பல்லவரும், சோழரும் இணைந்து கலக்கிய “அங்கோர் வாட்” – புகைப்படங்கள்….


யானை மீதும் குதிரை மீதும் வீரர்கள்

6- வது நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட
மாமல்லபுரம் சிற்பங்களில் பல்லவர்களின்,
கற்பனை வளத்தையும், கைவண்ணத்தையும் காணலாம்.

அதே போல் 10-வது மற்றும் 11-வது நூற்றாண்டுகளில்
சோழர்களின் கலைநயத்தால் உருவாகியவை –
தஞ்சை பெரிய கோயிலும், கங்கை கொண்ட சோழபுரம்
கோயிலும்.

9-வது நூற்றாண்டில் காம்போஜத்தை வென்ற
பல்லவர்கள், 11-வது நூற்றாண்டில், தங்கள் அண்டைப்புற
எதிரிகளை சமாளிக்க, தமிழ்நாட்டிலிருந்து,
அப்போதைய சோழ மன்னனான, ராஜேந்திர சோழனின்
உதவியை நாடினர். ராஜேந்திர சோழன் தனது
கடற்படையின் ஒரு பெரும் பகுதியை காம்போஜத்திற்கு
அனுப்பினார். அந்தப் படையின் பெரும்பகுதியினர் –
பின்னர், காம்போஜத்திலேயே நிரந்தரமாகத் தங்கினர்.

ஆக, காம்போஜத்தில் (தற்போதைய கம்போடியா-கம்பூச்சியா)
பல்லவ குலமும், சோழ குலமும் கலந்து,
காம்போஜத்தின் பூர்வீக குடிகளுடன் இணைந்து
12-ஆம், 13-ஆம் நூற்றாண்டில் உருவாக்கிய
கலாச்சார சின்னம் தான் “அங்கோர் வாட்”. எனவே,
இந்த கலாச்சாரக் கலப்பை அங்கோர் வாட் கோயில்களிலும்,
சிற்பங்களிலும் காணலாம்.

அங்கோர் வாட் பற்றிய தொடரின்போது, நான் சேகரித்த
பல புகைப்படங்களை, நண்பர்கள் நிதானமாக பார்த்து
ரசிக்க, இப்போது இங்கே பதிந்திருக்கிறேன்….

20160321_preahKhan-32-800x533

Angkor_Wat_reliefs_(Sept2009h)

Angkor-Wat-008

archers mounted on elephants

11th cen.bronze statue of vishnu

Bayonmarket01

M3365E-4503

M3365E-4503

fighting war

maxresdefault

Digital Camera

yaanai padai

reed elephant

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to பல்லவரும், சோழரும் இணைந்து கலக்கிய “அங்கோர் வாட்” – புகைப்படங்கள்….

 1. satish சொல்கிறார்:

  புகைப்பட பகிர்வுக்கு நன்றி.

