உடனடித் தேவை ” என்கவுண்டர்கள் ” – போட்டுத்தள்ள வேண்டும் கூலிக்கொலைகாரர்களையும், அவர்களை வளர்க்கும் ரவுடி வக்கீல்களையும்….

untitled

சில நாட்களுக்கு முன்னர் இதே தளத்தில் ஹோசூரில்
ஒரு ஹெட்கான்ஸ்டபிளை கத்தியால் குத்திக் கொன்ற கொலைகாரனை பொதுமக்கள் அடித்துக் கொன்றது
நியாயமே என்றும்,

அதற்கு சில நாட்கள் முன்னதாக ரவுடி வக்கீல்களை
கண்டித்தும் எழுதியபோது –

பொங்கி எழுந்தனர் சிலர் – மனித உரிமை
ஆர்வலர்கள் என்கிற பெயரில்…

இப்போது மேலும் மேலும் நடந்து கொண்டே இருக்கும் கொலைகள், நாம் இந்த தளத்தில் எழுதியவற்றை
மேலும் வலியுறுத்துவனவாகவே இருக்கின்றன.
அவர்களைப் போன்ற
வெத்துக் கூச்சல்காரர்கள் தான் இத்தகைய செயல்கள்
எல்லாம் தொடர்வதற்கு ஆக்கமும், ஊக்கமும் தரும் –
விட்டமின், க்ளூகோஸ், டானிக் எல்லாமே…

கடந்த சில நாட்களில் சென்னையில் படுகொலை
செய்யப்பட்ட வக்கீல்களின் பின்னணியை படித்துப்
பாருங்கள். ஒரே ஒருத்தரைத்தவிர, மற்ற அனைவருமே
ரவுடிப் பின்னணி உடையவர்கள். ரவுடிகளை ஊக்கி
வளர்த்தவர்கள்… ஒருவர் மாதச் சம்பளம் கொடுத்தே
அடியாட்களை வைத்திருந்திருக்கிறார்.

காசு வாங்கிக்கொண்டு கூலிக்கு கொலை செய்யும்
கூலிப்படைகளும், தொடர்ந்து அவர்களை ஜாமீனில்
வெளியே கொண்டு வந்து அடுத்த கொலைக்கு தயார்
செய்யும், ரவுடி வக்கீல்களும் தான் வரிசையாக
செய்தியில் வருகின்றனர்.

கத்தி எடுத்தவன், கத்தியாலே சாவான் என்பது போல்,
கூலிப்படையகளை வளர்த்தவர்கள் –
அவர்கள் கையிலேயே சாகிறார்கள்.

நல்லபடியாக, கவுரவமாக, வக்கீல் தொழில் செய்பவர்கள்
எல்லாம் பாவம்,…..இவர்களைப் பார்த்து,
தங்களையும் வக்கீல்கள் என்று சொல்லிக் கொள்ளவே அவர்கள் கூசுகின்றனர்.

நேற்றைய முன்தினம், வட சென்னையில் கொலை
செய்யப்பட்ட மூஞ்சியை பார்த்தாலே தெரிகிறது
எப்பேற்பட்ட பொறுக்கி என்று. அவர் வீட்டை டிவியில்
காட்டுகிறார்கள் – ” வக்கீல் -ஹை கோர்ட் ” என்று
போர்டு மாட்டி இருக்கிறது.

போர்டு தான் அப்படியே தவிர,
அவர் ஹைகோர்ட்டில் வழக்காடியதே இல்லையாம்.
கட்டைப் பஞ்சாயத்து, ரியல் எஸ்டேட் தகராறுகள்,
புருஷன் பெண்டாட்டி பிரச்சினைகள், கூலிப்படைகளை
ஜாமீனில் வெளியே கொண்டு வருவது – இதெல்லாம் தான்
அந்த வக்கீல் என்று சொல்லப்படுபவர் செய்து வந்த
“தொழில்”களாம்.

