1. B.Venkatasubramanian சொல்கிறார்:

  கே.எம்.

  ஜாக்கிரதையாக எழுதுங்கள். எந்த rule யாவது சொல்லி
  உங்களையும் உள்ளே பிடித்து போட்டு வழக்கு போட்டு
  விடப்போகிறார். வில்லாதி வில்லன் அவர்.
  .

 2. நெல்லைத்தமிழன் சொல்கிறார்:

  யாரேனும் சு.சுவாமியைத் தூண்டிவிடுகிறார்களா? பெரிய பொசிஷனில் இருப்பவர்களைப் பிடிக்கவில்லை என்றால் கௌரவமாக விலகச் சொல்லுவதுதான் நல்லது. அசிங்கப்படுத்தி அனுப்புவது நல்லதல்ல. ரகுராம் ராஜனைப் பற்றிச் சொல்ல சு.சுவாமிக்கு என்ன அருகதை என்று தெரியவில்லை. அவரும் அமெரிக்கா, சைனா என்று சுத்தி பணம் பார்த்தவர்தானே. அவருக்கும் சி.ஐ.ஏ உளவாளி மற்றும் சைனா உளவாளி என்று தானே முன்பு பெயர் வாங்கியுள்ளார்.

 3. LVISS சொல்கிறார்:

  Mr K M
  Contrary to what we are led to believe there were others who did not want Rajan to continue and happy to see him go —There was also another news which said that the govt wanted Rajan to take a two year time after September but he wanted a shorter term — The govt did not want a short term —

  http://timesofindia.indiatimes.com/india/Raghuram-Rajans-critics-happy-hes-calling-time-at-RBI/articleshow/52815122.cms

 4. LVISS சொல்கிறார்:

  There were other factors at work —Mr Swamy mentioned about a time bomb — Mr KM should enlighten us on this —

  http://timesofindia.indiatimes.com/india/Banks-wont-forget-him-too-soon/articleshow/52815240.cms

 5. Sundar சொல்கிறார்:

  please do see and understand the ground reality…. what is going on…. everyone is saying no business…. no money rotation…. something is going wrong here…. some intellectuals to do the needful…. we are not suppose to discuss in our country finance matters in funny way.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப சுந்தர்,

   நான் நண்பர் எல்விஸ் அவர்களுக்கு
   எழுதி இருப்பதைப் பார்க்கவும். அதே விளக்கம்
   உங்களுக்கும் பொருந்தும்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப எல்விஸ்,

   நான் இந்த விஷயத்தை எந்த கோணத்தில் அணுகுகிறேன்
   என்பதை நீங்கள் உணறவில்லை என்று தோன்றுகிறது.

   1) திரு ரகுராம் ராஜன், காங்கிரஸ் கூட்டணி அரசால்
   தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதால்,
   பாஜக அரசின் கொள்கைகளுக்கு முரணாக
   செயல்படுகிறார் என்றால் –

   அவரை தொடர்ந்து பதவியில் வைத்துக் கொண்டிருக்க
   வேண்டும் என்று நான் சொல்லவில்லை. பாஜக அரசுக்கு,
   தாங்கள் விரும்பும் ஒரு பொருளாதார நிபுணரை
   இந்த பதவியில் அமர்த்த எல்லா உரிமையும் இருக்கிறது.

   ஆனால் அதை எப்படி செயல்படுத்த வேண்டும்…?
   சம்பந்தப்பட்டவருடன், பிரதமரோ, நிதியமைச்சரோ
   கலந்து பேசி, தங்கள் எண்ணத்தை தெரியப்படுத்தி,
   விலகிக்கொள்ளச் செய்ய வேண்டும். இது மிக மிக
   நளினமாக, நுட்பமாக – அதி உயர்மட்டத்தில் செய்யப்பட
   வேண்டிய காரியம். இப்படி நடந்திருந்தால் நான் அதில்
   எந்த குறையையும் கண்டிருக்க மாட்டேன்..

   அப்படியா நடந்தது….?

   சு.சுவாமி ஒரு “பஜாரி”யைப் போல், தெருச்சண்டை
   போடுகிறார்… அவருக்கு குறை இருந்தால், ர.ரா.
   தொடர்வதில் எதிர்ப்பிருந்தால் – அவர் அதை சொல்ல
   வேண்டிய இடம் எது…?
   அவரது கட்சி தானே ஆள்கிறது…?
   பிரதமர் அவருக்கு அந்நியப்பட்டவரா…?

   2) அடுத்து திரு.அர்விந்த் சுப்ரமணியம் விவகாரத்தில் –
   அவரை தற்போதைய பதவிக்கு தேர்ந்தெடுத்து, நியமித்தது
   பாஜக அரசு தான்…. செப்.2014 – இதே மோடிஜி தான்….!

