( கடைசி பகுதி – 5 ) புதைந்து, மறைந்த 1200 வருட ரகசியங்கள் …

angkor_wat_-lost city of mahendraparvata

20160321_preahKhan-137-800x533

ஏற்கெனவே துவங்கி விட்ட அகழ்வாராய்ச்சியை
பெரிய அளவில் தொடர மேற்கொண்டு நிதியுதவிக்காக
காத்திருக்கிறார்கள் ஆராய்ச்சிக் குழுவினர்.

சுமார் 735 சதுர மைல் பரப்பளவுள்ள பிரதேசம்
தோண்டி ஆராயப்பட வேண்டும். எனவே,
எவ்வளவு வேகமாக செயல்பட்டாலும்,
இந்தப் பணிகள் ஓரளவாவது நிறைவு பெற குறைந்த பட்சம்
இன்னும் பத்து ஆண்டுகளாவது ஆகக்கூடும் என்று
தெரிகிறது.

இருந்தாலும், அதற்கு முன்னராகவே, தோண்டத்தோண்ட,

இடையிடையே, நிறைய அதிசயங்களும், தகவல்களும்
கிடைக்குமென்றே இதில் ஈடுபட்டிருப்பவர்கள் நம்புகிறார்கள்.

மஹேந்திரபர்வதத்தில் புதையுண்ட நகரத்தைப்பற்றிய
விவரங்கள் தான் இன்னமும் வெளிவரவில்லையே தவிர,

ஏற்கெனவே முழுமையாக வெளிக்கொண்டு வரப்பட்டு,
யுனெஸ்கோ உதவியுடனும், இந்திய நிபுணர்களின்
பங்களிப்போடும் இன்று உலகம் முழுவதும்
புகழ்பெற்றிருக்கும் “அங்கோர் வாட்” கோயில் வளாகத்தை
காண ஆண்டுதோறும் சுமார் இருபது லட்சம் டூரிஸ்டுகள்
வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2015-ஆம் ஆண்டில், உலகிலேயே அதிக சுற்றுப்பயணிகளை
ஈர்த்த இடமாக “அங்கோர் வாட்” அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த மகத்தான கோயில் வளாகங்களை உருவாக்குவதில்,
குறைந்த பட்சம் சுமார் 15,000 சிற்பிகள், தச்சர்கள்,
கொல்லர்கள், கட்டிடக்கலை வல்லுனர்கள்,
உதவியாளர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் சுமார்
30 ஆண்டுகள் தொடர்ந்து உழைத்திருக்க வேண்டும்.
ஆகவே, இந்த வளாகத்தையொட்டி, 50,000 பேருக்கு
குறையாத மக்கள் வசிக்கக்கூடிய, தொழில் வளர்ச்சியுடன்
கூடிய ஒரு மிகப்பெரிய நகரம் இருந்திருக்க வேண்டும்.

இங்கு இப்போதும் பார்க்க முடியும் நீர்நிலைகளையும்,
பாசன வசதிகளையும், கணக்கில் எடுத்துக்கொண்டால்-
இங்கு விவசாயம் பெரிய அளவில் நடந்திருக்க வேண்டும்
என்றும், மக்கள் செழிப்புடன் வாழ்ந்திருக்க வேண்டுமென்றும்
தெரிகிறது.

இப்போதைக்கு இந்த தகவல்களுடன் இந்த இடுகையை
முடிக்கிறேன். எதிர்காலத்தில் மேற்கொண்டு தகவல்கள்
வெளிவரும் நேரத்தில், இதை தொடருவோம்….

இவ்வளவு விஷயங்களை படித்தீர்கள்…..
நிறைய புகைப்படங்களையும் பார்த்தீர்கள்…
இருந்தாலும், “அங்கோர் வாட்” வளாகத்தை
நேரில் பார்க்க முடியவில்லையே என்கிற ஒரு ஏக்கம்
தோன்றுகிறது அல்லவா ? (எனக்கு நிச்சயம் உண்டு…! )

எனவே, குறைந்த பட்சம் அதை காணொலியிலாவது
பார்த்து விடுவோமா….?
ஆன்லைனில் நிறைய வீடியோக்கள் கிடைக்கின்றன.
மிகச்சிறிய sample video சிலவற்றை மட்டும்
கீழே இணைத்திருக்கிறேன்….

http://video.nationalgeographic.com/video/ancient-mysteries/angkor-wat-temples

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல். Bookmark the permalink.

3 Responses to ( கடைசி பகுதி – 5 ) புதைந்து, மறைந்த 1200 வருட ரகசியங்கள் …

 1. selvarajan சொல்கிறார்:

  அதிசயம் பார்த்தேன் மண்ணிலே-
  அது அப்படியே நிக்குது எங்கண்ணிலே-
  செதுக்கிவச்ச சிலையிருக்கு-
  அதில் மனங்கவரும் அழகுக் கலையிருக்கு — என்று ரசிக்கும் படியாக ஐந்து பகுதி இடுக்கை பதிவுகளில் வெளியிட்டதற்கு … நன்றி .. அய்யா.. ! நேரில் காணும் பாக்கியம் எப்போது கிட்டும் என்கிற ஆவல் அனைவருக்கும் கண்டிப்பாக ஏற்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை … !! அடுத்து ….
  தன் அனுபவப் ” பாடங்களை ” பாடல்கள் மூலம் ஒரு தலைமுறைக்கே தாய்ப்பாலாய் புகட்டியவர் கவியரசு…. ” கலங்காதிரு மனமே.. உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே! ”— என தன் முதல் பாடலிலேயே நம்பிக்கையோடு கலைப்பயணத்தைத் துவக்கியவர்…. வாழ்க்கையின் அனைத்து நிலைகளையும் பற்றி பாடல் எழுதியவர் … அவரைப் பற்றி :
  ” இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
  நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு … என்றும்
  மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் – அவர்
  மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன் – நான்
  நிரந்தரமானவன் அழிவதில்லை – எந்த
  நிலையிலும் எனக்கு மரணமில்லை ” என்றும் — தனது நிலையை பாடலில் தெளிவுப் படுத்தியவரின் —– பிறந்த நாள் — நாளை { 24 ஜுன் } …. கவியரசர் கண்ணதாசன் அவர்களை … நினைத்தாலே இனிக்கும் தானே … ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   அதிலென்ன சந்தேகம்…
   கவிஞருக்கு ஈடு, இணை ஏது…?
   நினைவுபடுத்தியதற்கு நன்றி.

   ஒரு வேடிக்கை –
   கண்ணதாசனுக்கு முன்பாக இருந்தவர்களோடு
   ஒப்பிட்டு, அவரை நினைப்பதை விட –

   அவருக்குப் பின்னால் வந்தவர்களோடு
   ஒப்பிடும்போது தான் அவரது
   மதிப்பும், பெருமையும், அருமையும்
   அதிகம் தெரிகிறது – இல்லையா நண்பரே…?

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. srimalaiyappan சொல்கிறார்:

  சுவாரஸ்யம்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.