ஒவ்வொருவனும் குறைந்த பட்சம் ஆறேழு கொலை
வழக்குகளில் பதிவாகி இருக்கிறான்…
எல்லா வழக்குகளும், ஆறேழு ஆண்டுகளாக நிலுவையில்
இருக்கின்றன. இவர்கள் ஜாமீனில் வெளியே வந்து,
மேலும் மேலும் கணக்கை கூட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.

சட்டத்தை மதிக்காத,
காவல் துறைக்கு பயப்படாத,
ரவுடி வக்கீல்களின் பாதுகாப்பில் இருக்கிற –
எதற்கும் துணிந்த இந்த மாதிரி ஆசாமிகளை
அடக்கவும், பொது மக்களை பாதுகாக்கவும்
இருக்கும் ஒரே வழி –

“encounter” தான்,

கூலிப்படை கொலைகாரர்கள் – இரண்டு பேர்….

திரும்ப திரும்ப அத்தகைய கொலைகாரர்களை
ஜாமீனில் எடுத்து அவர்களுக்கு பாதுகாப்பு
கொடுத்து மீண்டும் மீண்டும் கொலை செய்யத்தூண்டும்
ரவுடி வக்கீல்கள் – இரண்டு பேர்…

ஆக மொத்தம் 4 encounters – போதும்.
ஒட்டு மொத்த கூட்டமும் அடங்கி விடும் –
குறைந்த பட்சம் அடுத்த சில மாதங்களுக்காவது …!

கூக்குரல்கள் கிளம்பும்…
“மனித உரிமை” – அது, இது என்றெல்லாம்…

எவரைப் பற்றியும் காவல்துறை
கவலைப்படக்கூடாது.

அமைதியை விரும்பும் பொதுமக்களின்
முழு ஆதரவும்
காவல் துறைக்கு நிச்சயம் கிடைக்கும்….

விடிவு பிறக்குமா…?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

14 Responses to உடனடித் தேவை ” என்கவுண்டர்கள் ” – போட்டுத்தள்ள வேண்டும் கூலிக்கொலைகாரர்களையும், அவர்களை வளர்க்கும் ரவுடி வக்கீல்களையும்….

 1. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  yes

 2. srimalaiyappan சொல்கிறார்:

  கொல்லலாம் மனித உரிமை கமிசன் அது இதுன்னு கிளம்பிருவாணுக சார்

 3. gopalasamy சொல்கிறார்:

  Absolutely true.

 4. selvarajan சொல்கிறார்:

  நீங்கள் என்கவுன்ட்டர் என்று எழுதியது ஏன் — என்கிற கருத்தை திசை திருப்பும் விதமாக வரிந்து கட்டிக்கொண்டு சிலர் பாய்ந்ந்து வந்தாலும் ஆச்சர்யம் இல்லை …. ஜெயாவைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு அவரது அதிரடி எப்படி இருக்கும் என்பதும் தெரியும் — விரைவில் ஒரு விடிவு பிறக்கும் —- அடுத்து ….. // மீண்டும் பாதுகாப்புத் துறை அமைச்சராக அருண்ஜேட்லி? நிதி அமைச்சர் பதவிக்கு சு.சுவாமி லாபி
  Read more at: http://tamil.oneindia.com/news/india/arun-jaitley-may-be-replaced-piyush-goyal-as-swamy-eyes-port-256767.html // நிதி அமைச்சர் பொறுப்புக்கு — பியூஸ் போன மந்திரிக்கும் — சு,சுவாமிக்கு தான் போட்டியாமே … ? செய்திகள் உண்மையாகுமா … ?