   அவர்கள் இவரை தேர்ந்தெடுக்கும்போது, இவரது பின்னணி
   தெரியாதா…? அவர் முன்னதாக, பொருளாதார
   விவகாரங்களில் எத்தகையை கொள்கைகளை
   கொண்டிருந்தார் என்பது தெரியாமலே தான் அவரை
   இந்த பதவியில் நியமித்தார்களா…?

   இப்போது, அவர் 2013-ல் அமெரிக்காவில் என்ன சொன்னார்
   தெரியுமா -என்று சு.சுவாமி நீட்டி முழக்குவது எதற்கு….?

   மேலே திரு.ரகுராம் ராஜன் விஷயத்தில் சொன்னது
   போலவே தான் – இப்போது அ.சுப்ரமணியம் வேண்டாம்
   என்றால் கூட – அது, அதி உயர்மட்டத்தில் – நாசூக்காக
   பேசித்தீர்க்கப்பட வேண்டிய விஷயம்.

   சு.சுவாமி போன்ற திமிர் பிடித்தவர்கள்
   “sack him” என்று ட்விட்டரில் சொல்வதன் மூலம்
   நடக்க வேண்டிய விஷயமல்ல இதெல்லாம்.

   -இந்த அளவிற்கு விஷயங்களை அசிங்கப்படுத்தும்
   சு.சுவாமியை கட்டுப்படுத்தும் பொறுப்பு யாருடையது…?
   பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் அவரை மீண்டும்
   பாஜகவில் சேர்த்துக் கொண்டது மோடிஜி தானே…?

   பாஜக மீதும், மோடிஜி மீதும் உங்களுக்கு அபிமானமும்,
   பக்தியும் இருக்கலாம். ஆனால், கண்களை மூடிக்கொண்டு
   எது நடந்தாலும், அதை நியாயப்படுத்த முயல்வது
   சரியல்ல என்பதை நீங்கள் இங்கு ஒப்புக்
   கொள்ளவேண்டும் – என்று நான் சொல்லவில்லை.
   உங்கள் மனதளவில்
   உணர்ந்தாலே போதுமானது.

   வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 6. LVISS சொல்கிறார்:

  Mr K M , Let us understand one thing very clearly –Whether he is in a party or not Mr Swamy will say what he wants to say publicly –No body can control him nor will he allow himself to be reined in — It was not Modi personally who took him into the party – It was a party decision —
  In the second link it is seen that the govt ,meaning the PM and the FM offerred ,Mr Rajan a full two year term which he couldnt take –What more do you expect the govt to do — They didnt do anything surreptitiously –They respected Rajan;s decision to go back to academia —

  Mr Aravind was Modi;s choice 100% despite the fact that he criticised the NDA’s budget –He was particular to have him as advisor –What the PM thinks is what matters as far as Mr Aravind is concerned –Others are free to express their opinions —
  Mr Modi has exhibited more than once that he doesnt hold any grudge against any of his detractors — Some of his appointments bear this out —

 7. Sureshkumar Parthiban சொல்கிறார்:

  Mr.Elvis,

  You mean to say any BJP Parliament Member can talk freely
  in whatever forum he likes, in whatever fashion he likes,
  criticise any Highest authority of Govt. /wings,
  express his opinion independently, even if it goes against
  the decided opinion of the Govt. or the Prime Minister ?

  And neither Leader of the Govt.
  nor Leader of the Party will not advise him to behave.

  Dont you yourself think it is absurd ?

  You are conveniently forgetting the basic issue.
  Repeawtedly Mr.K.M. is stating that it is not about
  retaining or sending out R/Bank Governor or Chief Economic Adviser.
  But it is the public arrogant utterances of Su.Samy.
  PLEASE BE SPECIFIC WHAT DO YOU SAY ABOUT THE
  BEHAVIOUR OF MR.S.SWAMY

  • LVISS சொல்கிறார்:

   Mr Parthiban Every party has some people who talk out of turn sometimes putting the party in a fix.—What the govt stand in an issue is what matters —-What others say are their opinions —The P M and the FM have high regard for Mr Rajan and Mr Arvind Subramanian –Otherwise they would not have continued with Mr Rajan as RBI Governor or appointed Mr Arvind Subramanian as CEO —
   I do not approach an issue from who said it but from what was said and try to find out more about the issue —
   I have lot of respect for Mr K M and what he writes but I do not want to express opinion about any one— I am more concerned with the issue —

   • Sureshkumar Parthiban சொல்கிறார்:

    Mr.Elvis,

    So you are not prepared to accept that
    what Mr.S.Swamy does is wrong.
    IF YOU ARE NOT PREPARED TO CONDEMN
    AN INDECENT BEHAVIOUR BY A ROGUE POLITICIAN,
    then
    what for you are participating in this debate ?
    If you enter debates, you should answer the
    points raised there.