 2. selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! அன்று ஆக்கப்பூர்வமா சிந்தித்து — தான் வென்ற நாட்டில் ” அற்புதமான கலைப் பொக்கிஷத்தை ” உருவாக்கி இன்றளவும் பேர் சொல்லும்படி செய்த நமது மன்னர்களை பாராட்டும் இதே வேளையில் — பின்னாட்களில் நடந்த யுத்தங்களினால் பல இழப்புகள் கம்போடியாவுக்கு நேர்ந்து இருந்தாலும் — இன்றளவும் அங்கே பயமுறுத்தி தொடர்ந்துக் கொண்டு இருக்கும் மண்ணில் புதைக்கப் பட்ட ” கண்ணிவெடிகளை ” பற்றிய அபாயத்தை உணர்ந்தே அங்குள்ளவர்கள் வாழ்ந்துக் கொண்டு இருப்பது ” மாபெரும் சோகம் ” —
  கம்போடியாவில் கண்ணி வெடி வைத்தவரே கண்ணி வெடிக்கு எதிராக இயக்கம் நடத்தி செயல்பட்டு வருகிறார். அவர் பெயர் அக்கி ரே என்பதும் அவரது பெற்றோர் ” கெமர் ரௌஜ் ” எனப்படும் இடதுசாரி தீவிரவாதப் போராளி அமைப்பால் கொல்லப்பட்டனர் … அதன் பிறகு சிறுவனாக இருந்த ரே வுக்கு அந்த அமைப்பினர் பயிற்சி அளித்து போர்வீரராக ஆக்கப்பட்டு வியட்நாம் வீரர்களால் சிறைப்பிடிக்க பட்டு பின் வியட்நாம் ராணுவ சிப்பாயாக மாறி — அவரே ஆயிரக்கணக்கான கண்ணி வெடிகளைப் புதைத்திருக்கிறார்….. தொண்ணூறுகளின் இறுதியில் யுத்தம் ஓய்ந்ததும், ரே கண்ணி வெடிகளுக்கு எதிரானவராகவும் யுத்த எதிர்ப்பாளராகவும் மாறி இதுவரை 50 ஆயிரம் கண்ணி வெடிகளை தானே அகற்றியிருக்கிறார… அதோடுமட்டும் அல்லாது ….
  அக்கி ரே கண்ணி வெடி ஆபத்து பற்றி விளக்குவதற்கென்றே ஒரு தனி மியூசியத்தை சியாம் ரீப் நகரில் வைத்துள்ளார்…. என்பதும் கூடுதல் தகல்வல்கள் ….
  கம்போடியாவின் கலாச்சார நடனங்கள் — நமது கலாச்சாரத்தை ஒட்டியே அமைந்துள்ளது மேலும் ஒரு ஆச்சர்யம் — தேவ நர்த்தகி { அப்சரஸ் } நாட்டியமும் — உழவர் நடனத்தில் ஏர்கொண்டு உழுவது — விதை விதைப்பது போன்றவும் — கையில் தேங்காய் ஓடுகளை { கொட்டாங்குச்சி } வைத்து ஆடுகின்ற ஆட்டமும் இன்னும்பலவும் கண் கொள்ளாக் காட்சியாக மனதில் நிறைந்தாலும் — அங்கோர் வாட் கோயில் வளாகம் — சாலையோரங்களில் — இரவுநேர கேளிக்கைகள் நடக்கும் இடங்களிலும் ஆங்காங்கே இன்னிசை குழுக்களாக ” உடல் ஊனமுற்றோர் ” இசையெழுப்பி பிச்சைக்காரர்களாக இருப்பவர்கள் பெரும்பாலானோர் — கண்ணி வெடி என்கிற மண்ணில் நடப்போரை நடைப் பிணமாக ஆக்கும் விதையால் பாதிப்புக்கு உள்ளானவர்கள் என்பது மனதை சங்கடப்படுத்தும் விதமாகவே இன்றளவும் இருக்கிறது என்கிற செய்திகள் வருத்தம் அளிக்க கூடியது — சிதிலமடைந்த அங்கோர் வாட் கோவில்களை திரும்பக் கட்டிவிடமுடியும். ஆனால் சிதைந்த வாழ்க்கைகளை – யாரால் தர இயலும் …. ?
  கம்போடியாவில் கண்னி வெடிகளும் குண்டுகளும் வயல்களிலிருந்து நிலங்களிலிருந்து கடந்த பத்தாண்டுகளில் அகற்றப்பட்டாலும் இன்னும் சுமார் 60 லட்சம் கண்ணி வெடிகள் இருப்பதாக மதிப்பிட்டிருக்கிறார்கள். கண்ணி வெடியை அகற்றுவது எளிதானதும் மலிவானதும் அல்ல. ஒரு கண்ணி வெடியைப் புதைக்க ஆகும் செலவு வெறும் மூன்று டாலர்தான். அகற்றுவதற்கு ஒரு வெடிக்கு சுமார் 1200 டாலர் செலவு ஆகிறது … மற்ற நாடுகளின் நிதியுதவியுடன் — கண்ணி வெடிகளை அகற்றிவிட முயன்றாலும் — மொத்த கண்ணி வெடிகளையும் அகற்றி முடிக்க 15 முதல் 20 வருடம் ஆகும் என்கிறார்கள். அதுவரை அந்த நிலங்களில் விவசாயம் செய்யமுடியாது என்பதையெல்லாம் படிக்கும் போது மனம் கணக்கவே செயகிறது — ஒரு பக்கம் கலை — அதிசயம் — கலாச்சாரம் என்றாலும் — மறுபக்கம் கண்ணி வெடிகள் — ஊனமுற்ற மக்கள் — விவசாய பாதிப்பு இவைகளின் அனைத்தும் கலந்த கலவை தான் கம்போடியா … கலைநயத்தை ரசிக்கும் மக்கள் — கண்ணி வெடிகளின் தாக்கத்தை பார்க்கும் அவர்களின் மனதில் — ” யுத்தங்கள் தேவையா ” … என்று கண்டிப்பாக நினைப்பார்கள் …. !!!

 3. நெல்லைத்தமிழன் சொல்கிறார்:

  இன்றைக்குத் தமிழன் தாழ்ந்திருப்பதுபோல் தெரிந்தாலும், அவனுக்குள்ள தொன்மையினை மற்றவர்கள் தெரிந்தும் தெரியாததுபோல் இருந்தாலும், தமிழ் நாகரிகமும் மொழியும் தொன்மையானது என்பது உலகத்துக்குத் தெரியும். ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக (சரியாகத் தெரியலை.ஆனால் மற்ற இந்திய மொழிகளுக்கு இந்தப் பெருமை கிடையாது. சமஸ்கிருதத்துக்கு கொஞ்சம் இருக்கலாம். means. its words would have mingled in nearby countries languages like Srilanka, Thailand etc), பல நாடுகளின் ஆட்சிமொழிகளில் தமிழ் இருக்கிறது. தமிழனுக்கு என்று நெடிய பாரம்பர்யமும் கலாச்சாரமும் இருக்கிறது. அதில் நாம் பெருமை கொள்ளலாம்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நெல்லைத்தமிழன்,

   // தமிழனுக்கு என்று நெடிய பாரம்பர்யமும்
   கலாச்சாரமும் இருக்கிறது. அதில் நாம்
   பெருமை கொள்ளலாம்.//

   எப்பேற்பட்ட பெருமைமிக்க கலாச்சாரம் நம்முடையது
   என்பதை முதலில் இன்றைய தமிழர்களுக்கு தெரிய,
   புரிய – வைக்க வேண்டியிருக்கிறது…..

   பின்னர், அதற்குத் தகுதியுடையவர்களாக
   அவர்களை மாற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது…

   மிகப்பெரிய பொறுப்பு ….
   யார் இதை முன்னெடுத்துச் செல்லப்போகிறார்கள்…?
   இப்போதைய தலைவர்கள் யார் மீதும்
   இந்த விஷயத்தில் நம்பிக்கை வர மாட்டேனென்கிறது.
   இனி தான் யாராவது உருவாக வேண்டும் – எதிர்காலத்தில்…!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.