 5. செங்கொடி சொல்கிறார்:

  வணக்கம் காவிரி மைந்தன்,

  \\\அதற்கு சில நாட்கள் முன்னதாக ரவுடி வக்கீல்களை
  கண்டித்தும் எழுதியபோது –
  பொங்கி எழுந்தனர் சிலர் – மனித உரிமை
  ஆர்வலர்கள் என்கிற பெயரில்…
  இப்போது மேலும் மேலும் நடந்து கொண்டே இருக்கும் கொலைகள், நாம் இந்த தளத்தில் எழுதியவற்றை
  மேலும் வலியுறுத்துவனவாகவே இருக்கின்றன.
  அவர்களைப் போன்ற
  வெத்துக் கூச்சல்காரர்கள் தான் இத்தகைய செயல்கள்
  எல்லாம் தொடர்வதற்கு ஆக்கமும், ஊக்கமும் தரும் –
  விட்டமின், க்ளூகோஸ், டானிக் எல்லாமே…///

  இந்த தளத்தில் வழக்குறைஞர்களுக்கு எதிரான சட்ட திருத்தம் குறித்த உங்களின் பதிவில் நான் சில பின்னூட்டங்களை இட்டது குறித்துத்தான் மேற்கண்டவாறு கூறியிருக்கிறீர்கள் எனக் கருதுகிறேன்.

  அன்றைய அந்த பின்னூட்டங்களின் போது என்னுடைய கருத்துகளை கூறுவதற்கு நான் ஆயத்தமாக இருந்தேன். ஆனால் நீங்களோ இதற்கு மேல் இதை விவாதிக்க விரும்பவில்லை என்பது போல் கூறி முடித்துக் கொண்டீர்கள். ஆனால், இந்த பதிவில் மேற்கண்டவாறு எழுதியதன் மூலம் மீண்டும் அதை தொடங்கி வைத்திருக்கிறீர்கள்.

  உங்களுடைய அன்றைய பதிவின் கருத்தும் இந்தப் பதிவின் கருத்தும் தவறானவை, மேலோட்டமானவை, சமூக நலனுக்கு எதிரானவை என்பதை என்னால் நிரூபிக்க முடியும். நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?

  பொதுவாக, பொதுவெளியில் எழுதும் உரிமை என்பது ஏற்கனவே நான் கூறியது போல் பதிலளிக்கும், பரிசீலித்துப் பார்க்கும் கடமையிலிருந்து வருவது. அவ்வாறில்லாமல் எழுதப்படும் எதுவும் பொழுதுபோக்கு குப்பைகள் என்பது என் கருத்து.

  எதுசரி எனும் தேடலுடன் உங்கள் கருத்துகளை தொடர்ந்து முன்வைப்பதாக இருந்தால் கூறுங்கள். வழக்குறைஞர்கள் தொடர்பான இந்த இரண்டு பதிவுகளும் தவறான கண்ணோட்டத்தில் எழுதப்பட்டிருப்பவை என நிரூபிக்கிறேன்.

  என்ன சொல்கிறீர்கள்?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப செங்கொடி,

   வணக்கம்.

   ஒரு கட்சியில், ( எந்த கட்சியாக இருந்தாலும் சரி )
   தீவிர செயல்பாட்டு நிலையில் உள்ளவர்கள் –
   எந்த நிலையிலும், தங்கள் கட்சிக் கொள்கைகளை
   ஆதரிக்கும் நிலையிலிருந்து வெளிவர மாட்டார்கள் –
   வெளிவரவும் முடியாது.

   பொதுவெளியை, நீங்கள் கூறுவது போல் – பொதுவான
   கருத்துக்களை வெளியிட நீங்கள் பயன்படுத்துவதாக
   தெரியவில்லை.
   நீங்கள் சார்ந்துள்ள, உங்களது கட்சி சார்பான
   கருத்துக்களைப் வெளிப்படுத்தவே
   பயன்படுத்துகிறீர்கள்.

   பொதுவுடைமைக்கட்சிகள்,
   வழக்குரைஞர்களின் போராட்டங்கள் குறித்து
   எந்த நிலை எடுத்திருக்கின்றன என்பது
   வெளிப்படையாகத் தெரிந்த விஷயம்.