    • Sureshkumar Parthiban சொல்கிறார்:

     AND BY CLOSING THEIR EYES AND EARS
     to whatever Mr.Swamy DOES,
     the BJP high command also deserves to be CONDEMNED.

     EVEN by going your own words that you will not comment
     about individual politicians, even if they are ROGUES,
     IS IT NOT THE FAILURE OF BJP HIGH COMMAND
     TO CONTROL Mr.sWAMY ? Have they not failed in that aspect ?
     PROBABLY YOUHAVE TAKEN A VOW NOT TO CRITICISE
     BJP ALSO.

 8. Sureshkumar Parthiban சொல்கிறார்:

  Mr.Kavirimainthan,

  YOU ARE PERFECT IN YOUR SAYING:

  I AM FURNISHING BELOW
  an english MEDIA REPORT –

  Now, the Modi government has cause to worry. Subramanian Swamy is an unguided missile. He has had his uses when the government needed to take on Sonia Gandhi and the Congress in the Rajya Sabha, giving the government plausible deniability on his actions. But Swamy seems to revel in counting the number of scalps he has gathered, never mind whose scalp it is.

  This means, at some point, collecting scalps may be more important to him than party discipline. If left unchecked, he will end up damaging the government more than the opposition.

  Not one to weigh his words carefully, Swamy is the exact opposite of the politically correct politician, calling people names and even abusing them on micro-blogging site Twitter, which is his preferred medium of diatribe.

  He is now a prime advocate of Hindutva, and, more controversially, has promised to push for the Ram temple in Ayodhya. This has made him the darling of many “internet” Hindus, who now look on him as their general in the war against India’s Left-Liberal Hinduphobes.

  Swamy vs Arvind Subramanian: There is more to it than meets the eye

  Swamy had probably hoped for high office, but, denied that, he still managed to keep himself in the public eye by choosing other enemies to fight with.

  Despite the heroism involved in some of his notable battles against corruption and the corrupt, Swamy seems keen to tilt at every windmill these days. His diatribe against Rajan was intensely personal and below-the-belt. Even though he won this skirmish, it left the government looking bad in the public eye.

  And now he seems ready to launch into Arvind Subramanian.

  The problem for the Modi government is that Swamy is both an asset (against the BJP’s enemies) and a liability (when he turns against those he considers his internal enemies).

  But the warning signs flashing for the government anyway. Swamy is a double-edged sword. If Modi does not rein him in, or give him other targets to focus his energies on, Swamy will start damaging the government just when it has managed to gain the upper hand with the Congress after the recent round of assembly elections.

  Modi has to act before it is too late.

 9. selvarajan சொல்கிறார்:

  // அரவிந்த் சுப்ரமணியன் மீது அரசுக்கு நம்பிக்கை இருக்கிறது… சு.சுவாமிக்கு அருண்ஜேட்லி பதிலடி
  Read more at: http://tamil.oneindia.com/news/india/swamy-s-views-personal-govt-has-full-confidence-arvind-subramanian-jaitley-256614.html // இந்த செயதியில் : அது சு.சுவாமியின் சொந்தக் கருத்து என்று அருண்ஜேட்லி கூறியிருப்பதும் — //ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்ரமணியன் அடுத்தது ஜேட்லி… நிதி அமைச்சர் பதவிக்காக ரூட் போடும் சாமி!
  Read more at: http://tamil.oneindia.com/news/india/real-target-arun-jaitley-not-arvind-subramanian-256601.html // என்று பத்திரிக்கைகளில் செயதிகள் வெளிவரவும் —– // மத்திய அரசின் ஓர் அங்கமாக இருந்தால்.. 7 நாட்களிலே வருமான வரியை ஒழிப்பேன் – சுப்பிரமணியன் சுவாமி
  Read more at: http://tamil.oneindia.com/news/india/i-could-do-abolish-income-tax-seven-days-says-subramanian-sw-256628.html // என்று தனது ” உள்மனது ” ஆசையை வெளியிட்ட சு.சுவாமியும் — இவை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு மௌனமாக இருக்கும் பிரதான மந்திரியும் ….. ? —– திரு.ஜெயகாந்தன் எழுதிய புதினம் — பின் திரைப்படமாக அவரால் வெளியிடப்பட்ட ” யாருக்கா அழுதான் ” என்பதில் ஜோசப் கதாப்பாத்திரம் வைத்திருக்கும் — மஹாத்மா காந்தியின் ” முக்குரங்கு ” பொம்மை — அன்று மஹாத்மா எதைக் குறித்து கூறினாரோ — அதற்கு ” எதிர்ப்பதமாக ” இக்காலத்தில் இருப்பதை தான் பலரும் விரும்புகிறார்களோ … ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   அதாவது –

   நல்லதைப் பார்க்காதே,
   நல்லதைக் கேட்காதே,
   நல்லதைப் பேசாதே….!!!