   //எதுசரி எனும் தேடலுடன் உங்கள்
   கருத்துகளை தொடர்ந்து முன்வைப்பதாக
   இருந்தால் //
   – என்று எனக்கு எழுதுகிறீர்கள்….

   எது சரி எனும் தேடல், ஒரு கட்சி சார்ந்த
   உங்களிடம் எப்படி இருக்க முடியும் …?

   ஒரு கட்சி சார்புடைய நீங்கள்
   நான் என்ன தான் எழுதினாலும்,
   எவ்வளவு தான் விவாதம் செய்தாலும் –
   உங்கள் கட்சியின் கொள்கைகளுக்கு
   மாறான எதையும்
   ஏற்றுக் கொள்ளப்போவதில்லை
   என்பது விவாதத்தை தொடங்கும் முன்னரே
   தெரிந்து போன முடிவு….

   எனவே, பயனற்ற அந்த வேலையை செய்வதில்
   என் நேரத்தை செலவிட எனக்கு விருப்பமில்லை.

   எனவே, இந்த தளத்தை நீங்கள் ஏற்கெனவே
   சொல்லியிருப்பது போல் “குப்பை” என்றே நினைத்து,
   நீங்கள் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

   இந்த தளத்தில் எழுதுபவர்கள் அனைவரையும்
   ” குப்பை கொட்டுகிறவர்கள் ” என்று நினைத்து
   உங்களுக்குள் சந்தோஷமும் கொள்ளலாம்.

   ஆனால், உங்கள் வலைத்தளத்தை நான்
   அப்படியெல்லாம் “குப்பை” என்று இழித்துச் சொல்ல
   மாட்டேன்… நீங்கள் ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக,
   சிறப்பாகவே செயல்படுகிறீர்கள். தொடர்ந்து
   சிறப்புடன் செயல்பட –

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 6. செங்கொடி சொல்கிறார்:

  நண்பர் காவிரி மைந்தன்,

  உங்கள் பின்னூட்டத்தை எவ்வாறு புரிந்து கொள்வது? தந்திரமான நழுவல் என்றா .. .. ..

  உங்கள் கருத்து தவறானது என்று வெளிப்படையாக குற்றச்சாட்டு வைத்திருக்கிறேன். அதற்கு எந்த பதிலையும் கூறாமல், மறைமுகமாக உங்களை நீங்களே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.

  ஆம். நான் ஒரு அமைப்பில் செயல்படுபவன் தான். அந்த அமைப்பின் நிலைபாடுகளை ஏற்றுக் கொண்டிருப்பவன் தான். இந்த அமைப்பில் செயல்படுகிறேன் என்று அறிவித்து அதற்கு இசைவாகவே இணையப் பரப்பில் செயல்பட்டுக் கொண்டிருப்பவன் தான். ஆனால், அந்த நிலைப்பாடு தவறானது என யாரும் கூறினால் அதற்கான விளக்கத்தை தருவதற்கு தயாராக இருக்கிறேன். ஒருபோதும் நழுவிச் செல்ல மாட்டேன்.

  ஒரு அமைப்பின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டால் அவர்கள் எது சரி எனும் தேடலைச் செய்ய மாட்டார்கள் என்று நீங்களாகவே எப்படி முன்முடிவு செய்து கொண்டீர்கள்? இந்த உங்களின் பின்னூட்டம் முழுவதுமே உங்களின் முன்முடிவு மட்டும் தான் இருக்கிறது, வேறு ஒன்றுமில்லை. எங்கள் அமைப்பின் கொள்கையே விமர்சனம் சுயவிமர்சனம் செய்து கொண்டு அதன்படி நடப்பது தான். நான் எங்கள் கொள்கைப்படி நடக்கிறேன் என்றாலே அதன் பொருள் நான் சரியானதை தேடுகிறேன். சரியானதை ஏற்றுக் கொள்கிறேன் என்பது தான்.

  இந்த அடிப்படையில் இருந்து தான் உங்களை விமர்சனம் செய்கிறேன். தேவை ஏற்படும் போது நீங்கள் என்மீது வைக்கும் விமர்சனத்தையோ விளக்கத்தையோ ஏற்று என்னை நான் சுயவிமர்சனத்துக்கு உட்படுத்திக் கொள்வேன். இது தான் என்னுடைய அடிப்படை. இதை நான் வெளிப்படையாகவே தெரிவிக்கிறேன்.

  அனால், மறுபக்கம் உங்களிடமிருந்து வருவது என்ன? நீங்கள் இன்ன நிலைப்பாடு கொண்டவர் என வெளிப்படையாக அறிவிப்பவர்களல்லர். நீங்கள் எந்தப் பக்கம் சாய்ந்திருக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்தாமலேயே உங்களுடைய கருத்துகளை பொதுக்கருத்தாக, எந்தப் பக்கமும் சாராத நடுநிலைக் கருத்தாக முன்வைக்கிறீர்கள். உங்களுடைய கருத்து தவறு என கூறினால் அதை மதித்து, பரிசீலித்து விளக்கம் தரவோ, விளக்கம் பெறவோ மறுக்கிறீர்கள். இது தான் மெய்யான பிரச்சனை.

  உங்களுக்குத் தெரியுமா? இங்கு நடுநிலை என்று எதுவுமே இல்லை. ஒன்று நீங்கள் சரியானதின் பக்கம் இருக்க வேண்டும். அல்லது தவறானதின் பக்கம் இருக்க வேண்டும். தவறானதின் பக்கமும் இல்லாமல் சரியானதின் பக்கமும் இல்லாமல் நடுநிலையாக இருக்கிறேன் என்று கூறமுடியாது. அப்படிக் கூறுவது ஒரு ஏமாற்று வேலை.

  நான் உங்கள் பதிவுகளை குப்பை என்று கூறினால் அதை எந்த வித ஒழிவுமறைவும் இல்லாமல் நேரடியாக உங்களிடமே கூறுகிறேன். ஏனென்றால் எது குப்பை என்பதில் எனக்கு தெளிவு இருக்கிறது. என்னுடைய பதிவுகள் குப்பைகள் ஆகிவிடக் கூடாது எனும் கவலையும் எனக்கு இருக்கிறது. உங்களுக்கு அவ்வாறான கவலை இருக்கிறதா? என நேரடியாக உங்களிடமே கேட்கிறேன்.

  ஆனால், நீங்கள் கூறுவது என்ன? உங்களுடைய பதிவு குப்பையா இல்லையா எனும் பிரச்சனைக்குள் போகாமல் தவிர்க்க விரும்புகிறீர்கள். அதற்கு உங்களின் முன்முடிவுகளை சாதகமாக பயன்படுத்துகிறீர்கள். உங்கள் பதிவுகளை வெறுமனே குப்பை எனக் கூறுவதில் எனக்கு என்ன மகிழ்வு இருந்து விட முடியும். குறிப்பிட்ட அந்தப் பதிவை குப்பை எனக் கூறுகிறேன் என்றால் அது என்னுடைய மகிழ்வுக்காக கூறப்பட்டதல்ல. மெய்யாக அது குப்பையாக இருக்கிறது என்பதனாலேயே அதை குப்பை என்று கூறினேன். அதை மறுக்க வேண்டியதும், குப்பையில்லை என நிருவ வேண்டியதும் உங்களின் கடமை.