   ஆனால், இதற்கு conditions apply …!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 10. R.Gopalakrishnan சொல்கிறார்:

  All friends, Pl. note that it is the basic decorum of the executives to keep silent on the comments
  (whether good or bad) made by politicians. That is what both Mr.RR and AS are doing. Otherwise
  they are fully fit enough to drive S.Swami to the corner of the wall.

  • KS சொல்கிறார்:

   I can’t resist enjoying your innocence. Swamy is in the league of fighting people like Indira Gandhi & Vajpayee. These minions like RR & AS with dubious agendas wouldn’t qualify as enemies. Pl take sometime to read the charges leveled and assess them for their truth. Just go by facts and forget who said. I don’t belong to any party and am a common man. For me, nobody is sacrosanct. Even if Modi does an error, I will like if some one can rise up & point out rather than be caged in the garb of party discipline. We, as common men, need accountability from all politician who are scoundrels as a rule. I will not be bothered if the edifice of BJP breaks because of this indiscipline so long as the issues raised are genuine and serious. After all, why do we want a party at the helm if they have so many holes to hide by way of invoking silence?

   It is surprising that people who otherwise dislike BJP have chosen to defend the “party discipline” line in this event. Probably their dislike for Swamy is more than their dislike for BJP?

 11. டாக்டர்.கோ.விஜயராகவன. சொல்கிறார்:

  சுவாமி திருத்தப்படவேண்டியவரே…மோடியால் முடியாதோ…..திருசெந்தூர் முருகனே உன் பெயரை தாங்கி உள்ளவரை நீ தான் திருத்தியே தீரனூம்…தாங்கமுடியலே

  • KS சொல்கிறார்:

   Mind you it was Swamy who singlehandedly fought for bringing out scams in the previous Govt. Even now, when the BJP Govt is scared of touching Sonia, it is he who brought her to court where she is almost sure to be convicted. Because of Swamy, all 122 licenses for spectrum got cancelled necessitating reautcion enabling the Govt to earn lakhs of crores of tax payers’ money. He is not an ordinary man that people like you can simply say needs correction! You need to live up to your title.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்ப கேஎஸ்,

    உங்களது ஸ்வாமி பக்தி மெச்சுதற்குரியது.
    டிவி டிபேட்டில், ஆசாரிக்கு பதிலாக, அல்லது அவருக்கு பக்கத்தில் நீங்கள் அங்கே போய் உட்கார்ந்து கொள்ளலாம்…!!!

    இந்த இடுகையின் முக்கிய பொருள் சு.சுவாமி வெறி பிடித்து
    அலைகிறார் என்பது தான்.
    கட்சியின் கொள்கை குறித்து அவருக்கு பிரச்சினை
    இருந்தால் அதைப்பற்றி பேச வேண்டிய இடம் அவர்களது
    கட்சித்தலைமை.
    அரசின் செயல்பாடுகளில் குறை இருந்தால், அதைப்பற்றி
    அவர் தனிப்பட பேச வேண்டியது பிரதமரிடம்.

    ட்விட்டரில் எழுதுவது நிச்சயம் கட்டுப்பாட்டை மீறிய செயல்தான்.
    இதை எவர் வேண்டுமானாலும் சுட்டிக்காட்டலாம்.

    இவருக்கு கட்சித்தலைமையிடமோ,
    பிரதமரிடமோ – பேச பயமாக இருந்தால்,
    ஒன்று கடிதம் மூலம் எழுதலாம்… அல்லது –
    (கை, வாய் )அனைத்தையும் பொத்திக் கொண்டு
    அடுத்த வேலையை பார்க்கலாம்.

    கட்சியில் இருந்துகொண்டே, கட்சியின்
    முக்கியத்தலைவர்களை, அமைச்சர்களை
    விமரிசிப்பது –
    ஒன்று முட்டாள் தனமாக இருக்க வேண்டும்
    -இவர் விஷயத்தில் அது இல்லை.
    இரண்டு – வெறித்தனமாக இருக்க வேண்டும் –
    தான் விரும்பிய முக்கிய பதவியை கொடுக்க மறுக்கிறார்களே
    என்கிற வெறி இவருக்கு இருப்பதை வெளிப்படையாகவே
    பார்க்க முடிகிறது.

    Anyway – புதிதாக பின்னூட்ட வரிசையில் வருகை புரிந்திருக்கும்
    உங்களை வரவேற்பதில் மகிழ்வடைகிறேன்.

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.