  அவ்வாறில்லாவிடின், என்னுடைய நிலைப்பாடு இது. இந்த நிலைப்பாட்டை ஒட்டியே என்னுடைய கருத்துகள் இருக்கும். இதற்கு மாற்றுக் கருத்து கொண்டவர்கள் என்னுடைய தளத்துக்கு வர வேண்டாம் என அறிவித்து விடுங்கள். நான் உட்பட அவ்வாறான யாரும் இங்கு வர மாட்டார்கள். ஆனால் உங்களுக்கு பக்கச் சார்பாக இருக்க வேண்டும் என்பதும் ஆசை. நடுநிலையாளன் என பிறர் சொல்ல வேண்டும் என்றும் ஆசை. அதனால் தான் உங்களால் வெளிப்படையாக இருக்க முடியவில்லை.

  இப்போதும் கூறுகிறேன். சரியானதின் பக்கம் இருப்பதே என் நோக்கம். இதை நான் உறுதி மொழிகிறேன். நீங்களும் அப்படித்தானா? இல்லை, சரியானதை தேட வேண்டிய தேவை எனக்கு இல்லை என்று நீங்கள் கூறினால் இனி இந்தத் தளத்தில் பின்னூட்டமிடுவது எனக்கு தேவையற்றது. மாறாக நீங்கள் எழுதுவது குப்பையோ பொழுது போக்கிற்காகவோ இல்லை என்றால், உங்கள் பதிவுகளின் மீது வெளிப்படையான விமர்சனம் வைத்திருக்கிறேன். விமர்சனம் என்று தலைப்பு வைத்திருக்கும் நீங்கள் விளக்கமளிக்க வாருங்கள் என அழைக்கிறேன்.

  இப்போது என்ன சொல்கிறீர்கள்?

 7. gopalasamy சொல்கிறார்:

  எனக்கு என்னமோ உலகத்திலேயே சிறந்த தீர்க்கதரிசி செங்கொடி அவர்கள்தான் என்று தோன்றுகிறது . அவர்கள் சொல்லியது , சொல்லப்போவது எல்லாமே முற்றிலும் உண்மையாகத்தான் இருக்கும் . ஆகவே ஒரு குப்பை ப்ளாக் நடத்தி கொண்டிருக்கும் நீங்களும் , குப்பை வாசர்களாகிய என்னைபோன்றவர்களும் , அவருக்கு பதில் சொல்வது அவரை அவமான படுத்துவது போல . மேலும் அவர் சார்ந்திருக்கும் கட்சியினரின் வன்முறை நடவடிக்கைகளையும் , வன்முறை சித்தாந்தங்களையும் , இந்த குப்பை கூடையில் வந்து கொட்ட தங்கள் இடம் கொடுக்க வேண்டாம் என்று குப்பை வாசர்கள் சார்பாக கேட்டு கொள்கிறேன்

 8. Sureshkumar Parthiban சொல்கிறார்:

  Mr.Kavirimainthan,

  It will be waste of time and energy to entertain
  a known communist in this column.
  Has any communist, at any time, come out of his
  self imprisoned prison and criticized their own policy ?
  “செக்கு மாடு” அதன் சுற்றளவு மட்டத்தை விட்டு
  என்றுமே வெளியே வராது.

 9. B.Venkatasubramanian சொல்கிறார்:

  K.M.sir,

  இங்கே ஜென்டில்மேன் போல் எழுதும் இந்த மனிதர் செங்கொடி என்பவர்
  அவரது தளத்தில் உங்களை மிக நாராசமாக வசைமாரி பொழிகிறார்.
  அவரது தளத்தில் பின்னூட்டம் போடுபவர்களும் சேர்ந்து
  மட்டமான மொழிகளில் வசை பாடுகிறார்கள். இவரும் அதையெல்லாம்
  விரும்பி அனுமதித்திருக்கிறார்.
  நீங்கள் இனியும் இந்த மனிதரின் பின்னூட்டங்களையும்
  இங்கே அனுமதிப்பது, இங்கே வந்து விளம்பரம் தேடும் அவரது முயற்சிக்கு
  துணைபோவது போல் ஆகிவிடும். தயவுசெய்து இந்த மாதிரி ஆசாமிகளை
  இங்கே encourage செய்யாதீர்கள்.

 10. செங்கொடி சொல்கிறார்:

  ப்லா .. ப்லா .. ப்லா .. ப்லா .. ப்லா ..

  என்ன கேட்கப்பட்டிருக்கிறதோ அதை மட்டும் கவனமாக தவிர்த்து விட்டு பிற எல்லாவற்றையும் பேசுவதற்கு தயாராக இருக்கிறீர்கள்.

  உங்கள் நேர்மைக்கு என் வாழ்த்துக்கள்.

 11. selvarajan சொல்கிறார்:

  ஒரு மனிதனை ” நிர்ணயிப்பது ” அவனுக்கு என்ன தெரியும் ..என்பதல்ல — அவன் என்னவாக இருக்கிறான் என்பதே அவனை நிர்ணயிக்கிறது — என்பதற்கு இணங்க — ரௌடிகளும் வக்கீலாகலாம் — வக்கீல்களும் ரௌடிகளாகலாம் …. ! அவனவன் எப்படி இருக்கிறான் – செயல்படுகிறான் என்பதை பொறுத்தே அவனை மற்றவர்கள் அறிகிறார்கள் …. ” நாம் – எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை — நமது எதிரிகள் தான் தீர்மானிக்கிறார்கள் ” என்று சேகுவாரா கூறியிருப்பது போராளிகளுக்கு ஏற்புடையதாக இருக்கும் — எழுத்தாளிகளுக்கு ஏற்புடையாத இருந்தால் — தான் நினைப்பதையே மற்றவர்கள் ஒத்துக்கொள்ள வேண்டும் என்று விடாப்பிடியான வம்படிக்கும் ” வீணர்களுக்கும் ” பொருத்தமானதாக — ஆகிவிடும் — அதனால் எழுதுகின்ற கருத்தும் — முறையும் — பதிவிடுகிற தளமும் கூட ” தன் மேன்மையை — மாண்புகளை ” இழக்க நேரிடலாம் — அதனால் அவரவர் பாணி — அவரவர்களுக்கு … !! சும்மா இரண்டொரு புத்தகங்களை படித்துவிட்டு — அதையே கொள்கையாகவும் — குறிக்கோளாகவும் — கொண்டு உலகில் அற்றுவருகிற — மக்கள் ஆதரவு அற்ற போராட்டம் — போராளி என்று கூறி பின்பக்கமா ” முதலாளித்துவ கேப்மாரிகளிடம் ” பிச்சைக்காசு வாங்கி பிழைப்பை ஓட்டும் கயவர்கள் இக்காலத்தில் இருப்பதும் — அவர்கள் ஒரு ரௌடிச கூட்டத்தை வைத்து பிழைப்பை நடத்துவதும் — உண்மை என்பது அனைவரும் அறிந்ததே … .”மக்களின் ஆதரவு இல்லாமல் எந்தப் போராளியும் வெல்ல முடியாது.” என்று சே கு .. கூறியதைப்போல நடக்க இக்காலத்தில் எவனால் முடிகிறது — மக்கள் நலன் – விலைவாசி ஏற்றம் — பெட்ரோல் – டீசலுக்கு விலை நிர்ணயம் — போன்ற அத்தியாவசிய காரணங்களுக்காக ” போராட்டம் ” நடத்த — எழுத துணியாத கோழைகள் — கார்பொரேட் — தரகு — வர்க்கம் — முதலாளித்துவம் — என்று பழைய பல்லவிவை பாடி காலத்தை கழிப்பதும் வேதனை — தானே … !!!

 12. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  உங்களின் கோபம் புரிந்துகொள்ளக்கூடியது. முதலில் வழக்குரைஞர்கள் சட்டத்தை மதிக்கட்டும்.

  காய்க்கும் மரம்தான் கல்லடி படும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.